https://twitter.com/ItsJokker
வாட்ஸப் டாக்டர்ஸ் ~ `அரளி விதையை’ அரைத்துத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் கொரோனா குணமாகும்னு போட்ரு. ~ அரளி விதையா?! அய்யோ அம்மா, உசுரே போயிரும்மா. அப்படியா, அப்ப `அகத்திக்கீரை’ன்னு போட்டுக்கோ.

https://twitter.com/Baashhu
சண்டே ஒரு நாள் வாட்ஸப்ப மூடுனாலே பல உயிர்கள காப்பாத்தலாம்போல.
https://twitter.com/krishnaskyblue
தமிழக அரசியலில் புள்ளி வைத்துவிட்டேன் ~ரஜினி முப்பது வருசத்துக்கு முன்னாடி கோலம்போடக் குனிஞ்சவரு இப்போதான் புள்ளியே வெச்சிருக்காரு.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
https://twitter.com/thoatta
யோவ் எல்லோரும் வீட்லதானே இருக்காங்க? அப்புறம் எப்படிய்யா அந்த சைடுல இருந்து மட்டும் கைத்தட்டல் சத்தம் ரொம்பக் குறைவா இருக்கு? அது தமிழ்நாடுங்க.
https://twitter.com/KLAKSHM14184257
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்துக்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார்!- பிரேமலதா. ஏன்... கட்சியைக் கலைக்கப்போறீங்களா?!
https://twitter.com/skpkaruna
எந்தவொரு மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களும் நன்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இந்தப் பேரிடரில் அவர்கள் கோருவதெல்லாம் தேவையான மருந்துகள், உபகரணங்கள், நிதி, பாதுகாப்பு. இதை அளிக்க முனையாமல், ‘கூட்டமா நின்னு கைதட்டுவோம்’ என்பதெல்லாம் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கும் வேலையே!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
https://twitter.com/kumarfaculty
குழந்தைகளுக்கு பிஸ்கட் பிடிக்கும். ஆனால் கிரீம் பிஸ்கட்ல பிஸ்கட் பிடிக்காது...!

https://twitter.com/thoatta
கொரோனா நவ் : ஏன்டா உங்களோட உருப்படாத 850 திட்டங்கள்ல பாதிக்காத பொருளாதாரமா என்னால பாதிச்சிருச்சு?
https://twitter.com/Thaadikkaran
ஹீரோ : கத்தி எடுத்தவனுக்குக் கத்தில தான் சாவு!
சலூன்கடைக்காரர் : தம்பி தம்பி..!
https://twitter.com/Subashini_BA
கைதட்டுங்கடான்னு சொன்னா சாப்பாட்டு ப்ளேட்ட தட்டுறானுங்க... வாழ்த்து சொல்லுங்கடான்னு சொன்னா சங்கு ஊதுறானுங்க... வீட்டுக்குள்ள இருங்கடான்னு சொன்னா விசேஷம் மாதிரி வெடி போடுறானுங்க... கொரோனாவ ஏதோ கரீனா மாதிரி ட்ரீட் பண்றானுங்க... முடிலடா சாமி.

facebook.com/Karunakaran Karthikeyan
லைப் இஸ் வெரி சார்ட் நண்பா பாட்ட அடிக்கடி டிவில போடாதீங்கடா, பீதியா இருக்கு.
facebook.com/Ovia Rajamoni
மார்ச் 31 வரை மக்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கை அரசும் பின்பற்ற வேண்டும். உணவு மருத்துவம் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான மசோதாக்கள் தவிர வேறு எதையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்து அரசுத் துறைகளுக்கும் பணம் கட்டும் தேதிகள் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். உணவுப் பொருள்கள் விநியோகத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு வேளை நெருக்கடி எதிர்பார்க்கப்பட்டால் வீடு வீடாக அத்தியாவசியப் பொருள்களை மட்டும் விநியோகிக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற அடிப்படைத் தேவைகளுக்குத் தொடர்பில்லாத அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு நிறுத்த வேண்டும்.

ஃபௌசியா பேஸ்புக்
இப்பதான் வெளிய போயிட்டு வரேன். ரோடு, ஹோட்டல், மார்க்கெட் எல்லாம் அவ்வளோ மக்கள். யாருக்கும் அறிவில்லைன்னு... அடுத்தடுத்து போஸ்ட்ஸ். சார், நீங்க உங்களப் பத்திதான் பேசிட்டிருக்கீங்க.
https://twitter.com/vandavaalam
மூக்கு அரிச்சதும், மாஸ்க்கைக் கீழ இறக்கிட்டுச் சொறியுறானுங்க, மறுபடியும் மாட்டிக்கிறானுங்க.
Corona be like: இவனுங்க சொறியும்போது டிஸ்டர்ப் பண்ணவேண்டாம், உள்ளபோக வேற எதாச்சும் சான்ஸ் கிடைக்குதான்னு வெயிட் பண்ணுவோம்.

https://twitter.com/thirumarant
மளிகைச் சாமான்லாம் போதுமான வரை வாங்கி வெச்சாச்சு... இந்த சிலின்டர்லாம் எக்ஸ்ட்ரா வாங்க முடியாதே... வாட் டு டூ?