twitter.com/jeevanlancer
பல வருடம் கழித்து முகலாயர் கிரீடம் அணிந்திருக்கிறார் சொக்கநாதர். முகலாயர் கிரீடம்... பச்சை நிற வைரக் கல், சிவப்பு நிற வைரக் கல், வெள்ளை நிற வைரக் கல் மற்றும் சிவப்பு வெள்ளை முத்துக்களாலான கிரீடம் மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து அணிவிக்கப்பட்டது. மதநல்லிணக்க விழா எங்கள் சித்திரைத் திருவிழா.
twitter.com/JamesStanly
பங்க் போய் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு இந்தியில ‘எவ்ளோ’ன்னு கேட்டேன். 50ரூவா மட்டும்தான் வாங்குனாங்க... ஜெய் இந்தி..!
twitter.com/AravindRajaOff
நமக்கு இந்தி தெரியாதது அவனுக்குப் பிரச்னை இல்ல. நமக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ் அவனுக்குத் தெரியலயேன்ற காண்டு!
twitter.com/Maddoc_
ஒருவாரம் முன்ன பார்க்கிங்ல ஒருத்தன் OPசீட்டோட வந்து “CT ஸ்கேன் எடுக்கணும். 50ரூபா குறையுது சார்”னு கேட்டான். நானும் பாவம்னு சில்லறை யெல்லாம் குடுத்து RMOகிட்ட வேணா சைன் வாங்கி ப்ரீயா எடுத்துக்கன்னு சொல்லிட்டுப் போயிட்டேன். இன்னைக்கு அதே ஆளு வந்து அதே கதையோட 50 ரூபாய் குறையுதுன்னு சொல்றான்.

twitter.com/sultan_Twitz
‘‘எங்க போற...’’
‘‘டயட் இருக்கப் போறேன்.’’
‘‘ஏன் திரும்பி வந்த..?”
‘‘மதியம் மட்டன் பிரியாணின்னு சொன்னாங்க, திரும்ப வந்துட்டேன்.”
twitter.com/amuduarattai
அதிக பாத்திரங்கள் துலக்க வேண்டிய நாள்களில் கணவரைப் பாத்திரம் துலக்கச் சொல்கிறார்களா, இல்லை, கணவர் பாத்திரம் துலக்கும் நாள்களில் அதிக பாத்திரங்களைப் போடுகிறார்களா என்பது தெரியலையே.
twitter.com/Suyanalavaathi
சாயங்காலம் ஆகியும் செல்போன்ல பேட்டரி 50%க்கு மேல இருக்கா, ஏதோ உருப் படியா வேல பாத்திருக்கோம் போலன்னு நினைக்காதீங்க. நெட்வொர்க்காரன் 4G, 3G data கனெக்ஷன் ஸ்பீடுல வேலையக் காட்டியிருப்பான்!
twitter.com/Thaadikkaran
காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா? CSK கப் அடிக்குமா, இல்ல MI கப் அடிக்குமாங்குறது போய் ரெண்டு டீம்ல மொதல்ல யாரு வின் பண்ணுவாங்கன்னு ஃபேன்ஸை யோசிக்க வச்சிருச்சு.
twitter.com/HariprabuGuru
பஞ்சாபில் 20 நாள்களில் ஊழலை ஒழித்து விட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால்.
தமிழ் சினிமாவுல எல்லாம் ரெண்டரை மணி நேரத்துல ஒழிச்சிடுவாங்க. போவியா...
twitter.com/sasitwittz
சிறுகுழந்தைகளுக்கு அது என்ன ஆனந்தமோ தெரியவில்லை, மொபைலைத் தண்ணிக்குள்ளே போடுவதென்றால்...
twitter.com/sherlockveedu
வட இந்தியர்கள்கிட்ட இந்தி தேசிய மொழி இல்லைனுலாம் சண்ட கட்டத் தேவையில்ல. நீ பாட்டுக்கு இந்தி வேணும்னு கத்து, நாங்க ஜெர்மன்,ஸ்பானிஷ்,ஃப்ரென்ச்,டச் கத்துக்கறோம்னனும்.இன்ன நெலமைல ஆங்கிலத்தோட இது நாலுல ஒரு மொழி தெரிஞ்சா விசா ஸ்பான்சர்சிப்போட வேல கெடைக்கும். பொழச்சுக்கங்க.அவ்ளதான் சொல்லுவேன்
twitter.com/Kozhiyaar
காசு கொடுத்து வாங்கின துணி கிழிஞ்சுபோனாக்கூட கவலைப்பட மாட்டாங்க. ஆனா, ஓசியில கிடைச்ச கட்டைப்பை கிழிஞ்சிட்டா கதறிடுறாங்க!

twitter.com/star_nakshatra
அரேஞ்சுடு மேரேஜ்னா எதிர்பார்ப்புகள் அதிகம்னு சொல்றாங்க... லவ் மேரேஜ்னா எதப் பாத்து லவ் பண்ணிட்டுப் போகுதுன்னு சொல்றாங்க... யாரு சாமி நீங்கல்லாம்?
twitter.com/iam_DrAjju
மணியா, இவனுங்களுக்கு பிரச்னை குடுத்துட்டே இருந்தா போதும். இந்திய உள்ள இழுத்தாச்சுல்ல... இப்ப பெட்ரோல், டீசல விட்ருவாய்ங்க.
twitter.com/sultan_Twitz
‘அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்...’
அதெல்லாம் தேவ இல்ல... மாசம் 40,000 சம்பாதிக்கிறியா? சொந்த வீடு இருக்கா..?
twitter.com/Greesedabba2
பேன்ட் சர்ட் எல்லாம் எவ்வளவு கேவலமா இஸ்திரி பண்ணினாலும், கடைசியா ஒரு நியூஸ் பேப்பரை உள்ளே வச்சு மடிச்சுட்டோம்னா, புரபஷனலா இஸ்திரி பண்ணுன ஒரு ஃபீல் கிடைக்கும்...
twitter.com/Anvar_officia
ஜிம்முக்குப் போயோ, கஷ்டப்பட்டு உழைச்சோ வியர்வை வந்தாக்கூட பரவால்ல, சந்தோஷப்பட்டுக்கலாம். ஆனா, அதிகாலைல பால் வாங்கப் போறப்பக்கூட வேர்த்தால் என்ன பண்றது?
twitter.com/Suyanalavaathi
நானும் நல்லா வேல பாத்தா மேனேஜர் ஆகிடலாம்னுதான் நினைச்சேன். அப்பறம்தான் தெரிஞ்சுச்சு... மத்தவங்கள நல்லா வேல வாங்கத் தெரிஞ்சாதான் மேனேஜர் ஆகமுடியும்னு..!
twitter.com/saravankavi
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்! - ஓ.பி.எஸ்.
தமிழக அரசேதான் குறைக்கணுமா? இந்த மத்திய அரசு, கூட்டணிக் கட்சி எல்லாம் குறைக்கக் கூடாதா?
twitter.com/Anvar_officia
‘‘இன்னிக்கி எங்க வீட்ல சைக்கிள் இருக்குதுன்னா அதுக்கு மோடிதான் காரணம்!”
‘‘அப்படியா... ஏன்?”
‘‘அப்ப கார் வச்சிருந்தோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வித்துட்டு சைக்கிள் வச்சிருக்கோம்.”

twitter.com/Vasanth920
பா.ஜ.க-வில் இருந்து முதல்வரை உருவாக்கவே நான் வந்துள்ளேன்! - அண்ணாமலை.
வாத்தியாரே, நாம கவர்னரைத்தான உருவாக்குவோம்.
twitter.com/Jiyaanofficial
‘‘இலங்கைய நினைச்சா பயங்கரமா இருக்கு...’’
‘‘இந்தியாவ நினை... இன்னும் பயங்கரமா இருக்கும்.’’
twitter.com/imkayalsai
உங்க அம்மா அப்பாக்கு வயசாகுது, உனக்குக் கல்யாணம் பண்ணல, முடி கொட்டுது. ஆனா விஜய் விக் வச்சிருக்காரு, அஜித் இந்த கெட்டப்ல எப்படி பேங்க் திருடுவாருன்னு சண்டை. அவங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. முதல்ல நல்ல வேலைக்குப் போங்கப்பா...
twitter.com/Suyanalavaathi
மொபைலுக்கு tempered glass ஒட்டும்போது bubble வராம ஒட்டணும்ங்கிற டென்ஷன் இருக்கே, அது பரீட்சை எழுதும்போது, கடைசி 10 நிமிஷம் வர டென்ஷனவிட அதிகம்!
twitter.com/Thaadikkaran
பொண்டாட்டி: ஏங்க, உங்கம்மா சும்மா ஜாடை மாடையா எங்க பேமிலியையே திட்டிட்டு இருக்காங்க, வந்து என்னான்னு கேளுங்க!
புருஷன்: வேணாம் டார்லிங், நான் வந்தா கேங் வாரா மாறிடும். நீயே சமாளிச்சுக்கோ...
twitter.com/indhiratweetz
மெச்சூரிட்டியான காதல் என்பதெல்லாம் பெரும் பம்மாத்து. சீண்டி, சிணுங்கி, கோபித்து, கொஞ்சி, அழுது, தேடி, பித்துப் பிடிக்கச் செய்யும் அத்தனை கிறுக்குத்தனங்களையும் கொண்டிருப்பதற்குத்தானே பிரியமென்று பெயர்.
twitter.com/mohanramko
‘‘டேய், என்னடா இது, இப்பவே கால்குலேட்டரை எடுக்கற...’’
‘‘ரன் ரேட் படி, கடைசி இடம் மும்பைக்கா, இல்லை சி.எஸ்.கே-வுக்கான்னு பார்க்கதாண்ணே!”

facebook.com/gokul.prasad.
சூப்பர் மார்க்கெட்டில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு, வழக்கம்போல சாக்லேட் செக்ஷனை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்படியே சில பல பாக்ஸ் சாக்லேட்டுகளையும் மில்க் ஷேக்குகளையும் அள்ளிக் கூடையில் வைத்தபோது ஒருவர் தயங்கித் தயங்கி என்னருகே வந்தார்.
‘சார், நாங்க டிரீம் கிட்ஸ் அகாடமில இருந்து வர்றோம். உங்ககிட்ட ஒரு டூ மினிட்ஸ் பேச முடியுமா?’ என்றார்.
முன்பெல்லாம், பூட்டியிருக்கும் வீட்டுக் கதவை ஞாயிறு மதியங்களில் ஓயாமல் தட்டி, கறி உண்ட மயக்கத்தில் அசந்து தூங்கியிருப்பவர்களை எழுப்பி, ‘சாரி டு டிஸ்டர்ப் யூ சார்’ என எம்.பி.ஏ ஆட்கள் என்சைக் ளோபீடியாவை விற்க வருவார்கள். கடந்த சில மாதங்களாக அவர்களைத் தெருக்களில் பார்க்க முடிவதில்லை. வெயிலுக்கு இதமாக இருக்கு மென்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் கான்வாஸ் செய்யத் தொடங்கி விட்டனர் போல. பொருள்கள் வாங்கும் மும்முரத்தில் இருந்ததால் நான் அவரைக் கண்டு கொள்ளவில்லை. மறுபடியும் ‘சார்’ என விளித்தார்.
‘இல்லங்க, எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல’ என்றேன்.
‘சார், உங்களுக்கு இல்லாட்டியும் உங்க வீட்ல இருக்கற கைக்குழந்தைங்க, கிட்ஸுக்கு யூஸ்புல்லா இருக்கும்.’
நான் குழப்பத்துடன் அவரை ஏறிட்டேன். ‘வீட்ல கிட்ஸ் யாரும் இல்லியே?’
என் கூடையிலிருந்த சாக்லேட்டுகளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார்.
‘இல்லைங்க, இதெல்லாம் எனக்குத்தான்.’
facebook.com/ramanujam.govindan?
மாணவர்களிடம் அடிக்கடி நான் கேட்கும் கேள்வி
1= 5
2=10
3=15
4=20
5=?
இதற்கான விடை 25 அல்ல.
நமது மூளை ரொம்பவே சோம்பேறி. செக்குமாடு மாதிரிதான் சிந்திக்கும். யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம் எனச் சிந்திப்பது. பழக்கத்துக்கு அடிமையாகச் சிந்திப்பது. இதே பாணிதான் ஒரு குறிப்பிட்ட இனம், சமூகம், நபர், குழு, தேசம், ஜாதி பற்றி stereotype-ஆக முடிவெடுக்க வைக்கிறது.
நாம் உண்மை என நினைப்பது பல முறை பொய்யாக இருக்கும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே உண்மை. அதுவும் வாட்ஸப், முகநூல் போன்றவற்றில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடுகிறோம். இதில் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் இன்னும் மோசம். உடனடி முடிவைத்தான் எடுப்போம். கொஞ்சம் பொறுமையாக யோசிப்போம்!
facebook.com/Bogan Sankar
பாகிஸ்தான் அரசு கவிழ்ந்துவிட்டது. இலங்கையில் கவிழும் வாய்ப்பு உள்ளது. உக்ரைனில் எத்தனை நாள் இருக்கும் எனத் தெரியவில்லை. சிறிய வியாபாரிகளாக, சிறிய நில உடமைதாரர்களாக, சிறிய நாடுகளாக இருப்பது எப்போதுமே ஆபத்தானது. சிறிய ஆடுகள் பெரிய இரைக்கொல்லிகளின் பசிக்கு எளிதில் ஆட்படுகின்றன. இந்தியாவின் தடிமன் மட்டுமே அதைக் காப்பாற்றிவருகிறது என்று தோன்றுகிறது.
சரித்திரத்துக்கு எப்போதுமே சொன்னதையே சொல்லும் பிரச்னை உண்டு. அதைக் கேட்காமல் போய் கொலைவாயில் மாட்டிக்கொள்கிற பிரச்னை நமக்குண்டு.