Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

ஒரு கட்டடம் தீப்பற்றி எரிகிறது. தீயணைக்கும் படை வீரர்கள், உள்ளே சென்று கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வருவார்கள்.பிறகு மருத்துவம் தொடங்கும்.

வலைபாயுதே

ஒரு கட்டடம் தீப்பற்றி எரிகிறது. தீயணைக்கும் படை வீரர்கள், உள்ளே சென்று கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வருவார்கள்.பிறகு மருத்துவம் தொடங்கும்.

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/ThirutuKumaran

நாமெல்லாம் ஒண்ணா போய்ப் பேசலாம்ங்குறதுக்குள்ள நீ எப்டிடா தனியா போய் சசிகலாவ சந்திக்கலாம்னு பன்னீர் கடுப்பாயிட்டாப்ல போல.

twitter.com/narsimp

‘பெட்ரோல் 23 ரூவா ஏறப்போகுது, டேங்க் ஃபில் பண்ணுங்க’ன்னு வாட்ஸப்கள். 20 பைசா ஏத்துனதுக்கெல்லாம் போராடின மக்கள எந்த மனநிலைக்குக் கொண்டாந்து விட்ருச்சு பாருங்க, இந்த உலகமயப் பொருளாதார உளவியல். அடிவாங்குறதெல்லாம் நடுத்தர வர்க்க, சரிசரின்னு எல்லாத்தையும் சகிக்கும் சராசரிகள்தான்.

twitter.com/saysatheesh

சாதாரண மக்கள் மருத்துவம் படிப்பது ஜீரணிக்க முடியாமல் ‘மருத்துவம் எல்லாம் வேஸ்ட்’ எனக் கருத்துகள் சொன்னவர்கள், இப்போது புதியதாக சாதாரண மக்கள் மேயர், சேர்மன் ஆக கெத்தாகப் பதவி ஏற்பது பொறுக்காமல் “மேயர் உடை, பதக்கம், செங்கோல் எல்லாம் ஒழிக்கணும்” எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். சாதாரண வேட்டி சட்டை, புடவையிலேயே பதவி ஏற்கலாமே என அட்வைஸ் வேறு. மேயர், மேயர் உடையில் பதவி ஏற்பதுதான் உங்களுக்கெல்லாம் காண்டு என்றால், மேயர்கள் மேயர் உடையிலேயேதான் பதவி ஏற்கவேண்டும்... அதே கெத்தோடு வலம் வர வேண்டும்.

twitter.com/SundarrajanG

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த இல்க்கர் ஆயசி, டாடா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்மீது மதரீதியான பாசிசத் தாக்குதலால் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். மறுப்பை வெளியிட்டுள்ள ஆயசி, “நான் ஒரு தொழில்முறையாளன், என்னால் இந்த மோசமான சூழலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது என்பதால் இதை ஏற்கவில்லை” என்றார். இந்த நாட்டை யாராவது காப்பாற்ற முடியுமா?

Priyankaa Mohan: கூந்தல் நெளிவில் அழியும் கர்வம்!
Priyankaa Mohan: கூந்தல் நெளிவில் அழியும் கர்வம்!

twitter.com/NilavuMozhi

கள்ள ஓட்டு போட வந்தவர் மீது, காவல்நிலையத்தில் ரெளடி என்பதற்கான History sheet இருப்பதால், அவர் சட்டைக்குள் ஆயுதத்தை மறைத்து வைத்திருக்க வாய்ப்புண்டு என்றே சட்டையைக் கழற்றினாராம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

History sheet இருக்கா, இல்லையான்னு மூஞ்சைப் பார்த்தே கண்டுபிடிப்பாரு போலிருக்கு!

facebook.com/Mayilan G Chinnappan

என்னைத் தவிர எல்லோரும் ராஜராஜசோழன் கூட டெய்லி சாய்ந்தரம் முக்குக்கடையில உக்காந்து டீ அடித்திருப்பார்கள் போல. நந்தினி எப்படி இருப்பாள், வந்தியத்தேவன் எப்படி இருப்பான் என அநேகருக்கு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

twitter.com/AmalJos

ஒரு கட்டடம் தீப்பற்றி எரிகிறது. தீயணைக்கும் படை வீரர்கள், உள்ளே சென்று கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வருவார்கள்.பிறகு மருத்துவம் தொடங்கும்.

“நீங்களாகவே வெளியே வாருங்கள். பிறகு நாங்கள் சிகிச்சை செய்வோம்’’ என்று சொன்னால் இதற்கு என்ன பெயர்?

twitter.com/imanojprabakar

எங்காவது ஒரு பிக்பாக்கெட் கேசில் ஒரு இஸ்லாமியர் சிக்க மாட்டாரா எனக் காத்துக்கொண்டிருப்பார்கள் போல...

உடனே அதில் Justice For போட்றானுக. உஷாரா இருங்க மக்களே. இவனுக அரசியல் நமக்கானதல்ல; நம்மைப் பிரித்தாள்வது.

facebook.com/இரா.செந்தில் கரிகாலன்

குலசாமி வாழ்க!

எங்க எதிர்த்த வீடு குருசாமி அண்ணன் வாழ்க!

பத்தாவது டீச்சர் கவிதா வாழ்க!

# பதவியேற்புப் பரிதாபங்கள்

AR Rahman: இசை ராஜாங்கம்!
AR Rahman: இசை ராஜாங்கம்!

facebook.com/N Naveenkumar

கடந்த சில நாள்களாக நம் எழுத்தாளர்களை கவனித்தீர்களா? முகம் முழுக்கப் புன்னகை, மற்ற மனிதர்களைப் பார்த்தால் சிரித்துப் பேசுகிறார்கள், இந்தாண்ணே அன்பு... எடுத்துக்கோ, நீ எனக்குக் கொஞ்சம் அன்பு கொடுண்ணே என்று மாறி மாறி அன்புப் பரிமாற்றம் செய்கிறார்கள், மக்களுடன் நாங்கள் எவ்வளவு ஒன்றியிருக்கிறோம் என்று ஆனந்தக்கண்ணீர் விடுகிறார்கள். எளியவனின் என் மீதான அன்பே இலக்கிய வாழ்வின் ஊற்று என்கிறார்கள். பைஜாமா, பாக்கெட்டில் இங்க் பேனா என்று புத்தருக்கே அமைதிக்கான வழியைப் பாடம் எடுக்கும் மோடில் இருக்கிறார்கள்.

இப்பொழுது அவர்களை எதுவும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். திருவிழா எல்லாம் முடியும் வரை காத்திருப்போம். இது சபரிமலைக்கு மாலையிட்டு மலைக்குச் சென்றிருக்கும் கன்னிச்சாமி அவதாரம். எப்படியும் போனவன் மலையிலிருந்து இறங்கி வருவான். வந்ததும் ‘எழுத்தாளன் என்பதில் எனக்குத் திமிர் உண்டு. எழுத்தாளன்தான்டா எல்லாமே. சாதாரண நாய்ங்க எல்லாம் இந்த ஊருல என்னத்துக்கு வாழ்றீங்கன்னே தெரில. எங்க கால்ல விழுந்தாலாச்சும் அறிவு வளருதா பாப்போம். எனக்கு சமமா இப்டி கண்ணு முன்னாடி நிக்காதீங்கடா’ என்று மறுபடியும் சாமியாட ஆரம்பிப்பார்கள். அப்பொழுது சரியான நேரம் பார்த்து அவர்கள் மண்டையிலேயே போட வேண்டும். காத்திருப்போம்.

twitter.com/Thaadikkaran

டீச்சர்: கிளாஸ் முடியப் போகுது. நான் ரொம்ப நேரம் எடுத்திட்டேன்னு நினைக்குறேன்.

ஸ்டூடன்ட்: பரவால்ல சார், அடுத்த பீரியட் எங்களுக்கு மேத்ஸ் டெஸ்ட் இருக்கு, நீங்களே கண்டினியு பண்ணுங்க...

twitter.com/Paamaran_tweets

டியர் 2k kids. உங்களுக்கான பொது அறிவு: 1. ஈழப் போராட்டம் 70 ஆண்டுகளாக நடந்துவருகிறது; அதைத் தொடங்கியது சீமான் அல்ல. 2. இந்தியா சுதந்திரம் பெற்றது 1947-ல்; 2014-ல் அல்ல. 3. கமல் ஒரு நடிகர்; அரசியல்வாதி அல்ல. 4. மனித இனம் உருவான காலத்திலிருந்து மாதவிடாய் வருகிறது; அது ஒரு நோய் அல்ல!

twitter.com/Anvar_officia

உடம்பு சரியில்லாமப் படுத்திருக்கப்ப அடிக்கடி அம்மா வந்து நெத்தியில கைவச்சி பார்க்கிறப்ப சுகமாகவும், அம்மா இல்லாதப்ப உடம்பு சரியில்லாமப் போறது ரணமாகவும் இருக்கு.

twitter.com/Iyankarthikeyan

உயிர் தப்பிப் பிழைத்து வரும் பிள்ளைகள்மீது அவதூறு, வதந்தியைக் கிளப்பும் கேடுகெட்ட கூட்டம்... நாட்டின் அதிதீவிர கேன்சர் கிருமிகள்!

twitter.com/Suyanalavaathi

ஞாயிற்றுக்கிழமை, அதுவும் கூட்ட நேரத்துல, சலூனுக்குப் போயி, ‘இப்படி வெட்டுங்க, அப்படி ட்ரிம் பண்ணுங்க’ன்னு சொல்றது எல்லாம், ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’ லிஸ்ட்லதான் சேரும் போல!

twitter.com/balebalu

சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்குக் கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை.

அடுத்து என்ன, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் சர்க்கரை என்று பெயர் இருப்பதால் GST உண்டு, அதானே?

twitter.com/sasitwittz

வார நாள்களில் ரஷ்யா, உக்ரைன் போர் பத்தி டிஸ்கஸ் பண்றாங்க...

வார இறுதியில் சிக்கன் எடுக்கிறதா, மட்டன் எடுக்கிறதான்னு ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்றாங்க...

twitter.com/oorkkavalaan

தாழ்வாரத்தில் வந்து விழும் சருகின்

சரசரப்பைக் கேட்க முடிந்தால்

நீங்கள் மிகவும் அமைதியாய் இருக்கிறீர்கள்!

twitter.com/Jokerphoenix14

நாங்க ராக்கெட்டு, வெடிகுண்டு, பீரங்கியில இருந்து தப்பிச்சு ஆயிரம் கி.மீ நடந்தே பக்கத்து நாட்டுக்கு எப்படியாது வந்து சேரணும்... நீ நோகாம வந்து ‘ஜெய்மோடி’ன்னு சொல்லச் சொல்லி விளம்பரம் பண்ணுவ...

என்னடா பித்தலாட்டம் இது?

twitter.com/Anvar_officia

‘‘ஏம்பா... நீ இருக்கிற நாட்ல சண்டை நடக்குதாமே, ஊருக்கு வந்துடுப்பா!”

‘‘சண்டை நடக்குறது உக்ரைன்ல. நான் இருக்குறது பக்ரைன்லம்மா... சீரியல மட்டும் பாருன்னு சொன்னா கேக்குறியா?”

Ritu Varma: எல்லாச் சிவப்பும் உந்தன் நளினம்!
Ritu Varma: எல்லாச் சிவப்பும் உந்தன் நளினம்!

twitter.com/saravankavi

மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் மாணவர்கள் மனநிலைக்கு ஈடானது, ஏதாவது மாநிலத்தில் தேர்தல் வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற மாட்டார்கள் என்ற மக்களின் மனநிலை!

twitter.com/Greesedabba2

பா.ம.க நிழல் நிதி அறிக்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

# தமிழக அரசு பி லைக்: படித்தவுடன் கிழித்துவிடவும்.

twitter.com/SRajaJourno

அரசு எனக்கு எந்த ஒத்துழைப்பும் தந்ததில்லை. ஊதியமும் போடவில்லை. ஒருமுறை நீதிமன்றம் வந்து செல்ல ஆறாயிரம் செலவாகிறது. டோல் கேட்டுக்குகூட பாஸ் கொடுக்கமாட்டாங்க. இருந்தாலும் இது என்னுடைய சமூகக் கடமை என்பதால் செய்திருக்கிறேன் - கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன்

திசைமாறிப் போன கோகுல்ராஜ் கொலை வழக்கைத் திறம்பட நடத்திக் கொடுத்த சமூக நீதி வழக்கறிஞர் ப.பா.மோகனை அரசு கௌரவிக்க வேண்டும்.

twitter.com/manipmp

இரவு உணவு மட்டும் இட்லி அரிசியில் பெயரை எழுதிவிட்டார் போல கடவுள்.

twitter.com/Kozhiyaar

நீங்க எவ்வளவு பணம் போட்டு வேணா மொபைல் போன் வாங்குங்க. ஆனா உங்க குழந்தைக்கு அது வெறும் விளையாட்டுப் பொருள்தான்!

twitter.com/LAKSHMANAN_KL

அ.தி.மு.க தொண்டர்கள் ஒரே குடும்பம்! - சசிகலா.

தலைவர்கள்தான் ஆளாளுக்கு தனிக்குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்காங்க போல..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism