www.facebook.com/Asif Meeran

அதிகபட்சம் ஆறு வருடங்கள் மட்டுமே பெண்களால் ரகசியங்களைப் பாதுகாக்க முடியும் (இதுவே அதிகமென்பார் அறிஞர்).#த்ரிஷ்யம்2 - ஒன்லைனர் இதுதான்.

twitter.com/saravankavi

நிதியமைச்சர் ~ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கணும்னா சிம்பிளான ஒரு வழி இருக்கு...

பிரதமர் ~ என்ன வழின்னு சொல்லுங்க...?

நிதியமைச்சர் ~ மிச்சம் மீதி இருக்கிற எல்லாத்தையும் விலை ஏத்திட்டா பெட்ரோல், டீசல் விலை கம்மியா தெரியும்.

twitter.com/shivaas_twitz

நீங்க எப்படி ஆட்சியைப் பிடிப்பீங்க? உங்க கட்சிக்குத்தான் எம்எல்ஏவே கிடையாதே!

பாஜக: எங்களுக்கு அதுவா கிடைக்கும்!

twitter.com/amuduarattai

நமக்கு செய்யப்பட வேண்டிய துரோகங்கள், நம்மைச் சுற்றி எப்போதும் ‘நம்பிக்கை’ என்ற பெயரில் உலவிக் கொண்டிருக்கும்.

twitter.com/Suyanalavaathi

இப்பெல்லாம் மாஸ்க் போட்டுட்டு பஸ்ல ஏறுனா, ஏதோ திருடன பாக்குற மாதிரி பாக்குறாங்க... போற போக்க பாத்தா, மாஸ்க் போட்டா பஸ்ல ஏத்த மாட்டாங்கபோல.

twitter.com/shivaas_twitz

கியூவுல கடைசியா நிக்கிறது ஒரு கொடுமைன்னா, ரொம்ப நேரமா நமக்குப் பின்னாடி புதுசா யாரும் வந்து நிக்காதது கொடுமையிலும் கொடுமை.

twitter.com/HAJAMYDEENNKS

தேர்தல் வந்தால் ரோடு போடுறது அந்தக் காலம், போட்ட வழக்கைத் தள்ளுபடி பண்றது இந்தக் காலம்!

twitter.com/RahimGazzali

கறிவேப்பிலை மரம் வைத்திருப்பவர்களைக்கூட பணக்காரர்களாக நினைக்க வைத்ததே இந்த ஆட்சியின் சாதனை.

twitter.com/IamUzhavan

“டேங்க் ஃபில் பண்ணுங்க” என்று சொல்வோரின் மொபைல் எண்களைத் தருமாறு பங்க் உரிமையாளர்களிடம் வருமான வரித்துறை கேட்டுள்ளது.

twitter.com/mekalapugazh

மிகச்சிறந்த சேமிப்புத் திட்டங்களும் மிக மோசமான சேவை முறையும் உள்ள இடம்... இந்திய அஞ்சலக அலுவலகங்கள். ஒருவேளை ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்துவதால், இது போதுமென விட்டுவிட்டார்களா?

twitter.com/ItsJokker

மொயின் அலி ~ இன்னையில இருந்து டெய்லி 2 திருக்குறள் படிக்கணும், தமிழ்ல ட்வீட் போடணும்.. அப்பப்ப வேற அப்டேட் கேக்கணும். ஷ்ஷப்பா... எவ்ளோ வேலை கிடக்கு.

twitter.com/Kozhiyaar

சீனாவை ஜி மன்னிச்சு விட்டுட்டார் போல! திரும்பவும் Vivo, ஐ.பி.எல் sponsor பண்ண விட்டுட்டாங்க!

twitter.com/deltatamilian

தமிழகத்தில் காங்கிரஸைப் பிடிக்காதவர்களுக்குக்கூட ராகுல் காந்தியைப் பிடிக்கிறது.

twitter.com/prabhu65290

பேங்க்ல இருந்து போன் பண்ணி, ‘பெட்ரோல் போட லோன் வேணுமா’ன்னு கேக்கறாங்க சார்...

twitter.com/kiramaththan

அர்ஜுன் டெண்டுல்கரின் நுழைப்பால் வாய்ப்பிழந்தவன் இன்னொரு சச்சின் டெண்டுல்கராய் இருக்கலாம்.

twitter.com/withkaran

ஐபோன் வச்சிருக்கறவனையும், ஐஐடில படிச்சவனையும் ஐடில வேலை பாக்குறவனையும் கண்டுபிடிக்கிறது ஈசி... அஞ்சு நிமிஷம் பேச்சுக்கொடுத்தா அவனே சொல்லிருவான்!

twitter.com/Kannan_Twitz

பட்டுத் தெளிந்தபின் வரும் தெளிவு வாழ்க்கை முழுவதற்குமானது!

twitter.com/ramesh_twetz

ஒரு லிட்டர் பெட்ரோல், ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சின்ன வெங்காயம், ஒரு கறிவேப்பிலைக் கட்டு வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்தா ‘வெற்றி நடை போடும் தமிழகமே’னு விளம்பரம் ஓடிட்டு இருக்கு!

