Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

இந்த தூரம் எப்பவும் குறையப் போறதில்ல. என்றாலும், பொறுமையோடு காத்திருப்பது என்றால் நந்திதான் நினைவில் வருகிறது.

வலைபாயுதே

இந்த தூரம் எப்பவும் குறையப் போறதில்ல. என்றாலும், பொறுமையோடு காத்திருப்பது என்றால் நந்திதான் நினைவில் வருகிறது.

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/vemalism

டிகிரி, இன்ஜினியரிங், மாஸ்டர் டிகிரின்னு படிச்சுட்டு பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகாம வீட்ல மூணு வேளையும் சமைச்சுப் போட்டுட்டே இருக்குற கலாசாரம் இருக்குறவரை நம்ம ஊர் முன்னேறாது.

twitter.com/mohanramko

300, 400 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் தயாராக இருக்கின்றனர் - ராணுவத் தளபதி நரவானே

# பொறுமையா வருவாங்கன்னா, எம்புட்டுப் பொறுமையா? அதுக்குள்ள தேர்தலே வந்துடுமேயா!

twitter.com/pachaiperumal23

யாருடைய துயரத்தில் நீங்கள் ஓடிச்சென்று உதவினீர்களோ, அவரே விரைவில் உங்களுக்கு விரோதியாக மாறுவார்.

twitter.com/itz_idhayavan

இல்லாத அம்மாவைப் பற்றி விசாரிக்கும்போது எட்டிப் பார்க்கும் கண்ணீரை அணை போட முடிவதில்லை...

வலைபாயுதே

twitter.com/HariprabuGuru

என்ன பெரிய ஜல்லிக்கட்டு... புல்லட்டை நாலு கிலோமீட்டர் பெட்ரோல் இல்லாம, தள்ளிட்டுப் போய் பாத்துருக்கியா..?

twitter.com/manipmp

டி.வி-யில் படம் பார்க்கும்போது பாட்டு வந்தா மாத்திடுவாராம்... ஆனா மியூசிக் சேனலுக்குப் போய் பாட்டு மட்டும் பார்ப்பாராம்.

twitter.com/Annaiinpillai

சமூக வலைதளங்கள் மூலம் யாரையும் த.மா.க-வினர் விமர்சிக்க வேண்டாம் - ஜி.கே.வாசன்

# என்ன தம்பி, பப்ளிசிட்டி வேணுமா?! - மீம் கிரியேட்டர்ஸ்

twitter.com/HariprabuGuru

கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகளைச் சொல்லி முடிச்சுட்டு, துணிக்கடைக்குக் குடும்பத்தோட வாங்கன்னு விளம்பரம் பண்றாங்க பஸ் ஸ்டாண்ட்ல.

twitter.com/LAKSHMANAN_KL

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 1-15 தேதிக்குள் உச்சம் தொடும்! - சென்னை ஐ.ஐ.டி-யின் முதல்கட்ட ஆய்வில் தகவல்.

# இந்த வருஷம் ‘வேலன்டைன்ஸ் டே’க்குப் பதிலா ‘க்வாரன்டைன் டே’தான் கொண்டாடணும் போல..?!

twitter.com/Greesedabba2

நம் எல்லையில் நாமே நின்று விட்டால், அது கௌரவம். மற்றவர்கள் நிறுத்தினால், அது அவமானம்.

twitter.com/iam_DrAjju

கொரோனாத் தடுப்பூசியையோ, அல்லது கொரோனாவையோ பொய்ன்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க... சொந்த சித்தப்பாவ கொரோனாவால இழந்த, மதுரை அரசு மருத்துவமனையில இருந்த அந்த ஒருநாள நெனச்சாலே தூக்கம் வர மாட்டிங்குது. கண்ணு முன்னால அவ்ளோ இறப்புகள் & உயிருக்குப் போராடிட்டு இருந்தவங்கன்னு மறக்கவே முடியல இன்னும்...

வலைபாயுதே

twitter.com/mohanramko

பஸ்ஸுக்காகப் பெருங்களத்தூர்ல காத்திருந்து, கஷ்டப்பட்டு மறுநாள் ஊர் போய்ச் சேர்ந்தால்தான் பண்டிகை வந்த மாதிரி இருக்கு!

twitter.com/kusumbuonly

மே மாசம் வெயில் வரும், அக்டோபர் மாசம் மழை வரும், டிசம்பர் மாசம் குளிர் வரும், எலக்‌ஷன் டைம்ல பாகிஸ்தான் தீவிரவாதி ஊருக்குள்ள வரும்.

twitter.com/shivaas_twitz

இந்நேரம் நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்! ஒய்.எம்.சி.ஏ கிரவுண்ட்ல புக் ஃபேர் என்ட்ரன்ஸ்ல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு, டெல்லி அப்பளம் மிளகா பஜ்ஜி சாப்ட்டுகிட்டு, ஃபில்டர் காபி குடிச்சுக்கிட்டு இருந்திருப்பேன்... அடியேய் ஒமைக்ரான்!

twitter.com/adi10vj

‘தங்கம்... தங்கம்...’ பாட்டு டி.வி-ல ஓடிட்டு இருக்கு. தாய்க்குலம் பாத்துட்டு ‘இது அந்த வானத்தைப் போல நாடகத்துல வர பாட்டுதான’ன்னு கேக்குது... மோவ்…

twitter.com/manipmp

சொந்த ஊருக்குப் போறவனும், சொந்த ஊரிலேயே இருப்பவனும், நேர் எதிர் மனநிலையில் இருப்பார்கள் விடுமுறை நாள்களில்!

twitter.com/sathisshzdoc

ஓ.பி.சி இட ஓதுக்கீடு வரக் காரணம் பா.ஜ.க அரசு - அண்ணாமலை

‘‘ஏங்க, இது அவங்க வழக்கு போட்டதனால வந்த தீர்ப்புங்க…’’

‘‘நாங்க தர முடியாதுன்னு சொன்னதனாலதான அவங்க வழக்கே போட்டாங்க!’’

twitter.com/angry_birdu

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையில் தொடங்கிய இயக்கம், இன்று பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அந்த இயக்கத்துக்கான தலைவரைத் தேடிக் கொண்டிருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.

வலைபாயுதே

twitter.com/Greesedabba2

‘‘மாமா, நேத்து நம்மகூட சண்டைக்கு வந்தவங்களைத் திருப்பி அடிக்கப் போறேன் மாமா...’’

‘‘ஆமா மாப்ள, இந்த சீனாக்காரன் நம்ம கிட்ட வாலாட்டிட்டே இருக்கான், விடாத மாப்ள...’’

‘‘சீனாவா..? பக்கத்து ஸ்கூல் பசங்க வந்து வம்பிழுத்துட்டே இருக்காங்க மாமா, அந்த ஸ்கூல் பசங்களைச் சொன்னேன்... ஸ்கூல் பசங்களை...’’

twitter.com/amuduarattai

ரியாலிட்டி ஷோவில் ஒருவரை அதிகமாக நடுவர்கள் புகழ்கிறார்கள் என்றால், அவரை எலிமினேட் செய்யப் போகிறார்கள் என்று பொருள்.

www.facebook.com/kundhaani?

கலாய்க்கறதுல மூணு வகை உளவியல் இருக்கு…

1) நாமளும் கலாய்ப்போம், யார் கலாய்ச்சாலும் குதிச்சுட்டுப் போய் ஜோதில ஐக்கியமாகிடுவோம்.

2) நாம கலாய்க்க மாட்டோம், யாராச்சும் கலாய்ச்சாலும் கண்டுக்காமப் போயிடுவோம்.

3) நாம இஷ்டத்துக்குக் கலாய்ப்போம், ஆனா அடுத்தவங்க ஒரு வரம்புக்கு மீறி கலாய்ச்சா கடுப்பாகும்.

www.facebook.com/Revathy Ravikanthஒரே நாளே திரும்பத் திரும்ப நடந்தா எப்பிடியிருக்கும்... காணுங்கள் மாநாடு - வெங்கட்பிரபு.

# ஹவுஸ்வைஃபு லைஃபு தெரியுமா பாஸ்?

www.facebook.com/ரமேஷ் வைத்யா

டேய் டேய் டேய்... லெப்ட் ஷோல்டரத் தூக்கி நடந்தா நான் ‘புஷ்பா’ சாயல்ம்பீங்களா? குறுக்கு வலின்னு குனிஞ்சு நடக்குறப்பப் பாத்துறாதீங்கடா. வள்ளி மாதிரி இருக்கேன்னு சொல்லிடப்போறீங்க!

twitter.com/LAKSHMANAN_KL

தி.மு.க என்பது ஆலமரம் - அமைச்சர் தங்கம் தென்னரசு.

