
அந்த ‘நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி’, அது டொனேசனா லோனான்னு தெரியலையே!
facebook.com/Ilango Krishnan
எல்லாவற்றுக்கும் காரணம் நேருதான் சார். நேரு மட்டும் எல்.ஐ.சி-யைத் தொடங்காம இருந்திருந்தா நாங்க ஏன் விற்கப்போறோம்?

facebook.com/பா. செயப்பிரகாசம்
அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கண்டுள்ளபடி, 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 10,349 பேர்; இவர்களில் 4,586 பேர் விவசாயத் தொழிலாளிகள்; 505 பேர் விவசாயக் குடும்பப் பெண்கள். இந்தச் சூழலில்தான் இந்தியாவின் பெருமைமிகு குடியரசுத்தலைவர் 31-1-2020ல், நாடாளுமன்றங்களின் கூட்டு அவையின் உரையில்
`உழுவார் உலகத்தார்க்கு ஆணி ; அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து’
என்ற குறளை மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.
``நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நாடு கடமைப்பட்டிருக்கிறது. நாட்டுக்காகத் தன்னலமின்றி உழைத்துவரும் விவசாயி களுக்காக, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்த நடுவணரசு அயராது பாடுபடும்”
நாடாளுமன்றத்தில் ஒரு குடியரசுத் தலைவர் மூலம் திருக்குறள் ஒலிக்கிறதே என்று மொழிமுதல்வர்களான தமிழன்பர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகலாம்.
ஆனால் இரண்டு செய்திகளும் ஒரேநாளில் வெளியாகின்றன. என்ன ஒரு நகைமுரண்! முதலாவது நிகழ்வு யதார்த்தம். பிறிதொன்று கற்பனை. உழவர்களின் தற்கொலைகளை தேசியக் குற்றமாகக் கருதாத ஒரு கற்பனையான மனம் இந்தியாவின் தலைமைப்பீடத்தில் அமர்ந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்.
https://twitter.com/manipmp
வீட்டுப்பாடம் என்பது ஒருவன் செய்வது, Project என்பது குடும்பமே செய்வது!”
https://twitter.com/Thaadikkaran
அதிகாலைக் குளிரில் இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போர்வைக்கு லுங்கி என்று பெயர்!

facebook.com/Adv Suguna Devi
தமிழகக் கோயில்களின் கட்டுமானச் சுவர்கள் அனைத்திலும் தமிழிக் கல்வெட்டுகள்... கருவறையில் மட்டும் எதற்கு அந்தப் புரியாத சமஸ்கிருதம்?
https://twitter.com/mohanramko
புதுசா கல்யாணமானவன், மனைவியின் சமையலை முதல்முறையா சாப்பிட்டு எழுதியதுதான் ‘உணவே மருந்து’
https://twitter.com/akaasi
அந்த ‘நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி’, அது டொனேசனா லோனான்னு தெரியலையே!
twitter.com/thirumurugan
Gandhi@thiruja
மோடி படித்ததற்கான டிகிரி சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்லிய டில்லி உயர்நீதிமன்ற வழக்கை, வழக்கம்போல ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்டது அரசு. வழக்கறிஞர் இல்லாததால் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். தன் டிகிரி ஆவணத்தையே காட்ட இயலாத ஒருவர் 5,8ம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தச் சொல்கிறார்.

https://twitter.com/kumarfaculty
பேச்சிலர் ரூமுக்குள் போகும்போது கன்னிவெடி புதைச்ச இடத்தில் நடப்பதைப் போலவே ஃபீல்...!
twitter.com/Dr Ravikumar
M P@WriterRavikumar
`பூமி திருத்தி உண்’ - என்ற ஆத்திசூடியைக் குறிப்பிட்டு அது, ஔவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திசூடி பாடிய ஔவையும் வேறு வேறு. ஆத்திசூடி பாடிய ஔவை
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
facebook.com/மேகவண்ணன் புதியதடம்
“5 லட்சம் வரை வரி கிடையாது ப்ரோ, சூப்பர் பட்ஜெட் ப்ரோ!”
“உன்னை 5 லட்சம் சம்பாதிக்க விட்டால் தானே ப்ரோ!”
facebook.com/Vinayaga Murugan
இந்த பட்ஜெட்டில் ரஜினிகாந்த் போன்ற நலிந்த கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன்தந்திருக்கலாம்; வாடகைப்பாக்கியைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.

https://twitter.com/narsimp
நாம் ஏதோ சிக்னலிலேயே தங்கி சமைக்கப் போவதுபோலவும் பின்னால் இருப்பவர்கள் மட்டும் போகவேண்டியிருப்பது போலவும் பச்சை விழுந்தவுடனே ஹாரன் கதறல்கள்.
https://twitter.com/teakkadai1
நாளாக நாளாக நட்பு வட்டத்தில் பேசுவதற்கு எந்தவித முன் தயாரிப்புகளும், வார்த்தை எச்சரிக்கைகளும் தேவைப்படுவதில்லை. உறவில் அது கூடிக்கொண்டே போகிறது.
https://twitter.com/hajamydeennks
எந்த வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் முதலில் பரவுவது வாட்ஸப்பில்தான்!