# அடே, ஆயிரம் ரூபாய் காலிடா!

twitter.com/amuduarattai

வாழ்க்கை நம்மை, ‘இவன் எவ்வளவு அடிச்சா தாங்குவான்’ என்று சோதிக்கத் தொடங்கி, ‘இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே’ என்பதில் முடிகிறது.

twitter.com/Kozhiyaar

அம்மாவின் ஆயிரம் அடிகளுக்கு அசராத மனம், அப்பாவின் ஒரு முறைப்புக்கு நடுங்க ஆரம்பித்துவிடும்!

twitter.com/manipmp

சில நேரங்களில் கூகுள் மேப் பார்த்தால் தலை சுற்றும்... ‘தல’யையே சுற்ற வைத்துவிட்டது கூகுள் மேப்.

twitter.com/kongukarthikk

தேவையானது தேவையானபோது தேவைக்கு அதிகமாகக் கிடைத்தால், தேவையான அளவு தேவையானதை வைத்துக்கொண்டால் தேவைக்கு அதிகம் உள்ளதை தேவையானோருக்குத் தேவையானபோது கொடுக்கலாமே...

twitter.com/balasubramni1

உன்மீது நான் கொண்ட காதல் பெட்ரோல் விலைபோல உயர்ந்துகொண்டே போகிறது. என்மீது நீ கொண்ட காதல் என் சம்பளம் போலவே கூடாமல் இருக்கிறது.

twitter.com/HAJAMYDEENNKS

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலையும் உயர்ந்துவருகிறது!

twitter.com/kumarfaculty

ஆனா பாருங்க, புஜாரா ஒயிட் ட்ரஸ் போட்டுட்டுத்தான் ஐபிஎல்ல விளையாடுவாரு

.twitter.com/balebalu

பைக் எடுத்து பெட்ரோல் போட்டுக்கிட்டு அப்படியே கடையில சின்ன வெங்காயம் வாங்கிட்டு வர்ற மாதிரி ஒரு பணக்காரக் கனவு!

twitter.com/Anitha200120

‘ஏமாந்ததை’ வெளிய சொல்ல வெசனப்பட்டு, நாம் சூட்டிய மாற்றுச்சொல்தான் ‘அனுபவம்’ என்றழைக்கப்படுகிறது.

twitter.com/aandrewz

எல்லா ஆதாரங்களுடன் சிக்கிக்கொண்ட ஜார்ஜ்குட்டி, இம்முறை தப்பிக்க எந்த வழியும் இல்லை என அறிந்து... குடும்பத்துடன் பா.ஜ.க.வில் சேர்கிறார்.

த்ரிஷ்யம் 3

www.facebook.com/Suresh Kannan

“அலெக்ஸா... ப்ளே ‘தீக்குருவி...” என்றேன், மிதப்பாக.

“அதுக்கு நீ அதை மொதல்ல வாங்கியிருக்கணும்” என்று பதில் குரல் கேட்டது.

‘யாரது அம்பாளா பேசியது?” என்ற திகைப்புடன் சுற்றிப் பார்த்தேன்.

இப்படி நான் பல முறை கேட்பதைக் கேட்டு காண்டு ஆகியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் பதில் குரல் போலிருக்கிறது. அவரது பெயர் அலெக்ஸ்.

கொஞ்ச நேரம் கனவுலகில் வாழ விட மாட்டார்கள்... பிறகு நானே எழுந்து சென்று எம்.பி3 ப்ளேயரை ஆன் செய்தேன்.

www.facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

‘எங்க சாதியில மட்டும் இத்தனை கோடி பேர் இருக்கோம்’, ‘எங்க சாதியில மட்டும் அத்தனை கோடி பேர் இருக்கோம்’னு யூடியூப்ல பேட்டி கொடுக்குற சாதிச் சங்க ஆட்களெல்லாம் ஆளாளுக்கொரு கணக்கு சொல்றாங்க. இவங்க சொல்ற கணக்கையெல்லாம் பாத்தா பல கோடிகளைத் தாண்டுது. இந்தியாவுல 8,000 கோடி மக்கள் தொகை இருக்குறதாக முன்னொருமுறை மதுவந்தி சொன்னது ஒருவேளை உண்மைதானோ என ஆராயவேண்டிய நேரமிது!