சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

அம்மா தினமும் மூன்று முறை கால் செய்வார். விஷயம் அதுவல்ல, முதல் காலில் என்ன பேசினோம் என்பது பாதி மறந்துவிடும் இரண்டாம் காலில்.

facebook.com/sowmya.ragavan

‘குக் வித் கோமாளி’ பூராம் கிறுக்குத் தனமா இருக்கு, கோமாளித் தனமா இருக்கு, மெண்டலுங்களா இருக்குன்னு ஏகப்பட்ட போஸ்ட்கள். டைட்டில்ல என்ன ‘குக் வித் அறிவுஜீவிகள்’னா போட்ருக்கு. அந்தக் கோமாளிகளை வச்சுதான் ஷோவே. அதுல வந்து கோமாளித்தனம் பண்றாங்கன்னு மூக்கு சிந்தினா... ஹியூமன்ஸாடா நீங்கெல்லாம்?

twitter.com/paulitwitz

ஜி.எஸ்.டி அதிகமா இருக்கா, ஏன் ஹோட்டல்ல சாப்பிடறீங்க?

வெங்காயம் விலை அதிகமா இருக்கா, என்னைய மாதிரி வெங்காயம் சாப்பிடாம இருங்க.

ஆக்சிஜன் சப்ளை ஏற்பாடு பண்ணுங்கன்னா, தேவைப்படறத குறைச்சிக்கங்கன்னு சொல்றாங்க.

நீங்கெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கறீங்கன்னு மட்டும்தான் கேக்கல.

Pavithralakshmi: ரீல் சமந்தா!
Pavithralakshmi: ரீல் சமந்தா!

facebook.com/revathy.ravikanth

அம்மா தினமும் மூன்று முறை கால் செய்வார். விஷயம் அதுவல்ல, முதல் காலில் என்ன பேசினோம் என்பது பாதி மறந்துவிடும் இரண்டாம் காலில்.

ரேவதி, என்னம்மா டிபன் செஞ்ச?

இட்லி!

சில பேச்சுக்கப்புறம் நிறைவுறும் அந்த கால்... மறுபடி மதியவாக்கில் ஒரு அழைப்பு!

ரேவதி, என்ன செய்ற?

சும்மாதான் இருக்கேன்!

ம்ம்... காலைல என்ன டிபன்?

இட்லிமா... காலைலேயே உன் கிட்ட சொன்னேனே!

சுத்தமா ஞாபகமில்ல... பாரேன்...

இப்பொழுது சமீபமா எனக்கு வயதான பின் என் பிள்ளைகளிடம் நடக்க வாய்ப்புள்ள அலைபேசி அழைப்பை நினைத்துப் பார்க்கிறேன்.

டேய்! அந்த ஓல்டு ஆக்டர் வடிவேலு டெம்ப்ளேட் ஒண்ணு கேட்ருந்தேனே!

ஐயோ அம்மா, காலைலேயே கேட்டுட்ட... நானும் அனுப்பிட்டேன்... வர வர எல்லாமே ஒனக்கு மறக்குது.

twitter.com/karna_sakthi

மத்திய அரசின் மெத்தனத்தால் கொரானா பாதிப்பில் இந்தியா உலகளவில் முதலிடம் நோக்கி நகர்கிறது.

‘இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர் விமர்சனம் செய்யக்கூடாது, உள்நாட்டு விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ எனச் சொன்ன சச்சின் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை தற்சமயம் என்ன செய்கிறார்கள்?

twitter.com/jeganjeeva

உலகின் கடைசி மனிதனுக்கு பெயர்கூட அவசியமில்லாத ஒன்று.

twitter.com/RenugaRain

நான்லாம் ஜெமினி கணேசன் படம்தான் பழைய படம்னு நினைச்சிட்டிருக்கேன். அன்பே சிவம் பழைய படம்ங்கறானுங்க.

twitter.com/skpkaruna

மயானத்தில் எரியூட்டும் அந்த ஷாட் காட்ட வேண்டும் என்று தொலைக்காட்சிகளுக்கு ஏதேனும் நிர்ப்பந்தமா?

அந்த இடத்திலாவது குடும்பத்துக்கான நேரத்தையும், இடத்தையும் அளித்து இவர்கள் வெளியே வரலாம். இறந்தது நடிகர்தான் எனினும், நூறு கேமிராக்கள் முன் உடலைத் தகன மேடைக்குள் அனுப்புவது அபத்தக்காட்சி.

Natarajan: நான் சூர்யா... நீ தேவா!
Natarajan: நான் சூர்யா... நீ தேவா!

twitter.com/shivaas_twitz

ஒரு நாளைக்கு 2 லட்சம் கேஸுக்கு மேல வரும்போது தேர்தல் பிரசார பேரணி நடத்தலாம், கும்பமேளா நடத்தலாம்னா, எதுக்குயா 1 லட்சம் கேஸ் வந்தப்போ தக்காளி வாங்கப் போனவனை லத்தியால அடிச்சி, கேரம் போர்டு விளையாண்டவனை டிரோன் கேமரா வச்சி விரட்டி, யூ டர்ன் போட்டு டேபிளை உடைச்சி?!

twitter.com/mrithulaM

டிரஸ்ஸுக்கு மேட்சா மாஸ்க் போடத் தெரியுது... ஆனா மூக்கையும் கவர் பண்ணணும்னுதான் தெரிய மாட்டுது கர்மம்.

twitter.com/vemalism

ஊருக்கு போன் பண்ணி எல்லாரும் முதல்ல தடுப்பூசி போடுங்கன்னு சொன்னா, ஊருக்கு வா உன்னய ஒரு தடவை பாத்துட்டுப் போடு றோங்கிறாய்ங்க... அது தடுப்பூசிதான். விஷ ஊசி இல்லன்னு எப்படிப் புரிய வைப்பேன்.

twitter.com/manipmp

உலகின் மிகப்பெரிய அதிசயம் தாஜ்மஹாலோ, சீனப் பெருஞ்சுவரோ அல்ல. நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை என்பதே.

www.facebook.com/KarthigaRajendran

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் இறுதிச்சடங்கை நிறைவேற்றும் அவரின் மகள்!

ஒரு பெண், தன் தந்தைக்கு இறுதிச் சடங்கைச் செய்தது இதுதான் முதல் முறை என்று சொல்ல முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் இன்றும் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதிச் சடங்கில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது, மயானம் வரை வரக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டுதான் வருகின்றன.

பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் தடுக்கப்படுவதற்கு சடங்கு, சம்பிரதாயம் எனப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், சொத்துரிமை என்பதும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதால் எங்கே பெண்ணுக்குச் சொத்து சேர்ந்துவிடுமோ என்ற பயத்தாலேயே பெண்களுக்கு இறுதிச்சடங்கில் அனுமதி இல்லை. இதுபோல, இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால், குடும்பத்தில் ஒரே மகளாகப் பிறந்து தன் பெற்றோரைக் காப்பாற்றுகிற வாய்ப்பு எத்தனை பெண்களுக்குக் கிடைக்கும்? திருமணம் முடிந்திருந்தால், தன் பிறந்த வீட்டில் நடக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்கக்கூடாதா? வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புள்ள ஒரு பெண், தன் பெற்றோரின் இறுதிச் சடங்குகளை உறவுக்கார ஆண் ஒருவர் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வாள்?

என் அப்பா இறந்தபோது, எனக்கு வயது 15. நண்பர்கள், உறவினர்கள் என அதிகம் உறவு பாராட்டாத என் அப்பாவின் இறுதிச்சடங்கை உறவுக்கார ஆண் ஒருவர் செய்ய வேண்டு மென்றபோது நானும் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ எனக்கு பையனுக்குப் பையன், புள்ளைக்குப் புள்ள மாதிரி” இப்படி அதிகமுறை என்னைப் பார்த்துச் சொன்ன அப்பாவின் இறுதிச்சடங்கை நானே செய்ததுதான் அப்பாவிற்கு நான் செலுத்தும் உண்மையான மரியாதை, எனக்கும் அதில் மனத் திருப்தி.

இன்று, விவேக் அவர்களின் இறுதிச்சடங்கை நிறைவேற்றிய அவரின் மகள்களுக்கு அன்பும் நன்றியும்!

Yuvan: பேரன்பு!
Yuvan: பேரன்பு!

twitter.com/narsimp

முந்திலாம் ஊர்ல சலூன்ல முடியவெட்டிட்டு ஹீட்டர் போட்டா கும்முனு ஏத்தி சீவுன மாதிரி நிக்கும்னு ஒரு கிளப்பிவிடுதல்கள் இருக்கும்ல... சலூன் அண்ணன் அந்த ஹீட்டர் மிஷின கிட்டத்தட்ட இராணுவ ஆயுதம் ரேஞ்சுல கையாள்வாப்ள. டிஸ்கோ கட்டிங் சலூன் சிந்தனைகள்

twitter.com/kaattuvaasi

வாய்ப்பில்ல ராஜா... இந்த டைட்டில்ல ஒரு படம் சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.

twitter.com/Shanthhi

கோப்பால்னு யாரு சொன்னாலும் ஒரு மாடுலேஷனோடதான் கேக்குது போல.

twitter.com/FareethS

குடிமகன் : எதுக்கு இன்னிக்கு மட்டும் 150 ரூபா சரக்குக்கு 200 ரூபா வாங்குறீங்க.

சேல்ஸ்மேன் : இன்னிக்கு மங்களகரமான நாள் டா fool.

twitter.com/roadoram

அந்த ரயில் கோச்சுகளை கொரோனா வார்டாக மாற்றும் செய்தியைப் போட்டீங்கன்னா மீண்டும் 2020 காலண்டரைச் சுவரில் மாட்டிடலாம்.

twitter.com/Im_Revathy

புளூ கலர் ஷேட்ஸ்தான் பசங்களுக்கு, பிங்க் ஷேட்ஸ் பொண்ணுகளுக்குன்னு அவ்ளோ பிக்ஸ் ஆகி இருக்குது இந்தக் குட்டீஸுக்கு...

தப்பித் தவறி மாத்தினோம்னா அத்தனை கேள்வி கேக்கறது.

twitter.com/altappu

பிக்பாஸ் கொரோனா சீசன் 2 வந்து பிச்சுட்டுப் போயிட்டுருக்கு. இன்னும் நம்ம ஆங்கர் மோடி ஐயா வந்து ஒரு டாஸ்க்கும் தரலை. க்ரியேட்டிவ் டீம் உறங்குகிறதா?

twitter.com/athisha

சென்னை பிட்ச்ல சேஸிங் பண்றவன் முதல் 12-13 ஓவர்லயே அடிச்சி ஜெயிச்சாதான் ஆச்சுபோல... மம்பட்டியெடுத்து கரண்டிவிட்ட மாதிரி இருக்கு பிட்சு...

twitter.com/krishnaskyblue

ஸ்ரீகாந்த்~என்னடா கைப், கெயில் சிக்ஸ் அடிச்சுட்டு இருக்கான், அதை ரசிக்காம எதையோ எழுதிட்டு இருக்க

~ உன்கூட பெரிய ரோதனையாப் போச்சு கைப் டெல்லி டீம் கோச்... அவரு எப்புடி ரசிச்சு விசில் அடிப்பாரு

twitter.com/teakkadai1

போன்சாய் மரம் மாதிரிதான் குழந்தைகளை இப்ப இருக்கிற சமுதாயச் சூழல், பெற்றோர்களோட வேலை போன்ற சில காரணங்களால் வளர்க்க முடியுது. போன ஜெனரேசன் குழந்தைங்க நேரடியா பழகின வைட் ரேஞ்ச் ஆட்கள்/வயதுகள் கூட கம்பேர் பண்ணினா இந்த செட் குழந்தைகள் நேரடியா பழகுறது மிகக் குறைவா இருக்கு. தாங்கள் இருக்கும் இடத்திற்கேற்ப சிங்கிள் டைமென்சனாவே வளருறாங்க.

Samantha: தங்கத்தாமரை மகளே!
Samantha: தங்கத்தாமரை மகளே!

twitter.com/cricgenie

Green label Coffee 100 கிராம் பாக்கெட்டில் வாங்கினால் 24 ரூபாய். அதே 500 கிராம் பாக்கெட்டில் வாங்கினால் 155 ரூபாய்... பெரிய பாக்கெட்டில் வாங்கினால் விலை குறைவு is a myth... நிறைய பொருள்கள் இந்த மாதிரிதான்

facebook.com/kundhaani

Open book exam-ங்கறது...

இந்தா மாவிருக்கு, தவா இருக்கு, வெங்காயம் தக்காளி இருக்கு... தோச சுட்டு தக்காளி சட்னி வச்சிடுங்கற மாதிரி.