சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

அட்வைஸ் பண்ணி யாரையும் திருத்த முடியாது என்பதுதான் உலகத்திலேயே சிறந்த அட்வைஸ்!

twitter.com/sankariofficial

முழு மகிழ்ச்சி ‌உனக்குத் தருவதாக நீ‌ எண்ணும் பொருள் வேறொருவருக்கு உரிமையானதாகவே நிச்சயம் இருக்கும்!

facebook.com/Ramanujam Govindan

முருங்கைக்காயிலிருந்து முடக்கத்தான் கீரை வரை முன்பு ஆண்மைக்குறைவுக்கு நல்லது என விற்றுக்கொண்டிருந்த பொருள்களையெல்லாம் இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனச் சொல்லி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுசரி, உயிர்பயம்தானே பெரிது!

twitter.com/FareethS

தனுஷ் - ஐஸ்வர்யா புள்ளைங்கள நெனச்சிப் பாத்தா...

# உங்களை நெனெங்கடா மொதல்ல... அடுத்த லாக்டௌன் போட்டா சோத்துக்கு என்ன வழின்னு தெரியல!

twitter.com/saysatheesh

தமிழ்நாட்டில் கோவிட் காரணமாக இறந்தவர்கள் எனப் பதிவானது: 36,825. கோவிட் மரண இழப்பீடு வழங்கப்பட்டது: 41,131. சுமார் 5,000 பேர் போலியா இழப்பீடு வாங்கி இருக்காங்களா? அல்லது 5,000 மரணம் குறைவாகக் காட்டப்பட்டதா?

twitter.com/pachaiperumal23

சிறு குழந்தைகள் இருக்கிற வீட்டில் ஏதும் பொருள்கள் உடையாத நாள் திருநாளே.

Lydian - லிடியனும் சரஸ்வதியும்
Lydian - லிடியனும் சரஸ்வதியும்

facebook.com/Athisha Vinod

நாம் திருப்பிக் கேட்காமல் இருப்பதாலேயே நமக்கு அந்தப்பணம் தேவையில்லை என கடன் வாங்கியவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்காமல் இருப்பதாலேயே ‘பாவம், அவங்களுக்கு என்ன கஷ்டமோ’ என நாமும் நினைத்துக்கொள்கிறோம். கொரானா காலம் எல்லோருடைய வாழ்வையும் சிக்கலுக்குள்ளாக்கி வைத்திருக்கிறது. கடன்கள் எல்லாம் கேட்கவும் முடியாமல், கேட்காமலிருக்கவும் முடியாமல், ஆலகால விஷம்போல நம் தொண்டையிலேயே வாழ்கின்றன.

twitter.com/kumarfaculty

தூங்கி எழுந்ததும் நாம் திட்டியதையோ, அடித்ததையோ நினைவில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் குழந்தைகளின் வரம்!

twitter.com/Saisudhar1

ரெய்டு நடைபெறும் கே.பி.அன்பழகன் வீட்டு முன் குவிந்த அ.தி.மு.க தொண்டர்களுக்கு வெண்பொங்கல், சாம்பார் பரிமாறப்பட்டது- செய்தி.

பொங்கல் சாப்பிட்டுத் தூங்கிட்டா மதிய சாப்பாட்டுக்கு கொஞ்சம் எழுப்பி விட்ருங்க! பசி தாங்க மாட்டேன், ப்ளீஸ் பாஸ்!

twitter.com/mohanramko

சீனா கட்டும் பாலத்தை மோடி திறந்து வைத்து விடுவாரோ ௭ன நான் அச்சப்படுகிறேன் - ராகுல் காந்தி.

நானே திறப்பு விழாவுக்குப் போட்டுக்க சீனா டிரஸ் தைக்கப் போய்க்கிட்டு இருக்கேன், இவுங்க வேற!

twitter.com/Annaiinpillai

ரயிலில் போனில் பாட்டு கேட்டால், சத்தமாகப் பேசினால், இரவு லைட் போட்டால் அபராதம்! - அதிரடி உத்தரவு

# அபராதத்தில் ஜி.எஸ்.டி உண்டா பாஸ்?!

வலைபாயுதே

twitter.com/moderndravidan

ஜாதி ஒழிப்பு, முற்போக்கு எல்லாமே பேசிப் படம் வரணும். ஆனா அத எங்க ஜாதிக்காரங்க மட்டுந்தான் எடுக்கணும்.

twitter.com/Russetlane

சலித்துக்கொள்ளாத சுவர்களுடன் நீள்கின்றன என் உரையாடல்கள்.

facebook.com/ramanujam.govindan?__

தேடுவதை நிறுத்துங்கள், தேடியது கிடைக்கும்- ஓஷோ.

ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா என்னும் நாவலை ஓஷோ மிகவும் போற்றுவார். அந்த நாவலிலிருந்து... //‘‘ஒருவர் குறிப்பிட்டு எதையாவது தேடிக்கொண்டிருந்தால் அதைத் தவிர வேறு எதுவுமே அவர் கண்களுக்குத் தெரியாது. அதனாலேயே அவர் எதையும் கண்டுபிடிக்காமல், எதையும் தன் மனதில் நுழைய விடாமல், தன் இலக்கைத் தவிர எதையுமே நினைக்காமல், அந்த நினைப்பிலேயே மூழ்கிவிடுவார். தேடல் என்பதே ஒரு இலக்கை உடையதுதான். ஆனால் கண்டடைதல் என்பது சுதந்திரமாகத் திறந்த மனதுடன் இலக்கின்றி நிகழ்வது. முதியவரே! நீங்கள் தீவிரமாகத் தேடிக்கொண்டிருப்பதால்தான் உங்கள் கண்களுக்கு எதுவும் தெரிய மாட்டேன் என்கிறது” என்றான் சித்தார்த்தன்.//

மகிழ்ச்சியைத் தேடி ஓடினால் மகிழ்ச்சி கிடைக்காது. தேடலை நிறுத்திவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும். பிறர் நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அதிகாரம் செய்கிறோம். அப்படிச் செய்யாமல் அவர்கள் நம்மீது அன்பு கொள்ள வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு அவர்களை இயல்பாக விட்டுவிட்டால் தன்னால் அவர்களுக்கு நம்மீது அன்பு வரும்.

தூக்கப் பிரச்னை என வருபவர்களிடம் இந்தப் பொன்மொழியைத்தான் சொல்வேன். தூக்கம் வர வேண்டுமே என முயற்சி செய்தால் அந்தப் பதற்றத்திலேயே தூக்கம் போய்விடும். எந்த முயற்சியும் செய்யாமல் தூக்கத்தைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருந்தால் தானாகத் தூக்கம் வரும்.

twitter.com/Kannan_Twitz

அட்வைஸ் பண்ணி யாரையும் திருத்த முடியாது என்பதுதான் உலகத்திலேயே சிறந்த அட்வைஸ்!

facebook.com/revathy.ravikanth

‘வள்ளி’ படத்துல ரஜினி வூட்டம்மா கேரக்டரா ஒரு வளையல் போட்ட கைய காட்டுவாங்க... நான் ரொம்ப நாளா அது லதா ரஜினி கையின்னு நம்பிட்டு இருந்தேன்.

twitter.com/Anvar_officia

யூடியூப்ப பார்த்தால், ‘ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சமைக்கலாம்’னு சொல்றாங்க. ஹோட்டலுக்குப் போனால் வீ’ட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும்’னு சொல்றாங்க. இவனுங்க, ‘வீட்ல சாப்பிடு’ன்னு சொல்றாங்களா, ‘ஹோட்டல்ல சாப்பிடு’ன்னு சொல்றாங்களா?

twitter.com/prabhu65290

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு நானும் தயார்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

# அப்படின்னா உங்க வீட்டு முன்னாடியும் தொண்டர்களுக்குப் பிரியாணி போடுவீங்களா சார்?

twitter.com/Nila_twips

கரண்ட் இல்லாத நேரத்துல ஒரு கொசு வளச்சி வளச்சி கடிக்கும்ல, அப்போ அதை அடிச்சுக் கொல்ல கைல புடிச்சிட்டு, புடிச்சிட்டோமான்னு பாக்க கைய ஓப்பன் பண்ணுவோம். அப்போ பறந்து போய் திரும்ப வளச்சி வளச்சி கடிக்கும். அப்படிப் போகுது வாழ்க்கை!

https://twitter.com/Kozhiyaar

வாழ்க்கையில் சில பேர் Squid Game தாத்தா மாதிரிதான். கூட இருந்து நம்ம படுற கஷ்டத்தை ரசித்துக்கிட்டே இருப்பாங்க!

twitter.com/HariprabuGuru

ரயிலில் போனில் சத்தமாகப் பாட்டு கேட்டால் அபராதம் - செய்தி.

நானாவது டிக்கெட் எடுக்காம வரேன். பின்னாடி ஒருத்தன் பாட்டு கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கான் பாருங்க...

twitter.com/jimbalakadi_05

இந்த போலீஸ்காரங்க வசதியான பசங்கள கைது பண்ணி ஸ்டேசன்ல வெச்சி அடிச்சாங்கன்னு யாராது எங்கயாது கேள்விப்பட்டு இருக்கீங்களா? பாவம், காசு இல்லாதவங்களும் ஆதரவு இல்லாதவங்களும்தான் பாதிக்கப்படுறாங்க.

Dhruv vikram - மகன் - மகான்
Dhruv vikram - மகன் - மகான்

twitter.com/BeingSaThug

கேப்டன்சி கெடச்ச ரெண்டாவது மேட்சே 200 அடிக்க அவனென்ன ரோஹித்தா, இல்ல தோத்த டீமையே திரும்ப இறக்கி ஜெயிக்க வைக்க அவனென்ன தோனியா? ராகுல்தான!

twitter.com/VelusamyB10

ஒரு டாக்டர் பத்து அடுக்குமாடி கட்டுறாரே, நோயாளிங்க அதிகமா வரணும்னு கட்டுவாரா? இல்லை, யாருக்கும் நோய் வரக்கூடாதுன்னு கட்டுவாரா?

twitter.com/Vasanth920

வாங்கி வச்ச மட்டன் மசாலா ரெண்டு மாதமா அப்படியே இருந்தா மட்டன் விலை அதிகம் என்று அறிக.!

twitter.com/AnandNodal

“தம்பி, இன்னும் கொஞ்ச நாள் சிகிச்சை இருக்குப்பா...”

“சார், ஒரு மாசமாச்சு. நியூ இயர், பொங்கல் போச்சு. நான் ஊருக்குப் போறேன். இனி முடியாது!”

“உனக்கு போர் அடிச்சா புத்தகம் வேணுமா... கேம்ஸ் வேணுமா?”

“சார், எனக்கு ரிமோட் கார் வாங்கித் தரீங்களா? ரொம்ப இஷ்டம்!”