Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

கொரோனா பயம், எடப்பாடி பயம், கடவுள் பயம் ஆகிய இத்தனையையும் மறக்க எதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருக்கு!

வலைபாயுதே

கொரோனா பயம், எடப்பாடி பயம், கடவுள் பயம் ஆகிய இத்தனையையும் மறக்க எதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருக்கு!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/Ilango Krishnan

ஏய்! ஆன்லைன் க்ளாஸ்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு தயிர்வடை சாப்பிட்டுட்டிருக்க...

அது மிஸ்ஸுக்குத் தெரியாதுப்பா... நான் க்ளாஸ்லயே இப்படித்தான் பிஸ்கெட்டை கொஞ்சம் கொஞ்சமா நைஸா சாப்பிடுவேன். மகளே எச்சூச்மி!

வலைபாயுதே

facebook.com/புலியூர் முருகேசன்

இந்தியன் படம் வெளிவந்த ஆண்டு 1996. கதைப்படி 1947-ல் அப்பா கமல், சுதந்திர இந்தியாவில் சுகன்யாவுடன் ஆடிப்பாடி பின் திருமணம் செய்துகொள்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகு 1948-ல் மகன் கமல் பிறந்திருந்தால் 1996-ல் 48 வயதாகியிருக்கும். தங்கை கஸ்தூரிக்கு 47 வயதிருக்கலாம். 47 வயதுவரை மகளுக்குத் திருமணம் செய்து வைக்காததெல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகி என்றாலும் குற்றம்தானே! அதைவிடப் பெரிய குற்றம் 48 வயது ‘முதிர் இளைஞனான’ மகன் கமல், தன்னைவிட இருபத்தைந்து வயது குறைவான மனிஷா கொய்ராலாவைக் காதலிப்பது. இதைச் சரிக்கட்ட படத்தில் எங்காவது ‘எங்களுக்குக் கல்யாணம் ஆகி இருபது வருஷம் கழிச்சுதான் நீயும், தங்கச்சியும் பொறந்தீங்க’ அப்படீன்னு அப்பா கமல் வசனம் பேசியிருக்கிறாரா?

கொரோனா பயம், எடப்பாடி பயம், கடவுள் பயம் ஆகிய இத்தனையையும் மறக்க எதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருக்கு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

facebook.com/Krishna Kumar L

சென்னை தினத்தையெல்லாம் ஊரு சுத்திக் கொண்டாடினதே இல்லை. அம்மாதிரி கொண்டாடினவனெல்லாம் இப்போ ஊருக்குப் போயிட்டான். இந்தக் கொரோனா காலத்திலும் சென்னையை அன்னையா பார்க்குறவன்தான் நெஜமான சென்னை சூப்பர் கிங்!

வலைபாயுதே

twitter.com/mathimaran

court என்பதை ‘நீதி’ மன்றம் என மொழி பெயர்த்தது தவறு. அது தீர்ப்பு வழங்குமிடம்.

twitter.com/tamil_twtz

நேபாள்னு ஒரு நாடு இருந்ததையே கடந்த 50 ஆண்டுகளாக மறைத்து விட்டது காங்கிரஸ்... பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது.

facebook.com/gokul prasad

இந்த நூற்றாண்டில் தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகச்சிறந்த பின்நவீனத்துவ பிரச்னை - ஸ்டாலின் தளபதியா விஜய் தளபதியா என்பது தான்.

வலைபாயுதே

twitter.com/thoatta

எல்லோரும் சீனப் பொருள்களைப் புறக்கணிச்சுக்கிட்டு இருக்கிறப்ப, ஒரு ஆள் மட்டும் சீனா ஆக்கிரமிச்ச இடத்தையே புறக்கணிச்சாப்ல.

twitter.com/thirumarant

சென்னைல இருந்து போனவங்களாம் அவங்க பரப்பி கவுன்ட் ஏத்தப் போறாங்க... சென்னை கவுன்ட் குறையப் போவுது. அங்க அதிகமானதும் அங்கிருந்து தப்பிச்சி இங்க திரும்ப ஓடி வரப்போறாங்க... இங்க மறுபடியும் அதிகமாகப்போவுது... இப்படியே ஜாலியா வெளாடிக்கிட்டு இருக்கப்போறோம்னு மட்டும் தெரியுது...

வலைபாயுதே

twitter.com/itsjokker

அப்பா ~ வருஷம் பூரா சொல் பேச்ச கேட்காம இவர் இஷ்டத்துக்கு சுத்திட்டு, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் “ஹேப்பி ஃபாதர்ஸ் டே”ன்னு ஸ்டேட்டஸ் வைப்பாராம்... நாங்க இவர “அய்யா ராசா”ன்னு ஃபீல் பண்ணிக் கொஞ்சணுமாம்.