Published:Updated:

வலைபாயுதே

திருமணத்துக்கு வைத்திருந்த ₹1.3 லட்சம் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி, எளிமையாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

பிரீமியம் ஸ்டோரி

twitter.com/arulrajmv1

மோடி அரசின் 7வது ஆண்டு நாள் - கொண்டாட்டங்கள் இல்லை என பா.ஜ.க அறிவிப்பு

#ஏழு வருஷத்துல ஏதாவது செஞ்சாதானே யுவர் ஆனர் கொண்டாடுவதற்கு!

facebook.com/டெக்ஸ்டர் மோர்கன்

ஒரு வாரம் முழுக்க பிரெயின்வாஷ் பண்ணி அம்மா அப்பாவைத் தடுப்பூசி போட சம்மதிக்க வச்சிருக்கேன். ஆனா இன்னைக்குக் காலைல வாட்ஸப்ல ஒரே ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பி எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டான் ஒரு சொந்தக்காரன்.

facebook.com/செந்தில் கரிகாலன்.ஆறுமாசம் சம்பாரிக்கவும், ஆறு மாசம் லாக்டௌன்ல தின்னு தீர்க்கவுமே காலம் ஓடிடும்டா. இன்னும் கடையில வேலை பார்க்கிற பையனை மட்டும்தான்டா வாங்கல நீங்க. அவனையும் ஒருத்தன் மொறச்சுப் பார்த்துட்டிருந்தான். என்ன ஆச்சோ தெரியல!

Alia: ஒளியிலே தெரிவது தேவதையா?
Alia: ஒளியிலே தெரிவது தேவதையா?

twitter.com/HAJAMYDEENNKS

கொரோனா நோயாளிகளைவிட வாட்ஸப் மருத்துவர்கள் அதிகமாகிட்டாங்க!

twitter.com/saysatheesh

திருமணத்துக்கு வைத்திருந்த ₹1.3 லட்சம் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி, எளிமையாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்... மதுரையில் விமானம் வாடகைக்கு எடுத்து ₹7.5 லட்சம் செலவில் வானில் திருமணம் செய்த தம்பதிகள்.

#இரண்டும் தமிழ்நாட்டுச் செய்திகள்தான்!

twitter.com/ItsJokker

‘‘புதுசா 2 போர்வை எடுத்துப் போடுங்க...’’

‘‘அண்ணா, எங்க இருந்து வர்றீங்க?’’

‘‘கொரோனா வார்டுதான் தம்பி. வெறும் பெட்ல படுத்து உடம்பெல்லாம் அரிக்குது. அதான் புதுசு வாங்கலாமேன்னு...’’

twitter.com/Suyanalavaathi

ஞாயிற்றுக்கிழமை எல்லா சேனல்லயும் பாக்குற மாதிரி தமிழ்ப் படம் போடுவாங்க. ஆனா, ஒருத்தன் மட்டும் தமிழ்ல இருந்து தெலுங்குல ரீமேக் பண்ணுன படத்த தமிழ்ல டப்பிங் பண்ணிப் போடுவான்... அவன்தான் விஜய் சூப்பர்!

twitter.com/RahimGazzali

நோயாளிகளைப் பார்க்க வரும் ஆட்களெல்லாம் டாக்டராக மாறிவிடுகிறார்கள்.

twitter.com/gurunaatha

எவனோ சாதிய கண்டுபிடிச்சவன்தான் இந்தக் கொரோனாவையும் கண்டுபிடிச்சிருக்கணும்... அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாதுபோல!

twitter.com/Vkarthik_puthur

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கியத் தலைவர் விலகல்!

ம.நீ.ம... போ நீ போ..!

twitter.com/gips_twitz

அதுல ஒருத்தன் சொல்றான், ‘ரஜினியும் கொரோனாத் தடுப்புப் பணியாளர்தான்’னு! எப்படின்னு கேட்டா, தேர்தல்ல நிக்காம கொரோனா பரவாமக் கட்டுப்படுத்திட்டாராம்.

twitter.com/Muthusa

‘‘மதியம் என்ன ஸ்பெஷல்..?’’

‘‘ரசமும் பொரியலும்.’’

‘‘சரி, நேற்றைக்கு என்ன வச்சிருந்த..?’’

‘‘பொரியலும் ரசமும்.’’

twitter.com/HariprabuGuru

‘‘தேவையில்லாத கடையையெல்லாம் திறந்து மக்களைக் கூட்டம் கூட விட்டுட்டாங்க தம்பி...’’

‘‘ஆமா, இவ்வளவு வெவரமா பேசுறியே... யாருண்ணே நீ?’’

‘‘டீசன்ட்டா பிளாக்ல கட்டிங் வாங்க வந்தவன்தான் தம்பி!’’

facebook.com/meenammakayal

ஒரு நாவலை வாசிப்பதற்கு அதை எழுதியவன் இறந்தாக வேண்டியுள்ளது... எப்பிடி சார் தமிழிலக்கியம் உருப்படும்?

facebook.com/santhosh.mathevan

சினிமாவுல வந்து யதார்த்தம் வேணும்பானுங்க. நிஜ வாழ்க்கையில ‘சினிமால நடக்குற மாதிரி நடக்காதா’ன்னு ஏங்குவானுங்க.

facebook.com/iam.suriyaraj

மய்ய உரையாடல்கள்:

‘‘என்னடா, நம்ம கட்சில இருந்து ஒவ்வொருத்தரா கழண்டுட்டு இருக்காங்க. நீ சிரிச்சுனு இருக்க?’’

‘‘அடி போடி இவளே. மொதல்ல, நம்ம கட்சில இவ்வளவு பேர் இருந்திருக்காங்க பாரேன்!’’

facebook.com/suresh.kannan.1

வரவர மலையாளத் திரைப்படங்களில், வந்திருக்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இனி டைட்டிலில் ‘நன்றி’ கார்டு போடுவார்கள் போல.

மம்மூட்டி, லால் ரசிகர்களில் ஆரம்பித்து லைட்மேன் வரை எவ்வளவு நேரம்?!

Raailaxmi: ஸ்டைலிஷ் தமிழச்சி!
Raailaxmi: ஸ்டைலிஷ் தமிழச்சி!

facebook.com/salman.syed

“மக்களுக்குப் பொறுப்பே இல்லேப்பா... பஜார்ல கும்பல் கும்பலா நிக்கிறாங்கப்பா... இவங்களாலதான் கொரோனா பரவுது.”

“இது உனக்கெப்படித் தெரியும்?”

“கூட்டத்தை வேடிக்கை பார்க்கப் போனபோது பார்த்தேன்பா... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லே, வெட்டியா சுத்துறாங்க... இவங்கள எப்படித் திருத்துறது!”

twitter.com/kumarfaculty

உண்மையான அழுகைகள் கேமராவிற்கு சிக்குவதில்லை!

twitter.com/amuduarattai

புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை.

#இந்த மாதிரி முக்கிய முடிவெல்லாம் நாம எடுக்க முடியாது. அதைக் கொரோனா தான் முடிவு பண்ணணும்.

twitter.com/HariprabuGuru

லிட்டில் ப்ரின்ஸஸ்: பிங்க் கலர் பூஞ்சை எப்ப வரும் சந்தோஷ்..?

twitter.com/Kozhiyaar

மக்களே, புரிந்துகொள்ளுங்கள்... இப்பொழுது உலகில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மனிதர்கள் இறக்கவில்லை. தம் நுரையீரலுக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவதிப்படுகிறார்கள்! மரங்கள் வளர்க்கச் சொல்வதில் தவறில்லை, ஆனால் மரம் வளர்த்திருந்தால்‌ இந்நிலை வந்திருக்காது என்பது முட்டாள்தனம்!

twitter.com/kumarfaculty

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு மாற்ற இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவு.

#எந்தெந்தத் தொழிலதிபர்களுக்கு அதிர்ஷ்டமோ?

twitter.com/RajaAnvar

பிளாக் டீ பார்த்திருக்கேன்... ‘பிளாக்ல’ டீ வித்து யாராவது பார்த்திருக்கீங்களா? அடியே ‘கொரோனா தேவி’! உன்னால இன்னும் என்னென்ன கொடுமைலாம் பார்க்கப்போறேனோ தெரியல.

Raiza: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
Raiza: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

twitter.com/LAKSHMANAN_KL

கொரோனாவுக்கு எதிரான போரில் மெத்தனமாக இருக்கக் கூடாது! - மோடி

# ‘‘இதைப் போல ஒரு கூட்டத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’’ன்னு சொல்லி மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரத்தில் புளகாங்கிதம் அடைஞ்சது யாரு ஜீ..?!

twitter.com/saikibrahim

லாக்டௌனுக்கே வீக்கெண்ட் லீவு விட்ட கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்...

twitter.com/HariprabuGuru

ரவை அஞ்சு கிலோ, கோதுமை ரவை அஞ்சு கிலோ, சேமியா பத்து பாக்கெட்... லாக்டௌனை சமாளிக்க இதுக்கு மேல என்னங்க வேணும்..?

twitter.com/mohanramko

கொரோனா, இந்த மக்கள்கிட்ட ‘உன் கடைசி ஆசை என்ன’ன்னு கேட்ட மாதிரி, இன்னைக்கே கூட்டம் கூட்டமா போய் எல்லாக் கடையிலும் பர்ச்சேஸ் பண்றாங்க!

twitter.com/mohanramko

அவ்வளவு கறுப்புன்னு சொல்ல முடியாது, அவ்வளவு வெள்ளைன்னு சொல்ல முடியாது...

ஏண்டா, கறுப்புப் பூஞ்சையா, வெள்ளைப் பூஞ்சையான்னு கேட்டா காமெடி பண்றாங்க!

twitter.com/mekalapugazh

பெற்றோரை அறிவுபூர்வமாக எதிர்த்துப் பேசும் உரிமை பிள்ளைகளுக்கு இருக்க/தர வேண்டும். இல்லாத சூழலில் அதைப் பிள்ளைகள் தாமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இது பெற்றோரை மதிக்காமையில் வராது. பெற்றோரைத் திருத்துவதில் வரும். தகப்பன்சாமி புராணத்திலும் உண்டுதானே..!

twitter.com/parveenyunus

ஆன்லைன் கிளாஸ் யுகத்தில் மழை பெய்வதையும் புயல் அடிப்பதையும் விழலுக்கு இறைத்த நீராகவே கருதுகின்றனர் மாணவ, மாணவியர்.

twitter.com/shivaas_twitz

‘‘எல்லாக் கடையிலயும் கூட்டமா இருக்கு... ஏதாச்சும் அவசியமா வாங்கணும்னா மட்டும் சொல்லு!’’

‘‘நெயில் பாலீஷ் ரிமூவர் வாங்கணும்!’’

ShruthiHassan: இசைத்தமிழ்!
ShruthiHassan: இசைத்தமிழ்!

twitter.com/shanmugamchin10

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்தியது பங்களாதேஷ்

# மோடி இருக்கிறவரை வளர்ச்சிதான்... இந்தியாவில் அல்ல, அண்டை நாடுகளில்!

twitter.com/anandsingai

ஒரு வேளை யூடியூப், வாட்ஸப் போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் தடுப்பூசி சதவிகிதம் பல மடங்கு உயர்ந்திருக்கும்..

twitter.com/ThirutuKumaran

வேக்ஸின் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்.

twitter.com/HariprabuGuru

90ஸ் கிட்ஸ்...

காலையிலேயே கொரோனா தேவி பேருக்கும் அவன் பேருக்கும் FLAMES போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்கான்டி உம் மகன்...

twitter.com/mani_nov21

ஒரு நாள் ஊரடங்கு தளர்வு என்பதை பட்டுச் சேலை வாங்கத்தான் எனப் புரிந்துகொண்டால் பிரச்னை அரசிடம் இல்லை. சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதரிலிருந்தும் தொடங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு