
வீட்டை விட்டுக் கிளம்பும்போது மறந்து வச்சிட்டுப் போகும் பொருள்களின் லிஸ்டில் புதுசா மாஸ்க் சேர்ந்துடுச்சு.
twitter.com/pa.ranjith
அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டக்காரர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப் படவேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம்! ஆகா என்ன சுவை!

facebook.com/mani.pmp.5
கார் ஓட்டிப்பழகும் போதுதான் எல்லா ஜீவராசிகளையும் மதிக்கும் ஒரு ஜென் நிலை வரும்.
twitter.com/shivaas_twitz
வீட்டை விட்டுக் கிளம்பும்போது மறந்து வச்சிட்டுப் போகும் பொருள்களின் லிஸ்டில் புதுசா மாஸ்க் சேர்ந்துடுச்சு.
twitter.com/skpkaruna
ஆயிரம் பேருந்துகள் அனுப்புகிறேன் என அறிவித்துவிட்டு 872 பேருந்துகள் மட்டுமே அனுப்பியதாம் காங்கிரஸ் கட்சி! பிரியங்கா காந்தியின் செயலாளர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது யோகியின் உ.பி. அரசு. இப்படியெல்லாம் நடந்தது எனச் சொன்னால்கூட எதிர்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.

twitter.com/writernaayon
காரணமே இல்லாமல் உம்மென்று இருக்கும் மனைவியிடம் காரணம் கேட்பதற்கு பதிலாக கரன்ட் கம்பியை நக்கிப் பார்க்கலாம்.
twitter.com/teakkadai1
உணவு சம்பந்தமான எல்லா ஏக்கங்களும் காணாமல்போய், ஊர் சுற்றுவது உள்ளிட்ட எல்லா ஆசைகளும் வறண்டு போய், வேலை மட்டும் நிலைத்தால் போதும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே பிரதானமாக்கிவிட்டது இந்தக் கொரோனா.

twitter.com/shivaas_twitz
லாக்டௌனும் கல்யாணம் மாதிரிதான் ஆரம்பத்துல நல்லா ஜாலியாதான் இருந்துச்சு. போகப் போக கொடுமையா இருக்கு.
twitter.com/sultan_Twitz
கொரோனா நோய்த் தொற்றை மக்கள் அலட்சியத்துடன் கருதக் கூடாது - அமைச்சர் செல்லூர் ராஜு #அது பணக்காரர்களுக்குத்தானே வரும், நாங்க ஏன் பயப்படப் போறோம்..?!
twitter.com/swaravaithee
நீ வீட்டு வாடகை குடு,
குடுக்காமப் போ;
அட்வான்ஸ்ல கழிச்சிக்கறேன் என்பதே தற்போதைய வீட்டு ஓனர்களின் நிலை.

www.facebook.com/saranya.satchidanandam
கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு இந்த லாக்டௌனில் முறையான உணவில்லை...அல்லது உணவே இல்லை... அரசியலும் வரலாறும் படித்து ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் முதலில் பட்டினியைத் தவிர்க்கும் ஆட்சிமுறையை மனதில் வையுங்கள்.