twitter.com/SundarrajanG
உலகம் முழுவதும், நாளொன்றிற்கு சுமார் 8,000 -12,000 கோடி கிலோ கான்கிரீட் உற்பத்தி செய்யப்படுகிறது. எல்லா சிமென்ட் தொழிற்சாலைகளையும் ஒரு நாடாகக் கணக்கில் கொண்டால், உலகத்தின் கார்பன் உமிழ்வில் 4வது இடம் அதற்குத்தான்.
twitter.com/RavikumarMGR
நம்ம கிட்ட ஒரு லட்சம் லிட்டர் டீசலைக் கடன் வாங்கி விக்குற இலங்கைலயே நம்மூரைவிடப் பெட்ரோல் விலை கம்மி.
அடேங்கப்பா, இந்த மாதிரி பொருளாதாரத்த வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாதுப்பா...

twitter.com/RealAravind36
தி.மு.க-வின் து.பொ.செயலாளர் பதவியில் இருந்தவர் V.P. துரைசாமி. இப்போ BJP-இன் து.தலைவர்.
உண்மையில், அ.தி.மு.க, தி.மு.க-வின் ஒன்றியச்செயலாளர் பதவிக்குக்கூட இணையானதல்ல அப்பதவி.
பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தியின் தோள்மீது கை வைத்ததால், மேடையிலேயே அடிவாங்குகிறார்.
அவர்மீதல்ல, அவரது சமூகத்தின் மீது விழுந்த அடி இது.
twitter.com/Rajasangeethan
‘நீங்கெல்லாம் படிக்க வந்தா இதுதான் நடக்கும்’ எனச் சொல்லி சென்னை ஐ.ஐ.டி-யில் தலித் மாணவி வன்புணரப்பட்டிருக்கிறார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டு பிரச்சினையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு ஊடகத்திலும் செய்தி வரவில்லை.
‘நீங்கெல்லாம் படிக்க வந்தா’வை என்று கடப்போம்?
twitter.com/Nattu_G
நேத்து நண்பரொருவர் முழுப்பணம் கட்டி கார் வாங்கினார். டிரீட் கேட்டேன். முழுக்காசும் கட்டியிருக்கேன் காசே இல்லன்னாரு... நியாயம்.இன்னிக்கு இன்னொருத்தர் லோன்ல கார் எடுத்திருக்கார். டிரீட் கேட்டா, காரே லோன்ல எடுத்திருக்கேன், காசில்லங்கறார். கொய்யால, அப்ப எவந்தாண்டா டிரீட் கொடுப்பிங்க.

twitter.com/skpkaruna
கடையிலே நமக்குன்னு ஆசையா ஏதாவது வாங்கப் போனால், போன் பண்ணிக் கூட உங்களுக்கும் வேணுமான்னு கேட்பேன். அப்ப, வேண்டவே வேணாம்னு சொல்லிட்டு, நாம வாங்கிட்டு வந்த ஒத்தைப் பார்சலைக் குடும்பமே பிரிச்சு விழுங்கும் பாருங்க! ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணும். தியாக வாழ்க்கைதான் ஆண்களுடையது.
twitter.com/iKrishS
election results பாத்தா, வழக்கமான gap-ல petrol, diesel விலையேத்தினாலும் ஓட்டு போட்ருக்கத்தான் போறாங்க. ஏதோ பெருந்தன்மையா இதுவரை நிறுத்திவச்சதா எடுத்துக்கலாம்.
twitter.com/mohanramko
டூ ஆர்.சி.பி - 200 அடிச்சும் தோத்துட்டீங்களே...
நாங்க எண்டர்டெயினர்ஸ்ணே!
twitter.com/HariprabuGuru
ஐ.பி.எல் நேரத்துல வீட்டு டி.வில சீரியல் ஓடுறப்ப ஏன்டா கல்யாணம் பண்ணோம்னும்,
நடு ராத்திரில கார்ட்டூன் ஓடுறப்ப ஏன்டா அதுக்குள்ள குழந்தை பெத்துக்கிட்டோம்னும் தோணுறதெல்லாம் டிசைன்லயே இருக்கு.
twitter.com/shivaas_twitz
தம்பி ஜடேஜா, கேப்டன்சிப்ப விட்டுக்குடுத்தா மத்தவங்கள வச்சி ஜெயிக்கணும்பா;
என்னைய வச்சே ஜெயிக்கலாம்னு வேலை வாங்கக் கூடாதுப்பா.
twitter.com/mohanramko
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே இருந்தா என்ன பண்ணுவீங்க?
ஜி - 2 தடவை பெட்ரோல், டீசல் விலையை ஏத்துவேன்.

twitter.com/itz_idhayavan
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. ~ஓபிஎஸ்
அம்மா இட்லி சாப்பிடவே இல்லைங்க... சாப்பிட்டது சி.ஆர்.சரஸ்வதி அம்மா. அப்புறம் நான் இட்லிக் கடைலாம் வைக்கலைங்க, டீ கடைதான் வச்சிருந்தேன்?!
twitter.com/Anvar_officia
அப்பல்லாம் குழந்தை தூங்குற நேரத்தில் எல்லா வேலையும் பார்த்தாங்க,
இப்பல்லாம் மொபைல் போன் சார்ஜ் ஆகுற நேரத்தில் வேலையைப் பார்க்குறாங்க.
twitter.com/Kirachand4
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க?
தி காஷ்மீர் ஃபைல்ஸ் மாதிரி ‘தி கோடநாடு ஃபைல்ஸ்’ படம் எப்ப ரிலீஸ் ஆகும்னு கேட்கிறாம்பா...
twitter.com/HariprabuGuru
அண்ணாமலை ~
“கம்பர் எழுதிய, ராமனின் கதையே கம்ப ராமாயணம்.”
அவ்வளவுதான். கம்பராமாயணம் படிச்சு முடிச்சாச்சு.
அடுத்தது புறநானூறு படிப்போமா...
twitter.com/Suyanalavaathi
டெய்லி அலாரம் வைக்கிறதே வேகமா எழுந்திருக்க இல்ல, snooze பண்ணிட்டுத் தூங்கத்தான்னு நமக்குத் தெரியும்... ஆனா அந்தப் போனுக்குத் தெரியாது பாவம்!
twitter.com/Thaadikkaran
பர்ஸ்ட் மேட்ச் CSK ஜெயிக்குறது டீமுக்கு ராசி இல்லப்பா.
யார் சொன்னது?
பக்கத்து ரூம்ல அழுதுட்டு இருந்த ரெண்டு CSK பேன் பேசிக்கிட்டாங்க.
facebook.com/gokul.prasad.
நெல்லைப் புத்தகக் கண்காட்சியில் யாரோ தவறவிட்ட பொருளைக் கண்டெடுத்ததைப் பற்றிய அறிவிப்பு.
‘ஒரு லேடீஸ் டைட்டன் வாட்ச் தொலைஞ்சு போயிருக்குங்க. கறுப்பு கலர். டேட் தப்பா இருக்கு. தொலைச்சவங்க உரிய அடையாளத்தைச் சொல்லி ஆபீஸ்ல வந்து வாங்கிக்கங்க.’
facebook.com/karkyjohnson
யாராச்சும் என்ட்ட வந்து வழி கேளுங்கடான்னு ஆயிரம் பேர் இருப்பான். ஆனா, தேடிப் புடிச்சு ஹெட்போன் மாட்டிருக்கவன்ட்ட வந்து இந்த ட்ரெய்ன் ஆவடி போகுமா, அமெரிக்கா போகுமாங்கறது...
இப்டி இருந்தா கேஸ் விலை ஏறாம என்ன பண்ணும்!
twitter.com/shivaas_twitz
ஹலோ கமலாலயமா?
எங்க வீட்டுக்காரருக்கு சாயங்காலம் 6 மணிக்கெல்லாம் ஆபீஸ் முடிஞ்சிடும். ஆனா தினமும் நைட் 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றார். எங்க, யாரு கூட சுத்துறார்னு கூகிள்ல கண்டுபிடிச்சுச் சொல்ல முடியுமா?
twitter.com/ImAvudaiappan
எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது என்பது இந்த 21st Century-இன் ஆகச்சிறந்த பொய்.
twitter.com/Suyanalavaathi
ஹோட்டல்ல எப்படி பில்லுக்குக் காச குடுத்துட்டு, சோம்ப எடுத்து வாய்ல போடுறோமோ அதே மாதிரி, மளிகைக்கடைல பில் போடும்போது, அரிசிய கொஞ்சம் எடுத்து வாய்ல போட்டு மெல்லுறது ஒரு சந்தோசம்!

twitter.com/skpkaruna
அண்மைக்காலங்களில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து வெளிவருவதில் ஒரு pattern-ஐ நான் பார்க்கிறேன். இந்தக் கொடுமைகள் எல்லாமே தொடர்ந்து பல காலமாக அவர்களுக்கு நேர்ந்ததும், இப்போது வெளிவருவதுமாகவே உள்ளது.
கோவைச் சிறுமி தற்கொலைச் சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டதும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். அவர்கள் கட்டாயம் தண்டிக்கப் படுவார்கள். விசாரணையில் உங்கள் கண்ணியம் காக்கப்படும் எனும் உறுதி அளித்ததும், பெண்களுக்கான அவசர உதவி எண் 181-ஐ விளம்பரப் படுத்தியதும் வெகுகாலமாக தொடர் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்குத் துணிவைத் தந்துள்ளதாக நம்புகிறேன். உதவி மையத்துக்கு வரும் அழைப்புகள், மின்னஞ்சல்களை அலட்சியப்படுத்தாமல் காவல்துறையும், சமூகநலத் துறையும் விசாரணை செய்வதன் பேரில் இத்தனை காலம் முகமுடிகளுக்குப் பின்னால் மிருகங்களாக ஒளிந்து கொண்டிருந்தவர்கள் வெளிப்படுகின்றனர். `குற்றவாளிகள் யார்? எந்தக் கட்சி? எந்தச் சாதி? எந்த மதம்?’ என்பதில் ஊடகங்கள் கவனம் செலுத்துவதையும், அதன் மூலம் அரசியல் நோக்கம் புகுத்தி ஆதாயம் அடைவதையும் விடுத்து, குற்றச் சம்பவங்களின் மீது கவனத்தைக் குவித்து பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாத்து, செய்தியைப் பரவலாகக் கொண்டு சேர்த்தால் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்! அரசின் மீது இப்போது குரலற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை தொடர வேண்டுமெனில், நீதித்துறையும் இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிக்க உதவிட வேண்டும்.
நம்ம வீட்டுக் குழந்தைகள் நித்தமும் நரக வேதனையில் உழல்கின்றனர். இது ஒரு சமூகக் கொடுமை. இதில் உள்நோக்கம், ஆதாயம் இன்றி அனைவரும் இணைந்து செயல்படவில்லை எனில் காலம் நம்மை மன்னிக்காது.
முக்கியமாக, ஊடகங்கள் இதை அன்றைய முதல்பக்கச் செய்தியாக மட்டும் பாராமல், வழக்கு முடிந்து தண்டனை வழங்கும்வரை தொடர் செய்திகளைத் தந்தால்தான் அதன் பெயர் ஊடக அறம்.
twitter.com/Kozhiyaar
ஹோட்டலில் ஒரு ஆர்டர் செய்து அது கேவலமாக இருந்து, அந்த உணவை நம் அருகிருப்பவர் ஆர்டர் செய்யும்பொழுது, ‘கையெழுத்து போடாத’ன்னு பாஸ் என்கிற பாஸ்கரன் படம் போல் கத்த வேண்டும் என்று தோன்றினாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் விட்டுவிடவே தோன்றுகிறது!
twitter.com/ShivaP_Offl
எல்லாவற்றையும் வெளிப்படைத் தன்மையோடு விவாதித்துக்கொண்டிருப்பவன், வெகுவிரைவில் தனிமைப்படுத்தப்படுவான்..!
twitter.com/Thaadikkaran
வெயில் to பெட்ரோல் ~
வழக்கமா இந்த டைம்ல நாமதானே டாப்ல இருப்போம் இவன் என்ன நம்மள பீட் பண்ணிட்டுப் போறான்..!
twitter.com/VignaSuresh
கெட்டுப்போன உணவை யாரும் மெல்லுவதில்லை. ஆனால், நடந்து முடிந்தவற்றைப் பற்றி ஓயாமல் சிந்தித்துக்கொண்டிருப்போம்.
twitter.com/isai_
ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையேறுதே..?
ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் தூங்குறாரு எங்க ஜி..!
இந்தக் கேள்விக்கு இது பதில் இல்லையே.