Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

இந்திரா காந்தி இறந்தபோது 3 நாள் பட்டினி கிடந்தேன் - சீமான்

twitter.com/arattaigirl

‘நீ சமைச்சாத்தான் உனக்குச் சோறு’ எனும் நிலையில் உள்ளவர்கள்... பாலின பேதமின்றி சமைக்கக் கற்றுக்கொள்கின்றனர்.

Siraj - தந்தைக்கு மரியாதை
Siraj - தந்தைக்கு மரியாதை

twitter.com/prabhu65290

லேஸ் பாக்கெட் மாதிரிதான் நம்ம பொழப்பும். வெளில பாத்தா நல்ல கலரா அழகா இருக்கும். உள்ள பாத்தா ஹவுசிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்டு பில் அப்படின்னு புஸுனு போயிடும்.

twitter.com/poopoonga

யாருடைய உலகமாகவும் இருக்க ஆசைப்படாதீர்கள். அதுபோல சிறைவாசம் எதுவுமில்லை.

twitter.com/prabhu65290

புதுச்சேரி மாணவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் அவதியுறுவதற்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் காரணம் - முதலமைச்சர் நாராயணசாமி

எல்லா மாநில முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்கூட மோதிட்டு இருக்கும்போது, ஒருத்தர் மட்டும் ஆளுநர்கூட மோதிட்டு இருந்தார்.

twitter.com/kumarfaculty

கடவுள் சிலையைப் பார்த்ததும் பக்தர்களைவிட மொபைல் போன்களே பரவசம் அடைகின்றன!

twitter.com/Suyanalavaathi

என்னைக்கு நாம மதியம் சாப்பிட்டு லைட்டா அசந்து தூங்குறோமோ, அன்னைக்குத்தான் செல்போன் கம்பெனிகாரங்க ‘கஸ்டமர் சர்வே’ன்னு கால் பண்ணிக் கடுப்பேத்துவாங்க!

twitter.com/Kozhiyaar

தம்மிடம் கடன் வாங்கியவர், கடனை அடைக்கும்வரை மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைப்பது ஒரு வகை மனநோய்!

Mamata - மோடியா லேடியா..!
Mamata - மோடியா லேடியா..!

twitter.com/HariprabuGuru

ஞாயிற்றுக்கிழமையை உருப்படியா செலவிடணும்னு நினைக்கிறதும் ஒரு வகையான கோவா ட்ரிப் ப்ளான் போலதான்.

twitter.com/skpkaruna

பம்மல் கே சம்பந்தம் கமலும், நம்ம பிரதமரும் ஒரே வழக்கம் கொண்டவர்கள். அவர் ‘கல்யாணம்’ எனும் சொல்லைச் சொல்ல மாட்டார். ‘பம்மல் உவ்வேக் சம்பந்தம்’ என்பார். அதேபோல இவர் சீனாப் பெயரைச் சொல்வதில்லை. கோபம் வந்தால் பாகிஸ்தானை ஹார்ஷா திட்டிட்டு, கையோட நாலஞ்சு மொபைல் செயலிகளைத் தடை பண்ணுவார்.

twitter.com/Neera_Twitz

உண்மை என்னவென்றால், உங்களைப் பற்றிய மற்றவர்களின் மதிப்பீடு, உங்கள் சுய மதிப்பீடுகளைவிட அதிகமாகவே இருக்கும்!

twitter.com/HAJAMYDEENNKS

இந்திரா காந்தி இறந்தபோது 3 நாள் பட்டினி கிடந்தேன் - சீமான்

# ஆமைக்கறி சாப்பிட்ட கதை எபிசோடு முடிந்து, எதுவுமே சாப்பிடாத கதை எபிசோடைத் தொடங்கிட்டாரு!

twitter.com/RahimGazzali

குழந்தைகளைப் பொறுத்தவரை ரகசியம் என்பது, நாலு பேருக்கு விளங்குவதுபோல் நம் காதுக்குள் வந்து சத்தமாகச் சொல்வதே...

twitter.com/amuduarattai

தொலைக்காட்சிப் பெட்டிகள் சமூகத்தி லிருந்து நம்மைத் தனிமைப் படுத்தின. மொபைல்கள், குடும் பத்தில் இருப் போரிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்தின.

twitter.com/PeterAlphonse7

கண்காணாத தேசத்தில் ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றியினை நாள்முழுவதும் கொண்டாடி கோடிகளில் பரிசு வழங்கும் நாம், ஒன்றரைக் கோடி விவசாயிகள் கடும் குளிரில் சாலைகளில் கிடப்பதைக் கண்டுகொள்ளவில்லையே! கிரிக்கெட் வெற்றியைவிட விவசாயிகளின் வாழ்வு முக்கியமல்லவா?

www.facebook.com/revathy.ravikanth

‘‘ஹலோ ரேவதி... எங்க இருக்கீங்க?’’

‘‘ஹலோ... நீங்க இப்ப எங்க இருக்கீங்க?’’

‘‘உங்க வீட்டுப் பக்கத்துலதான்!’’

‘‘அப்ப நான் மார்க்கெட்ல இருக்கேன்ங்க!’’

twitter.com/HariprabuGuru

அரசாங்கமே பிளாக்கில் அதிக விலைக்கு விற்கும் பொருள்தான் பெட்ரோல்!

twitter.com/Annaiinpillai

அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தே.மு.தி.க கூட்டணி வைக்கும் - பிரேமலதா

# இருக்குறது ஒரு பிஸ்கட்டு... அத எத்தனை பேருக்குடா பிரிச்சிக் கொடுக்குறது - சாமி!

twitter.com/iamkarki

#IndVsAus தொடர்ல எனக்கு ஒண்ணு (மறுபடியும்) புரிஞ்சது. ‘என் வேலைல நான் பிஸ்து. நான் இல்லைன்னா அவ்ளோதான்’னு எப்பவும் நினைக்கக்கூடாது. நாம இல்லைன்னா இன்னொருத்தன் அந்த வேலையைச் செய்வான். பெட்டராகூடச் செய்யலாம்!