twitter.com/kalvetu
இந்தியா தவிர வேறு எங்காவது, பண்டிகைகளில் சினிமா பார்ப்பது ஒரு முக்கிய சடங்காக உள்ளதா? அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் நேரத்தில் சான்டா, Father coming home for Xmas போன்ற கான்செப்ட்களில் படங்கள் வரும். ஆனால் அதைப் பார்ப்பது என்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்காது.

https://twitter.com/mohanramko
பேருந்துப் படிக்கட்டு அருகே உள்ள சீட்ல உட்கார்ந்தா சீக்கிரமா இறங்கிடலாம்னு நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALShttps://twitter.com/19SIVA25
“குடியுரிமைச் சட்டம் - செல்போன் மிஸ்டு கால் மூலம் 68 லட்சம் பேர் ஆதரவு”- அமித்ஷா. இதைவிட ‘டேபிள்மேட்டுக்கு’ மிஸ்டு கால் கொடுத்தவங்க அதிகம் ஜி..! இதெல்லாம் பெருமையா?

https://twitter.com/manipmp
அசைவ விருந்தில் நமக்குத் தெரிந்தவர் பந்தி பரிமாறினால் வரும் சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
facebook.com/Abdul Hameed Sheik Mohamed
புத்தகக் கண்காட்சி நடக்கும்போது ஒருவன் அப்பளக்கடை பற்றிக் கதை அளக்க ஆரம்பிக்கிறான் என்றால் அந்த வருடம் அவன் புத்தகம் ஏதும் வரவில்லை என்று அர்த்தம். அல்லது இயல்பாகவே இதுபோன்ற கண்காட்சிகளில் வெறுப்புக்கொண்டவனாக இருக்க வேண்டும். கண்காட்சிக்கு வருபவர்கள் கண்டிப்பாக புத்தகம் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது. வாங்காவிட்டால் வருகிறவனை அப்பளம் தின்னுகிறவன் என அவமதிக்கக்கூடாது. புத்தகம் வாங்குவது பணத்தோடு தொடர்புடைய விஷயம். அவனுக்குப் புத்தகம் தேவைப்படுகிறதா என்பதோடு தொடர்புடைய விஷயம்.

இன்று வாங்காதவன் நாளை வாங்குவான். மேலும், புத்தகம் வாங்காதவர்கள் மட்டுமல்ல, வாங்குகிறவர்களும்தான் அப்பளம் சாப்பிடுகிறோம். ஏதோ இருபத்து நான்கு மணி நேரமும் தூய இலக்கியத்தை அவித்துத் தின்பதுபோல ஒரு பில்டப். மேலும், இலக்கியம் படிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிலரைப்போல சக எழுத்தாளன்மீது, அப்பளம் மட்டும் தின்னும் எவனும் சேற்றை வாரியிறைப்பது கிடையாது.
https://twitter.com/krajesh4uu
தனித்திரு... விழித்திரு
ரொம்ப டயர்டா இருந்தா தூங்கிரு.
https://twitter.com/ItsJokker
விளக்க முடியாத விந்தையென்பது யாதெனில், டீக்கடையில் கேட்கும் அத்தனை பாடல்களும் ரசிக்கும்படி இருப்பதும், சலூன் கடையில் போடப்படும் அத்தனை காமெடிகளும் சிரிக்கும்படி இருப்பதுமே.
facebook.com/Ilango Krishnan
தமிழின் மிகச்சிறந்த நாவல்கள் என்று மூன்றே மூன்றைத்தான் என்னால் சொல்ல முடியும். ஆனால் அந்த மூன்றையும் இனிதான் நான் எழுத வேண்டும். அடுத்த பதிவில் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் பற்றிச் சொல்கிறேன்.

https://twitter.com/sundartsp
நமக்குப் பிடிச்ச பாட்டு சன் லைஃப்ல வருதா, சன் மியூசிக்ல வருதான்னு பார்த்தே நம்ம வயசைக் கண்டுபிடிச்சிடலாம்.
https://twitter.com/mekalapugazh
அலாரம் வைப்பது என்பது எழுந்து கொள்வதற்காக அல்ல; எத்தனை மணிக்கு எழுந்துகொள்ளலாம் என்று முடிவெடுப்பதற்கே.
https://twitter.com/mugamoodi11
ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்பது என்னமோ உண்மைதான். ஆனால், அந்த ஒருநாள் பிப்ரவரி 30 என்பதுதான் நமக்குத் தெரியாத ரகசியம்..!