Published:Updated:

வலைபாயுதே

ப்ரியா மணி
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா மணி

ஆவி பிடிப்பதில் நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே பிடிக்கவும். வெளியே முகாம்களில் பிடிப்பது நீர் ஆவி அல்ல, கொரோனாவோட ஆவி

வலைபாயுதே

ஆவி பிடிப்பதில் நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே பிடிக்கவும். வெளியே முகாம்களில் பிடிப்பது நீர் ஆவி அல்ல, கொரோனாவோட ஆவி

Published:Updated:
ப்ரியா மணி
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா மணி

www.facebook.com/saravanakarthikeyanc

18-44 வயது ஆட்கள் தடுப்பூசி போட சுலபமான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறேன்... கொஞ்ச காலம் காத்திருந்தால் 45 வயதாகி விடும். அப்புறம் போட்டுக் கொள்ளலாம்.

twitter.com/DrTRM

ஆவி பிடிப்பதில் நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே பிடிக்கவும். வெளியே முகாம்களில் பிடிப்பது நீர் ஆவி அல்ல, கொரோனாவோட ஆவி!

twitter.com/RajaAnvar_

புயல்களுக்கு டிசைன் டிசைனா பெயர் வைக்க ஆரம்பிச்சதும்தான் புயல்களும் டிசைன் டிசைனா அடிக்க ஆரம்பிச்சிருக்கு.

PilluMani: முத்தழகு ஈஸ் பேக்!
PilluMani: முத்தழகு ஈஸ் பேக்!

facebook.com/gkarlmax

அதிபர் இத்தனை தேர்தல்ல நிக்கிறாரு, கட்டுத்தொகை எல்லா தடவையும் நட்டுக்குது. ஒரு தடவையாவது, தோல்வியை ஆராயுறேன் துருத்தியை ஆராயுறேன்னு கூட்டம் கூட்டியி ருக்காரா சொல்லு. ஒரு சின்ன சலசலப்பு வரணுமே கட்சிக்குள்ள. இரும்புக்கோட்டைனா அதுதான். கமல் அமைதியா உக்காந்து அண்ணனோட செயல் தந்திரங்களை வரி வரியா படிக்கணும்!

www.facebook.comramanujam.govindan‘‘என்னங்க, ஒரு வாரமா சாப்பாட்டில் எனக்கு டேஸ்ட், ஸ்மெல் எதுவுமே தெரியலை!’’

‘‘எனக்குப் பதினைஞ்சு வருஷமா அப்படித்தான் இருக்கு. ஆ..!’’

(உரையாடல் முற்றுப் பெற்றது)

twitter.com/Suyanalavaathi

லாக்டௌன்ல காட்டுக்குள்ள சரக்கடிக்கிறவன், கேரம் போர்டு ஆடுறவன், கிரிக்கெட் ஆடுறவன் எல்லாருக்கும் இந்த டிரோன் கேமராதான் முதல் எதிரி!

twitter.com/pachaiperumal23

பூரிக்கு வட்டமா தேய்க்கத் தெரியலை. என்ன பிள்ளைய வளர்த்துருக்காங்களோ!

# சட்டுனு கோபப்பட்டு வெளிய போகவும் முடியாது. ஃபுல் லாக்டௌன் வேற. கையறு நிலை.

twitter.com/arulrajmv1

நாட்டு மக்கள் அனுபவித்து வரும் வலியை நானும் அனுபவித்து வருகிறேன்: மோடிஜி

மக்கள்: எத்தனை வருஷமா?

ஜி: சுமார் ஏழு வருஷமா!

Dhanush: முதல் துளிர்!
Dhanush: முதல் துளிர்!

twitter.com/HariprabuGuru

இனிமே கட்சி மாநாடு நடத்தணும்னா, ஒரு டீக்கடை பெஞ்ச்ல சமூக இடைவெளி விட்டு உக்காந்து நடத்தி முடிச்சுடலாம். இதையெல்லாம் பார்த்து அமெரிக்காக்காரன் கத்துக்கணும். www.facebook.com/ramanujam.govindan

‘‘என்னம்மா, நாம மூணு பேரும் பாசிட்டிவ்!. உனக்கு, நம்ம பொண்ணுக்கு எல்லாம் காய்ச்சல் அடிச்சிது. ஆனா எனக்கு மட்டும் காய்ச்சல் அடிக்கலே.’’

