Published:Updated:

வலைபாயுதே

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

அம்மாவின் அலாரத்துக்கு மட்டும் Off optionனும் இல்லை, Snooze optionனும் இல்லை!

வலைபாயுதே

அம்மாவின் அலாரத்துக்கு மட்டும் Off optionனும் இல்லை, Snooze optionனும் இல்லை!

Published:Updated:
மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

twitter.com/MrElani

ஜக்குபாய்ஸ் கிவிய ஜெயிச்சி, நாம ரன்ரேட்ல நமீபிய ஜெயிச்சி, செமில ஆண்டைய ஜெயிச்சி, பைனல்ல பங்காளிய ரிவெஞ் எடுத்து... கோட்டச்சாமீமீமீ, எந்திரியா... ப்ளைட்டுக்கு டைமாச்சு.

twitter.com/THARZIKA

அரூபமோ ரூபமோ அதுவாகவே மாற வேண்டும். அப்படியானதொரு அன்பு கிடைப்பது வரம். தேடினாலும் திரும்பக் கிடைக்காது.

twitter.com/athisha

தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள்... ஒன்று ஆன்லைன் ரம்மி, மற்றொன்று அநியாய வட்டி வாங்கும் கடன் செயலிகள். இரண்டும் பல்வேறு குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவரத் தொடங்கிவிட்டன.

Trisha: நேர்கொண்ட பார்வை!
Trisha: நேர்கொண்ட பார்வை!

twitter.com/mekalapugazh

‘கர்மா' என்பது கடவுளின் பொறுப்புத்துறப்பு...

twitter.com/shivaas_twitz

இரவு நேர ஜன்னலோர இருக்கைப்பயணம் ஏனோ முன்னாள் காதலியை நினைவுபடுத்துகிறது...

பக்கத்து சீட்காரர்: ரொம்ப ஃபீலிங்கா இருந்தா இந்தப் பக்கம் வந்து உக்காருப்பா, நானாச்சும் காத்து வாங்கினு வர்றேன்!

twitter.com/Rascal1

இதெல்லாம்கூட பரவால்லடா.. ஆனா கப்பு ஜெயிச்சா அதை மென்டர் பேர்ல எழுதலாமா, இல்ல கேப்டன் பேர்ல எழுதலாமான்னு சண்டை போட்டீங்க பாரு!

witter.com/Kozhiyaar

மனைவி கேட்கும் ‘என்ன செய்யட்டும்?' என்ற கேள்விக்கான பதில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கும் என்பதறிக!

Malavika Mohanan: ஒளியிலே தெரிவது தேவதையா...
Malavika Mohanan: ஒளியிலே தெரிவது தேவதையா...

facebook.com/revathy.ravikanth

ஆத்துக்கார டூட்: அடிக்கடி ஒரு டேட்டிங் ஆப்லேருந்து மெசேஜ் வருது பொண்ணு கிட்டேருந்து... போய்ட்டு வர்லாமான்னு பாக்கறேன்.

மீ: புளிச்சாதம் கட்டித் தரவா... ஸ்னாக்ஸ் வேணும்னா வெளிய வாங்கிக்கங்க!

twitter.com/Kozhiyaar

அம்மாவின் அலாரத்துக்கு மட்டும் Off optionனும் இல்லை, Snooze optionனும் இல்லை!

twitter.com/Annaiinpillai

என்ன பெரிய ரஜினி பட கலெக்‌ஷன்..? டாஸ்மாக் கலெக்‌ஷன் பார்த்திருக்கியா!

twitter.com/Suyanalavaathi

பக்கத்து வீட்டுல டி.வி சவுண்ட் கேட்டா, நம்ம வீட்டுல மட்டும் கரண்ட் இல்லன்னு அர்த்தம்... அதே பக்கத்து வீட்டுல அவுங்க பேசுற சவுண்ட் கேட்டா, ஏரியா மொத்தமும் கரண்ட் இல்லன்னு அர்த்தம்!

twitter.com/THARZIKA

சிறு பறவையின் இறகிலிருந்து விடுபட விரும்பாத காற்றின் மொழி இப்பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடக்கிறது.

twitter.com/mohanramko

‘‘நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் மோசமா இல்லை...’’

