Published:Updated:

வலைபாயுதே...

ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலியா பட்

“வாடகை கட்டணும், ஒரு லட்சம் கொடுத்துவுடுன்னு ஒவ்வொருத்தருக்கா ஆள் அனுப்பிவிடுவேன். கொடுத்து விடுவாங்க” என்றார்.

twitter.com/kusumbuonly

கஸ்டமர் கம்ப்ளையின்ட் செய்றாங்கன்னா,

ரூல் நம்பர் 1: நோ ஆர்கியுமென்ட்.

ரூல் நம்பர் 2: நோ சமாளிப்பிகேஷன்ஸ்

ரூல் நம்பர் 3: தவறு நம் பக்கம் இல்லையென்றாலும் ‘ஸாரி...’ மனதாரக் கேட்கணும்.

ரூல் நம்பர் 4: எதில் குறையோ, அதுக்கான பணத்தை வேண்டாம் என்றோ அல்லது அதுக்கு சமமான சர்வீஸ் இலவசமாகவோ கொடுக்கணும்.

அவுங்க சைடு தப்பே இருந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்டு அவர்கள் குறைகளைச் சரிசெய்து ‘உங்களைப் போன்றோர்களால்தான் என் தொழில் நடக்குது... நீங்கள் எனக்கு முக்கியம்’ என்று பேசினால் போதும். பேசி மட்டுமே சரி செய்யக்கூடியவை இந்த மாதிரியான பிரச்னைகள்.

twitter.com/g4gunaa

அஞ்சாறு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் இருக்கிற வீடுகள்ல அதிகம் பேசப்படுற வார்த்தை எதுன்னு ஒரு சர்வே எடுத்தோம்னா, அது “முழுங்குடா/முழுங்கும்மா” என்பதாகத் தான் இருக்கும்! # வெரிபைடு

twitter.com/mohanramko

‘‘என்ன ஆச்சு?”

‘‘குழந்தை தூங்க மாட்றான்!”

‘‘அஸ்வின்னு பேரு வையி. கதை சொல்றதைக் கேட்டா அவனே தூங்கிடுவான்!’’

Akshay kumar: பாலிவுட் செல்ஃபி!
Akshay kumar: பாலிவுட் செல்ஃபி!

twitter.com/arattaigirl

கால் மரத்துப்போயிருச்சுன்னு சொல்லத் தெரியாம ஒரு குட்டி ‘கால் பஞ்சாயி ருச்சு’ன்னு சொல்லுது. மொத்தமா அதுவே ஒரு பஞ்சுக்குட்டி மாதிரிதான் இருக்கு!

twitter.com/idonashok

“எப்படிக் காசு வருகிறது, எப்படிப் பிழைப்பை ஓட்டுகிறீர்கள்?” என சீமானிடமும் கெளதமனிடமும் பேட்டியில் கேட்கிறார்கள். சீமான், “வாடகை கட்டணும், ஒரு லட்சம் கொடுத்துவுடுன்னு ஒவ்வொருத்தருக்கா ஆள் அனுப்பிவிடுவேன். கொடுத்து விடுவாங்க” என்றார். சமீபத்தில்கூட தனக்கு பங்களா இல்லாதது பெரிய வரலாற்றுத் துயரம் என வருத்தப்பட்டார். கெளதமனும் இதே மாதிரிதான் சொல்கிறார். “வாடகை ஒருத்தர் கொடுத்துருவாரு. மளிகைச் சாமான் ஒருத்தர் கொண்டு வந்து போட்டுருவாரு...” என்று. நல்ல வாழ்க்கை முறை.

‘ரஜினிமுருகன்’ படத்தில் ஏழரை மூக்கன் என ஒரு கேரக்டர் வரும். சமுத்திரக்கனி நடித்திருப்பார். அவர்கூட இப்படித்தான், தனக்குக் காசு வேண்டுமென்றால் திடீரென யார் வீட்டுக்குள்ளாவது நுழைவார். காசு கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஏழரை மூக்கனின் அநியாயத்திலும் ஒரு நியாயம் இருந்தது. அவர் தமிழ்தேசியம், தமிழ்க்குடிகள், இனத்துக்காக நிக்கிறேன், எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்க நிக்கிறேன் என்றெல்லாம் உருட்டவில்லை. நேர்மையாக, “இங்காருப்பா. அண்ணனுக்குப் பசிக்கிது. வேலைக்கெல்லாம் போக முடியாது. ஆனா, நல்லா சொகுசா வாழணும். காசு கொடுத்து விட்ரு” என நேரடியாகத் தன் நிலையை விளக்கி வாழ்ந்த நிஜமான எளிய தமிழ்ப்பிள்ளை. சீமானும் கெளதமனும் ஏழரை மூக்கன் அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு மூன்றரை மூக்கன் அளவுக்காவது இந்த நேர்மையைக் கடைப்பிடித்துப் பழக வேண்டும். மக்கள் மனதில் நிச்சயம் ஒரு நல்ல இடம் கிடைக்கும்.

facebook.com/Primya Crosswinகழிவறையில் அழுதிருப்பாள் போல... நீர்க்குழாயின் ஓசையில் பொருமல்களைக் கரைத்து, தண்ணீரில் கண்ணீரைக் கழுவி வந்திருக்கிறாள். கண்களிரண்டும் அப்போதுதான் எண்ணெய்க்குளியல் முடித்து வந்த பச்சைப்பிள்ளைகள் போல சோர்ந்து, சிவந்து மலர்ந்திருக்கின்றன. ‘முகம் கழுவினீர்களா’ என்று பொதுவாகக் கேட்டு வைத்தேன். சோர்வாகப் புன்னகைத்தாள்! சுயமரியாதைக் காரர்களிடம் இது ஒரு கஷ்டம்! தனக்குள்ளே வதைபட்டுக்கொள்வார்கள். அதிலும் சோகச் சுவையை எவரோடும் பகிராத பெருந்தீனிக்காரர்கள், கண்களின் கழிவிரக்கம் வேண்டியும் கழிவறையைத் தான் நாடுகிறார்கள். அவளுக்கு என்னால் தர முடிந்தது ஒரு குவளைத் தேநீர் மற்றும் குமிழை உடைத்துவிடாத ஒரு அண்மை. தேநீர் குறையக் குறைய அவள் தனக்குள்ளே எதையோ சங்கல்பம் செய்துகொண்டாள் என்று நினைக்கிறேன். ‘டணார்’ என்று கோப்பையைக் கீழே வைக்கிற தோரணை யாரிடமோ எதையோ சபதம் விடுகிறது போல இருந்தது. அதன்பின் என் வழமையான தோழிப்பெண் எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டாள். சமுத்திரம் கொந்தளித்துக் கசடுகளைக் கரை உமிழ்கிறது கண்டதுண்டா?! இப்படியாகத்தான் நாங்கள் எங்களையே மீட்டுருவாக்கம் செய்துகொள்வது...

Alia Bhatt: கண்களால் கைது செய்!
Alia Bhatt: கண்களால் கைது செய்!

twitter.com/skpkaruna

மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவது எவ்வளவு கடினம், அதிலும் அரசுக் கல்லூரியில்! தர்மபுரி மெடிக்கல் காலேஜ்லே ரேகிங் செய்து ஒரு பையனைத் தற்கொலைவரை தள்ளி நான்கு பேர் மீது வழக்கு. ராகிங் கேஸ்லே ஜாமீன் இல்லை. சிறைத் தண்டனை உறுதி. தற்காலிக மகிழ்ச்சிக்காகப் பெருங் கனவை பலி கொடுத்துட்டாங்க.

twitter.com/macchu_offcl

சில நேரங்களில் ஆறுதலென்பது நாம் பேசாதிருப்பது, அவ்வளவே!

twitter.com/ss_twtz

நினைவுகூர்வதற்கும் குத்திக்காட்டு வதற்கும் சிறு வித்தியாசம்தான். நினைவு கூர்வது ஆரம்பத்தில் எளிதாக ஆரம்பித்து இறுதியில் கனமாகும்.

குத்திக்காட்டுவது ஆரம்பமே கனம்தான்.

twitter.com/9thchoice

பகிராத வரைக்கும்தான் அதன் பேர் ரகசியம். அப்புறம் ‘தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத’ன்னு அதனோட பேர மாத்திக்கும்...

twitter.com/anand17m

இப்ப நிறைய பேர் ‘பக்குவம்னா என்ன’ன்னு இங்க எழுத ஆரம்பிச்சுட்டாங்க... அதையெல்லாம் படித்துவிட்டு அமைதியாகக் கடந்துபோவதே ஆகச்சிறந்த பக்குவம் ஆகும்.

twitter.com/aroobii_

சிங்கத்தைப் பார்த்துக் குரைத்தே தன் இருப்பை நிறுவிக்கொள்ளும் நாய்கள் இருக்கும் காட்டில்... சிங்கமாக வாழ்வது அசௌகரிய அவதி.

twitter.com/mohanramko

எங்கேயாவது போகும்போது ‘அம்மாதான் தூக்கணும்’னு அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கொண்ட அப்பா, ஆசீர்வதிக்கப்பட்டவர்.

twitter.com/saravankavi

தொடர்ந்து 40 நாள்களாக மாற்றம் இல்லாமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் காண்கையில் வரும் பதற்றத்திற்கு ஈடானது... சில மணி நேரம் பேசாமல் இருக்கும் அவளின் மெளனம்!

Priya bhavanishankar: புன்னகைப் பூவே!
Priya bhavanishankar: புன்னகைப் பூவே!

twitter.com/Suyanalavaathi

டூவீலரை நிறுத்தி சைடு லாக் போட்டதும், லாக் ஆகிருக்கும்னு தெரிஞ்சும் ஹேண்டில்பாரை ரெண்டு ஆட்டு ஆட்டிப் பாத்தாதான் மனசு கேக்குது!

twitter.com/gmkhighness

திருமணம் ஒரு கலாசாரம் மட்டுமல்ல, அது குடும்ப வணிகத்தின் ஒரு பகுதியாகும்...

twitter.com/indhiratweetz

போன் நம்பரை சேவ் பண்ணுவதற்கான இரண்டே காரணங்கள். அட்டெண்ட் பண்ணணும்; தப்பித்தவறிக்கூட அட்டெண்ட் பண்ணிடக்கூடாது.