‘‘நீங்க எதை உருப்படியாச் செஞ்சீங்க? ஒரு கொரோனா இன்ஃபக்‌ஷனைக் கூட ஒழுங்கா வாங்கிக்கத் தெரியல!’’

twitter.com/ramesh_twetz

பக்குவத்தின் உச்சம் என்பது நல்ல நண்பர்களைக் கண்டறிவதே!

twitter.com/gips_twitz

விஜயபாஸ்கர் உட்பட எல்லாக் கட்சியிலயும் ஒரு ஆள சுகாதாரத் துறை ஆலோசனைக் குழுவுல போட்டாச்சு. இப்ப யாரக் குறை சொல்றானுகன்னு பாப்போம்!

twitter.com/kumarfaculty

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நீராவி பிடிக்க ஏற்பாடு... நல்லவேளை, நீராவி ரயில் என்ஜின்கள் பயன்பாட்டில் இல்லை.

twitter.com/sindhan

34 வயதேயான மகனுக்கு 60 வயதான அப்பா படுக்கை தேடுகிறார். போனில் பேசும்போதே அழுகிறார். இணையம் பயன்படுத்தவும் தெரியவில்லை. 104 பற்றியும் தெரியவில்லை. படித்த நண்பர்களே, தோழர்களே... தேடலில் உதவி தேவையுள்ளோருக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். 1% நம்பிக்கை விதைக்கலாம்.

facebook.com/Parthiban Gowthamaraj

ஆவி பிடிக்கத் தேவையான பொருள்கள் அப்படின்னு இவங்க அனுப்புற பார்வேர்டு மெசேஜ் பாத்தா பிரியாணி ரெசிபி மாதிரி இருக்கே! அதுல கொஞ்சம் பாஸ்மதி போட்டுட்டா, மசாலா, தண்ணி வேஸ்ட்டாப் போகாது.

twitter.com/sundartsp

கமல் விஷயத்தில் சார்ந்தோர்கள் உஷார் ஆயிட்டாங்க, கமல் மாட்டிக்கிட்டார். ரஜினி விஷயத்தில் ரஜினி உஷார் ஆயிட்டார், சார்ந்தோர்கள் மாட்டிக் கிட்டாங்க.

twitter.com/Timepassna

கமல்: நீங்க இன்னும் கட்சிய விட்டுப் போகல.

சரத்குமார்: சார், நான் உங்க கூட்டணிக் கட்சிங்க சார்.

ராதிகா: நம்ம கட்சிதான் மாமா இப்ப பெரிசு, 2 பேர் இருக்கோம்.

twitter.com/ItsJokker/

“எப்போ இருந்து கொரோனா சிம்டம்ஸ் இருக்கு உங்களுக்கு?”

“ஒரே பைப்ல வரிசையில நின்னு ஆவி பிடிச்சதுல இருந்துதான்..!”

Mammootty: தாத்தனின் செல்ல பேத்தி!
Mammootty: தாத்தனின் செல்ல பேத்தி!

twitter.com/narsimp

திடீர் புனிதங்கள் எவ்வளவு ஆபத்தானவையோ அதைவிட அதிக ஆபத்தானவர்கள் இந்த ‘திடீர் அக்கறையாளர்கள்’.

facebook.com/gokul.prasad

முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பார்த்துப் புல்லரித்துப் போய் ‘இயக்குநர் ஷங்கர் ஒரு தீர்க்கதரிசி’ என அறிவித்துவிட்டார்களா?

twitter.com/Baashhu

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

# முதலமைச்சர் ரஜினிகாந்தின் கொரோனா நிவாரண நிதிக்கு ஸ்டாலின் நிதியுதவின்னு வரவேண்டிய நியூஸ் - வாட்சப்பில் வந்தது.

twitter.com/Suyanalavaathi

யோவ்... எழுந்திரியா. மணி 6:30 ஆச்சு... கடைய பூட்டுறதுக்குள்ள காய்கறி வாங்கிட்டு வா!

# லாக்டௌன் பரிதாபங்கள்.

twitter.com/ramesh_twetz

‘எண்ணம் போல் வாழ்க்கை’ன்னு சொன்னவங்க, ‘யார் எண்ணம் போல் யார் வாழ்க்கை’ன்னு சொல்லாமப் போயிட்டாங்க!

Sunitha: வடகிழக்கிலிருந்து ஒரு தமிழ்!
Sunitha: வடகிழக்கிலிருந்து ஒரு தமிழ்!

facebook.com/தமிழ்ப்பிரபா

இருதினம் முன்பு பெரியப்பா கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. என் வாழ்வின் பெரும் விசையாக எனக்கிருந்தவர். ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றேன். கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் அவரை ‘பேக்’ செய்து கொடுத்து, ‘வீட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது. நேரடியாக சுடுகாட்டுக்குத்தான், ஆம்புலன்ஸ் கிடைக்கும் வரை சவக்கிடங்கில் வைத்திருப்போம்’ என்றார்கள். சவக்கிடங்கில் கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் கிடத்தப்பட்டிருந்த பிணங்களைப் பார்த்தபோது ஏற்பட்ட உயிர் பயம் எனக்கும் இன்னும் அகலவில்லை. ஒரு வாரமாக மருத்துவமனையிலேயே இருந்த என் அண்ணன் சொன்ன கதைகளைக் கேட்டபோது, ‘இங்கு வந்திருக்கத் தேவையில்லையோ, மூன்றாவதாக ஒரு மாஸ்க் கொண்டு வந்திருக்கலாமோ, Face shield என திவ்யா ஏதோ சொன்னதை மாட்டிக் கொண்டு வந்திருக்கலாமோ’ என்று குடும்பம் கண்முன் வந்து போனது. ஆனால், இங்கே யாருமில்லை எனில் ஓர் அநாதைப் பிணம்போல என் பெரியப்பா கிடந்திருப்பார். என்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்பதை மேலும் பூதாகரப்படுத்திக்கொண்டு அங்கு நின்றிருந்தேன்.

புதுப்பேட்டை கோழிக்கறி மார்க்கெட்டில், நாம் கேட்டதும் தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த கோழியில் ஒன்றைப் பிடித்து அதன் தொண்டையைச் சீவி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு சத்தமடங்கியதும் தூக்கி வெட்டுப் பலகையில் வைத்துத் துண்டுகளாக்கி கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்து கொடுப்பார்கள். எல்லாம் கடகவென்று நடக்கும். தொடர்ந்து செய்வதனால் கைவரப்பெற்ற லாகவம் அதிலிருக்கும். அந்த லாகவத்தை பிணக்கிடங்கிற்கு முன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும், மருத்துவர்களிடமும் பார்த்தேன்.

நீண்ட நேரமாகியும் அரசு இலவச ஆம்புலன்ஸ் எதுவுமே அங்கில்லை. அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ‘தனியார் ஆம்புலன்ஸ் இருக்கிறது’ என்று அந்த வளாகத்திலேயே சற்றுத் தள்ளி நின்றிருக்கும் ஆம்புலன்ஸ்களைக் காட்டினார்கள். ஸ்டான்லியிலிருந்து பெருங்குடிக்குக் கொண்டு செல்ல அவர்கள் கேட்ட தொகை பதினோராயிரம். சூழலைப் புரிந்துகொண்டு நிகழ்த்தும் கயமைத்தனம். மாலைப் பொழுது நெருங்கவே, குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு வந்தால் முகத்தையாவது பார்ப்பார்கள் என்பதால் பேரம் பேசினோம். எட்டாயிரத்திற்கு வந்தார்கள். பெருங்குடி சுடுகாட்டில் ஏற்கெனவே மூன்று பிணங்கள் வரிசையில் இருக்க, நான்காவதாக பெரியப்பா காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் யாரும் அருகே இருக்க அனுமதியில்லை. வறண்ட கண்களுடன் என் பெரியம்மா நின்றிருந்த காட்சி கண்களில் இன்னும் நிறைந்திருக்கிறது. நெருங்கிய உறவுகள் ஒரு பத்துப் பேர் தூரத்தில் நிற்க, அவர் மின் தகனம் செய்யப்பட்டார். He didn’t deserve such a farewell at all!

பெரியப்பாவின் சாம்பலுக்காகக் காத்திருந்தபோது, எரியூட்டு வேலைகளைச் செய்யும் தம்பிகளிடம் “ஏம்ப்பா இவ்ளோ நேரம்” என்றேன். “எங்க சார், வந்துனே இருக்குது. இன்னா பண்றது. எல்லாம் கொரோனா கேஸ்ங்கதான். இன்னொரு மிசினு ரெடி பண்ணிக்கிறாங்க. நாளைல இருந்து சீக்கிரம் ஆய்டும்” என்றார். இது தவிர, அயப்பாக்கம் சுடுகாட்டுக் கதைகளை என் உறவினர் சொல்லக் கேட்க, ஏதோ இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களில் பெரும் அழிவுக்குப் பின் பிணங்கள் ஆங்காங்கே எரியும் காட்சிகள் தோன்றி மறைந்தன. நண்பர்களிடம் உரையாடினால் அவர்கள் சொல்வதைக் கேட்கவே இயலவில்லை. துயரம் புழுதிப் புயலைப் போல ஊரில் வியாபித்திருக்கிறது. அரசு கொடுக்கும் எண்ணிக்கைக்கும் தினசரி இறப்பவர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. மக்கள் பீதியடையக் கூடாது என்பதால்கூட இருக்கலாம். ஆனால், போன புளிமூட்டை ஆட்சிக்கு இந்தப் புதிய அரசின் யத்தனங்கள் ஒரு நம்பிக்கையை அளிக்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

என் அப்பாவிற்கு இணை நோய்கள் இருப்பதால் அவரை இறுதிச் சடங்கிற்கு வரவேண்டாமெனச் சொல்லிவிட்டோம். தன் அண்ணனின் முகத்தைக்கூடப் பார்க்க இயலாமல், அவர் புகைப்படத்தை செல்போனில் தொட்டு என் அப்பா அழுததாக உணவு பரிமாறும்போது அம்மா சொன்னார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனிதர் அழுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

எப்படியும் ஒருநாள் இறக்கப்போவது இயற்கையின் விதியே! ஆனால், மரணத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லாத ஒரு சூழலில் மரித்துப்போகும் அவலத்தை நாமாக உருவாக்காமல் இருப்பது நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதை. உயிர்த்திருத்தலின் குற்ற உணர்விலிருந்து நம்மைச் சார்ந்தவர்களை மீட்கும் பொறுப்பு!