Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தாங்கன்னா நம்ம மைண்ட் வாய்ஸ்: என்ன பிரச்னைய கொண்டு வந்திருப்பாங்க?

twitter.com/ashoker

பஞ்சதந்திரம் - ஐங்குறுந்தாடிகள்; விக்ரம் - முப்பெருந்தாடிகள்.

twitter.com/tomofficial23

‘‘1 லிட்டர் பெட்ரோல் போட்டிருக்கீங்க... புதுசா கேஸ் புக் பண்ணியிருக்கீங்க... இதுக்கெல்லாம் பணம் எங்க இருந்து வந்துச்சு... சொல்லுங்க?’’

twitter.com/teakkadai1

சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருக்க முடியாவிட்டாலும், தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருக்காமல் தப்பித்துவிட வேண்டும்.

twitter.com/altappu

கட்சில இருந்து தாவறப்ப சத்தமில்லாம தாவுங்கப்பா... திடீர்னு நேத்து கனவுல பெரியார் வந்தாரு, எதுத்தாப்ல அண்ணா வந்தாரு, திருந்திட்டேன் வகை கூப்பாடுகள் எதுக்கு?

twitter.com/athisha

எல்.முருகன் ஒரு தமிழர்தான். அவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வாழ்கிற எல்லா அருந்ததியர்களும் தமிழர்களே. தமிழர்களின் குப்பைகளை, கழிவுகளை கடந்த நூறாண்டாக அகற்றுகிற அந்த ஒடுக்கப்பட்ட இனம் இன்றும் மலக்குழிகளுக்குள் மாண்டுபோகிற இனம். அவர்கள் தமிழர் இல்லையென்றால் எவனுமே இங்கே தமிழன் இல்லை.

Raveena: எவர்க்ரீன் அழகன்!
Raveena: எவர்க்ரீன் அழகன்!

twitter.com/idumbaikarthi

சொந்தமாக கார்கூட இல்லையென மோடி முதல் ஸ்டாலின் வரை வேட்புமனுத் தாக்கலின்போது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்தபோது அதனைக் கேட்டுத் தொலைத்த நமக்கு, ‘ஆடி கார் சொகுசு காரில்லை’ என்பதை நம்பித்தொலைப்பதில் என்ன சிக்கல்?

twitter.com/ramesh_twetz

வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தாங்கன்னா நம்ம மைண்ட் வாய்ஸ்: என்ன பிரச்னைய கொண்டு வந்திருப்பாங்க?

குழந்தைங்க மைண்ட் வாய்ஸ்: என்ன ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்திருப்பாங்க?

twitter.com/RajaAnvar_Offic

‘‘என்னடா அப்டேட் இது... இவ்ளோ சிம்பிளா இருக்கு?’’

‘‘இது ‘எளிமை’ அப்டேட், அப்படித்தாண்ணே இருக்கும்!”

twitter.com/krishmaggi

இன்றைய தங்கத்தின் நிலவரம், இன்றைய பெட்ரோல் நிலவரம் என்று கூறுவதுபோல, ‘இன்றைய அரசியல் கட்சிக்காரர்களின் நிலவரம்’ என்றும் கூறுங்கள்... யார் யாரு எந்த எந்தக் கட்சியில இருக்காங்கன்னே தெரியமாட்டேங்கிது.

twitter.com/Thaadikkaran

கஷ்டமெல்லாம் சின்னம்மா ஆடியோ மாதிரி வந்துகிட்டே இருக்கு, சந்தோஷமெல்லாம் ‘வலிமை’ அப்டேட் மாதிரி வர்றதே இல்லை..!

twitter.com/saravankavi

யாராவது புகழ், பதவி அடைந்தால் ‘அவரை எனக்கு ஏற்கெனவே தெரியும்’ என்று சொல்லிக்கொள்வதற்காகவே எல்லோரும் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்!

twitter.com/HariprabuGuru

பி.ஜே.பி சித்தாந்தத்தை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும் - அண்ணாமலை

# ஸ்விக்கிலயா இல்லை ஸோமேட் டோவுலயாங்க ஓல்டு போலீஸ்கார்?

twitter.com/pachaiperumal23

ஆடி கார் வெச்சிருக்கவங்களே ஏழைன்னா, டி.வி.எஸ் எக்ஸ்எல் வெச்சிருக்கிற நாம வறுமைக் கோட்டுக்குப் பல கோடுகள் கீழ இருக்கோம்போல!

twitter.com/balasubramni1

‘‘ஏண்ணே அவனை அடிக்கறீங்க?’’

‘‘கொங்குநாடுன்னு நாம தனி நாடாக அறிவிக்கப்பட்டால், நமக்குக் குல தெய்வம் நாம் கோயில் கட்டுன கொரோனா தேவிதானேன்னு கேட்குறான்!”

twitter.com/HariprabuGuru

ரயில்பெட்டிகளை இணைக்குற மாதிரி நாலஞ்சு பைக்குகளை இணைக்குறதுக்கு வழி கிடைச்சா பெட்ரோல் விலையை ஈஸியா சமாளிக்கலாம். ஐடியா இல்லாத பசங்க!

twitter.com/Suyanalavaathi

வீட்டுல ஒரே ரூம்ல இருந்துகிட்டு ஃபேஸ்புக்ல மனைவி போஸ்ட் போடுவதும், அதைக் கணவர் லைக் செய்வதும்தான் டிஜிட்டல் காலத்துக் கணவன்-மனைவி!

twitter.com/teakkadai1

அரசியல் பரமபதத்தில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யில் சேருவதுதான் பெரிய ஏணிபோல. தமிழிசை - கவர்னர், முருகன் - மத்திய அமைச்சர். எப்படியும் இன்னும் ஒரு டேர்ம் பி.ஜே.பி ஆட்சிதான். பெரிய பதவிகள் இல்லாட்டியும் மத்திய அரசின் காண்டிராக்ட்கள் கிடைக்கும். சின்னக் கல்லு, பெத்த லாபம்.

twitter.com/kusumbuonly

கஸ்டமர் கேருக்கு போன் செஞ்சோம் என்றால், நிறைய பேசிட்டு வரிசையா கீ பேட்ல இருக்கும் நம்பரையெல்லாம் அழுத்தச் சொல்லும். ‘முதல்ல சொன்னதையெல்லாம் திரும்பச் சொல்ல ஒன்பதை அழுத்தவும்’னு கூடவே சொல்லும். அப்படி மூணு மாசத்துக்கு ஒரு முறை ரஜினிக்கு எண் ஒன்பதை அழுத்திடுறாங்க.

twitter.com/FareethS

மன அழுத்தமா இருக்கேன்னு மீன் வாங்கி வளத்தேன் தம்பி. இப்ப மீன் தொட்டி கழுவுறத நினைச்சா அதவிட மன அழுத்தமா இருக்கு தம்பி...

twitter.com/PeterAlphonse7

கை, கால், கழுத்து என அவயவங்களுக்குத் தனிப் பெயர் இருந்தாலும் அவை உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும். கொங்குநாடு, செட்டிநாடு, வருஷநாடு, நாஞ்சில்நாடு, மறவர்நாடு, தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள். அவற்றைப் பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழனின், தமிழ்நாட்டின் எதிரிகள்!

twitter.com/Suyanalavaathi

‘வலிமை’ அப்டேட்கூட வந்துருச்சு. ஆனா இந்த 90’ஸ் கிட்ஸுக்குக் கல்யாணம்..?

twitter.com/shivaas_twitz

‘‘நீங்களும்தான் தமிழ்நாட்டை மூணாப் பிரிச்சீங்க...’’

‘‘அடேய், அது லாக்டௌனுக்குப் பிரிச்சதுடா!”

twitter.com/RajaAnvar_Offic

இன்னமும் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பவை ஆறுகளை விட ஆற்று நீர் பிரச்னைகள்தான்!

twitter.com/kumarfaculty

பாக்கெட்டில் அடுத்தவர்களுக்குத் தெரிவதைப்போல் கடவுள் படத்தை வைத்திருப்பவர்களைவிட, அரசியல் தலைவர்களின் படத்தை வைத்திருப்பவர்களே அதிக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள்!

twitter.com/parveenyunus

வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் யாராவது நண்பர்கள்/ பாலோயர்ஸ் கொரோனா அல்லது தடுப்பூசி பற்றிச் சொல்லும்போது ‘நீ இன்ஜினீயரிங் தானே படிச்சே... டாக்டர் மாதிரி பேசறே?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.

Thamizhachi: கலையும் அரசியலும்!
Thamizhachi: கலையும் அரசியலும்!

twitter.com/erode_kathir

சில துன்பங்களை வெளியில் சொல்லாதீர்கள். ஒருகட்டத்தில் நீங்கள் அதிலிருந்து மீண்டுவிடுவீர்கள். ஆனால், அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.

twitter.com/mymindvoice

நமக்குப் பிடிச்சவங்க நமக்குப் பிடிக்காத விஷயத்தை அவங்களுக்குப் பிடிக்கும்னு சொல்றப்ப வர்ற கடுப்பவிட, நமக்குப் பிடிக்காதவங்க நமக்குப் பிடிச்ச விஷயத்தை அவங்களுக்குப் பிடிக்கும்னு சொல்றப்ப கூடுதல் காண்டாவுது. அந்த விஷயம் பாட்டாவோ, சோறாவோ, ஊராவோகூட இருக்கலாம். இதென்ன உளவியல்?

twitter.com/manipmp

சுகர் இருப்பவர்களுக்கு வந்த காயம்கூட ஆறிடும். ஆனா இந்தக் கவிதை எழுதுவோர்க்கு ஏற்படும் காயம் மட்டும் ஆறவே ஆறாதுபோல!

twitter.com/RahimGazzali

25,000 பேரை தி.மு.க-வுக்கு அழைத்து வருவேன் - தோப்பு வெங்கடாசலம்.

ஆனா பாருங்க... சுயேச்சையாகப் போட்டியிட்ட இவருக்கு விழுந்த மொத்த ஓட்டே ஒன்பதாயிரத்து சொச்சம்தான்.

twitter.com/HariprabuGuru

படிச்சு பாஸ் பண்ணுனவனை டாக்டர் ஆக முடியாதுன்னு சொல்லிட்டு, தேர்தல்ல தோத்தவங்களை மந்திரியாக்குற ஊரு சார் இது...