Published:Updated:

வலைபாயுதே

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

தேர்தல் முடிஞ்சு எல்லாத் தலைவர்களும் ஓய்வெடுக்க வெளி நாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ போய் பொழுதைக் கழிக்கும்போது நான் மட்டும்

வலைபாயுதே

தேர்தல் முடிஞ்சு எல்லாத் தலைவர்களும் ஓய்வெடுக்க வெளி நாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ போய் பொழுதைக் கழிக்கும்போது நான் மட்டும்

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

twitter.com/Revathyravikan4

டீயா, காபியா?!

கிரீன் டீ குடுங்க, வித்தவுட் சுகர்!

சுடுதண்ணிதானுங்களே... கொண்டு வர்றேன்!

Thirumavalavan - இளம் சிறுத்தை!
Thirumavalavan - இளம் சிறுத்தை!

twitter.com/Me_dineshudhay

வி.சி.க தலைவர் திருமாவளவன் அடிக்கடி சொல்லுவார். ‘‘தேர்தல் முடிஞ்சு எல்லாத் தலைவர்களும் ஓய்வெடுக்க வெளி நாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ போய் பொழுதைக் கழிக்கும்போது நான் மட்டும், தாக்கப்பட்டுக் கிடக்கும் என் மக்களைப் பார்க்க எரிந்த குடிசை களுக்கோ, காயப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் இளைஞர் களைக் காண ஆஸ்பத்திரிக்கோ, மார்ச்சுவரிக்கோ அலைந்து கொண்டிருப்பேன்.” பத்தாண்டுகளுக்கு முன் சொன்னது இது. இப்போதும் அதுதான் நடக்கிறது. அரக்கோணம் கொலைத்தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

இப்போ எல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?!

twitter.com/ItsJokker

கர்ணன் மாதிரியான படத்தாலதான் ஜாதிப் பிரச்னையே உருவாகுது.

~ அப்ப இந்தப் படத்தாலதான் ஜாதி சண்ட நடக்குது, அதுக்கு முன்னாடி வரை எல்லாரும் அண்ணன் தம்பியா புழங்கிட்டு இருந்தீங்க, அப்டிதானே?!

twitter.com/Revathyravikan4/

சொந்தக்காரங்களோ நண்பர்களோ ‘ஒரு பிரச்னை, மனசு சரியில்ல’ன்னு நம்மகிட்ட ஆரம்பிக்கும்போது, நம்ம ஆர்வத்த மறைச்சுக்கிட்டு குரல்ல ஒரு ஆதரவக் கொண்டு வந்து ‘என்னாச்சு, சொல்லுங்க’ன்னு எவ்ளோ மாறுவேஷம் போட வேண்டியிருக்கு!

Priyabavanishankar - ஓ ப்ரியா ப்ரியா!
Priyabavanishankar - ஓ ப்ரியா ப்ரியா!

twitter.com/akaasi

கார் எஃப்.எம் ரேடியோவில் வந்த ஒரு பாட்டு: ‘...சும்மா இருந்தா தண்ணீ, சூடு பண்ணுனா வெந்நீ.’

நாட்ல கவிஞர்களுக்கு இத்தனை தட்டுப்பாடு இருக்கா?

twitter.com/DrTRM

கேள்வி: பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் பாதிப்பு வருமா?

பதில்: வயிற்று வலி, அல்சர் வரும். (ஆணாதிக்க ஆண்களுக்கு)

twitter.com/aruntwitzzz

அடுத்த மேட்ச் பௌலிங்க மாத்துவோம்...

அது அநாவசியம்... புஜாராவ கூட்டிட்டு வந்தீங்கனா பழிய போட்டுட்டுப் போயிருவேன்.

twitter.com/mohanramko

கொரோனாவுக்காக வீட்ல இருந்தே படிச்சி, வீட்ல இருந்தே வேலை செய்யற நம்மால, வீட்ல இருந்தே பிரசாரம் மட்டும் பண்ண முடியல பார்த்தியா... அதான் அரசியல்!

Sun Pictures - அண்ணாத்த அப்டேட் எப்போ?
Sun Pictures - அண்ணாத்த அப்டேட் எப்போ?

twitter.com/shivaas_twitz

‘ஐ.பி.எல் சோறு போடாது, விவசாயம்தான் சோறு போடும்.’

அத உள்ள வையி குமாரு... நாம, பிளே ஆஃப் போக மாட்டோம்ங்கிற ஸ்டேஜ் வரும்போது யூஸ் பண்ணிக்கலாம்!

twitter.com/gips_twitz

``அனைவரும் வீட்டு மாடிகளில் பறவைகளுக்குத் தண்ணீர் வையுங்கள்” - சீமான்!

5 வருச பழைய மெசேஜ எவனோ நேத்துதான் வாட்ஸப்ல ஃபார்வேர்டு பண்ணியிருக்கான் போல.

twitter.com/saravankavi4

கோவை உணவகத்தில் மக்களைத் தாக்கிய எஸ்.ஐ முத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம். பாதிக்கப்பட்டவர்கள் புகாரைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு.

#இல்ல, தெரியாமதான் கேக்கறேன். கட்டுப்பாட்டு அறைக்கும், ஆயுதப் படைக்கும் மாத்தறது அவ்வளவு பெரிய பனிஷ்மென்ட்டா என்ன..?

Nelson - சார் யாரு... தளபதி!
Nelson - சார் யாரு... தளபதி!

twitter.com/RajaAnvar1

மக்களெல்லாம் ஐ.பி.எல்-லைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க... இந்த நேரத்துல பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தலாம். ஜீ... என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

twitter.com/HariprabuGuru

‘பரப்புரை... பரப்புரை...’ன்னு சொன்னாங்க. அதெல்லாம் கொரோனா பரப்பும் உரைன்னு அப்போ புரியலை, இப்போ புரியுது.

twitter.com/amuduarattai

“தண்ணி இல்லாத ஊருக்கு மாத்திருவேன்” என்பதன் அப்டேட் வெர்ஷன்தான் “செல்போன் சிக்னல் இல்லாத ஊருக்கு மாத்திருவேன்” என்பது.

twitter.com/pachaiperuma

பொதுவாக ஆரோக்கியமான விவாதம் பண்ணுங்க. இல்லை விவாதத்தைத் தவிருங்க. விவாதிக்க வழியின்றி அயல்நாட்டில் வாழும் தமிழர்களை சட்டென்று ‘அகதிகள்’ என்று சொல்லாதீங்க. உலகில் கடைசியாக மற்றுமொரு மனிதன் இருக்கும்வரை இங்கு யாரும் அகதியோ, அநாதையோ கிடையாது.

twitter.com/ramesh_twetz

‘‘அண்ணே, கொரோனால இருந்து தப்பிக்க என்கிட்ட ஒரு யோசனை இருக்குண்ணே...’’

‘‘என்னடா அது?’’

‘‘கொஞ்ச நாள் ஒயின்ஷாப்ல வேலை பாக்கலாம்னு இருக்கேண்ணே!”

twitter.com/Sakthiv 15742156

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம்: ஆவணங்கள் சமர்பித்த 80 பேரிடம் ரூ.1.19 கோடி திரும்ப வழங்கப்பட்டது.

போன தேர்தலில் பிடிச்ச கன்டெய்னர் என்னாச்சுங்க ஆபீசர்?

Facebook.com/gokul prasad

காதல் திருமணம், நிச்சயிக் கப்பட்ட திருமணம் என மக்களைப் பாகுபடுத்தி உயர்வு, தாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைவாகும். ‘காதல் திருமணம்’ எனத் தம்பட்டம் அடித்துக்கொள்வதென்பது ஆணவத்தின் வெளிப்பாடே! எனவே பெற்றோரால் வரன் பார்த்துத் திருமணம் நிச்சயிக்கப் பட்டவர்களை இழிவுபடுத்தாமல் அவர்களை ‘காதலிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்’ அல்லது ‘காதலிக்கும் வாய்ப்பை இழந்த வர்கள்’ என்றழைப்பதே ஒரு நாகரிக சமுதாயத்தின் பெருந்தன்மையைப் பறைசாற்றும் சொல்லாடலாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism