Published:Updated:

வலைபாயுதே

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா

‘‘உக்ரைன் ராணுவத்துல வேலைக்குச் சேர்ந்தா ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம். போயி சேர்ந்துடு.’’

வலைபாயுதே

‘‘உக்ரைன் ராணுவத்துல வேலைக்குச் சேர்ந்தா ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம். போயி சேர்ந்துடு.’’

Published:Updated:
சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா

twitter.com/thecommonman__

தேர்தல்ல தோக்கறான்...

அவசர காரிய கமிட்டி கூட்டம் நடத்தறான்...

சோனியா தொடர்வார்னு சொல்றான்...

ரிப்பீட்டு...

twitter.com/iParisal

படம் நல்லாருந்தா படத்தை எஞ்சாய் பண்லாம். படம் மோசமா இருந்தா ரிவ்யூஸ எஞ்சாய் பண்லாம்.

twitter.com/VignaSuresh

கார்ல சில ஆயிரம் எக்ஸ்ட்ரா கொடுத்து, சீட்டுக்கு லெதர் கவர் போடறாங்க. ஆனா, கிழியற வரை ப்ளாஸ்டிக் கவர் மேல உட்கார்ந்து போறாங்க. என்ன லாஜிக்னே புரியலையே.

twitter.com/moodanmani20

ஒப்பந்தம் போட்டுத்தான் 630 சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. பிரிட்டிஷார் ஒப்பந்தம் போட்டு பாளையத்துக்காரர்களை ஜமீனாக மாற்றி பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைத்தனர். ஒப்பந்தம் போட்டு இணைக்கப்பட்ட நிலப்பரப்பு இந்தியா.

ஆளுநர் ரவியின் அறிக்கை புளுகு.

வலைபாயுதே

twitter.com/karthik11235

ஏறக்குறைய 90% இந்துக்கள் உள்ள தமிழ்நாட்டுல, பா.ஜ.க ஏன் தோக்குதுன்னு உ.பிகாரனுக்குப் புரியல. எந்த வளர்ச்சியும் குடுக்கலைன்னாலும், உ.பி-ல பா.ஜ.க எப்படி ஜெயிக்குதுன்னு தமிழ்நாட்டுக்காரனுக்குப் புரியல. இந்தியா ஒரே நாடு இல்லைங்கிறது மட்டும் புரியுது.

twitter.com/mekalapugazh

பாம்பு பழி வாங்கும்... பாம்பு மாணிக்கத்தைக் கக்கும்... மகுடிச் சத்தத்துக்கு ஓடி வரும்...

இதையெல்லாம் நம்புபவனுக்கு இந்தியாவின் தேசியமொழியும் இந்திதான்.

twitter.com/g4gunaa

“சாப்ட்டு சாயங்காலம் வந்து தேடுவோம் பாஸ்” என்பதன் abbreviation காங்கிரஸ்.

twitter.com/idumbaikarthi

உள்ளாட்சித்தேர்தலுக்குப் பிறகு ஆவின் பால் பொருள்களின் விலையை அதிகரித்தால் அது தி.மு.க அரசு.

5 மாநிலத்தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தால் அது பா.ஜ.க அரசு.

அவ்ளோதான்!

facebook.com/இரா. முருகவேள்

காந்தி மக்களின் வறுமையைப் பார்த்துத் தனது மேலாடையைத் துறந்துவிட்டார் என்பது வரலாறு. காந்தியின் இரக்கம், அரசியல், அன்பு எல்லாம் இதற்கு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒரு வக்கீல் என்பதும் இந்த முடிவுக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

கழுத்துப் பட்டை, கோட், அதற்கு மேல் அங்கி, கறுப்பு ஷூ என்று துருவப் பகுதிகளில் போட வேண்டிய உடையை வக்கீல் சீருடை என்று போட்டுக்கொண்டு தகிக்கும் வெயிலில் சுற்ற வேண்டியிருந்த காரணத்தால் உடையைக் கண்டாலே அவரது ஆழ் மனதில் ஒரு வெறுப்பு தோன்றியிருக்கும்.

காந்தி உடையைத் துறப்பதற்கு இந்தக் கொடுமையான உடை ஒரு காரணமாக இருந்திருக்கும். வாய்ப்பு இருக்கிறது.

வக்கீலுக்கு இந்த உடையிலிருந்து விடுதலை கொடுங்கப்பா. முடியல!

twitter.com/teakkadai1

நாம சரின்னு நம்பினத தவறுன்னு காலம் காட்டும் போது, அதை எவ்வளவு விரைவா ஏத்துக்கிட்டு நகருகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. ஈகோவால அது சரிதான்னு மெய்ப்பிக்கிறதுல நேரம் செலவு பண்றது வேஸ்ட்.

twitter.com/VignaSuresh

மன்னிப்பு, ஒரு வகையில அகம்பாவத்துக்குத் தீனி.

twitter.com/JamesStanly

உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும், நம்பாதே...

*தாங்ஸ்

வாட்சப் நம்பர் தா... அதுக்குதா அந்த லைன்...

twitter.com/teakkadai1

பா.ஜ.க ஒன்றிய அமைச்சர்களுக்கு உக்ரைன் மருத்துவ மாணவர்கள் பதில் வணக்கம் வைக்கலைன்னு நினைக்கிறோம். மற்ற நாடுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய ஒன்றியம் எடுக்காதது, அங்க வேற மாதிரி ஒரு கல்ச்சர்க்கு அடாப்ட் ஆகியிருப்பது, பொதுவாகவே 2கே கிட்ஸின் ‘நாம ஏன் மரியாதை கொடுக்கணும்’ங்கிற மனப்பான்மை, கஷ்டப்பட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, பின் தப்பி வந்த உணர்வுன்னு நிறைய காரணம் இருக்கலாம். கால்நடையா தென் பகுதியில் இருந்து வட பகுதிக்கு நடக்க வச்சாலும் சரி சரின்னு ஏத்துக்கிற வடமாநிலத் தொழிலாளர்கள் போலவே இவர்களும் இருப்பார்கள் என நினைத்து விட்டார்கள்போல.

facebook.com/kundhaani?

காத்தால எந்திரிச்சதும், இன்னிக்கி என்ன தேதின்னு எதுக்கோ யோசிச்சா… ஞாபகம் வரல.

சரி, மகளிர் தினம் எந்தக் கிழமையில வந்ததுன்னு வச்சி அதுல இருந்து கவுன்ட் பண்ணிட்டு வருவோம்னு நினச்சிட்டே திரும்பினா… அட! எதிர்த்தாப்புல காலண்டர்!

மீ: மகளிர் தினம் எந்தக் கிழமையில வந்ததுன்னு பாத்து, அப்புறம் விரல்ல… செவ்வாய் 8, புதன் 9...

(என்னாது… காலண்டர்லயே நேரா சனிக்கிழமையோட தேதி இருக்குமா?)

twitter.com/Greesedabba2

அமெரிக்காகாரன் ராக்கெட்ல ஸ்பேஸ்க்கு போயி சினிமா ஷூட்டிங் பண்ணிட்டு இருக்கான். நம்ம ஊரு லாட்ஜ்ல ஹாட் வாட்டர் 5:30 மணிக்கு மேலதான் சார் வரும்ன்றான். ஒரு மனுஷன் குளிக்காம கல்யாணத்துக்குப் போனா, இந்தியா எப்படி சார் வல்லரசாகும்..?

twitter.com/Thaadikkaran

உக்ரைன்ல இருந்து வந்தவங்களை வரவேற்க ஏர் போர்ட்ல வந்து நிக்குறது பார்க்கும்போது, ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளியே வரும்போது ‘ஆட்டோ வேணுமா’ன்னு கேட்குற மாதிரியே இருக்கு..!

twitter.com/macchu_offcl

மாமியார் டு மகன்: மக்கா... நீ கவலைப்படாதே. நீ ஊருக்கு வார முன்னாடி சண்ட தீர்ந்திடும்.

என்ன சண்டை... எங்க சண்டைன்னு கேட்டா, ரஷ்யா - உக்ரைன் போராம்.

twitter.com/arattaigirl

சங்கராச்சாரியாரோ பங்காரு அடிகளாரோ எதிர்ல யார் இருந்தாலும் அவங்களுக்கு அடிபணிஞ்சு போகணும்னு எதுவுமில்லை. கடவுள் நம்பிக்கை வேணா தனிமனித விருப்பம்னு எடுத்துக்கலாம். சுயமரியாதைன்றது அப்படி இல்லை. கே.என்.நேரு தரைல உக்காந்தது சுயமரியாதைக்கு இழுக்கு.

twitter.com/Thaadikkaran

இப்படியே போச்சுன்னா இனிமே எலக்‌ஷனே இருக்காதுன்னு சொன்னா, ‘அப்போ இனி எலக்‌ஷனுக்கு லீவு கிடைக்காதா’ன்னு கேட்குறான். இவனே...

twitter.com/Vasanth920

“உக்ரைன் - ரஷ்யா போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும்” - டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு!

பேச்சுல பெட்ரோல் வாடை அடிக்குதே...

வலைபாயுதே

twitter.com/mohanramko

‘‘நான் தோத்துட்டேன், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்.’’

‘‘கோட்டைசாமி, நீ காங்கிரஸ் கட்சி...’’

twitter.com/prabhu65290

‘‘முடி வெட்ட எவ்ளோ ப்ரோ?’’

‘‘500 சார்!’’

‘‘போன தடவை 200 தானே வாங்குனீங்க?’’

‘‘ரஷ்யா - உக்ரைன் போர் நடக்குதில்ல, அதான் ரேட் கூடிடுச்சு...’’

twitter.com/krishnaskyblue

இவனுக எழுதுற ரைட்டப்ப பார்த்தா 32 வருஷம் போராடுன அற்புதம்மாளே சும்மா கேரக்டர் ரோல்தான் பண்ணாங்க, நாங்க தான் பேரறிவாளனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்தோம்னு சொல்லப்போறானுக!

twitter.com/star_nakshatra

செல்போன் பாத்துப் பாத்துக் கெட்டுப்போறன்னு திட்றவிங்க எல்லாம் யாருன்னு நெனைச்ச...

ஒரு காலத்துல டி.வி பாத்துப் பாத்துக் கெட்டுப் போயிட்டன்னு திட்டு வாங்குன பயலுவதான்.

twitter.com/Thaadikkaran

‘‘குறைச்சிருக்காங்க!’’

‘‘பெட்ரோல் விலையவா?’’

‘‘PF வட்டி விகிதத்தை.’’

வலைபாயுதே

twitter.com/amuduarattai

புதிய இடத்தில், நாம் அட்ரஸ் கேட்கும் நபர்களெல்லாம், நம்மைப்போல் வெளியூர்க்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்.

twitter.com/Suyanalavaathi

மீ டு சனிக்கிழமை: என்னடா அதுக்குள்ள முடிஞ்சுட்ட..?

சனிக்கிழமை டு மீ: நானாவது பரவாயில்ல. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைன்னு ஒருத்தன் வருவான். என்னவிட வேகமா முடிஞ்சிருவான்.

twitter.com/Anvar_officia

‘‘ஜீ சொன்ன அந்த 15 லட்சத்தைக் கொடுத்தா பார்த்துட்டுச் செத்துருவேன்.’’

‘‘உக்ரைன் ராணுவத்துல வேலைக்குச் சேர்ந்தா ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம். போயி சேர்ந்துடு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism