Published:Updated:

வலைபாயுதே

Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!

வீட்டில் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு சிறுதீனியைச் சிறு தட்டு ஒன்றில் வைத்து நம் முன்னே நீட்டுகிறார்கள்

வலைபாயுதே

வீட்டில் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு சிறுதீனியைச் சிறு தட்டு ஒன்றில் வைத்து நம் முன்னே நீட்டுகிறார்கள்

Published:Updated:
Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!

twitter.com/shivaas_twitz

Colleagues meetup with family:

மேடம், உங்க ஹஸ்பண்ட் ஆபீஸ்ல ஒரு critical talent.

Wife: யாரு இவரா? எங்க ஃபேமிலிலயே இவருதான் தெண்டம்!

twitter.com/naaraju

எதையும் கூகுள்ல தேடுறவனைத் தாண்டி, யூடியூப்ல தேடுற ஒரு தலைமுறை ரொம்ப வேகமா வளர்ந்துருச்சு. அவிய்ங்க மண்டையைக் கழுவணும்னா இதென்ன, இதுக்கும் அதிகமான PR அவசியம். ‘நேக்கு இதுல்லாம் ஒன்னும் சரியாப்படலை’ன்ற பூமர் அங்கிள்கள், கொஞ்சம் ஒதுங்கி நிற்கவும்.

twitter.com/HariprabuGuru

‘‘அண்ணே, சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைச்சிடுச்சுண்ணே.’’

‘‘எக்ஸாம் எதும் எழுதுனியா! எப்படிடா..?”

‘‘காஷ்மீரி ஃபைல்ஸ் படம் பாத்தவங்களுக்கு இட ஒதுக்கீடு தந்தாங்கண்ணே, அதுலதான்...’’

#நடந்தாலும்_நடக்கும்

twitter.com/shivaas_twitz

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் யூஸ் ஆகலேன்னா கட்டுன காசு வீணாப் போச்சேன்னு வருந்தாம அந்த வருஷம் உடல்ல எந்த பாதிப்பும் இல்லேன்னு நிம்மதி அடைவோம். அது மாதிரிதான் அடுத்தவங்க கிட்ட காட்டுற அன்பும்... ஒருநாள் திருப்பிக் கிடைக்கும். இல்லேன்னா, அன்பை மட்டுமே வெளிப்படுத்தினோம்ங்கிற திருப்தி கிடைக்கும்.

Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!
Vetrimaaran: பாயுறதுக்கு ரெடி!

twitter.com/Kozhiyaar

பல விதங்களில் மகனுக்குப் பெண் தேடிக் கிடைக்காத பொழுது, பெற்றோர் கேட்கும் ‘மனசுக்குள்ள யாராவது இருந்தா சொல்லிடுப்பா’ என்பது அவனின் வாழ்நாள் அவமானம்!

twitter.com/Thaadikkaran

யாருமே சொல்லாதபோது அந்த வேலையைச் செஞ்சிடுவோம். ஆனா, ‘இந்த வேலையைச் செஞ்சிடு’ன்னு யாராவது சொல்லும்போது அந்த வேலையைச் செய்யத் தோணாதது எல்லாம் டிசைன்ல இருக்கு.

twitter.com/Kannan_Twitz

யாரும் அருகினில் வர முடியாதளவு தொலைவதுதான் ஆகப்பெரும் ஆசுவாசம்!

twitter.com/naaraju

வீட்டில் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு சிறுதீனியைச் சிறு தட்டு ஒன்றில் வைத்து நம் முன்னே நீட்டுகிறார்கள். சுவை மிகுதியாலோ, சுவாரசிய மிகுதியாலோ அந்தத் தட்டு முழுவதையும் தின்று விடுகிறோமா... அப்படி தட்டை நக்கிக் கொண்டிருக்கையில் வந்து, ‘சாப்ட்டு கொஞ்சம் கொடுக்கச் சொன்னேன்ல...அவ்ளோதான் இருந்துச்சு’ எனக் கண்களை உருட்டியவாறு கோபித்துக்கொள்கிறார்கள். எப்போது அதைச் சொல்லியிருப்பார்கள் என நாம் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறோம். யோசனை முடிவில், ஒன்றும் பிடி கிட்டாமல் அவர்களுக்குப் பிடித்த கடைத் தீனி ஏதேனும் ஒன்றைக் கால் கிலோவோ, அரைக் கிலோவோ வாங்க உடனே வண்டியை எடுக்கிறோம். கணவர்கள் எனும் தானாய்த் தின்று வீணாய்ப்போன அவலப் பிறவிகள்.

twitter.com/Frompadippaham1

ராஜாவ ரசிக்குறாங்களோ இல்லியோ, நான் தான் இருக்குறதுலியே ஆகச்சிறந்த ராஜா ரசிகர்னு காமிச்சுக்கிறதுல பெருசுங்கள அடிச்சுக்கவே முடியாது.

twitter.com/Pandidurai274

‘‘மத்திய அரசு மாதிரி எதையும் நாங்க விற்கலை, வாங்கத்தான் போறோம்...’’

‘‘அப்படி என்னதான் வாங்கப்போறீங்க?!’’

‘‘90 ஆயிரம் கோடி கடன்..!’’

twitter.com/rmuthukumar

‘மோடி அரசின் பட்ஜெட்டை மொழிபெயர்த்துள்ளதுபோல உள்ளது தமிழக பட்ஜெட்’ என்கிறார் வானதி. பிறகு அவரே பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக இருக்கிறதென்கிறார். ‘மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டியிருக்கிறது மாநில அரசு’ என்கிறார் அண்ணாமலை. பிறகு அவரே ‘தொலைநோக்கற்ற பகல் கனவு பட்ஜெட்’ என்கிறார். டாட்

twitter.com/JamesStanly

‘‘இந்த பட்ஜெட் புடிக்கல...’’

‘‘ஏன் புடிக்கல..?”

‘‘விக்கிறோம்னு ஒரு வார்த்தகூட இல்ல...’’

twitter.com/g_for_Guru

ரெண்டு வருட WFHல மொத்த Metabolism மாறிக் கிடக்கு, நினச்ச நேரத்துல காலைக் கடன், குளியல், கண்ட நேரத்துல சாப்பாடு, டீ, காப்பி, எல்லாத்துக்கும் மேல dressing...ஆபீஸ் தொறக்கும்போது இருக்கு...பலருக்கும் இதே கதைதான்போல..!

twitter.com/Iyankarthikeyan

‘சாதி வேண்டாம், சாதி பெயரில் இட ஒதுக்கீடு வேண்டுமா?’ இப்படிக் கேட்டுட்டு மடக்கியதாக உணரும் அறிவாளி குக்கர்களே, ‘காய்ச்சல் வேண்டாம், காய்ச்சல் மருந்து மட்டும் வேணுமா?’ இப்படிதாம்லே உங்க கேள்வி இருக்கு, கோமாளிகளா!

twitter.com/muralijourno

கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸில் வழங்கப்படும் இரவு உணவு: Roti, Shahi Paneer, Dal Dadka. பிற்பகல் சிற்றுண்டி: Fatafat bhel, Chanajor Garam. என்ன கொடுமை இது? ஏதாவது தமிழக உணவை வழங்கக் கூடாதா?

www.facebook.com/ஃபௌசியா

அத்த்தன டாக்குமென்டும் அம்மா வீட்டு அட்ரஸ்ல இருக்கு. டிரைவிங் லைசன்ஸ் அட்ரஸ் மாத்தணும்னு RTO போனா, ஆதார் கார்டுல அந்த அட்ரஸ் இருக்கான்னு கேக்கறாங்க. ஆதார் கார்டுல அட்ரஸ் மாத்த E சேவை மையம் போனா, பேங்க் பாஸ்புக்ல அந்த அட்ரஸ் இருக்கான்னு கேக்கறாங்க. பாஸ்புக்ல மாத்த பேங்க்குக்குப் போனா, மறுபடியும் டிரைவிங் லைசன்ஸ்ல அந்த அட்ரஸ் இருக்கான்னு கேக்கறாங்க.

இந்த டாக்குமென்ட்ல எல்லாம் அட்ரஸ் மாத்தறதுக்குப் பதில், பேசாம கெஞ்சிக் கூத்தாடி எங்கம்மா வீட்டுக்கே குடி போயிடறது ஈசியா இருக்கும்னு தோணுது.

facebook.com/sowmya.ragavan?

நாயை நாய்னு சொன்னா வளக்கறவங்களுக்கு பயங்கர கோவம் வருது. நாய் பரவால்ல, அமைதியா கேட்டுக்குது!

twitter.com/HariprabuGuru

நீங்க இந்த நாலு வரியைப் படிச்சு முடிக்குறதுக்குள்ள அண்ணாமலை சார் நாலு புத்தகங்களைப் படிச்சு முடிச்சுடுவார்னு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்..!

twitter.com/Kozhiyaar

எந்தத் தயக்கமும் பயமும் இன்றி மறுத்துப் பேச முடிகிற நபரிடம், சட்டென ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது!

twitter.com/mekalapugazh

நாம் Whatsappல் பொய்களைப் பரப்பவேண்டாம்.

Whatsappல் வருபவை அதிகம் பொய்கள் மட்டுமே என்ற கருத்தைப் பரப்பிவிட்டால் போதும்.

Janhvi Kapoor: பாசமலர்கள்!
Janhvi Kapoor: பாசமலர்கள்!

twitter.com/Suyanalavaathi

டேய் யூடியூப், நீ என்னென்ன விளம்பரம் போடுவ, ஒன்னொன்னும் எவ்ளோ length, எப்ப skip பட்டன் வரும்னு நல்லா மனப்பாடம் ஆகிருச்சுடா... வேற ஏதாவது புது செட் இருந்தா போடுடா... ரொம்ப போர் அடிக்குது!

twitter.com/i_akaran

அக்கறை காட்டுவதற்கும் தொந்தரவு செய்வதற்கும் வேறுபாடு தெரிந்தால் போதும், உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ளலாம்!

twitter.com/Suyanalavaathi

in social media - ஞாயிறு என்பது...

reality - ஏய்... சீக்கிரம் துவைச்சுக் காயப் போடு... அடுத்தடுத்து வேலை இருக்கு!

twitter.com/Anvar_officia

உண்மையாகவே ஒரு சாண் வயிற்றுக்காக கஷ்டப்படுறவங்க ‘ஜிம்’முக்குப் போறவங்கதான்!

twitter.com/Sabarish_twittz

நாம தப்பா ஏதாவது சொன்னாலும் நம்மளை தப்பா நினைக்காம சரியா புரிஞ்சுக்கிறது ‘கூகுள்’ மட்டும்தான்...

twitter.com/kumarfaculty

ஸ்டாலினின் பிரதமர் கனவு பலிக்காது! - அண்ணாமலை

அந்தக் ‘கட்டம்’ சரியில்லை, மிஸ்ஸிங்.

twitter.com/Greesedabba2

‘‘ரொம்ப தூரம் போயிட்டியா சுப்பையா?’’

‘‘எதிர் வீட்டு வாசல்லதான் போனேன்.. அதுக்குப் போயி அரெஸ்ட் பண்றாங்க ஜானு...’’

twitter.com/sultan_Twitz

மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 136வது இடம் - செய்தி

ஜீ: எது, இன்னும் மகிழ்ச்சியா இருக்காங்களா..?!

twitter.com/mekalapugazh

‘ஜாதி ஒழிந்துவிட்டதா’ எனக் கேட்பவர்களின் நோக்கம், அது ஒழியாது...ஒழியக்கூடாது என்பதே.