Published:Updated:

வலைபாயுதே

ப்ரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா பவானி சங்கர்

இப்பல்லாம் துபாய்லேருந்து வந்திருக்கேன்னு சொல்லவே பயமா இருக்கு...

வலைபாயுதே

இப்பல்லாம் துபாய்லேருந்து வந்திருக்கேன்னு சொல்லவே பயமா இருக்கு...

Published:Updated:
ப்ரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா பவானி சங்கர்

twitter.com/Anvar_officia

நம்ம உடம்பில் எங்கெங்க வலிக்குது, நமக்கு என்ன பண்ணுது என்பதெல்லாம் திங்கட்கிழமை காலையில் வேலைக்குப் போகும்போதுதான் தெரியவருது!

twitter.com/subramaniandeva

எப்புட்றா பத்து மணிக்கு படுத்ததும் தூங்குறீங்க...

புக் படிக்குறதுல ஆரம்பிச்சி அகண்டா படம் வரைக்கும் எல்லாத் தந்திரமும் பண்ணியாச்சி...

twitter.com/narsimp

ஒருமுறை நம்மைத் தவிர்த்தவர்களுக்கு இரண்டாவது முறை அந்த வாய்ப்பை வழங்காமல் இருப்பதில் இருக்கிறது வாழ்வின் புரிதல் பக்கங்கள்.

I Hansika - மைடியர் டெடி!
I Hansika - மைடியர் டெடி!

twitter.com/intro_vertism

இந்த இலை பரோட்டா கான்சப்ட் ஹிட்டானத பாத்து, இப்ப வெஜ் ஓட்டல்காரங்களும் இலை பனீர் பரோட்டா, இலை காளான் பரோட்டான்னு களத்துல இறங்கிருக்கானுக.

கான மயிலாட கண்டிருந்த...

twitter.com/indhiratweetz

“மனசு சரியில்ல, வாய்ஸ் கேக்கணும் போல இருந்துச்சு” என்றபடி அழைக்க யாரேனும் ஒருவரை கடைசிப் பிடிமானமாய் வைத்திருந்தால் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள், அவர்கள்தான் நம்மை சாவடித்துக்கொண்டே இருப்பார்கள்.

twitter.com/Anvar_officia

இப்பல்லாம் துபாய்லேருந்து வந்திருக்கேன்னு சொல்லவே பயமா இருக்கு...

உடனே அரபிக்குத்துக்கு என்ன அர்த்தம்னு கேட்கிறானுங்க.

facebook.com/Abdul Muthalib

பால் திரிந்துவிட்டது என்று ஆங்கிலத்தில் கூறமுடியாதவரை உங்களுக்கு ஆங்கிலம் நாவசப்படவில்லை என்றறிக.

நண்பரொருவர் க்ராசரி கம்ப்ளைன்ட்டில்: “மில்க் வேஸ்டட். இட் ஸ்ப்ரெட்ஸ் வென் குக்ட்”

facebook.com/Revathy Ravikanthஎன்னங்கடா... ஸ்க்ரோல் பண்ணப் பண்ண ‘புத்தகக் கண்காட்சியில் இத்தனாம் நம்பர் அரங்கில் என்னுடைய புத்தகம் கிடைக்கும்’ பதிவாவே இருக்கு. ஆக, இந்த பேஸ்புக்கிலே புக்கு போடாத ஒரே ஆளு நான் மட்டுந்தானா!

facebook.com/Mano Red

சராசரிப் பெண்களின் வாழ்க்கை முறைதான் எத்தனை எளிமையானது! பேப் பெரிய பிரச்னைகள் மலைபோல் குறுக்கே வந்து நின்றாலும்கூட, ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக் கடந்துவிடுகிறார்கள்.

twitter.com/Suyanalavaathi

யூடியூப்ல இருந்து நம்ம கத்துக்க வேண்டிய பாடம் என்னன்னா, ‘வாழ்க்கை’ங்கிறது வீடியோ மாதிரி, ‘பிரச்னை’ங்கிறது advertisement மாதிரி. வீடியோ ஓடிக்கிட்டே இருக்கும்... Ad எப்ப வரும், எவ்ளோ நேரம் வரும்னு தெரியாது.. ஆனா skip பட்டன் வரும்போது கரெக்ட்டா யூஸ் பண்ணணும்!

twitter.com/pandi_prakash_

பெரிதாக ஏதொன்றையும் நீங்கள் செய்யத் தேவையில்லை சிலரிடமிருந்து விலக; நல்லதாக நான்கு அறிவுரை சொல்லுங்கள் போதும்...

Priya Bhavanishankar - ஹார்ட் சாக்லேட்!
Priya Bhavanishankar - ஹார்ட் சாக்லேட்!

twitter.com/shivaas_twitz

ஞாயிற்றுக்கிழமை கறி வாங்கப் போகும் போது இருக்கும் ஆர்வம் திங்கட்கிழமை வேலைக்குப் போகும்போதும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் உருப்பட வாய்ப்புள்ளது என்கிறது ஒரு உக்ரேனிய தத்துவம்!

twitter.com/Greesedabba2

நல்லவர்களாகத் தோற்றமளிக்கும் பலரும், தங்கள் இமேஜ் கெட்டுவிடாமல் வில்லத்தனம் செய்யத் தெரியாததால், வேறு வழியில்லாமல் காலம் கடத்துபவர்கள் தான்.

twitter.com/vemalism

கோவைல இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஆம்பளைங்களும் கால்ல கொலுசு போட்டு சுத்துனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல.அவ்வளவு கொலுசு வீடு வீடுக்கு போயிருக்கு.

twitter.com/IamUzhavan

பிரமாண்டத்திற்காக எழுப்பப்படும் எந்தச் சிலையிலும் கடவுள் இருப்பதேயில்லை.

twitter.com/pachaiperumal23

நமக்கு வரக்கூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை உட்பட எந்தவொரு பிரச்னையையும் நாம் சரியாக டீல் பண்ணவில்லை எனில் அது நம்மை டீல் பண்ணிடும்.

twitter.com/Kozhiyaar

என்னது... நேருவோட இந்தியாவா?!

இப்ப சிங்கப்பூர் Apps எல்லாம் தடை செய்யணுமே?!

twitter.com/Suyanalavaathi

பஸ்ல நின்னுட்டுகூட போயிடலாம் போல! ஆனா இந்த மூணு பேர் உட்கார்ற சீட்ல நடுவுல உட்கார்ந்து போற வலி இருக்கே, கொடுமையோ கொடுமை...

twitter.com/mohanramko

புதிய பஞ்சாப் பிறக்கும்போது, புதிய இந்தியா பிறக்கும் - மோடி

அப்ப ‘ட்வின்ஸ்’னு சொல்லுங்க!

Prithviraj - சேவ் மீயாவ்வ்வ்!
Prithviraj - சேவ் மீயாவ்வ்வ்!

twitter.com/amuduarattai

நாம் பைக் ஓட்டும்போது, கார் ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளையும், நாம் கார் ஓட்டும்போது, பைக் ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளையும் அறியலாம்.

twitter.com/HariprabuGuru

என் குடும்பத்துல மொத்தம் பதினெட்டு ஓட்டு. நான் இங்க நிக்குறேன். என் BMW கார் வெளிய நிக்குது...

twitter.com/amuduarattai

நம்மைத் தெரிந்த ஒரு நபரும் இறந்துவிட, அந்த வீட்டில் துக்கம் கேட்கச் செல்வதும், ஒரு வகை கையறுநிலையே!

twitter.com/drloguortho1

சண்முகவள்ளி என்னும் அழகிய பெயரை சம்பு என்றழைக்கும் வன்மமான சமூகத்தில் வாழ்கிறோம்.

twitter.com/shivaas_twitz

அம்பது நூறு எக்ஸ்ட்ரா செலவானாலும் பிரியாணிய கடையிலதான் வாங்கிச் சாப்பிடணும். யூடியூப் பார்த்துக் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குனாலும் வீட்ல செய்யிறது தக்காளி சாதம் மாதிரிதான் வருது!

twitter.com/kumarfaculty

நிறைய பேர் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்த பிறகு நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவதற்கு சற்றும் குறைவில்லாதது ஓட்டு போட்ட பிறகு வாக்களிக்கும் இயந்திரத்தை நின்று பார்ப்பதும்!

Vignesh Shivan - காத்துவாக்குல ஒரு கிரிக்கெட் ஸ்டோரி...
Vignesh Shivan - காத்துவாக்குல ஒரு கிரிக்கெட் ஸ்டோரி...

facebook.com/Arivazhagan Kaivalyam

பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகிவிட்டது. எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான்.

நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். “கோயம்பேடு போக வேண்டும்”, ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு “200 ரூபாய் குடுங்க சார்” என்றார். சாதாரண நாள்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நியாயமானது‌ மட்டுமல்ல, அதையும் தாண்டி...

எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டேன், எனக்கு முன்னாலிருந்த மனிதன் இப்போது பக்கத்தில் வந்து சேத்பட்டில் இறங்கிக் கொள்கிறேன் என்றான். ஆட்டோக்காரர் திரும்பி என்னைப் பார்த்தார், நான் தலையை‌ ஆட்டினேன்.

60 ரூபாய் குடுங்க என்று ஏற்றிக் கொண்டார். பயணத்தில் பக்கத்தில் இருந்தவர் பிரசங்கம் பலமாக இருந்தது, “என்‌ பெயர் ஜோசப், நான் ஏசுவின் ஆணையாக இதுவரை‌ எவருடைய பணத்துக்கும் ஆசைப்பட்டதில்லை, என் பணத்தை‌ வேண்டுமானால் பிறரிடம்‌ கொடுத்திருக்கிறேனே தவிர பிறர் பணத்தைப் பறித்ததில்லை.” குடியின் வாசம் தெறிக்கப் பேசிக்கொண்டே வந்தார்.

நாங்கள் இருவரும் அதிகமாகப் பேசவில்லை, ஒரு இடத்தில் நிறுத்தச்‌ சொன்னவன், இறங்கி‌யவன் பேசும்‌ தொனியை மாற்றினான். “நான் ஏண்டா உனக்குப் பணம்‌ குடுக்கணும், நான் யார் தெரியுமா? அதான் அவர்கிட்ட வாங்குறல்ல, ஒரே ஆட்டோவுல ரெண்டு சவாரி போவியா?”

ஆட்டோவை நகர்த்தியவர், எதுவும்‌ பேசவில்லை, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆட்டோவுக்குள் இருந்தவரை‌ நீதி உபதேசங்கள் செய்தபடி வந்தவன், ஏசுவை மேற்கோள் காட்டியவன் கண‌ நேரத்தில் ஒரு பச்சோந்தியைப் போல நிறம் மாறினான்.

பணமே கொடுக்காமல் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அதற்கொரு நியாயம் பேசியபடி‌ அவனால் வாழ்க்கையைக் கடக்க‌ முடிகிறது. ஆபத்தானவன், பணத்துக்காக நீதியைக் குழி தோண்டிப்‌ புதைக்கும் கயவன் என்று‌ நினைத்தபடி ஆட்டோக்காரரிடம் “அவனிடம் பணத்தை வாங்கியிருக்க வேண்டும்” என்றேன்.

“சார், எனக்கு வீடு அரும்பாக்கம், நான் சவாரி‌ எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்புகிறேன், உங்களை‌க் கோயம்பேட்டில் இறக்கி விடுவது போகிற வழியில் எனக்குக் கிடைக்கிற கூடுதல் வருமானம்தான், அவனிடம் பணம் இல்லை, இருந்தால் கொடுத்திருப்பான், அவனை ஏற்றும் போதே அவனிடமிருந்து பணம் வராது‌ என்று எனக்குத் தெரியும், 40 வருஷமா ஆட்டோ ஓட்டுறேன்‌ சார்.”

“எனக்கு ரெண்டு பெண் குழந்தை சார், நல்லாப் படிச்சு வேல செய்றாங்க, அந்தப் பய பொங்கலும் அதுவுமா வீடு போய் சேரட்டும்னுதான் ஏத்திக்கிட்டேன், அப்பனக் காணோமேன்னு புள்ளைங்க தேடுமே‌ சார், என்‌ பொம்பளப் புள்ள மாதிரி. ஒன்னு கட்டினவனக் காணோ மேன்னு வீட்ல தூங்காமக் கிடக்குமில்ல.”

படபடப்பான அந்த இரவில் உடலும், மனமும்‌ பெருத்த சமநிலை கண்டிருந்தது, கண நேரத்தில் ஒரு பயணம்‌ இரண்டு வெவ்வேறான மனிதர்களைச் சுமந்தபடி நிகழ்கிறது, ஒருவன் நீதிக்குப் புறம்பாக நடந்துகொள்கிறான், தனது‌ சொற்களைக் கூடக் காக்க முடியாதவனாக நடந்து போகிறான், இன்னொருவர் இந்த உலகம் பாதுகாப்பானது, கயவர்களின் பயணங்களையும் ஆசீர்வதிக்கும் அளவுக்கு அழகானது‌ என்று உணர்த்துகிறவர். அது குறித்த எந்தப்‌ பிரசங்கமும் செய்ய விரும்பாதவர்.

இறங்கும்போது 200 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய்த் தாளொன்றைச் சேர்த்துக் கொடுத்தேன். சிரித்தபடி அந்த ஊதா நிறத்‌ தாளை என்னிடம் திருப்பிக்கொடுத்தார். “நன்றிண்ணே.” விடை‌பெற்ற ஆட்டோவை‌ நின்று வெகு நேரம்‌ பார்த்துக் கொண்டிருந்தேன்.

உலகம் இயங்குவதற்கென்று ஒரு அச்சு இருக்கிறது, மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம்‌ செய்து கண்டடைந்த அச்சு அது, சக உயிர்களிடத்தில் நீதியோடு நடந்து கொள்வதற்கான நாகரிகத்தின் அச்சு. சில நேரங்களில் அது ஆட்டோக்காரர் வேடமணிந்து வரும்போல...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism