Published:Updated:

வலைபாயுதே

Arya
பிரீமியம் ஸ்டோரி
Arya

சாதியை சட்டத்தால் ஒழிக்க முடியாது. இட ஒதுக்கீடு அதற்காகக் கொண்டு வரப்பட்டதும் அல்ல. மக்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.

வலைபாயுதே

சாதியை சட்டத்தால் ஒழிக்க முடியாது. இட ஒதுக்கீடு அதற்காகக் கொண்டு வரப்பட்டதும் அல்ல. மக்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.

Published:Updated:
Arya
பிரீமியம் ஸ்டோரி
Arya

twitter.com/iam_nithankrish

ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு தி.மு.க எம்.எல்.ஏ என்ன செய்தார்? - குஷ்பு

~ பக்கத்துலதான இருக்காரு, கேக்க வேண்டியதுதானே?!

twitter.com/AnandNodal

ராஜாதி ராஜா படத்தில ரஜினி சார் கைல தாயத்து கட்டினதும் வீரம் வந்து ஆனந்தராஜ் சார போட்டு அடிப்பாரே...

அத மாதிரி கோவிட் தடுப்பூசி போட்டதும் சில பேரு முகக்கவசத்தைக் கழட்டிடறாங்க.

கவனிக்க: எதிர்ப்பு சக்தி ஆரம்பமே 2 வாரம் கழிச்சுதான். முழுப் பலன் 2வது ஊசி போட்டு 2 வாரம் பின்தான்!

Mask always!

twitter.com/PeterAlphonse7

Vedhika சில்லுனு ஒரு சூரியன்!
Vedhika சில்லுனு ஒரு சூரியன்!

ஆதார் அட்டையை பயோமெட்ரிக்கில் இணைக்கவில்லை என்று அடித்தட்டு & பழங்குடி மக்களின் 4 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கிராமங்களில் இன்டர்நெட் வசதியற்ற நிலையில், ஏழைகள் எப்படி பயோமெட்ரிக்கில் இணையமுடியும்? உணவில்லாமல் தற்கொலைகள் ஏராளம்! இரக்கமில்லாத மத்திய அரசு!twitter.com/amuduarattai

நமக்குத்தான் அது புது பனியன், பழைய பனியன், கிழிந்த பனியன். மனைவிக்கு எல்லாமே கரித்துணிதான்.

facebook.com/Angry Bird

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இட ஒதுக்கீடு வேண்டும்? உச்ச நீதிமன்றம் எழுப்பிய இந்தக் கேள்விக்கான பதில்.

இருவழிச் சாலைகளின் நடுவில் சிறிய கான்கிரீட் தடுப்புச் சுவர் பாத்திருப்போம். அது எதற்காகக் கொண்டு வரப்பட்டது? தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் போகாமல், முன்னால் இருப்பவரை முந்துவதற்காக, எதிர் திசையில் பயணிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் சென்று போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் ஒரு சில முட்டாள்கள் இருப்பதால் சாலைக்கு நடுவே அந்தத் தடுப்புச் சுவர் அமைத்தோம்.

பல ஆண்டுகளாக இந்தத் தடுப்புச் சுவர்கள் இருக்கின்றனவே... மக்கள் திருந்தியிருப்பார்கள் என்று அவற்றை அகற்றினால் என்ன ஆகும்?

இட ஒதுக்கீடும் அதுபோலத்தான். பிறருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமையை அவர்கள் பிறந்த சாதியைக் காரணம் காட்டிப் பறிப்பவர்கள் இருந்ததால், அனைவரின் உரிமையையும் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

எப்படி சாலையில் இருக்கும் தடுப்புச் சுவரை அகற்றினால் மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுமோ, அதுபோல இட ஒதுக்கீட்டை அகற்றினால் மீண்டும் சாதியைக் காரணம் காட்டிப் பிறரது உரிமையைப் பறிக்கும் நிலை தொடங்கும்.

சாதியை சட்டத்தால் ஒழிக்க முடியாது. இட ஒதுக்கீடு அதற்காகக் கொண்டு வரப்பட்டதும் அல்ல. மக்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.

முதலில் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் சாதிப் பெருமையைத் தூக்கி ஏறியட்டும். தங்கள் வாழ்விலிருந்து சாதியை ஒழிக்கட்டும். தங்கள் திருமணங் களிலிருந்து சாதியை ஒழிக்கட்டும். யார் எந்தச் சாதி என்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகட்டும். அப்பொழுது ஒழிக்கலாம் இட ஒதுக்கீட்டை!

twitter.com/krishnaskyblue

Arya என் இனிய குதிரையே..!
Arya என் இனிய குதிரையே..!

குளிரைவிட ஜெர்கினுக்கு இவனுக சொல்லுற ரேட்தான் நடுங்க வைக்குது...

twitter.com/sultan_Twitz

காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது ~ ஓ.பி.எஸ்

கொஞ்சம் பொறுங்க, சிடி.ரவி அறிக்கை வரட்டும்..?!

twitter.com/Suyanalavaathi

எந்த WhatsApp குரூப்பா இருந்தாலும் சரி, குரூப்ல 100 பேர் இருந்தாலும் சரி, குரூப் அட்மினையும் சேர்த்து மொத்தத்துக்கு 4 பேர்தான் பேசிட்டு இருப்பாங்க!

twitter.com/pandi_prakash_

ஐந்திலிருந்தே வளைந்து கொண்டிருக்கிறேன்; ஐம்பதிலேனும் நிமிர்ந்திருக்க.

twitter.com/amuduarattai

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளராகி, இப்போது விளையாடும் வீரர்களுக்குச் சொல்லும் டிப்ஸ்களைக் கேட்கும்போது, அவர்கள் விளையாடிய மேட்சுகள் கண்ணில் வந்து வந்து போகின்றன.

twitter.com/prabhu65290

பேச்சு பேச்சாதான் இருக்கணும், நாலு அடி தள்ளியே நில்லு, டச் பண்ணுற வேலையெல்லாம் இருக்கப்படாதுன்னு மறுபடியும் சொல்ல வெச்சிரும்போல இருக்கு இந்தக் கொரோனா.

twitter.com/mujib989898

அழுது தீர்த்துவிட்ட பிரச்னையை மீண்டும் பேசினால், ‘ம் சொல்லு’ என்பதோடு பெரும்பாலும் முடிந்து விடும்.

twitter.com/GreeseDabba2

ஏன் சோகமா இருக்கீங்க எனும் மனைவியின் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்பவன் மனிதன்; பொய் சொல்பவன் பெரிய மனிதன்; சோகமாவே இல்லையே எனத் தப்பித்துச் செல்பவர் லெஜண்டு.