Published:Updated:

வலைபாயுதே

இலியானா
பிரீமியம் ஸ்டோரி
இலியானா

நமக்குத்தான் பஸ்ல இலவசப் பயணம்னு அரசாங்கம் சொல்லிருச்சே. அப்போ நம்ம ஆபீஸ்ல நம் சம்பளத்தில் பயணப்படியை யெல்லாம் கட் பண்ணிருவாங்களா

வலைபாயுதே

நமக்குத்தான் பஸ்ல இலவசப் பயணம்னு அரசாங்கம் சொல்லிருச்சே. அப்போ நம்ம ஆபீஸ்ல நம் சம்பளத்தில் பயணப்படியை யெல்லாம் கட் பண்ணிருவாங்களா

Published:Updated:
இலியானா
பிரீமியம் ஸ்டோரி
இலியானா

www.facebook.com/revathy.ravikanth

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் பூரி பொரிப்பது எப்படி! - யூ ட்யூப்

இவ்ளோ கண்டுபுடிக்கறவன் அப்பிடியே கொரோனாவ ஒழிக்க ஒண்ணு கண்டுபுடிங்கடா!

twitter.com/saravankavi

விக்ரமாதித்தன் தோளில் ஏறிய வேதாளம் என்பது குழந்தைதான். அவ்வளவு சீக்கிரம் இறங்க மாட்டேங்குது...

Shivaangi : நடமாடும் சிரிப்பு ஸ்டோர்!
Shivaangi : நடமாடும் சிரிப்பு ஸ்டோர்!

twitter.com/balasubramni1

‘‘அக்கா, ஒரு சந்தேகம்!”

‘‘என்னடி சந்தேகம்?’’

“நமக்குத்தான் பஸ்ல இலவசப் பயணம்னு அரசாங்கம் சொல்லிருச்சே. அப்போ நம்ம ஆபீஸ்ல நம் சம்பளத்தில் பயணப்படியை யெல்லாம் கட் பண்ணிருவாங்களா?’’

twitter.com/urs_venbaa

முதல்வராவதுகூட ஈஸிபோல... இந்த எதிர்க்கட்சித் தலைவராவது எவ்வளவு கஷ்டமா இருக்கு!

www.facebook.com/sowmya.ragavan?

யாராவது இறந்துட்டா முன்னலாம் வருத்தம், துக்கம்னு அவரைப் பத்தி யோசிப்போம். இப்பலாம் செய்தி கேட்டதுமே நம்மை அறியாம கொரோனாவான்னுதான் முதல்ல கேட்டுட்டிருக்கோம் :((

twitter.com/ItsJokker

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கொரோனா நிதியாக ரூ.533 கோடி.

# அப்ப இத்தனை நாளா ‘இணக்கமா இருந்தாதான் நிவாரணம், குனிஞ்சு போனாதான் மானியம்’ன்னு ஏமாத்திட்டு இருந்திருக்கானுங்க.

twitter.com/HariprabuGuru

பாத்திரம் கழுவச் சொன்னாங்க. ஏதோ ஃபேமிலி மேட்டர், போனாப் போகுதுன்னு பண்ணியாச்சு. இப்ப மொட்டை மாடில வடாம்லாம் பிழியச் சொல்லுறாங்கப்பா...

Ileana_official  - அடுத்த ஷூட்டிங் ரெடி!
Ileana_official - அடுத்த ஷூட்டிங் ரெடி!

twitter.com/skpkaruna

நான் நீண்ட நாள்களாகச் சொல்ல நினைக்கும் ஒரு வேண்டுகோள். முக்கியமாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு... காவலர்களை ஒருபோதும் சிறுவர்கள் முன்னர் பெற்றோர்களைத் தரக்குறைவாகப் பேச அனுமதிக்காதீர்கள். குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களின் குழந்தைகள், குழந்தைகள்தான். அவர்கள் மனதில் பதியும் வடு ஆறவே ஆறாது. அந்த வடுதான் அவர்களை காவல்துறையை நிரந்தரமாக வெறுக்கச் செய்கிறது. குற்றவாளிகளின் பக்கம் அவர்களைச் சாய வைக்கிறது. அடிக்கடி பொதுவெளியில் இப்படியான காட்சிகளைக் காண நேரிடுகிறது. இதைத் தவிர்க்க காவல்துறை ஆய்வாளர்களுக்குத் தனிப்பயிற்சி அவசியம்.

twitter.com/vemalism

போன லாக்டௌன்ல நிறைய பேருக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துச்சு. அவங்கெல்லாம் இந்தத் தடவை கவனமா இருக்கணும்.

twitter.com/AravindRajaOf

‘‘எடப்பாடிகூடதான் ட்விட்டர் பார்த்தே நடவடிக்கை எடுத்தாரு...’’

‘‘என்ன நடவடிக்கை எடுத்தாரு..?’’

‘‘எஸ்.வி.சேகர் வீட்டுல பால் பாக்கெட் போட்டாருல்ல!”

twitter.com/RavikumarMGR

பெண்கள் பஸ்ஸில் போக பணம் இல்லாத அளவுக்குக் கொண்டு வந்தது திராவிட ஆட்சி: நாராயணன் திருப்பதி

# பெண்கள் பஸ்ஸில் போக பணம் கொண்டு போகத் தேவையில்லாத அளவுக்குக் கொண்டு வந்தது திராவிட ஆட்சி... கரெக்ட்டாக ட்விட்டவும்.

twitter.com/athisha

துண்டுச்சீட்டு, தத்தி என எத்தனை கேலிகள், கிண்டல்கள். எத்தனை போராட்டங்கள், தோல்விகள். ‘என்றைக்குமே கூப்புதான்’ என ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர். எவ்வளவு நெருக்கடிகள், தந்திரங்கள், சதிகள். எதற்கும் கலங்கிடாமல் நெஞ்சுரத்தோடு போராடியிருக்கிறார் ஸ்டாலின். இந்த உறுதி, இந்த மனம் வாய்க்கவேண்டும்.

www.facebook.com/kundhaani?

என்னாங்கடா? லாக்டௌனில் படிப்பதற்குப் புத்தகங்கள், பார்ப்பதற்குப் படங்கள்னு சொல்லிட்டிருக்கீங்க? உங்களையெல்லாம் வேலையில தேடவே மாட்டாங்களா?

twitter.com/skpkaruna

திரை நடிகர்கள் மரணம் அடைவதால் அவை வெளியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. உண்மையில் ஒவ்வொரு குடும்பமும் சொந்தங்களை கொரோனாத் தொற்றால் இழந்து வருகிறது. உயிருக்காகப் போராடக் கூட நேரம் தராமல் எடுத்துச் செல்கிறது இந்தப் புதிய வகை வைரஸ். 15 நாள்களுக்கு வீட்டிலேயே இருங்க. மாஸ்க் போடுங்க.

www.facebook.com/Karthik Ba Emayavaramban

என் தம்பி பிறந்த ஓராண்டில், அம்மா, அப்பா இருவரும் பிரிந்துவிட்டனர். 1997-ல் அப்பாவும், பிறகு 2009-ல் அம்மாவும் இறந்துவிட்டனர். வருடங்கள் ஓடின. என் அம்மா, அப்பா குறித்துப் பலரும் கேட்கும்போது, ‘என்னிடம் காண்பிக்க ஒரு புகைப்படம் கூட இல்லையே’ என வருந்தியிருக்கிறேன். பின்னர் ஒருநாள், அறிவு வேலை செய்ய, இருவரின் தனித்தனிப் புகைப்படங்களைத் தேடிப் பிடித்து (அப்பா புகைப்படம் பல சிரமங்களுக்குப் பிறகே கிடைத்தது) ஒன்றாக இணைத்தேன். பெருமகிழ்வுத் தருணம் அது. இன்றும் என் வீட்டு முகப்பில் அந்தப் படம்தான் இருக்கிறது. என்னதான் பிரிந்திருந்தாலும், என் அம்மாவிற்கு அப்பாமீது பிரியம் இருந்திருக்கும். அப்பாவும் அப்படித்தான். பேரன்புக்காரன்... இது என் உள்ளுணர்வு சொல்லும் செய்தி.

இன்று காலை ஒரு சிந்தனை வந்தது. `படத்தை ஒட்டுவது எளிதான வேலை தானே? அம்மா உயிரோடு இருக்கும்போதே செய்திருந்தால், அம்மா மகிழ்ந்திருப்பாரோ?’ அம்மா உயிரோடு இருக்கும்போது நம்மில் பலர் அவர் குறித்துச் சிந்திப்பதில்லைதானே?

kalidas Jayaram: அடி பொலி சேட்டன்!
kalidas Jayaram: அடி பொலி சேட்டன்!

twitter.com/iParisal

எதும் பேசறப்ப ‘இதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்ல’ன்னு அவனுகளே சொல்லிக்கறானுக. நீ சொல்லி முடிச்சுட்டு, மாற்றுக்கருத்து நாங்க சொல்லணும்டா. நீயே சொல்லிட்டு நீயே மாற்றுக்கருத்து இல்லன்னாத!

www.facebook.com/gokul.prasad.

மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். எல்லோருக்கும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துவிட்டு உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு முன்னால் நின்றிருந்த பெண்ணின் நெற்றியில் டெம்பரேச்சர் பார்ப்பதற்காக டிஜிட்டல் தெர்மாமீட்டரை நீட்டியதும், பெருமாள் கோயிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைக்கும்போது விரல்களைக் குவித்து முகவாய்க் கட்டையை ஏந்தி பவ்யமாக ஏற்றுக்கொள்வார்களே, அதுபோல அதன்முன் அத்தனை பணிவுடன் நின்றிருந்தார். இதைப் பார்த்த இன்னொரு பெண்மணியும் அவரைப் பின்பற்றி தன் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டு டெம்பரேச்சர் பார்த்தார். அநேகமாக, இன்னும் இரண்டு நாள்கள் கழித்து ஆஸ்பத்திரிக்குப் போனால் துளசியும் தீர்த்தமும் கொடுத்து அனுப்புவார்கள் என ஊகிக்கிறேன்.

twitter.com/shivaas_twitz

டேய் கொரோனா... வருஷா வருஷம் இன்க்ரிமென்ட் டைம்ல உச்சத்துக்குப் போயிடுற... இது நியாயமா?

twitter.com/saravankavi

தாகூர் மாதிரி தாடி வளர்த்ததெல்லாம் வேஸ்ட்டாகிடுச்சேன்னு நெனைச்சேன். நல்லவேளை, அடுத்ததா பஞ்சாப்ல எலெக்‌ஷன் வருது. சிங் கெட்டப்ல சேஞ்ச் பண்ணிக்கலாம்!