சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

தொலைக்காட்சியில் முழுப்படத்தையும் பார்க்கும் பாக்கியம், டிவி ரிமோட் வேலை செய்யாதபோது மட்டுமே சாத்தியம்.

https://twitter.com/thirumarant

கொரோனா வைரஸ் பற்றி பஞ்சாங்கத்தில் சொன்ன ஸ்க்ரீன் ஷாட் இன்னும் ஏன் வரவில்லை? யார் செய்த தாமதம்?

https://twitter.com/arattaigirl

100%க்கு அப்புறமும் சார்ஜ்ல கிடக்கற மொபைல்களைப் பாக்கறப்பெல்லாம் ‘பேராசை பெருநஷ்டம்’ பழமொழி நினைவு வருது.

Nayanthara
Nayanthara

https://twitter.com/VijayRamdoss

ஜிம்ல ஒரு அங்கிள் #YesBankCollapse பத்திப் பேசிட்டிருந்தாரு. நல்லா பேசுறாருன்னு ஒட்டுக் கேட்டேன். ரஷ்யப் புரட்சில ஆரம்பிச்சு, சோவியத் யூனியன், நேரு, மிக்ஸ்ட் எக்கனாமி, சோஷலிசம்னு கடைசில ஆதி சங்கரர்ல வந்து முடிச்சாரு. அவரு வர டைம்ல இனி ஜிம் பக்கம் வரக் கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன்.

https://twitter.com/skpkaruna

தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வமான நிலத்தடி நீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பதைக் காண அதிர்ச்சியாக உள்ளது. - உயர்நீதிமன்றம். இதுவரையில் செவ்வாய் கிரகத்தில் இயங்கிக் கொண்டிருந்த நீதிமன்றம் திடீரெனத் தமிழகம் வந்ததைக் காண ஆனந்தமாக உள்ளது. - தமிழக மக்கள்.

https://twitter.com/manipmp

ஆண்டவன் படைப்புல அடுத்தவங்ககிட்ட இருந்து வாங்கி எழுதற பேனா எல்லாமே அழகாய் எழுதும்.

Sehwag
Sehwag

https://twitter.com/mohanramko

தொலைக்காட்சியில் முழுப்படத்தையும் பார்க்கும் பாக்கியம், டிவி ரிமோட் வேலை செய்யாதபோது மட்டுமே சாத்தியம்.

https://twitter.com/shivaas_twitz

நீ தினமும் வாங்கித் திங்குறியே... அது கிண்டர் ஜாய் இல்ல. உங்கப்பனோட ரத்தம் #மகனதிகாரம்

facebook.com/Jeeva Sagapthan

கட்டிலுக்கு அடியிலே ஒளிஞ்சிக்கிறேன்... என்னைக் கண்டுபிடி என்று சொல்லும் குழந்தைகளிடம் ஒருமுறைகூட அப்பாக்கள் வென்றதில்லை...

https://twitter.com/RavikumarMGR

தெலுங்குப்படங்களைப் பார்ப்பதற்கு, எதையும் நம்பும் அப்பாவித்தனமும் பொழுதுபோக்கிற்காகக் குறைகளை மன்னிக்கும் ரசிகத் தன்மையும் வேண்டும். அதையும் மீறி நம்மைச் சோதித்தால் சேனலை மாற்றிவிடும் மனபலமும் வேண்டும்!

Premji
Premji

https://twitter.com/kumarfaculty

பீட்ரூட் பொரியலுக்கு வரமிளகாயும்,

பீன்ஸ் பொரியலுக்குப் பச்சை மிளகாயும்... பழிவாங்கவே கண்டுபிடிக்கப்பட்டவை!

https://twitter.com/tamil_twtz

இதுதான் மோடியின் மேக் இன் இந்தியா... 2014 மோடி: - உங்கள் வாக்குகளை தாருங்கள். 2015 மோடி: - உங்கள் மானியங்களை விட்டுத் தாருங்கள். 2016 மோடி: - 1000 ரூபாய் 500 ரூபாய் சேமிப்புகளைத் தாருங்கள். 2017 - 2020 மோடி: - வங்கிகளில் உங்கள் சேமிப்பை மறந்து விடுங்கள் #YesBank

Simran
Simran

twitter.com/Chitra24@Chitra241

நஷ்டமாகிப்போன Yesbank பங்கை statebank வாங்குமாம். லாபத்தில் நடக்கும் LIC பங்கை தனியார் வாங்குமாம்! என்னங்கடா பித்தலாட்டம் இது?!