Published:Updated:

வலைபாயுதே

சுனைனா
பிரீமியம் ஸ்டோரி
சுனைனா

உனக்கா, உள்ள இருக்குறவரை நல்லவனா இருந்துட்டு, வெளிய வந்ததும் செருப்பு வச்ச இடத்துல இல்லேன்னு என்னையவே திட்டுவே..!

வலைபாயுதே

உனக்கா, உள்ள இருக்குறவரை நல்லவனா இருந்துட்டு, வெளிய வந்ததும் செருப்பு வச்ச இடத்துல இல்லேன்னு என்னையவே திட்டுவே..!

Published:Updated:
சுனைனா
பிரீமியம் ஸ்டோரி
சுனைனா

twitter.com/TheRaavanaa

வாழ்வின் மீதான அத்தனை நம்பிக்கையும் இழந்துவிட்ட ஒருவர் முன் நீட்டப்படும் கரங்களை அவர் அத்தனை சந்தேகத்துடன், துளி இறுக்கமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் விடுவித்துக்கொள்ளும் சுதந்திரம் தந்தே பற்றுகிறார்.

twitter.com/narsimp

‘‘ஏண்டா, க்ளாஸ் இல்லியே. எதுவும் ஆன்லைன்ல கேட்டுட்டு இருக்கியா...’’ என்றால், ‘‘இல்லப்பா...சும்மாதான் வச்சிருந்தேன் இந்தாங்க’’னு ஹேண்ட்ஸ் ஃப்ரீய குடுக்குறான். குழப்பமா பாத்தேன். ‘‘காது சும்மா இருந்தா அம்மா ஏதாச்சும் வேல சொல்லிட்டே இருக்காங்க’’ங்குறானய்யா.

ரைட்டே, பழகுவோம் இளம்தலைமுறைட்ட இருந்து!

Ramya Nambessan: அழகா சிரிச்ச முகமே!
Ramya Nambessan: அழகா சிரிச்ச முகமே!

twitter.com/shivaas_twitz

புதினுக்கு சனி 6வது இடத்துல இருக்கான். அது மறைவுஸ்தானம். அதான் போட்டு ஆட்டி வைக்குது!

twitter.com/arattaigirl

குழந்தைகளைக் காட்டுத்தனமா அடிக்க அக்கறை, ஒழுக்கமான வளர்ப்பு, கண்டிப்புன்னு ஆயிரம் காரணம் சொல்லிக்கோங்க. உண்மை என்னன்னா...

1.குழந்தைங்க திருப்பி அடிக்க/எதிர்க்க மாட்டாங்க/முடியாது

2.பெற்றோர் கையாலாகாத்தனத்தைக் காமிச்சுக்க எதிர்க்காத ஒரு அப்பாவி ஜீவன் தேவைப்படுது.

இரண்டுமே பாவம்/குற்றம்.

twitter.com/mohanramko

‘‘ஏண்ணே அவனை அடிக்கறீங்க?’’

‘‘போர் வந்துடுச்சி, ரஜினி சார் வீட்டுக்குப் போகலாமான்னு கேட்கறான்...’’

twitter.com/rmuthukumar

தி.மு.க என்பது ஆறு; அ.தி.மு.க ஒரு கடல். ஆறுதான் கடலில் கலக்குமே தவிர கடல் சென்று ஆற்றில் கலக்காது என்கிறார் ஓ.பி.எஸ். ‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை’ என சில மாதங்களுக்கு முன் ஓ.பி.எஸ் பேசியது நினைவுக்கு வந்தது. :-)

twitter.com/imanojprabakar

பலரது டைம்லைனில் ஒரு பதிவு பார்க்கிறேன்.

பாருங்க, உக்ரைன்ல இருந்து வர இந்த ஏர் இந்தியா ₹1.5 லட்சம் கேட்குதாம்.

டாடா கிட்ட வித்துடாம இருந்தா ப்ரீயா கூட்டி வந்திருக்கும்ல. ஒரு national carrier வேணும் தெரியுமா என்று. அவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

கொரோனா சமயத்தில் ரயில் பயணத்துக்குக் காசு வாங்கினார்கள். அதை மறைக்க முயன்றார்கள். உள்நாட்டுப் பிரச்னையிலேயே இப்படி.

வளைகுடா நாடுகளில் கொரோனா சமயத்தில் வேலை இழந்தோர் எப்படி வந்தனர் எனக் கேளுங்கள். அரசாங்க நிறுவனம்னா ஓசில கூட்டிட்டுப் போவாங்கன்னு யாருய்யா சொன்னது?

அதெல்லாம் ஒரு காலம். அது மலையேறிவிட்டது.

twitter.com/MrElani

என் வீட்டு டி.வி 60 வருஷமா நல்லா ஓடுது, புதுக் கம்பெனி ஆரமிச்சிருக்கேன் வாங்கிக்கங்கன்னு ரேடியோவ தூக்கிட்டு வந்தா டி.விய உடச்சிட்டு ரேடியோவா வாங்குவான்? டி.வி இல்லாத வீட்ல சேல்ஸ் பண்ணத் தெரியாம கஸ்டமர குறை சொல்லிட்ருக்கார் மய்யம்.

twitter.com/angry_birdu

எல்லா மாநிலத்துலயும் முதல் இடத்துக்குத்தான் போட்டி நடக்கும். தமிழ்நாட்டுல மட்டும்தான்யா மூணாவது இடத்துக்குப் போட்டி நடக்குது.

Shraddha Srinath:  ஸ்டார் ரசிகை!
Shraddha Srinath: ஸ்டார் ரசிகை!

twitter.com/manipmp

முப்பது வயசு ஆகும்போதுதான் என்ன படிச்சிருக்கணும்னு ஒரு தெளிவு வருது.

twitter.com/aaram

நாம படிச்சா மட்டும் இவனுங்களுக்கு தரமில்லாத கல்வியாயிடும்,+2 போதும், டாக்டருக்குப் படிச்சா 10,000 ரூபா சம்பளம், எருமை மேய்ச்சா 15 ஆயிரம் சம்பளம்னு வருவானுங்க. நீங்க மேய்ச்சு, உங்க புள்ளைங்களை மேய்க்க வைக்கவும்.

twitter.com/mekalapugazh

ஐ.நா என்பது மிக்சர் சாப்பிடுவோர் கூடும் இடமோ...

twitter.com/kumarfaculty

இன்னொருவர் மனிதாபிமானத்தில் செய்யும் உதவியைக்கூட உங்கள் திறமையால் நடந்தது என்று பெருமைப்படுவதில் அர்த்தம் இல்லை!

twitter.com/shivaas_twitz

சந்திரமுகி சாந்தி தியேட்டர்லகூட 125 sunday தான் ஓடுச்சு. சன் டி.வில அதைத் தாண்டி ஓடும் போல!

twitter.com/Thaadikkaran

கடவுளே, எனக்கு நல்ல புத்தியைக் கொடு...

கடவுள்: உனக்கா, உள்ள இருக்குறவரை நல்லவனா இருந்துட்டு, வெளிய வந்ததும் செருப்பு வச்ச இடத்துல இல்லேன்னு என்னையவே திட்டுவே..!

twitter.com/Russetlane

உலகத்துல வேற எந்த அரசாங்கமாவது இப்டி ஒரு கூத்த நடத்தியிருக்குமா. Evacuate பண்றது அரசாங்கத்தோட கடமை. வந்ததே லேட்டு, இதுல கொடிய கைல குடுத்து கோஷம்போட வெச்சு விளம்பரம் பண்ணி… ஒன்றிய அரசாங்கம் இல்ல, ஒன்றிய நாடக சபா.

twitter.com/Murugankesavan

நாலு Appஅ Ban பண்ணிட்டு வேலைய பாப்பியா... அத விட்டுட்டு துப்பாக்கிய தூக்கிட்டு சண்ட போட்டுட்டு இருக்க...

twitter.com/shivaas_twitz

போர்ச் செய்தியையெல்லாம் ‘போர் வந்தா மக்கள் சாகத் தான் செய்வார்கள்’னு கேஷுவலா கடந்து போக முடியல!

twitter.com/nellaiseemai

இப்போ சிம்புவைப் பார்த்து அவ்ளோ ஆச்சரியம், மகிழ்ச்சி: போட்டியாளர்கள்

கமல் மைண்ட் வாய்ஸ்: அப்போ நான் யாரு?

Star Sports: நானும் நடிகர்தான்!
Star Sports: நானும் நடிகர்தான்!

twitter.com/Suyanalavaathi

டிராபிக் சிக்னல்ல கிரீன் விழுவதுக்கு 10 செகண்ட் முன்னாடியே லைட் லைட்டா வண்டிய முன்னாடி மூவ் பண்ணிட்டுப் போறத என்னைக்கு நிறுத்துறாங்களோ, அன்னைக்குத்தான் இந்தியா வல்லரசாகும்!twitter.com/DrHolyhemp

மனுஷ வாழ்க்கை எவ்ளோ நிலையில்லாததுன்னு கொரோனா காலத்துல பாத்தும் போர் வருதுன்னா, உலகம் அழியுறதுதான் சரி...

twitter.com/thug1one

இந்திக்காரன்கூட நம்மள, தமிழ்ல ‘அண்ணா’ன்னு தான்டா கூப்டுறான். நீங்க ஏன்டா ‘ஜீ... ஜீ...’னு கூப்பிட்டு சாவடிக்கிறீங்க?

twitter.com/HariprabuGuru

புரிஞ்சிக்க மச்சான், உக்ரைன்ல நடக்குற சண்டைக்குலாம் உள்ளூர் எக்ஸாம்ல ஆல் பாஸ் போடச் சொல்லிக் கேக்க முடியாது..

twitter.com/saravankavi

ஒரு பக்கம் உக்ரைன் போரால் ஏற்படப்போற விலைவாசி உயர்வைப் பத்திப் பேசிக்கிட்டு, இன்னொரு பக்கம் ‘வலிமை’ படத்தின் வசூல் பத்தியும் பேசிக்கிட்டு இருக்காங்க!

twitter.com/amuduarattai

நமக்குத்தான் அது நான்கு வழிச்சாலை. அரசுக்கு அது வருமான வழிச்சாலைதான்.

twitter.com/sasitwittz

சாலையில் ஒரு விபத்தைக் கண்டபிறகு வாகன ஓட்டிகளின் வாகனம் சற்று மெதுவாகத்தான் செல்ல ஆரம்பிக்கிறது... ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்!

twitter.com/LAKSHMANAN_KL

அ.தி.மு.க-வை மீண்டும் அரியணை ஏற்றுவோம்!- ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்.

சீக்கிரமே கட்சியைச் சீரமைக்கலைன்னா, அமரர் ஊர்தியில்தான் ஏத்த வேண்டியிருக்கும்..!

twitter.com/saravankavi

‘‘படம் ரொம்ப லென்த்தா போகுது. கொஞ்சம் கட் பண்ணியிருக்கலாம்...’’

‘‘படம் பார்த்துட்டிங்களா?’’

‘‘இன்னும் இல்ல ப்ரோ... டவுன்லோடு முடியறதுக்குள்ள டேட்டா காலி ஆகிடுச்சு...’’

twitter.com/Vasanth920

ஜீ to மக்கள்

பெட்ரோல் விலை கூடிடுச்சு

ஜீ : உக்ரைன்தான் காரணம்

தங்கம் விலை கூடிடுச்சு

ஜீ : உக்ரைன்தான் காரணம்

மட்டன் விலை கூடிடுச்சு

ஜீ : எல்லாத்துக்கும் உக்ரைன் தான் காரணம்.

facebook.com/gokul.prasad

ஒரு விஷயத்தைக் குறித்து எழுதும்போது டீட்டெய்லிங் முக்கியம்தான். அதற்காக, ‘கல்யாணமான பிறகு வயிற்றில் குழந்தையுடன் வளைகாப்பு கொண்டாடிய காஜல்’ என்றெல்லாம் தயவுசெய்து எழுதாதீர்கள் ஐயா. கருவுற்று இருந்தால்தானே வளைகாப்பே? வயிற்றில் தலையணையை வைத்து ஊரையும் கணவனையும் ஏமாற்றுவதற்கு இதென்ன ‘எஜமான்’ படமா?

facebook.com/M.Elangovan

யாரையாவது மொபைல் போனில் அழைத்து யாருடைய தொடர்பு எண்ணையாவது கேட்டு வாங்க நினைத்தால், கையில் ஒரு பேப்பர் பேனாவை வைத்துக்கொண்டு கேளுங்கள். எதிர்முனையில் “சொல்லட்டுமா?” என்று கேட்டால் “சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு நம்பரை எழுதிக்கொள்ளுங்கள்.

மாறாக “கையில் பேனா, பேப்பர் எதுவும் இல்லையே, நம்பர அனுப்ப முடியுமா?” என்று கேட்காதீர்கள். அது மேனர்ஸ் இல்லை.

- இப்படிக்கு

இந்தா... இப்ப நம்பர் வந்துரும்... என்று அரைமணிநேரமாக மொபைல் திரையையே வெறித்துப் பார்த்தபடி காத்திருப்போர் சங்கம்.

twitter.com/sasitwittz

வாட்ஸ் அப்பில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்தாலும் யாரு வச்சிருக்காங்க அப்படின்னு ‘ஸ்டேட்டஸ்’ பாத்துதான் அதையும் பாக்குறாங்க...

Sunainaa: மழலை மொழி!
Sunainaa: மழலை மொழி!

twitter.com/chithradevi_91

அம்மாவின் கோபக் கூச்சலைவிட அப்பாவின் கோப மௌனத்திற்கு வலிமை அதிகம்.

twitter.com/iam_DrAjju

சிக்கன் ஃப்ரைடு ரைஸ் வாங்குறப்ப, மாஸ்டர் அஞ்சு பேருக்கு அத பிரிக்குறப்ப கரெக்ட்டா கம்மியா இருக்குறதுதான் நமக்கு வருது. கூட கேக்கவும் கூச்சமா இருக்கு.

twitter.com/Suyanalavaathi

‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ன்னு கீதைல சொன்னத அப்படியே, தனக்கு கீழ இருக்கிறவங்க கிட்ட எதிர்பார்ப்பவர்கள்தான் மேனேஜர்கள்!

twitter.com/ItsJokker

MBBSக்கு வேல்யூ இல்ல, BE படிச்சா வேஸ்ட், இந்த வேலைக்கு இந்தப் படிப்பு தேவையில்லை, அப்படி இப்படின்னு சொல்றதுலாம் நம்ம மேல உள்ள அக்கறைல இல்ல. இவனுங்க எல்லாருமே படிக்குறாங்களேங்குற வயித்தெரிச்சல்.

twitter.com/Kozhiyaar

வீட்டுக்குப் புதிதாக பெயின்ட் அடிக்கும்போதுதான், குளியலறைக்கு புது பக்கெட் கிடைக்கிறது!

twitter.com/HariprabuGuru

சர்க்கரை, உப்பு அதிகமுள்ள உணவுகளுக்கு வரி அதிகரிக்க ஆலோசனை கேட்டா, ‘உப்புப் போட்டுச் சாப்பிடுறவங்கதான் கவலைப்படணும். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை’ன்னு பதில் வரும்.