Published:Updated:

வலைபாயுதே!

வலைபாயுதே!
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே!

வெயில் காலத்தில் முகத்திற்கு பவுடர் அடித்தால், அரைகுறையாகப் பட்டி பார்க்கப்பட்ட சுவர் போன்று இருக்கிறது.

வலைபாயுதே!

வெயில் காலத்தில் முகத்திற்கு பவுடர் அடித்தால், அரைகுறையாகப் பட்டி பார்க்கப்பட்ட சுவர் போன்று இருக்கிறது.

Published:Updated:
வலைபாயுதே!
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே!

twitter.com/Mark2Kali_

9 ரூபாய் கலால் வரி போட்டு 70 ரூபாய்க்கு பெட்ரோல் வித்த மன்மோகன் சிங்கை திருடன்னு சொல்லிட்டு, 30 ரூபாய் வரி போட்டு 110 ரூபாய்க்கு பெட்ரோல் விக்கற மோடிய தேசபக்தன்னு சொல்றீங்க.. யார்ரா நீங்கல்லாம்?

twitter.com/Piliral

கமல் அழும்போது ‘ஒரு அட்டகாசமான கலைஞன் என்னமா பெர்பாம் பண்றார்யா’ன்னு தோணும். ரஜினி அழும்போது, நம்மில் ஒருத்தருக்கு கஷ்டம் வந்துட்ட மாதிரி நாமளும்கூட சேர்ந்து அழுதிருவோம். அதான் வித்தியாசம்!

twitter.com/teakkadai1

இந்த வேர்ல்ட்லயே வாடகை வீட்டுக்குப் போறதுக்கு பசு-கன்றோடு போனது சீமான்தான் போல.

twitter.com/naaraju

எல்லாக் காலங்கள்லயும் பள்ளிக்கூடங்கள்ல ஒழுங்கீனமோ, எல்லை மீறிய குறும்புகளோ, அடாவடி அடிதடிகளோ செய்ற மாணவச் செல்வங்கள் இருக்கத்தான் செய்வாய்ங்க... என்ன, இப்ப பசங்ககிட்ட smart phones புழங்குறதால, இதெல்லாம் வெளியே வந்துருது!

twitter.com/narsimp

ஒக்காரும்போது குருதிப்புனல், காக்க காக்க சூர்யா கட்டிங்னுதான் பேச்சு. ஆனா, சேது க்ளைமாக்ஸ் மாதிரி ஆக்கிவிட்டாப்ல. வெயிலுக்குத் தோதா இருக்கும் ப்ரோ... ம்ம்!

Cristiano Ronaldo: தங்கமீன்!
Cristiano Ronaldo: தங்கமீன்!

twitter.com/arattaigirl

நல்லா கொழு கொழுன்னு இருக்கற குழந்தைகளைப் பாத்ததும் பாஞ்சி தூக்கிடறது. 20 நிமிஷத்துக்கு மேல தூக்க முடியாம திணறிட்டு (பேரன்ட் வாங்கிக்காம, கண்டுக்காம இருந்தா) இறக்கியும் விட முடியாம, கைல வச்சுக்கவும் முடியாம திண்டாடறது... இந்த அனுபவம் யாருக்கும் இருக்கா?

twitter.com/mekalapugazh

இந்தி எதிர்ப்பால் அதிகம் பாதிப்படையப்போவது இந்தித் திரையுலகம்தான். பலனடையப் போவது மாநிலமொழித் திரையுலகம்தான். இதை உணர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாளத் திரைப் பிரபலங்கள் பேசவேண்டும்.இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்ற ஒற்றைக் குரலில் இணையவேண்டும்.

twitter.com/veeba6

ECR-ஐப் பெயர் மாற்றுவதற்கான காரணம் என்ன? ‘கிழக்குக் கடற்கரைச்சாலை’க்கு என்ன குறை? அழகான காரணப்பெயர் கொண்ட வெகுசில சாலைகளில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே OMR-ஐயும் ECR-ஐயும் இணைக்கும் சாலைக்குக் கலைஞர் கருணாநிதி சாலை என்றுதானே பெயர். எதற்காக மற்றுமொரு சாலை அவர் பெயரில்?

twitter.com/drkrvcvijay

Doctor: “தம்பி, LKG படிக்குறியா UKG படிக்குறியா...”

Kid : “ஏய்… நடிக்காத. ஊசி போடப் போற…’’

twitter.com/mohanramko

தோனி தலைமை ஏற்றதும் மீண்டும் சி.எஸ்.கே வெற்றி. கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும் மொமண்ட்.

twitter.com/oorkkavalaan

சில சமயம் நமக்கான வாய்ப்பு என்பது இறங்கும்போது கிடைக்கும் ஜன்னல் சீட் போல அமைந்துவிடுகிறது..!

twitter.com/Suyanalavaathi

EMI டு மீ - அப்பறம், சம்பளம் உன்னோட accountல credit ஆகிருச்சுடா. அண்ணே வேண்டியத எடுத்துக்கிட்டேன்டா. அடுத்த மாசம் பாப்போம்.

twitter.com/saravankavi

இந்த குரூப் 4 தேர்வில் 21.85 லட்சம் பேர் அப்ளை பண்ணியிருக்காங்களாம். ஆளுங்கட்சியினர் விழிப்புணர்வு அதிகமாகியிருக்குன்னும் எதிர்க்கட்சியினர் வேலையில்லா திண்டாட்டம்னும் சொல்றாங்க. சரி, அப்ளை பண்ணுனவங்களைக் கேட்கலாம்னா பூரா பேரும் ஐ.பி.எல் பத்தியும் கே.ஜி.எப் பத்தியும் பேசிக்கிட்டு இருக்காங்க!

Shamlee: ஸ்டார் சிஸ்டர்ஸ்!
Shamlee: ஸ்டார் சிஸ்டர்ஸ்!

twitter.com/amuduarattai

வெயில் காலத்தில் முகத்திற்கு பவுடர் அடித்தால், அரைகுறையாகப் பட்டி பார்க்கப்பட்ட சுவர் போன்று இருக்கிறது.

twitter.com/manipmp

தற்பெருமை பேசுவோரை கவனிப்பது... எப்போது பேசி முடிப்பார்னு தெரிந்துகொள்ளத்தான்!

twitter.com/mekalapugazh

தனக்கு நல்லது நடக்கும்போது கடவுள் அருள் என்பதும், நாம் விரும்பாதவர்க்கெனில் இவனுக்கு வந்த வாழ்வென கடவுளை மறுப்பதும்...

தனக்குக் கெடுதல் வரும்போது ‘யாருக்கும் கெடுதல் செய்யாத எனக்கேன் இப்படி’ என்பதும், பிறருக்கான கெடுதலின்போது ‘அவன் கர்மா அனுபவிக்கிறான்’ என்பதும் பொதுப்புத்தி மூடத்தனங்கள்.

twitter.com/Thaadikkaran

இந்தி தேசிய மொழின்னு அஜய் தேவ்கன் சொல்லியிருக்காப்புல. ஆனா இந்தி மேல உள்ள பற்று மாதிரி தெரில. புஷ்பா, RRR, KGF 2 ஹிட் அடிச்சதனாலே வந்த காண்டு மாதிரி தெரியுது...

twitter.com/saravankavi

“காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை” - கார்த்திக் சிதம்பரம்.

என்ன பண்ணணும்..?!

லைப்டைம் நெட்ப்ளிக்ஸ் ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் தரணும்.

twitter.com/HariprabuGuru

அல்ஜிப்ராவுலயும் சரி கல்யாண வாழ்க்கைலயும் சரி, X ஓட வேல்யூ லேட்டாதான் புரியுது நமக்கு மட்டும்...

twitter.com/Kozhiyaar

ஆணைப் பற்றி பெண்ணும், பெண்ணைப் பற்றி ஆணும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதைப் புரிந்துகொண்ட தம்பதியரே, அதிக புரிதலோடு வாழும் தம்பதியர்!

twitter.com/sultan_Twitz

7 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காததுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்! - பிரதமர் மோடி

வழக்கம் போல நீங்கதான் காரணம்னு நெனச்சிட்டோம். யப்பா நேரு, சாரிப்பா..!

twitter.com/HariprabuGuru

ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது - பராக் அகர்வால்.

ஏழெட்டு வருஷமா ஜீ ஆட்சிலயே வாழ்ந்துட்டோம். இதென்ன பிரமாதம். போவியா...

facebook.com/Sudharsan H

சொல்ல முடியாத சோகம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. சொல்ல விரும்பாத சோகம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்...!

twitter.com/Vasanth920

உப்புமாவைத் தட்டில் வைத்துவிட்டு முழுவதையும் சாப்பிடுகிறாரா என்பதைக் கண்காணிக்க அருகிலேயே மனைவி அமர்ந்துகொள்வதுதான் உண்மையான `ஹைஜாக்.’

twitter.com/sultan_Twitz

பா.ஜ.க சரியான சித்தாந்தத்துடன் சரியான திசையில் நகரும் கட்சி - ஜே.பி. நட்டா

# எது, புல்டோசரை வச்சு வீட்டை இடிக்குறதுலயா..?!

twitter.com/JamesStanly

கடல்ல விழுற ராக்கி பாய் நீந்தியே ராமேஸ்வரம் வாராப்ல... அங்கயே தன் பேச்சுத் திறமையால நெய்தல் படை அமைச்சி கடல்ல விழுந்த தங்கத்தை எடுத்து அதிபர் ஆகுறதுதான் KGF -3 பார்ட்..

# இந்த நாடாவ எங்கயோ பாத்துருக்குறனே...

twitter.com/mohanramko

வரியைப் போடுறதும், வரியைக் குறைக்கச் சொல்றதும் ஒரே ஆளா...

twitter.com/krishnaskyblue

எலான் மஸ்க் கிட்ட இந்த உத்தரப் பிரதேசத்த வித்துட்டு அந்தக் காசை வச்சு இந்தியாவை டெவலப் பண்ணலாம்!

Vani Bhojan: கற்றல் நன்று!
Vani Bhojan: கற்றல் நன்று!

twitter.com/VemaIism

ஒரு டிரைவர்ட்ட சிக்கிட்டேன். ஈ.பி.எஸ் நல்லா பண்ணாருங்க...ஸ்டாலின் வந்து சொதப்பிட்டு இருக்காரு... மோடி, அமித்ஷா பக்காவா நாட்ட பாத்துக்கிறாங்க.இல்லேன்னா பாகிஸ்தான் உள்ள வந்துருப்பான் இந்நேரம்ங்கிறான். சரி சரி, வண்டிய பாத்து ஓட்டு!

twitter.com/sultan_Twitz

இளம் காளையாக இருந்தபோது ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கியுள்ளேன் ~ ஓ.பி.எஸ்

அப்புறம் டெல்லிக்கு அடிமாடா போயிட்டேன்..!

twitter.com/roshni0178

பணம் Dettol போன்றது, ஏனெனில் இது 99.9% பிரச்னைகளைக் கொல்லும்!

twitter.com/prabhu65290

‘‘என்னண்ணா... ஒரு டீ 30 ரூபாயா?’’

‘‘ஆமா... டீ 10 ரூபா, சிலிண்டர் காஸ்ட் 20 ரூபா, கமர்சியல் சிலிண்டர் 2,355 ரூவாய்க்கு விக்குது தம்பி!”

twitter.com/Raajavijeyan

டிரோன் பறந்து வீடியோ எடுக்குது. அது வீடியோ எடுக்குறதை போன்ல நம்மாளுக வீடியோ எடுக்குறாங்க.

twitter.com/asdbharathi

தவறு என்று மனதுக்குத் தோன்றும் கருத்துகளை எந்தக் காரணத்துக்காகவும் பரப்பாமல் இருப்பதும் சுய ஒழுக்கத்தையே சாரும்.

twitter.com/Raajavijeyan

எந்த ஊர்லேர்ந்து வர்றிங்கன்னுதானடா கேட்டேன்... அதுக்கு ஏன்டா ஜாதியெல்லாம் சொல்றிங்க?

twitter.com/iam_DrAjju

‘‘உத்தம வில்லன்லாம் உங்களுக்குப் புரிய இன்னும் 20 வருஷம் ஆகும்...’’

‘‘சார் யார்னு தெரியல... நோலன்கூட Interstellar படத்தோட script writing-ல இருந்தவரு.’’

Srinidhi: மூன்றாம் பாகத்துக்கு ரெடி!
Srinidhi: மூன்றாம் பாகத்துக்கு ரெடி!

facebook.com/Rafeek Raja K

மூக்கு பெரிதான வசதியான கார்களில் ஆளும்கட்சிக் கொடியுடன் குறுகலான சந்துகளில் வெகு அடாவடியாக ஹாரன் அடித்தபடி வருவதைப் பார்க்கும்போது கோபமாக வருகிறது. எரிக்கும் வெயிலில் எப்போது நிக்குமோ என்று தெரியாத டூவீலரில் சென்று கொண்டிருந்தால், பேய்த்தனமாக அலறி நம்மை சாலையில் இருந்து இறக்கிவைத்துவிட்டு வெறித்தனமாகச் செல்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது ஒரு சாமானியன் மனதில் என்ன மாதிரியான உளவியல் உருவாகும் என்பதை கட்சிகள் ஒரு நிமிடம் சித்தித்துப்பார்த்தால் நன்றாக இருக்கும். காருக்குள் எட்டிப் பார்த்தால் ஜோடிக்கப்பட்ட அரசியல் பிரமுகர் மன்னர் நகர்வலம்போல அமர்ந்திருக்கிறார். உண்மையில் இவர்களுக்கு வேலை இருக்கிறதா அல்லது பிரதான சாலைகளில் இப்படி குறுக்கும் நெடுக்குமாய் வருவதுதான் வேலையா என்பதுபோல ஊருக்கு ரெண்டாயிரம் முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள். கட்சிப் பணியைத் தவிர மற்ற நேரங்களில் கொடியைப் பயன்படுத்த என்ன அவசியம் இருக்கப்போகிறது? இவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை வைத்து சில அல்லக்கைகள் தேர்ட், போர்த் ஹேண்டில் எடுத்த இண்டிகாவில் கட்சிக் கொடியைக் கட்டி இப்போதே ஒத்திகை பார்க்கின்றன. சைரன் போல கட்சிக் கொடியை யார் பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்று கட்சிகள் - குறிப்பாய் ஆளும்கட்சி வரையறுத்துக் கொண்டால் நலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism