Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

ஐ.ஏ.எஸ் படிச்சிருந்தா மட்டும் என்ன செய்யப் போறீங்க?

வலைபாயுதே

ஐ.ஏ.எஸ் படிச்சிருந்தா மட்டும் என்ன செய்யப் போறீங்க?

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/mrithulaM

மூக்குத்தி புதுசா போட்டு, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போறதெலாம் எவ்ளோ பெரிய துயரம்.

twitter.com/pachaiperumal23

ஹெட்செட்டைத் தவிர எல்லாமே தர்றதா சொல்லிட்டாங்க..

twitter.com/Suyanalavaathi

காலைல கட்சில சேர்த்தா, சாயங்காலம் சீட் கிடைக்குது. கட்சினா இப்படி இருக்கணும் தொண்டர்களுக்கு சப்போர்ட்டிவ்வா...

நமக்கு தட்கல்ல கூட டிரெய்ன்ல ஒரு சீட் கிடைக்க மாட்டேங்குது... என்ன கொடுமை சரவணன் இது!

twitter.com/ramesh_twetz

மிட்டாய் கவரைப் பிரிக்கும் வரைதான் அவர்கள் நமக்கு அடிமை... பிரித்த பின் நாம்தான் அவர்களுக்கு அடிமை..!

#குழந்தைகள்.

twitter.com/mujib989898

StarsportsIndia - இது வேற மாதிரி அவதாரம்!
StarsportsIndia - இது வேற மாதிரி அவதாரம்!

கடைசி வரைக்கும் வாழ்க்கை இப்படித்தான் போகும் போலன்னு நினைச்சா நாம எதிர்பார்ப்பது இன்னும் நடக்கலைன்னு அர்த்தம்.

twitter.com/laksh_kgm

சாமி பெயரைச் சொல்லி மிரட்டுகிறவர்கள்தான் பூச்சாண்டிகள்!

twitter.com/Suyanalavaathi

இந்த அரசியல்வாதிகள் கொடுக்கிற வாக்குறுதியும், மேனேஜர்கள் கொடுக்கிற வாக்குறுதியும் ஒண்ணுதான். ரெண்டுமே நடந்ததா சரித்திரமே இருக்காது!

twitter.com/HAJAMYDEENNKS

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு.

#இப்படியே போனால் அடுத்து நர்சரி படிக்கவும் நீட் தேர்வு கொண்டு வந்துடுவாங்க!

twitter.com/manipmp

வரிசைகள் பொதுவாக இரண்டு ரகம் தான்.

1.மெதுவா நகரும்

2.ரொம்ப ரொம்ப மெதுவா நகரும்twitter.com/Janani_Twitz_

நீங்கள் கூறுவது பொய்யென தெரிந்தும் கூட அதை நம்புபவர்களை விடவா உங்களை யாரும் நேசித்து விடப் போகிறார்கள்.!

twitter.com/mohanramko

Rishab Pant - நாளைய இந்தியாதாங்க!
Rishab Pant - நாளைய இந்தியாதாங்க!

இதற்கு மேல இந்த வீட்டு ஓனரை சமாளிக்க முடியாதுன்னு, வேற வாடகை வீடு பார்க்கிற மாதி‌ரிதான், வேற தொகுதியில் நிற்பதும்...

twitter.com/sultan_Twitz

என் ஆட்சியில் ஏன் விடுமுறை விட்டீங்க என்று மாணவர்கள் அழுவார்கள் ~ சீமான்.

ஏண்ணே, அந்த அளவுக்கு வகுப்பறையில் கதை சொல்லித் தூங்க வைக்கப் போறீயாண்ணே?!

twitter.com/Suyanalavaathi

குகையை விட்டு சிங்கம் வெளியே வந்துவிட்டது. இனி வேட்டை ஆரம்பம் - விஜயபிரபாகரன். #விஜயகாந்த்: டேய்... சும்மாருடா!

twitter.com/Kannan_Twitz

சின்ன விஷயத்தைப் பெருசாக்கறவன் மனுஷன். பெரிய விஷயத்தை சின்னதாக்கறவன் பெரிய மனுஷன்!

twitter.com/amuduarattai

இலவசத் திட்டங்களுக்கு, ‘கட்சிகளின் தேர்தல் அறிக்கை’ என்று பெயர்.

twitter.com/ShakthiBoy_

பெரும் அழுகைக்குப் பிறகு தன் வாழ்க்கையைத் தொடருபவனுக்கு பலம் அதிகம்.

twitter.com/indhiratweetz

அத்தனை குறைகூறல்களுக்கு நடுவிலும் நாம் செய்தது சரிதான் என்று நிரூபிப்பதற்கான ஒற்றை வாய்ப்பிற்காகத்தான் இத்தனை போராட்டமும்.

twitter.com/Paruthi_Moottai

அங்கே என்னப்பா அவ்வளவு கூட்டம்...

அங்கே பிஜேபி தேர்தல் பொதுக்கூட்டம் போட்டிருக்காங்க...

பிஜேபி-க்கு இவ்வளவு கூட்டமா..?

அட நீ வேற. பிஜேபி கூட்டத்துக்கு ஒருத்தன் போயிருக்கான். அந்த ஒருத்தன் யாருன்னு பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்.

twitter.com/murugan_itz

சில நேரங்களில் மனிதர்களை மட்டுமல்ல, இயந்திரங்களைக்கூட சாதாரணமா எடை போட்டுடக் கூடாது!

twitter.com/Kozhiyaar

பேப்பர் போட்ட பின் வேலைக்குச் செல்லும் ஐடி ஊழியர் போலவே, பள்ளிக்குச் செல்கிறார்கள் ஒன்பது முதல் பதினொன்று வகுப்பு மாணவர்கள்!

twitter.com/balasubramni1

“அடேய், வருஷத்துக்கு 6 சிலிண்டர் இலவசமாம்டா’’

“ஆமாண்ணே நல்ல திட்டம்தான். ஆனால் சிலிண்டர் டெலிவரி பாய் சார்ஜ் மட்டும் 850/- ரூபாயாம்ணே.”

twitter.com/balebalu

தர்மம், அதர்மம், ஊழல் ஒழிப்பு, நலத் திட்டங்கள்... ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காதில் விழும் சில வார்த்தைகள்.

twitter.com/Vkarthik_puthur

என்னால்தான் ஐ.ஏ.எஸ் படிக்க முடியவில்லை. ஆனால் கட்சியில் நிறைய ஐ.ஏ.எஸ் உள்ளது பெருமை - கமல்ஹாசன்!

ஐ.ஏ.எஸ் படிச்சிருந்தா மட்டும் என்ன செய்யப் போறீங்க? நீங்களும் எதோ ஒரு கட்சியில சேர்ந்திருக்கத்தான போறீங்க பாஸ்!

twitter.com/manipmp

ஒரு வேளை சாப்பாட்டின் அருமை, அல்சர் இருப்பவனுக்குத்தான் தெரியும்.

twitter.com/MrElani

வீட்டுக்கொருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும், வீட்ல யாருமே இல்லாம பூட்டிக் கிடந்தாலும் வழங்கப்படும்.

twitter.com/shivaas_twitz

விஜய் டிவி ஆபீஸ்ல ரொம்ப நாளா தங்கியிருந்த ராமரைக் காலி பண்ணிட்டு இப்போ அந்த ரூம்ல ஷிவாங்கிய தங்க வச்சிட்டாங்கபோல

twitter.com/Kannan_Twitz

புல்லட் ஓட்னாலே முகத்தை விறைப்பா வச்சிக்கிட்டு போற வர்றவங்களையெல்லாம் முறைச்சிக்கிட்டே போகச்சொல்லுது!

twitter.com/shivaas_twitz

2016-ல சொன்ன அதே ‘மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுதல்’

அப்படி எத்தனை படிதான்யா இருக்கு?

twitter.com/thecommonman

2016 அதிமுக தேர்தல் அறிக்கை எடுத்து அதுல நடுவுல நாலு பக்கத்த கிழிச்சிட்டு, அப்படியே திமுக 2021 தேர்தல் அறிக்கைய எடுத்து அதுல பத்துப் பக்கத்த கிழிச்சி இதுல ஒட்ட வச்சா வர்றதுதான் அதிமுக தேர்தல் அறிக்கை 2021...

twitter.com/LAKSHMANAN_KL

சேப்பாக்கம் மக்களுக்காக நான் கடன்பட்டிருக்கிறேன்! - குஷ்பு.

முதல்வர்கிட்ட சொன்னீங்கன்னா உடனே அதையும் தள்ளுபடி செஞ்சிடுவாரே அக்கா..?!

twitter.com/mekalapugazh

அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அகற்ற வலியுறுத்துவார்களாம். ராஜ்யசபாவில், அதிமுக + பாமகவின் 12 ஓட்டுகள்தான் இந்தச் சட்டம் நிறைவேறக் காரணமாய் இருந்தது.

அவர்களே பாம் வைப்பார்களாம்..பிறகு அவர்களே எடுப்பார்களாம் மொமென்ட்..

www.facebook.com/gkarlmax

விஜயகாந்த் மவன் வெறும் பிரபாகரன் பேச்சுக்கே மயக்கம் வருதே, சீமான் மவன் மாவீரன் பிரபாகரன்லாம் பேச ஆரம்பிக்கிறப்ப தமிழனுக்கு உசுரு தங்குமா...

www.facebook.com/buhari raja

Cash ஆ குடுப்பீங்களா Gpay, Phone payல அனுப்புவீங்களா?

என்னத்த?

டிஜிட்டல் இந்தியாவுல இருக்கோம், ஓட்டுக்குக் குடுக்குற காசத்தான்...

twitter.com/Suyanalavaathi

ஞாயிற்றுக்கிழமை லீவு முடிஞ்சு திங்கட்கிழமை வேலைக்குப் போறது ரொம்ப கஷ்டமா இருக்கு.

அப்படியே ‘திங்கட்கிழமை லீவில் சேர்க்கப்படும்’னு தேர்தல் அறிக்கைல சேர்த்தா கொஞ்சம் வசதியா இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism