Published:Updated:

வலைபாயுதே

aarti.ravi
பிரீமியம் ஸ்டோரி
aarti.ravi

ஒரு முதிய பெண் மரிக்கும்போது ஒரு வார்த்தை மடிந்துவிடுகிறது...

வலைபாயுதே

ஒரு முதிய பெண் மரிக்கும்போது ஒரு வார்த்தை மடிந்துவிடுகிறது...

Published:Updated:
aarti.ravi
பிரீமியம் ஸ்டோரி
aarti.ravi

facebook.com/Arul Ezhilan

ஒரு முதிய பெண் மரிக்கும்போது ஒரு வார்த்தை மடிந்துவிடுகிறது... “என்ன எழிலு எப்படியிருக்க” என்று எப்போதும் கேட்கும் அம்மாவின் நண்பர், ரீட்டா எனும் தாயார் ஊரில் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். எவ்வள வு வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். சின்னதாய் ஓரத்தில் கண்ணீர் அரும்ப நினைத்துக்கொள்கிறேன் அந்தத் தெருவின் குரல்களை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 amritha_aiyer
amritha_aiyer

twitter .com/Dr S RAMADOSS@drramadoss

கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் கழிவு நீரால் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் காவிரி நீர் பச்சையாக மாறி, துர்நாற்றம் வீசுவது கவலையளிக்கிறது. தமிழகத்தை வடிகாலாகப் பயன்படுத்திவந்த கர்நாடகம், இப்போது சாக்கடையாக மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. இது தடுக்கப்பட வேண்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/ItsJokker

தனிக்குடித்தனம் என்பது யாதெனில், ‘இருவரும் தனித்தனியே மொபைல் நோண்டிக்கொண்டிருப்பதே.’

aarti.ravi
aarti.ravi

twitter.com/shivaas_twitz

உப்புமாவுக்கா கறிக்குழம்புக்கா என்பதைப் பொறுத்து வெங்காயம் நறுக்கும் வேகமும் ஆர்வமும் வேறுபடுகிறது.

twitter.com/sundartsp

ஏதோ ஒரு கம்பெனியில் ஆட்குறைப்பு செஞ்சிட்டாலும் கொஞ்சம் சிக்கனமா இருக்கணும்னு ஒரு எச்சரிக்கை உணர்வு வருவதைத் தவிர்க்க முடியல.

twitter.com/manipmp

தீபாவளி முடிந்தும் மிச்சமிருப்பது கடனும் குலாப் ஜாமுனும்தான்.

twitter.com/amuduarattai

மனைவி கேட்கும் கேள்விக்குக் கணவர் சொல்லும் “ம்” என்பதுதான் உலகின் மிக நீளமான கேள்விக்குச் சொல்லப்படும் மிகச்சிறிய பதிலாக இருக்கும்.

AnuSithara
AnuSithara

twitter.com/ItsJokker

எடப்பாடியார் ~ ஒரு டாக்டரா நா இப்போ அவங்ககூட நின்னு போராட்டம் பண்ணணுமா, இல்லை, ஒரு முதல்வரா நா இப்போ அவங்க மேல நடவடிக்கை எடுக்கணுமா? இந்த மாதிரி சோதனை எனக்கு மட்டும்...

twitter.com/sultan_Twitz

ஹிந்தி படிக்கச் சொன்னவன்லாம் இப்ப திருக்குறளை வைத்துப் பிழைப்பு நடத்திட்டு இருக்கானுங்க... உழைச்சு சம்பாதிங்கடா!

facebook.com/jvp.sachin

இன்றைய போட்டியில் இந்தியா தோற்றதற்கு முன்னாள் பிரதமர் நேருவே காரணம். அவரால்தான் இந்திரா காந்தி பிரதமரானார். இந்திரா காந்தியால்தான் வங்கதேசம் கட்டமைக்கப்பட்டது. நேரு ஒழிக!

facebook.com/vijay.varadharaj

அகட முகட எடுட்டெல்லாம் ஆதி மியூசிக் முடட்டே உடகு - 2.5k கிட்ஸ் திருக்குறள்.

AdnanAbidi
AdnanAbidi

facebook.com/raja.paramasivam.315

தமிழகம் முன்னெடுக்க வேண்டிய முக்கியப் போராட்டம், ஹெச்.ராஜாவை பாஜகவின் தமிழகத் தலைவர் பொறுப்பில் அமர்த்துவது. அதன் பிறகு அதன் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

twitter.com/motheen_farook

“ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்தேன்” - பிரதமர் மோடி. ஆனா நீங்க பிரதமரான பிறகுதான் நாங்க வறுமையை அறிந்தோம் ஜி..!

twitter.com/umakrishh

ஷங்கர் ஒரு திரையுலக சீமான் . 90s கிட்ஸை ஊழல், லஞ்சம் மட்டுமே பிரச்னைன்னு நம்ப வெச்சு லாஜிக் இல்லாத காட்சிகளைக் காட்டி ஏமாத்தியிருக்காப்டி!

twitter.com/manipmp

ஏழு மலை,ஏழு கடல் தாண்டி உள்ள கிளியின் உடலில் உயிர் உள்ளது போலத்தான் கஸ்டமர் கேர் அதிகாரியைத் தொடர்புகொள்வதும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism