Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

விசேஷங்களில் பந்தியில் சாப்பிடறவங்க பின்னாடி அடுத்த பந்திக்கு சாப்பிட வெயிட் பண்றது இப்பலாம் சகஜமாயிடுச்சு. ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாங்க

வலைபாயுதே

விசேஷங்களில் பந்தியில் சாப்பிடறவங்க பின்னாடி அடுத்த பந்திக்கு சாப்பிட வெயிட் பண்றது இப்பலாம் சகஜமாயிடுச்சு. ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாங்க

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/altappu

இது மோடிஜியோட maestro-stroke.

twitter.com/saravankavi

உணவகங்களும் ரெஸ்டாரண்டுகளும் சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது - மத்திய நுகர்வோர் அமைச்சகம்.

# நிதியமைச்சகம்: ‘‘அதானே... நாங்க இருக்கும்போது யார்றா அதையெல்லாம் வசூல் பண்றது..?!”

facebook.com/ஃபௌசியா

என்னவாம்? பொன்னியின் செல்வன் டீசர ஆளாளுக்குக் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க! ஒன்னுக்கு ரெண்டு வாட்டி பாக்கற அளவுக்கு நல்லாதானே இருக்கு? ‘‘இந்தக் கள்ளும் பாட்டும் ரத்தமும் போர்க்களமும் அதை மறக்கத்தான், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்!’’ங்்கறதுல தெரியும் essence of that love, சொல்ற விக்ரம், அந்த ஷாட்ல வர்ற ஐஸ்வர்யா ராய் எல்லாம்கூட பொருத்தம்! போதாதாமா?

நல்லவேள இந்த Titanic எல்லாம் அப்போவே வந்துருச்சு. இப்ப வந்தா, “இது நம்ம பெசன்ட் நகர் பீச்ல பார்க் பண்ணி வச்சிருந்த படகு மாதிரில்ல இருக்கு” வகையறா ஜோக்குகளுக்கு ஹாஹாஹா அமுக்கினு இருந்திருப்போம்!

Vignesh Shivan: மாப்பிள்ளையும் தோழர்களும்!
Vignesh Shivan: மாப்பிள்ளையும் தோழர்களும்!

twitter.com/narsimp

இந்த உலகை வெகு அசட்டையாக எதிர்கொள்வதற்கு ஒரு பபுள்கம்மை மெல்வது போதுமானதாய் இருக்கிறது.

twitter.com/rmuthukumar

‘உத்தவ் தாக்கரே செய்த வாரிசு அரசியலை ஒழிக்கவே முதலமைச்சராகியிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே’ என்ற குரல் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாம். ‘அப்படியா’ என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் சிவசேனா எம்.பி-யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே.

twitter.com/SundarrajanG

இந்தியாவில் இனிமேல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தினால் சிறைத்தண்டனை கிடையாது என ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருகிறது. இதுதான் உலகத்திற்கு இந்தியா வழங்கும் பஞ்சாமிர்தமா பிரதமரே?

facebook.com/Sowmya Ragavan

விசேஷங்களில் பந்தியில் சாப்பிடறவங்க பின்னாடி அடுத்த பந்திக்கு சாப்பிட வெயிட் பண்றது இப்பலாம் சகஜமாயிடுச்சு. ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாங்க. அப்பறம் சேருக்கு 2, 3 அடி தள்ளி நின்னாங்க. இப்பலாம் இருக்கைக்கு ஒட்டி நின்னு சேரை கெட்டியா பிடிச்சுக்கறாங்க, சாப்பிடற ஆள் எந்திரிச்சதும் இழுத்துப் போட்டு உக்கார்றதுக்கு. அடுத்தாப்ல சாப்டற சாப்பாடவே கீழ தள்ளி விட்டு உக்காந்துருவாங்க போல.

இப்படி ஒருத்தங்க நமக்காக வெயிட் பண்றாங்கன்னு தெரிஞ்சாவே மேற்கொண்டு சாப்ட முடிய மாட்டேங்குது. நிதானமா சாப்பிடறதே ஏதோ பாவம் மாதிரியும், அவங்களை நாம காக்க வைக்கற மாதிரியும் குற்றவுணர்வைத் தூண்டி விடறாங்க. கேரட் அல்வா இன்னொரு கரண்டி வைங்கன்னு சொல்ல நினைச்சு கம்முனு எழுந்து வர வேண்டிதா இருக்கு!

twitter.com/Thaadikkaran

‘‘எல்லாரும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றப்போவது ஓ.பி.ஸ்ஸா, இ.பி.எஸ்ஸா, இல்லை சின்னம்மாவான்னு பேசிட்டு இருக்காங்க. எங்கள் தலைவியை மறந்துட்டு பேசிட்டு இருக்காங்கன்னு தோணுது!”

‘‘யாரு தம்பி உங்கள் தலைவி?”

‘‘அம்மாவின் அரசியல் வாரிசு தீபாம்மா!”

Malavika Mohanan: நிழலும் நானே; நிஜமும் நானே!
Malavika Mohanan: நிழலும் நானே; நிஜமும் நானே!

facebook.com/Vinayaga Murugan

எண்பதுகளில் என் அப்பாவுக்கு சம்பளம் மூவாயிரம் ரூபாய். அவர் ஓய்வுபெறும்போது ஐயாயிரம். அதில்தான் எட்டுக்குழந்தைகளைப் படிக்க வைத்தார். எண்பதுகளின் காலம் தெளிவான நதிபோல அமைதியாக நிதானமாகச் சென்றுகொண்டிருந்தது. இந்த கேஸ் சிலிண்டர், அன்றாட பெட்ரோல் தேவை, செல்போன், இண்டர்நெட் எல்லாம் இல்லாத காலம் அது. 90-ல் உலகமயமாக்கல் வந்தது. புதுப்புது கார்கள், இருசக்கர வாகனங்கள் வந்தன. சம்பளம் அதிகரித்தது. செலவும் அதிகமானது. நான் பள்ளிக்கூடம் படித்தபோது, ‘படிப்பை முடித்து எப்படியாச்சும் மாதம் மூவாயிரம் சம்பளத்துக்குப் போகணும்’ என்று கனவு காண்பேன். கல்லூரி செல்லும்போது இது ‘ஐயாயிரம்’ என்று ஆனது. கல்லூரி முடிக்கும்போது ‘பத்தாயிரம்’ ஆனது.

1997-ல் சென்னைக்கு வந்தேன். அப்போது சென்னையில் நல்ல சம்பளம் என்றால் மாதம் 25,000 ரூபாய். வருடத்துக்கு மூன்று லட்சம். 1997-ல் நான் எம்.சி.ஏ சேர்ந்தேன். மொத்தம் 30,000 ரூபாயில் படிப்பை முடித்துவிட்டேன். இப்போது என் மகளுக்குக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருகிறது. ‘அது சரி, சம்பளமும் அதிகரித்துவிட்டதல்லவா’ என்று சொல்லாதீங்க.

ஆனந்த் சீனிவாசன் இந்த வித்தியாசத்தை ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். 1970-ல் ஒரு பொறியாளர் அவரது சம்பளத்தில் குடும்பத்துக்கு செலவு செய்து மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கிச் சேமிக்கலாம் என்று. இப்போது ஒரு பொறியாளர் வேலைக்கு வரும்போது அவருக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் என்று வைத்துக்கொண்டால் அது அவருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். சரி, இதற்கு என்னதான் வழி? ஓய்வு என்பது வெறும் கனவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதெல்லாம் போன தலைமுறையோடு சென்று விட்டது. இப்போது நமக்கு வேறு வழி இல்லை. சாகும்வரை சம்பாதித்துக்கொண்டிருக்க வேண்டும்.

twitter.com/raajaacs

மதில்மேல் நிற்கும் பூனையிடம் இரண்டு திரைக்கதைகள் இருக்கின்றன.

twitter.com/Iyankarthikeyan

புரிஞ்சுகோ மச்சான், ஏக்நாத் ஷிண்டேவே கிடைச்சாலும் 4 எம்.எல்.ஏ வச்சு ஆட்சியைப் பிடிக்க முடியாது!

Jayaram: நம்பியின் நம்பிக்கைகள்!
Jayaram: நம்பியின் நம்பிக்கைகள்!

twitter.com/thoatta

அ.தி.மு.க வந்த பாதை...

சசிகலாவைக் கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இணைந்து அறிவிப்பு.

ஓ.பி.எஸ்ஸைக் கட்சியை விட்டு நீக்குவதாக இ.பி.எஸ் அறிவிப்பு.

இ.பி.எஸ்ஸைக் கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு.

இனி, இருவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக சசிகலா அறிவிப்பு.

twitter.com/amuduarattai

லஞ்ச ஒழிப்பு சோதனையில் நகை, பணம், ஆவணம் எதுவும் எனது வீட்டில் கைப்பற்றப் படவில்லை - ஆர்.காமராஜ்

# இவ்வளவு நாள் கழித்து ரெய்டு வந்தால், எப்படி இதெல்லாம் கிடைக்கும்?

twitter.com/Thaadikkaran

‘‘வாசனுக்கு ஆதரவு பெருகுகிறது...’’

‘‘ஜி.கே.வாசனுக்கா..?”

‘‘ஜி.கே வாசனா, TTF வாசன் மாமா!”

twitter.com/suryaxavier1

ஒரு சிறந்த கலைஞன் என்ற முறையில் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டார். அதுபோலவே ரஜினிகாந்தும். ஆனால் இருவரின் அரசியல் சார்ந்த பார்வைகள் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் இருவரையும் நிராகரிக்க எது காரணியாக இருந்ததோ, அதுவே இளையராஜாவுக்குமான காரணி.

twitter.com/Anvar_officia

வெயில் காலத்தில் பறவைகளுக்குத் தண்ணீர் வைங்கன்னு ஆரம்பிச்சு இப்ப, டெலிவரி கொடுக்க வர்ற ‘ஃபுட் டெலிவரி பாய்ஸ்’களுக்கு தண்ணீர் கொடுங்கன்னு வந்திருக்கு!

twitter.com/iravuparavai

பொன்னியின் செல்வன் மேல இருக்கற மிகப்பெரிய விமர்சனமே, அது வரலாறல்ல, வரலாறு போல் திரிக்கப்பட்டு வரலாறு மறைக்கப்பட்டு விட்டதுன்றதுதான். அந்தப் புனைவை வைத்து எடுக்கப்போற திரைப்படத்துல பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கான்னு தேடிட்டு இருக்காங்க நம்மாட்கள். This is why we don’t get license.

twitter.com/chandra_kalaS

இறுகப் பற்றியிருக்கும் பிடி தளரத் தளர நம்பிக்கையின் வேர் மெல்லக் கருகுகிறது.

facebook.com/Primya

Crosswin

ஒரு புல்லாங்குழலின் அத்தனை துவாரங்களுள்ளும் நுழைந்து நுழைந்து புறப்படும் பொன்வண்டாய் உன்னைப் பரிசோதித்துச் சலிக்கின்றேன்... இதில் எந்தப் பக்கமிருந்து நீ என்னை ஆகர்ஷித்தாய்!

facebook.com/Ravikumar M G R

‘‘சார், எந்த பேங்க் க்ரெடிட் கார்டு வாங்குறது நல்லது?’’

‘‘க்ரெடிட் கார்டே வாங்காமல் இருக்குறதுதான் நல்லது...’’

facebook.com/Anitha N Jayaram

வைவோ மொபைல் நிறுவனம் தனது விற்றுமுதலில் ஐம்பது சதவிகிதத்தை, அதாவது 62,476 கோடிகளை, வரி ஏய்ப்பு செய்து பல்வேறு வங்கிக் கணக்குகளின் மூலம் தாய்நாடு சீனாவுக்கு அனுப்பியிருக்கிறது. அமலாக்கத்துறை கடந்த மூன்று நாட்களாக 48 இடங்களில் ரெய்டு நடத்தி இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை 119 வங்கிக் கணக்குகளிலிருந்து 465 கோடியையும், இரண்டு கிலோ தங்கக் கட்டிகளையும், 93 லட்சம் பணமாகவும் அமலாக்கத்துறை கைப்பற்றியிருக்கிறது. வைவோ நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் சரியாக ரெய்டுக்குச் சில நாட்கள் முன்பே சீனாவுக்குத் தப்பியோடிவிட்டார்கள்.

ஆனால் இந்நிறுவனத்தின் மீதான விசாரணை பிப்ரவரி மாதத்திலிருந்தே தொடங்கி நடந்து வருகிறது. ‘நாலு மாசமா அமலாக்கத்துறை என்ன பண்ணிக்கிட்ருந்தாங்க? இந்த ரெய்டை அப்பவே பண்ண வேண்டியதுதானே’ அப்டின்னுதானே கேக்க வர்றீங்க. அதான் மகாராஷ்டிராவில உத்தவ் தாக்கரேவைக் கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியில் உட்கார வைப்பதற்காக சிவசேனா எம்.எல்.ஏ-க்களை வரிசையா ரெய்டு விட்டு விசாரிச்சுக்கிட்ருந்தோம்ல... இப்பத்தானே ஏக்நாத் ஷிண்டே பதவியேத்தாரு. அடுத்த ஆட்சிக் கவிழ்ப்பு அசைன்மென்ட்டுக்கு நடுவில ஃப்ரீ டைம்லதானே இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்க முடியும்?

Malaika Arora : பார்வையிலே பணிய வைத்தாய்!
Malaika Arora : பார்வையிலே பணிய வைத்தாய்!

facebook.com/Karl Max Ganapathy

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து ப.சிதம்பரம் நம்பிக்கையின்மையுடன் ராஜ்யசபாவில் விமர்சித்துப் பேசும் உரை ஒன்றைக் கேட்டேன். ‘காய்கறி வாங்கும் எளிய குடிமகன் இதைப் பயன்படுத்தமுடியுமா’ என்று கேட்கிறார். நான்கூட அது பரவலாக அறிமுகப் படுத்தப்பட்டபோது அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அது மிகப்பெரிய அளவில் வெற்றி யடைந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. பெட்டிக்கடை, காய்கறிக்கடைகள், தெருவோர பழக்கடைகளில்கூட நம்மால் கூகுள் பே பண்ண முடிகிறது என்பதுதான் இன்றைய நிலவரம். ‘விக்ரம்’ படத்தின் வெற்றி போல இந்தியாவின் சில வெற்றிகள் நிபுணர்களால்கூடக் கணிக்கமுடியாதவை!