
குளிர்காலத்திலும் அசந்து தூங்க முடியாத அளவு பொறுப்புணர்வோடு இருப்பதெல்லாம் சாபம்.
https://twitter.com/cablesankar
வெங்காய விலையேற்றக்காலம்தான் ஹோட்டல் ஆம்லெட்டுக்கு அப்ரைசல் காலம்.

https://twitter.com/arattaigirl
குளிர்காலத்திலும் அசந்து தூங்க முடியாத அளவு பொறுப்புணர்வோடு இருப்பதெல்லாம் சாபம்.
https://twitter.com/mrithulaM
ஓட்டலில் நாம் ஆர்டர் பண்ணும் உணவு, லேட்டா வந்தா, ப்ரெஷ்ஷா ரெடியாகி வருதுன்னு நம்ப வச்சிட்டாங்க.
https://twitter.com/kumarfaculty
வலதுசாரிகளை இடதுசாரிகளாகவும், இடதுசாரிகளை வலதுசாரிகளாகவும் மாற்றிவிடுகிறது செல்ஃபி...!
https://twitter.com/iVenpu
மூன்று பாலியல் வழக்குகள்... ஒண்ணு பொள்ளாச்சி, ரெண்டு ஹைதராபாத், மூணு நித்யானந்தா... மூணுலயும் நம்ம சட்டம் எப்படி நடந்துகிட்டு இருக்குன்னு பார்த்து நாமளே ஒரு முடிவுக்கு வரலாம்.

facebook.com//Ilango Krishnan
“அப்பா இங்கிலீஷைக் கண்டுபிடிச்சது யாருப்பா?”
“இங்கிலீஷ்காரங்க.”
“அப்போ எங்க இங்கிலீஷ்மிஸ் இங்கிலீஷ்காரங்களா?”
“இல்லடா, அவுங்க சொல்லித் தரவங்க. இங்கிலீஷ்காரங்க இங்கிலாந்தில் அமெரிக்காவில்தான் இருப்பாங்க.”
“அப்பா அப்பா மேத்ஸ்காரங்க எந்த நாட்டில் இருப்பாங்க?”
“மேத்ஸ்காரங்களா... மேத்ஸ்காரங்கன்னு யாரும் கிடையாது பாப்பா...”
“அப்புறம் எப்படி எங்க மேத்ஸ் மிஸ்ஸுக்கு மேத்ஸ் தெரியுது?”
மகளே, போதும் நிறுத்திக்குவோம்...
facebook.com// Bogan Sankar
ஃபேஸ்புக் வருவதற்கு முன்பு எல்லாவற்றைப் பற்றியும் எனக்குக் கருத்துகள் இருந்தன. நான் ஒரு சிந்தனையாளன் என்பது எனக்கு எப்படியோ தெரியாமல்போய்விட்டது.
ஃபேஸ்புக் வந்தபிறகுதான் எனக்கு நிறைய காதலிகள் இருந்திருக்கிறார்கள், நான் ஒரு காதல் மன்னன் என்பதும் எனக்குத் தெரியவந்தது. நான் அவசரப்படாமல் ஃபேஸ்புக் வரும்வரை காத்திருந்து பிறந்திருக்கலாம்.

https://twitter.com/ChainTweter
கியூ வரிசை, நடு சென்டர், டான்ஸ் ஆடுறது வரிசையில Corn flour மாவு! Corn flour என்பதே சோள மாவுதான் அன்பர்களே...
https://twitter.com/aloor_ShaNavas
ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?
“அவர்கள் மதவழியில் ஒடுக்கப்படவில்லை!”
“மதவழியில் ஒடுக்கப்பட்ட ரோகிங்யாக்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?”
“அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்!”
``சீனாவுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களை ஏற்கிறீர்களே அது எப்படி?”
அது வந்து...
https://twitter.com/Raittuvidu
தமிழனுக்கு அடுத்தவன திட்டுறதுக்கும்கூட வெங்காயம்ன்றது தேவை... இதுல வெங்காயம் இல்லாம சமைங்களேன்றானுங்க.. அடேய்...
https://twitter.com/salma_poet
உள்ளாட்சி அமைப்பு மட்டும்தான் அடித்தட்டு மக்களையும் பெண்களையும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவது. அதைக் குறைவாக மதிப்பிடுவது என்பது மிக மோசமான மனநிலை. ஸாரி திரு கமல் சார்!

https://twitter.com/smhrkalifa
நாம் தூங்கும் நேரத்தையும் எழும்பும் நேரத்தையும் நமது வாட்ஸப் லாஸ்ட் சீன்கள் சொல்லிவிடுகின்றன.
https://twitter.com/ItsJokker
“என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண் போகாது” - ‘தர்பார்’ இசை விழாவில் ரஜினி!
“அது சரிங்க, நீங்க படிச்சா உங்க சொத்து, நாங்க படிச்சா எங்க சொத்து.”
https://twitter.com/prakasht_
நாம் பலநாளா முயற்சி பண்ணி நமக்கான நிம்மதி இங்கதான் கிடைக்கும்னு போறப்ப அது நமக்காகக் காத்திருந்து கடுப்பாகி வேற பக்கம் பயணிக்கிறதுதான் நம்மளோட டிசைன்.
twitter.com/5Murugesan
உலகிலேயே
மிகச்சிறியது
ஞாயிற்றுக்கிழமை.

twitter.com/shivaas_twitz
ஹாஸ்பிடல் வார்டு பாய்க்கு ஒரு கவர்னருக்கு நிகரான அதிகாரம் உள்ளது.
twitter.com/prasathjammy
சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு
விளம்பரம் தொடரும்..#Raj Tv
twitter.com/Thaadikkaran
பக்கத்துல உக்காந்திருக்குறவங்க தட்டைப் பார்க்குறதும் மொபைலைப் பார்க்குறதும் உலகளாவிய நோய்தான் போல :(
twitter.com/manipmp
நூறு ரூபாய் தட்சணை போட்டவரை கடவுளாய்ப் பார்த்தார் குருக்கள்.

twitter.com/chithradevi_91
இப்போ நித்தியானந்தா இருக்கிற இடம்தான் ரெம்ப காலமா சிந்துபாத் தேடி அலைகிற கன்னித்தீவு. :)
twitter.com/manipmp
சாப்பிட்டாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்
சமைச்சாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் பெண்கள்.
twitter.com/RajeshNovelist
என் வாட்ஸ் அப்புக்கு வந்த திகில் கதை:
அவன் அன்று வீட்டுக்குப் போகும்
போது நள்ளிரவு கும்மிருட்டு. நாய்கள் ஊளை. மனதில் பயம்.
யோசித்தான்
உரத்தகுரலில் வெங்காயம் கிலோ 5 ரூபாய்... கத்தினான்.
வீடுகளில் லைட் எரிந்தது. எல்லோரும் வெளியே வந்து
வெங்காயகாரனைத் தேட,
அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.

twitter.com/naaraju
அடுத்து உப்பு விலை ஏறி, நாடாளுமன்றத்துல அதைப் பத்திப் பேசாம இருக்கணும் நிர்மலா மேடம்.
twitter.com/Ramesh46025635
மெல்லும்போது கடவாயில் ஒட்டிக்கொள்ளும் `நேந்திரம் பழ சிப்ஸ்’ போன்றது அவள் நினைவு..! #காதலிசம்.