twitter.com/iam_DrAjju
பையன ஸ்கூல்ல விடுறதுக்கு அவசர அவசரமா கூப்ட்டுப் போறப்ப, 2 கி.மீ-க்கு அப்புறமா சொல்றான்... ‘‘ஸ்கூல் பேக் இல்லாம என்னத்த நீ என்னைய ஸ்கூலுக்குக் கூப்ட்டுட்டுப் போற?”
twitter.com/saravankavi
‘‘நீங்கள் பிறர் தவற்றைக் கவனித்துக்கொண்டே இருந்தால்...’’
‘‘இருந்தால்..?!’’
‘‘உங்களுக்குத் தவறு செய்ய நேரம் இருக்காதுன்னு சொல்ல வந்தேன்...’’
twitter.com/manipmp
கஷ்டத்தில் இருக்கும்போது நினைத்துக்கொள்ளும் இரு மந்திரங்கள். இது மாறிவிடும். இது பழகிவிடும்.
twitter.com/ItsJokker
வடக்ஸ்: இனிமே மோடிக்கு ஓட்டு போடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம்.
நல்லது, வேற யாருக்குப் போடப்போற?
வடக்ஸ்: யோகிக்கு மட்டும்தான் இனிமே போடுவோம்...

twitter.com/tparaval
நாட்டுக்கோழி கேட்டா நீங்களே வெட்டிட்டு அப்புறம் கொடுங்கய்யா. உங்க நேர்மையை நிரூபிக்க என் கண் முன்னாடியே உயிரோட கோழியைத் தராசுல வச்சு என் கருணையை எடை போடாதீங்கய்யா. கொஞ்சம் ஈரம் இருக்குய்யா எனக்கும்!
twitter.com/cricgenie
கௌதம்: அப்பா, இன்னைக்கு ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு மதியம் படத்துக்குப் போனோம்...
Me: பணம் இருந்ததாடா… என்கிட்ட கேட்டுருக்கலாம்ல?
கௌதம்: அப்பா, ஹாஸ்டலில் நைட் எல்லோரும் தூங்கியவுடன் வார்டனுக்குத் தெரியாமல் ஸ்கூல்ல சுத்துனோம்!
Me: டார்ச் கொண்டு போலாம்ல!
Better half: ????
twitter.com/arattaigirl
மை மைண்ட் வாய்ஸ்: இந்த மனித மூளை இருக்கே விசித்திரமானது, சுயநலமானது, குரூரமானது.
மை மூளை: நீ பேசிட்டு இருக்கறதே என்கிட்டதான். பீ கேர்ஃபுல்!
twitter.com/alexpaulmenon
தன் தகப்பனைக் கொண்டாடித் தீர்க்கும் பெண்களுக்கு, தன் இணையருக்குள் இருக்கும் தகப்பனை கொண்டாடத் தெரிந்திருந்தால் நலம்.
twitter.com/Suyanalavaathi
யாராவது உங்ககிட்ட ‘முதலீடே போடாம ஈஸியா சம்பாதிக்கலாம்’னு சொன்னா, ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோங்க... நீங்கதான் அவங்களோட முதலீடு!
twitter.com/manipmp
சில வேலைகளை சகித்துக் கொண்டும், பல வேலைகளை சலித்துக்கொண்டும் செய்கிறோம்!
twitter.com/Anvar_officia
என்ன பெரிய இரட்டைத் தலைமை..? அம்மா - மனைவி இரண்டு பேருக்கு நடுவில் மாட்டியிருக்கியா..?!
twitter.com/manipmp
வாழ்ந்துகெட்ட நோயாகிவிட்டது ‘கொரோனா.’
twitter.com/johnsonrajt
மும்பைப் பங்குச்சந்தையில் 4 மணிநேரத்தில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு...
யோகி புல்டோசரை விட்டு ஏற்றியது முஸ்லிம் வீட்டு மேலதானன்னு நினைச்சிடாதீங்க... இந்தியப் பொருளாதாரம் மீதும்தான்!

twitter.com/Anvar_officia
இரட்டை இலைக்குப் பதிலாக ‘இரட்டைத் தலை’ன்னு கட்சிச் சின்னத்தை வச்சிட்டா இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமைன்னு பிரச்னைகள் இருக்காது.
# ஐடியா சொல்றேன் சார்!
twitter.com/johnsonrajt
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி செயல்படுத்தல் வருமானத்தை எதிர்பார்த்ததைவிடக் குறைத்தது. இருப்பினும், பிரதமருக்கான விமானம் ₹ 8000 கோடிக்கு வாங்குவதற்கும், டெல்லியின் சென்ட்ரல் விஸ்டாவை ₹ 20,000 கோடிக்கு மறுவடிவமைப்பதற்கும் பணம் கிடைத்தது.
ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துக்குப் பணம் இல்லை?
twitter.com/THARZIKA
உணர்வுகளை மதிக்காத இடத்தில் அன்பென ஒன்றும் இருக்கப்போவதில்லை, தேவையும் பயன்படுத்தலுமே அங்கு அதிகம்.
twitter.com/thisiswatigot
தெரியாத முகங்கள் ஏனோ, எப்போதும் தெரிந்த யாரோ ஒருவரை ஞாபகப்படுத்துகின்றன.
twitter.com/mymindvoice
இப்ப ரீசன்ட்டா, ஃபிரண்ட்ஸ், டீம்மேட்ஸ்னு நெறையா கோவிட் பாசிட்டிவ் ஆகறாங்க. கோவிட் இன்னும் தீவிரமா பரவிட்டுதான் இருக்கு. வேக்சின்னால 5நாள் காய்ச்சலோட பெருசா சேதாரமில்லாம தப்பிக்கறோம்ன்றதுதான் உண்மை. 2020-ல இதே டைம்ல இருந்த மனநிலை யோசிச்சா, we have come long way... only science saved us.
twitter.com/Suyanalavaathi
ஓ.பி.எஸ் பண்ற அரசியல் எப்படி இருக்குன்னா, செமஸ்டர் எக்ஸாம்க்கு ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாம விட்டுட்டு, ‘அரியர்ஸ் எக்ஸாம்ல கண்டிப்பா சென்டம் வாங்குவேன்’னு சொல்ற மாதிரி இருக்கு.

twitter.com/cirumalai
‘ஆடு மேய்த்தால் அரசு வேலை, பொட்டிக்கடை வைத்திருந்தால் நீதான் அதற்கு முதலாளி போன்ற அரை வேக்காட்டுப் பிரசாரங்களை நம்பி வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்கடா, படிச்சுத் தொலைங்கடா’ என்கிறார் முதல்வர்!
twitter.com/HAJAMYDEENNKS
போராடிய ஒரே காரணத்திற்காக புல்டோசரை வைத்து வீடுகளை இடிப்பவர்களைப் பற்றிக் கேள்வி கேட்காமல், அவர்கள் ஏன் போராடினார்கள் எனக் கேள்வி கேட்பதற்குப் பெயர்தான் பாசிசம்!
facebook.com/sowmya.ragavan
இப்பவே இப்படி இருக்கே. இனி இந்த வருஷ பிக்பாஸ் பத்தி நினைச்சா திகிலாத்தான் இருக்கு. ‘இப்படித்தான் ஒரு நாள் விக்ரம் ஷூட்டிங்ல....’ன்னு ஆரம்பிச்சு ஆரம்பிச்சு ஆரம்பிப்பாரே ஆண்டவரு!
facebook.com/Bapeenleojoesph
‘‘ஏண்டா, அவனுங்க வந்து ஆபீச கொளுத்துற வரைக்கும் பாத்துட்டு சும்மாவா இருந்தீங்க?’’
‘‘கும்பலா தீப்பந்தத்தைத் தூக்கிட்டு ‘பாரத் மாதா கி ஜே’ன்னு கத்திட்டு வர்றத பாத்ததும், நம்ம பசங்கதான் எங்கயோ போய் சம்பவம் பண்ணிட்டு ரிட்டர்ன் வரானுங்க போலன்னு நினைச்சு கேட்டைத் தொறந்து விட்டேன் ஜி!’’
twitter.com/yugarajesh2
அம்மா ஆணைப்படி முதல்வரானேன்; சின்னம்மா உத்தரவுப்படி ராஜினாமா செய்தேன்; குருமூர்த்தி யோசனைப்படி தர்மயுத்தம் செய்தேன்; மோடி ஆசைப்படி துணை முதல்வரானேன் - OPS
# கடைசிவரைக்கும் சுயமா ஒண்ணுமே செய்யலை போல..!
twitter.com/Thaadikkaran
ஆட்சியைப் பிடிக்க ட்ரை பண்ணுவாங்கன்னு பார்த்தா கட்சியைப் பிடிக்கச் சண்டை போட்டுட்டு இருக்காங்க...
twitter.com/JaRa2X
தமிழ்நாடு தன் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகி விடக் கூடாது என்பதற்காகப் போராடும் இதே காலகட்டத்தில்தான் உயிரைப் பணயம் வைக்கும் பட்டாளத்து வேலைல பங்கு போடாதேன்னு போராடுகின்றன வட மாநிலங்கள். இங்கோ அதைச் சீந்துவாரில்லை. வளர்ச்சியளவில் அரை நூற்றாண்டு இடைவெளி இரண்டுக்குமிடையே!
twitter.com/mekalapugazh
Microwave Oven-ல் சமைத்தால் கேன்சர் வரும்... Fridge-ல் வைத்த உணவு நஞ்சாகும்... Broiler Chicken மலடாக்கும் என்பவர்கள் ‘உலகம் உருண்டை’ என்பதை இன்னும் நம்பிக்கொண்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
twitter.com/AravindRajaOff
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எனக்கு எதிரிகளே இல்லை: ஜெயலலிதா (2014)
# உங்க பொடனிக்குப் பின்னாடிதான் இருக்கோம். ஓவர்... ஓவர்... - சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்... etc
twitter.com/Greesedabba2
அப்பாஸ் என்கிற முஸ்லிம் நண்பன் மோடி வீட்டில் வளர்ந்ததாகவும், ஈகைத் திருநாளில் அப்பாஸுக்குப் பிடித்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாகவும் பதிவு.
# அடடே பாட்ஷா பாய்... நீங்களா?
twitter.com/arattaigirl
சுயசாதிப் பற்றுங்கறது நம்மை சிந்திக்கவே விடாது மக்களே. நாம சார்ந்த இனத்தில் சாதியில் ஒரு தவறுன்னு வர்றப்ப நாம வெளிய இருந்து பாத்து விமர்சிக்கறதுதான் நம்மை சுயபரிசீலனைக்கு உள்ளாக்கும். நம்ம சாதியைத் திட்றாங்கன்னு யோசிக்காதீங்க. நம்ம சாதில உள்ள தவறுகளைச் சொல்றாங்கன்னுதான் யோசிக்கணும். நீங்க அந்தத் தவற்றைச் செய்யாதப்ப அது உங்களைக் குறிப்பிடறதாவே ஆகாது. அதனால ஒரு தவற்றைச் சொல்லும்போது பர்சனலா ஹர்ட் ஆகறது தேவையில்லாதது. குறிப்பா தவறுகளின்போது ‘அது தவறுதான்’னு நீங்க சொல்றப்பதான் அடுத்த தலைமுறை அதை மாத்திக்க முயலும். இது எல்லா சாதிக்கும் பொருந்தும். ஆணவக் கொலைல எல்லாம் யாரா இருந்தாலும் கண்டிக்கணும். இல்லைன்னா அது உங்க வீட்டுப் பிள்ளைகளையும் பாதிக்கும். குற்றவாளி யாகவோ, பாதிக்கப்பட் டவங்களாவோ உங்க வாரிசுகள் மாறாம இருக்கணும்னா சாதிப்பற்று/ வெறியை அறவே விட்டு, தப்பைத் தப்புன்னு சொல்லியே வளருங்க. அந்த உணர்வோடயே வளருவோம்!

twitter.com/roadoram
நீங்க ஏன் ‘அதானிபாத்’ன்னு ஒரு திட்டம் போட்டு ராணுவத்தை அதானிக்குக் கொடுக்கக்கூடாது?
twitter.com/Vasanth920
இயற்கை நமக்குச் சொல்ல வேண்டிய விவரத்தை மிகத்தெளிவாக ஒவ்வொரு பருவ காலத்திலும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் கடந்துவிடுகிறோம்.
twitter.com/HAJAMYDEENNKS
எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்பதைவிட தைரியமான வார்த்தை வேற எதுவும் இல்லை!
twitter.com/mohanramko
‘‘4 வருஷம் பி.இ படிடா, வேலை கிடைக்கும்!”
‘‘4 வருஷத்துல வேலைக்குச் சேர்ந்து ரிட்டயர்மென்ட்டே ஆகிடுவேன், போவியா!”