‘‘அப்ப படம் நல்லா இருக்கா மாப்ள?”

‘‘படமா... நான் தியேட்டர் பாப்கார்னைச் சொன்னேன் மாமா!”

Shoba sakthi: கலைஞனுக்கு கலைஞனின் அஞ்சலி!
Shoba sakthi: கலைஞனுக்கு கலைஞனின் அஞ்சலி!

facebook.com/saravanakarthikeyanc

Dad's little princess-கள் திருமணமான பின்பும் தந்தையிடம் ஒட்டியாணம் வாங்கித் தரக் கேட்பது பிரச்னை இல்லை. ஆனால் அதை நிறைமாதக் கர்ப்பமாக இருக்கும்போதுதான் கேட்பார்களாமா?

twitter.com/radhavenkat2

நெடுநேரமாய் அமர்வதற்கென மரங்கள் கிடைக்காது பறந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு வானமே மரங்கள்.

twitter.com/essaar

மிளகு என்பது ஆகநெடிய ஒரு வரலாற்றின் விதை.

twitter.com/dhanalakshmirs

ஒரு வெப் சீரிஸ்... ஹீரோயினுக்குக் கொலை மிரட்டல் கடிதம் வருகிறது... அஞ்சி மனம் பதைக்கையில்... ‘ச்சே! ஹீரோ, ஹீரோயின்லாம் சாக மாட்டாங்க’ என்று சமாதானப்படுத்திக் கொண்டு தொடர முடிகிறது. இந்த கேரண்டி உண்டா ஐயா உங்கள் தமிழ்ப்படங்களில்?

twitter.com/poovulagu

சென்னை மூச்சுத் திணறித் தடுமாறுகிறது, 45 சிகரெட் பிடித்த சென்னைவாசிகள். பட்டாசு நச்சுப் புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்குச் சென்றுள்ளது. Air Quality Index-AQI 50 இருந்தால் நல்ல காற்று, 100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் AQI அபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 AQI ஆகவும், மணலியில் 578 AQI ஆகவும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகம்.

அடுத்த சில நாள்களில் மருத்துவமனைக்கு நுரையீரல் நோயால் எத்தனை பேர் வருவார்கள் என்பதை நினைத்தாலே அச்சமாகவுள்ளது. இந்த அளவுள்ள காற்றுமாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளார்கள்.

twitter.com/im_minmini

என்னால் சரிசெய்துவிட முடியும் என்ற பட்டியலில் நானும் இருந்திருக்கலாம்...

Vijay Deverakonda: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!
Vijay Deverakonda: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!

twitter.com/Ival_sagi

டியர் மழை, நைட்டு ஃபுல்லா எவ்வளவு வேணும்னா பெஞ்சிக்க... ஆனா, பகல்ல ரெஸ்ட் எடுக்காத ப்ளீஸ்! நீ கொஞ்சம் கேப் விட்டதுக்கு அம்மா காலையிலயே துணி துவைக்கச் சொல்றாங்க!

twitter.com/Kannan_Twitz

நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நினைக்கும். அது அந்நேரம் நமக்கு ஏமாற்றமா இருந்தாலும் நாம நினைச்சத விட தெய்வம் நினைச்சதுதான் பர்பெக்ட்டா இருக்கும்னு லேட்டராதான் உணர்வோம்!

twitter.com/pandi_prakash_

‘வேறெந்த வகையிலாவது வாழலாம்’ என நினைக்கும் மனதின் எண்ணத்தை அடியோடு மறுக்கும் விதி...

twitter.com/ilayakaanchi

தட் காக்கா: தீபாவளிக்கு வெடியும் வெடிச்சிக்கிட்டு, அமாவாசைக்குப் படையல் போட்டு ‘கா..கா..’ன்னு என்னய வரச்சொல்லிக் கூப்டுறல்ல நீ?

இன்னும் என்ன பைத்தியக்காரனாவே நெனைக்கறல்ல நீ?

twitter.com/Kannan_Twitz

‘‘படம் எப்படி ப்ரோ இருக்கு!’’

‘‘டெய்லி பார்க்கலாம் ப்ரோ!”

‘‘ஒரு முறை பார்த்தாதான் ப்ரோ அது படம், டெய்லி பார்த்தா அது சீரியல்!’’

‘‘அதான் ப்ரோ, டெய்லி பார்க்கலாம்னு சொன்னேன்!’’

twitter.com/THARZIKA

அன்பின் மகத்தான செயல்களில் ஒன்று, இல்லாத தருணத்தில்தான் நிறைய வலிக்கச் செய்யும்.

twitter.com/saravankavi

லண்டனுக்குக் குடிபோகிறார் அம்பானி...

சீமான்: கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கேன்!

twitter.com/Paa_Sakthivel

எத்தனையோ புகழ்பெற்ற இரட்டைப் பிறவிகளில் ஒன்றாக குளோப் ஜாமூன் மாவு பாக்கெட்டையும் மாற்றிய பெருமை நமது வணிகர்களையே சாரும்.

twitter.com/manipmp

ஒவ்வொரு தீபாவளிக்கும் உறவை ரீசார்ஜ் செய்ய சொந்த ஊருக்குச் செல்கின்றனர்!

twitter.com/paruthi_moottai

சர்க்கரை அதிகமானா சுகர் கம்ப்ளைன்ட் வரும்... அக்கறை அதிகமானா ‘சந்தேகப்படுறியா’ன்னு கம்ப்ளைன்ட் வரும்...

twitter.com/mohanramko

நாலுநாள் முன்னாடி, வண்டிங்க போக முடியாதபடி ட்ராஃபிக், இன்னிக்கு நாமளும் போக முடியல, ரோட்ல நிற்கிற தண்ணியும் போகமுடியல... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க சென்னையை?

twitter.com/sThivagaran

வலிமையான புஜங்கள் கொண்டு கட்டியெழுப்பிய‌ நம்பிக்கை, சுண்டு விரல் நகம் பட்டு நொறுங்கிவிடக்கூடும்!

twitter.com/kumarfaculty

வீடு திரும்பும்போதுதான் அதிக ஹிஸ்டரிகள் அழிக்கப்படுகின்றன!

twitter.com/SHIJA25

ஊருக்குப் போனவர்களை வரவேண்டாம் என்று ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது: சசிகலா

முதல்வர் ‘இரண்டு நாள் கழித்து வந்தா போதும்’னு சொல்றார். இது புரியாம அறிக்கை வேற?! ராத்திரி அணையைத் தொறந்துவிட்டு சாகடித்து, அடுத்த நாள் வண்டியிலேறி ‘வாக்காளப் பெருமக்களே’ன்னு சொல்லணும்போல!

twitter.com/bommaiya

காசில்லாம சாப்பிடாம இருந்தா அதுக்குப் பேரு பட்டினி. காசிருந்தும் சாப்பிடாம இருந்தா அதுக்குப் பேரு டயட்... ஆனாலும் பட்டினியைவிட டயட் கொடியது!

twitter.com/chitrangadhai

விஞ்ஞானத்துல என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க, இந்தக் கால் அமுக்கறதுக்கு ஒரு மிஷின் கண்டுபிடிக்கக் கூடாதா? #முடியல

twitter.com/Thaadikkaran

வாழ்க்கைல மட்டுமல்ல, வண்டியை எடுக்கும்போதும் பின்னாடி திரும்பிப் பாருங்க... நல்லா இருப்பீங்க!

twitter.com/DrHolyhemp

இப்ப சென்னைல இருக்கவங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, ரோட்டுல குப்பை போடக்கூடாது, சட்டத்துக்குப் புறம்பா கட்ற கட்டடத்துல வீடு வாங்கக் கூடாதுனுலாம் தோணும். பயப்படாதீங்க, தண்ணி வடிஞ்சதும் அதெல்லாம் சரியாகிரும்!

twitter.com/amuduarattai

ஒரு படம் தியேட்டரில் ஓடாவிட்டால், பொதுவெளியில் அதிகம் ஓட்டுவாங்க என்பது எழுதப்படாத விதி.

twitter.com/kumarfaculty

கொல்கத்தாவில் போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்பதை ‘அண்ணாத்த’ படம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.