வாரிசுகள்தான் விழுதுகளா..?!

twitter.com/manipmp

முப்பது வயது வரை புதிய புகைப்படத்தையும், நாற்பது வயதிற்கு மேல் பழைய புகைப்படத்தையும் அதிகம் விரும்புகிறோம்.

twitter.com/Anvar_officia

‘பொங்கல் பண்டிகைலாம் முடிஞ்சுதா’ன்னு கேட்கணும் போல... ‘பொங்கலெல்லாம் முடிஞ்சுதா’ன்னு கேட்டதுக்கு, ‘இன்னும் இருக்கு, எடுத்துட்டு வரவா’ன்னு கேக்குறாங்க. நல்லவேளை, சர்க்கரைப் பொங்கல்ல தண்ணீர் ஊத்தி வைக்க முடியாதுங்கறது ஆறுதல்.

twitter.com/Suyanalavaathi

இந்த மாஸ்க் போடாதவங்களகூட மன்னிச்சு விட்டுரலாம். ஆனா, மாஸ்க் போட்டுட்டு இருக்கும்போது தும்மல் வந்தா, மாஸ்க்க கழட்டிட்டு தும்முறாங்களே, அவுங்கள மட்டும் மன்னிக்கவே கூடாது!

twitter.com/Raajavijeyan

உலகில் நல்லவர்கள் இரண்டு வகை. 1. நல்லவனாக நடிக்கத் தெரிந்த நல்லவர்கள்; 2. நல்லவனாக நடிக்கத் தெரியாத ‘நல்லவர்கள்.’

www.facebook.com/iIlango Krishnan

‘‘புதுப் புத்தகத்தோட வாசம் அவ்ளோ பிடிக்கும் சார்... அந்தப் புது மையோட வாசம், புதுத் தாள் வாசம்... டிவைன். நீங்க அதை உணர்ந்திருக்கீங்களா?’’

‘‘நீ இவ்ளோ ஓவரா ஃபீல் செய்யறத பார்த்தா எல்லா புக்ஸையும் மோந்து பார்த்துட்டு வைச்சிடுவ போல இருக்கு, சரிதான?’’www.facebook.com/

Vasantha Malar

புக்கு எழுதுறதவிட, அத விக்கிறதுக்கு அடிக்கிற குட்டிக்கரணம்தான் எழுத்தாளர்களின் பரிதாப நிலை!

twitter.com/Vasanth920

பொங்கல் அன்று தெருவில் நடந்துகொண்டே பெண்கள் இட்ட கோலத்திற்கு மார்க் போட்ட கடைசித் தலைமுறை நாமதான்!

www.facebook.com/Ramanujam Govindanகொ.மு:

சார்! லைட்டா ஃபீவரா இருக்கு. ஒரு நாள் லீவு வேணும்.

ஃபீவர்னா என்ன இப்ப? நான்லாம் உடம்பே நெருப்பா கொதிச்சாலும் ஒரு பாரசிட்டமால் மாத்திரையைப் போட்டுட்டு வேலை பார்ப்பேன் தெரியுமா?

கொ.பி:

சார்! லைட்டா ஃபீவரா இருக்கு.

ஃபீவரோட ஏன்யா வேலைக்கு வர? போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடு!

www.facebook.com/erodekathir

“மனதில் இருக்கும் தீய எண்ணங்களைக் கொளுத்தி...”

“ஏய்ய்ய்... நிறுத்து... போகிக்கு வாழ்த்து சொல்லப்போறியா?”

“அட, ஆமாம் ப்ரோ.... எப்படிக் கண்டுபிடிச்சிங்க?”

“ஆமா இது பெரிய கண்டுபிடிப்பு... சரி... இதுக்கு முந்தைய போகிகளில் நீ கொளுத்தின அந்தத் தீய எண்ணங்கள் என்னென்னன்னு சொல்லு பார்ப்போம்?”

“என்ன ப்ரோ இது... அது வந்து... ஒரு இதுக்குச் சொல்றதுதான். வேற என்னதான் பண்றதாம்?”

“இன்னியோட வாட்ஸப்ல வாழ்த்து ஃபார்வர்டு பண்றதையும் கொளுத்திடு...”

twitter.com/VignaSuresh

இந்த தூரம் எப்பவும் குறையப் போறதில்ல. என்றாலும், பொறுமையோடு காத்திருப்பது என்றால் நந்திதான் நினைவில் வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism