https://twitter.com/Kozhiyaar
அப்பா, கமல் படம் போன்றவர்!
பார்க்கும்போது புரியாது, ஆனால் நான்கைந்து வருடங்கள் கழித்துக் கொண்டாடுவோம்!
https://twitter.com/HAJAMYDEENNKS
உலகத்தின் முதல் ஊழல் தேன் எடுப்பவர்கள்தான் செய்திருப்பார்கள்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALShttps://twitter.com/manipmp
அஞ்சு நிமிசத்தில வந்திடுவேன்னு சொல்பவனுக்குள் அஞ்சாறு சிம்பு ஒளிந்துள்ளனர்.
https://twitter.com/Thaadikkaran
போன் கால் வந்து அட்டெண்ட் பண்ணினதும், நானே கூப்பிடணும்னு நினைச்சேன் மறந்துட்டேன்னு சொல்லி ஆரம்பிப்பது அனிச்சை செயலாகிவிட்டது..!
https://twitter.com/kumarfaculty
இப்போது அறிவுரைகளும் திட்டுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன..!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
https://twitter.com/sundartsp
இப்பெல்லாம் கூட்டத்தில் உற்சாகம் குறைவா கைத்தட்டல்கள் இல்லைன்னா நிகழ்ச்சி நடத்துபவர்கள் பிரயோகிக்கும் உத்தி, தல ரசிகர்கள், தளபதி ரசிகர்கள் கைதட்டுங்க என்று சொல்லி, கூட்டத்தில் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுறாங்க. இதே டெக்னிக்கை இப்போ அரசியல்வாதிகளும் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
https://twitter.com/RahimGazzali
குழந்தைகள் 20 மணி நேரம்கூடத் தூங்கும். அதுவே இளைஞர்கள் 8 மணி நேரம் தூங்குவார்கள். வயதான முதியவர்கள் 6 மணி நேரம் தூங்குவதே அபூர்வம். ஆனால் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் எத்தனை மணி நேரம் தூங்குகிறார்கள் என்பதுதான் வீட்டிலிருப்பவர்கள் உட்பட யாராலும் கணிக்கவே முடியாத விஷயம்.
https://twitter.com/manipmp
இந்தியா வல்லரசு ஆகறதும் ஒண்ணு, இந்த மிடில் க்ளாஸ் பசங்க கோவா போறதும் ஒண்ணு.
https://twitter.com/shivaas_twitz
அரசியலில் மட்டுமல்ல, பஸ்ல மூணு பேர் சீட்லயும் நடுநிலை என்பது கஷ்டம்தான்.
https://twitter.com/kumarfaculty
ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் இத்தனை உடற்பயிற்சிகள்..!
https://twitter.com/Ramesh46025635
நாட்டில் இரண்டு சேவைகள்தான் ஆகச்சிறந்தவை..!
1. ஹெல்மெட் போடாம வண்டில போறவங்கள பார்த்து “அந்தப் பக்கம் போலீஸ் புடிக்கறாங்க”.னு சொல்றது.
2. `ஏடிஎம்’ல இருந்து வெளிய வரும் போது எதிர்ல வரவங்கள பார்த்து “பணம் வரலைங்க”ன்னு சொல்றது.