Published:Updated:

வலைபாயுதே

விஜய் - பிரகாஷ்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - பிரகாஷ்ராஜ்

விட்டுக்கொடுப்பவர்களுக்கு எஞ்சுவதெல்லாம் சபையேறா மன விவாதமும், தூக்கமில்லா இரவுகளும்தான்.

வலைபாயுதே

விட்டுக்கொடுப்பவர்களுக்கு எஞ்சுவதெல்லாம் சபையேறா மன விவாதமும், தூக்கமில்லா இரவுகளும்தான்.

Published:Updated:
விஜய் - பிரகாஷ்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - பிரகாஷ்ராஜ்

twitter.com/ikrthik

மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையைப் பிடித்தபடி எத்தனையெத்தனை விடைகொடல்கள்!

twitter.com/RVikraman

கேரள உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருப்பது அம்மாநில நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் சாதனை என்றும் கொண்டாடுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் உள்ளனர். சத்தமில்லாமல் சரித்திரம் படைத்திருக்கிறது திராவிட மாடல் தமிழ்நாடு!

twitter.com/Arappor

மலைச்சாலையை உடைப்பது தவறு. அங்கே சட்டத்தை மீறி ஆபத்தான கொடிக் கம்பங்கள் நடுவது தவறு. அதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் படம் எடுத்துப் பெருமையாகப் பதிவு செய்வதும் தவறு. இந்தத் தவறுகளைத் தவறு என்று இவர்கள் உணர்வது எப்போது? இந்தத் தவறுகளைத் தடுக்கும், தண்டிக்கும் ஆட்சி அமையப் போவது எப்போது?

Virat kohli: ஜாலியோ ஜிம்கானா!
Virat kohli: ஜாலியோ ஜிம்கானா!

twitter.com/jill_online

நல்லா திட்டிட்டு கடைசில, ‘உங்க நட்புதான் முக்கியம்’னு முடிக்கிறாங்க. திட்டினா முழு மனசோட திட்டணும், இப்படி அரையும் குறையுமா விட்டுட்டுப் போறது அழகல்ல!

twitter.com/amuduarattai

“வாம்மா மின்னல்” என்ற வசனமும் காட்சியும், ஞாயிற்றுக்கிழமை வந்து போகும் வேகத்தைப் பார்த்துதான் எழுதி, எடுத்திருக்க வேண்டும்.

twitter.com/Iyankarthikeyan

குறுக்க மறுக்க ஓடாம, மக்கள் அமைத்த அமைச்சரவை சொல்றதக் கேளுங்க ஆளுநரே!

# உச்ச நீதிமன்றம் இதைத்தான் வேற மாதிரி சொல்லியிருக்கு...

twitter.com/mekalapugazh

‘இவர்களே குண்டு வைப்பாங்களாம்... இவர்களே எடுப்பார்களாம்...’ என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பும்!

twitter.com/saravankavi

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை

# சரி விலையை ஏத்தினது யாரு..?!

அது வந்து... எண்ணெய் நிறுவனங்கள்தான் ஏத்தினாங்க!

twitter.com/amuduarattai

மொழியை வைத்துச் சில கட்சிகள் அரசியல் செய்ய முயல்கின்றன - பிரதமர் மோடி.

# நீங்க கண்ணாடியைப் பார்த்துப் பேசிட்டிருக்கீங்க ஜி.

twitter.com/kaviintamizh

வாட்ஸ்அப் குரூப்ல அனுப்புற ஃபேக் நியூஸுக்கு எதிரா கருத்து அனுப்புனாகூட ‘பெரியவங்களுக்கு மரியாதை இல்லயா’ன்னு பேச ஆரம்பிச்சிடறாங்க. மரியாதை வேற, எதிர்க்கருத்து வேறன்னு என்னைக்குத்தான் இந்திய சமூகம் புரிஞ்சுக்குமோ?

Prakash Raj: கில்லி காம்போ!
Prakash Raj: கில்லி காம்போ!

twitter.com/serverdown_

விட்டுக்கொடுப்பவர்களுக்கு எஞ்சுவதெல்லாம் சபையேறா மன விவாதமும், தூக்கமில்லா இரவுகளும்தான்.

twitter.com/Maddoc_

உங்களுக்குத்தான்டா இது சண்டே... பேச்சுலர் லைப்ஃல இதுக்குப் பேரு துணி துவச்சு, ஒட்டடை அடிச்சு, மாப் போட்டு, கக்கூஸ் கழுவுற டே!

twitter.com/UMA_1510

புதிதாய் அரசியல் பயிலும் 2K அன்பர்களுக்கு தமிழ்நாடு ஒரு அற்புதமான learning ground. எப்பவும் அடித்துக்கொள்ளும் மாநிலக் கட்சிகள் எதற்கெல்லாம் ஒன்றுசேர்கிறார்கள், கூடியே இருக்கும் தேசியக் கட்சி-மாநிலக் கட்சி கூட்டணியினர் எந்தெந்தப் புள்ளியில் விலகுகின்றனர் என்பதுதான். வடக்கிந்தியர்களுக்கு அ.தி.மு.க, தி.மு.க பரம எதிரிகளாகத் தெரிவார்கள். ஆனால், தி.மு.க ஆதரிக்கும் இட ஒதுக்கீட்டை, இருமொழிக் கொள்கையை அ.தி.மு.க-வும் ஆதரிக்கும்.

மாநிலத்தில் ஒத்துப்போகாததுபோல் தோன்றும் தி.மு.க, நா.த.க தமிழ்ப்புத்தாண்டில் ஒன்றிணைவார்கள். நீட் விவகாரத்தில் வி.சி.க, பா.ம.க-வுக்கு ஒரே நிலைப்பாடு இருக்கும்.

Permutations and Combination-களால் ஆனதுதான் அரசியல். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் அந்த அடுக்குகளைக் கடந்தது. உற்றுநோக்கினால் இங்கே கட்சிகளைத் தாண்டி மக்கள்தான் நேரடியாக அரசியல் செய்கிறார்கள். கட்சிகளின் நிலைப்பாட்டை மக்களே influence செய்கிறார்கள். அந்த மக்களை அரசியல்படுத்தியதில் தமிழ்நாடு தனித்து நிற்கிறது. இந்தச் சேரும் புள்ளியில் சேர்ந்து, விலகும் புள்ளியில் விலகும் அரசியல் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாரும் அசைக்க முடியாது.

twitter.com/itisprashanth

வட இந்தியர்கள் இல்லை என்றால், தமிழ்நாட்டில் உடல் உழைப்பைச் சார்ந்த பாதி வேலைகள் நின்று போகும். திருடுவதும், கொள்ளை அடிப்பதும்தான் தவறு; பானி பூரி விற்றுப் பிழைப்பது அல்ல!

twitter.com/Mugavarii

அம்மா வீட்டுக்குப் போனால் அங்க இருக்கிற கஷ்ட நஷ்டங்களைப் பாக்கணும். அதென்ன வீடியோ கால் பண்ணி ‘வீட்டுக்காரன் எங்க இருக்கான்’னு செக் பண்றது?

facebook.com/mgr

ஆத்திகர்கள் பலரும் மதத்தைத்தான் கொண்டாடுகிறார்களே தவிர கடவுளை அல்ல!

twitter.com/Kozhiyaar

பர்ஸுக்குள்ள ஆதார் கார்டை வைத்துத் தொலைந்து விட்டால், அது கிடைச்சாலும் நம்ம முகத்தைப் பார்த்துட்டு பர்ஸைத் திரும்பக் கொடுக்க வாய்ப்பே இல்லை!

twitter.com/Iyankarthikeyan

‘‘அந்தக் கட்சி வாரிசு அரசியலை ஒழிக்கப்போறோம்.’’

‘‘சூப்பரு... எப்பிடி?’’

‘‘அந்தக் கட்சி எம்.பி மகனை எங்க கட்சியில் சேர்த்தாச்சுல்ல...’’

twitter.com/Lorrykaran

‘‘அரை மணி நேரமா சாப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க, நான் எப்பத்தான் தூங்குறது’’ன்னு ஒரு ஆளு பயங்கர கத்தல். ‘யாருண்ணே நீ’்ன்னு விசாரிச்சா லோயர் பெர்த் ஆளாம். இத மொதல்லியே சொல்ல வேண்டியதுதானே! கொஞ்சம் விட்டா கழுத்துல கத்திய ஏத்தீருப்பார் போல... மகா கோவக்காரங்களா இருக்காங்க தூத்துக்குடி ஆளுக!

facebook.com/karkyjohnson

வழக்கமா சலூன்ல ஹேர் ஸ்டைல் மாதிரிகள காட்ட நடிகர்களோட ஐகானிக் ஹேர்ஸ்டைல் புகைப்படங்கள் இருக்கும். மதுரைல எங்க ஏரியா சலூன்ல கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு அப்துல் கலாம், நெல்சன் மண்டேலா, ஐன்ஸ்டீன், ஆப்ரகாம் லிங்கன் போட்டோலாம் வெச்சிருக்காங்க. யோசிச்சுப் பாத்தா, இவங்களோட ஒர்க்க தாண்டி, இவங்க ஹேர்ஸ்டைலும் ரொம்ப யூனிக்கா இருக்கும். மதுரக்காரன் மூளையே மூளைய்யா!

twitter.com/Kozhiyaar

கல்யாணத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் படம் எடுத்திருந்தா ‘காத்து வாக்குல ரெண்டு கரண்டி’ன்னுதான் தலைப்பு வச்சிருப்பார்!

Tamanna: பட்டாம்பூச்சி விற்பவள்!
Tamanna: பட்டாம்பூச்சி விற்பவள்!

twitter.com/ImAvudaiappan

இதே விடுதலை இத்தனை ஆண்டுகள் ஒரு FootBall போல இவரிடம் இருந்து அவரிடம், அவரிடம் இருந்து இவரிடம் பாஸ் செய்து விளையாடப்பட்டது. உண்மையில் ‘ஆர்டர் பாஸ்’ செய்ய மனமில்லாதவர்கள் செய்த விளையாட்டு நிறைவு பெற்றது. அற்புதம்மாள் காரணப்பெயர் பெற்றார்.

twitter.com/mohanramko

பொருளாதார நெருக்கடி காரணமாக விமான சேவையை தனியாருக்கு விற்ற இலங்கை அரசு.

ஜி: இதையே இப்பதான் விற்கறீங்களா?

twitter.com/iyyanars

கிட்டத்தட்ட உலக நாடுகள் எல்லாமே, மூத்த குடிமக்களுக்கு மரியாதையும் சலுகைகளும் தந்து கௌரவப்படுத்துறாங்க... இங்க மட்டும்தான் இருந்த சலுகையைக் கட் பண்ணி கேவலப்படுத்தி, அதையும் பெருமையா சொல்லிக் குறாங்க!

twitter.com/Thaadikkaran

நேரு: ஏதாவது ஏடாகூடமா நடந்தா எல்லாத்துக்கும் காரணம் நானு. நல்லது நடந்தா மட்டும் இவுங்க கிரெடிட் எடுத்துக்குவாங்க. நல்லா இருக்குடா உங்க டீலிங்கு...