https://twitter.com/mohanramko
யாரு, எதை போஸ்ட் பண்ணுனாலும் உடனே நைஸ், சூப்பர்னு பாராட்டணும், அப்படி இல்லைன்னா தப்பா நினைப்பாங்க. குடும்ப வாட்ஸப் குரூப்ல இருப்பது நரக வேதனைப்பா.
https://twitter.com/itz_azha
சூரிய கிரகணத்தை நேரில் காண முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்! - செய்தி # இப்படிப் பாத்தா எப்படித் தெரியும், தனியா ஃப்ளைட் எடுத்துட்டு மேல போய் கிட்ட பாருங்க.

https://twitter.com/mekalapugazh
வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு வாங்கி மக்கள் எளிதில் பழகிவிட்டார்கள்...இந்த ஜோக் எழுத்தாளர்கள்தான் அதிலிருந்து வெளியேறச் சிரமப்படுகிறார்கள்போல.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALShttps://twitter.com/saravankavi
அட்டன்டென்ஸ் குறைஞ்சா எக்ஸாம் எழுத முடியாதுன்னா அது காலேஜ். அட்டன்டென்ஸ் இல்லைன்னாலும் வாக்களிக்க முடிஞ்சா அது நாடாளுமன்றம்.

https://twitter.com/ItsJokker
பெண்களுக்குள் இருக்கும் கங்கா `சந்திரமுகி’யாய் மாறுவதும், ஆண்களுக்குள் இருக்கும் `பட்ஜெட் பத்மநாபன்’ வெளிப்படுவதும் ஷாப்பிங்கின் போது மட்டுமே..!
https://twitter.com/manipmp
பிறரைச் சிரிக்க வைத்து அழகு பார்க்க நகைச்சுவைவாதியா இருக்கணும்னு அவசியம் இல்ல. போட்டோகிராபராகூட இருக்கலாம்.

https://twitter.com/arattaigirl
அடுத்தபடியா ABCD எழுதிப் பழகுற குட்டிப் புள்ளைங்க C-க்கு அப்புறம் தப்பா AAன்னு எழுதினாக்கூடக் கைது பண்ணுவாங்கன்னு நினைக்கறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
https://twitter.com/thoatta
எப்பவும் லேட்டா எந்திரிக்கிறவன் நேரமே எந்திருச்சு உங்களை எதிர்த்துக் கோலம் போடுறதும், நீங்க சொல்ற அந்த ‘ஜீன்ஸ் பேன்ட்’ பொண்ணுங்க கோலம் போடுறதும் பார்த்து நீங்க வெட்கப்படணும் சென்றாயன்.

https://twitter.com/kumarfaculty
பொதுவில் ஒரு விஷயம் பேசிக்கொண்டு இருக்கும்போது நாம் சொல்வதை அப்படியே அவருடைய கருத்தைப் போலவே திருப்பிச் சொல்லும் ஒரு நண்பர் எல்லோருக்கும் இருப்பார்கள்.
twitter,com/Aadhavan Dheetchanya@manuvirothi
முப்படையில் நூலாம்படையும் சேருமா?
twitter.com/ Yousuf Riaz@YousufRiaz1
கோலம்போட்டவர்கள், போடக்கூடியவர்கள் சமூகவிரோதிகள் - தோழர் ரஜினிகாந்த்.
https://twitter.com/Aasifniyaz
மிஷ்கின் மாதிரியே மித்ரனும் ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்க ஆசைப் பட்டிருக்கிறார். என்ன, மிஷ்கின் சூப்பர் ஹீரோ படம் எடுத்திருக்கிறாரா?
இல்ல. அவரும் ஆசைப்பட்டாரு...
#ஹீரோ

https://twitter.com/arattaigirl
பிடித்த நடிகரை எதிர்க்கவே கூடாது. கருத்தில் முரண்படவே கூடாது. கடவுளாத்தான் பாக்கணும்னா... மன்னிக்கவும். நான் கடவுளையே அப்படிப் பாக்கறதில்ல.
https://twitter.com/manipmp
ஆசைப்பட்டது கிடைக்கலைன்னா
அது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு ஆசைப்படணும்.
https://twitter.com/pencil_tweets
உங்களுக்குத்தான்டா அது பேரு ‘`மன் கீ பாத்.’’ இன்னையில இருந்து அது எங்களுக்க அது #கதாகலாஷேபம்

https://twitter.com/itz_azha
நித்தி: இன்னிக்கு எதோ கிரகணமாம். சூரியன, சந்திரன் மறைக்குதுன்னு எல்லாம் அண்ணாந்து பாத்துட்டு இருக்காங்க,
நான் ஒருத்தன் சூரியனை முக்கா மணிநேரம் லேட்டா வர வெச்சிருக்கேன், என்ன உள்ள தூக்கிப் போடப் பாக்குறாங்க.
https://twitter.com/pachchakkili/
மாலையில் அடிவாங்கிய குழந்தை இரவில் உறங்கும்போது தடவிக்கொடுத்து அப்பாக்கள் கேட்கும் மன்னிப்பு குழந்தைகளுக்குத் தெரிந்ததேயில்லை.