Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

ஒரு தடுப்பூசியை மூணு வெவ்வேறு விலையில் விக்குற நாட்டுலதான் ஒரே நாடு ஒரே தேர்வு... NEET

வலைபாயுதே

ஒரு தடுப்பூசியை மூணு வெவ்வேறு விலையில் விக்குற நாட்டுலதான் ஒரே நாடு ஒரே தேர்வு... NEET

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/ShivaP_Offl

காசைக் கொடுத்து ஈசியா ஓட்டை வாங்கிவிடலாம். ஆனால் சிலிண்டரை வாங்கமுடியுமா மை லார்ட்?

twitter.com/kumarfaculty

பறவைகளின் இறகால் காது குடையும்போதுதான் தெரிகிறது, பறப்பது எவ்வளவு சுகமானது என்று!

twitter.com/Maddoc

ஒரு தடுப்பூசியை மூணு வெவ்வேறு விலையில் விக்குற நாட்டுலதான் ஒரே நாடு ஒரே தேர்வு... NEET

twitter.com/pachaiperumal23

முன்னொரு காலத்தில் மக்கள் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் குடும்பத்துடன் சென்று வந்ததாகவும் திருவிழா மற்றும் பண்டிகைகளைக் கூட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடியதாகவும் வரலாறு சொல்கிறது.

LaxmiRai: மாஸ்க் முக்கியம் பிகிலு!
LaxmiRai: மாஸ்க் முக்கியம் பிகிலு!

twitter.com/RajeshNovelist

தங்குதடையில்லாமல் டாஸ்மாக் சரக்கு கிடைக்கிறது. சாராய ஆலைகளை ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகளாக சிறிது காலத்திற்கு மாற்றினால் என்ன?

twitter.com/tparaval

ஒருத்தனை விஷம் கொடுத்துக் கொன்னுட்டு, ஆத்திரம் தாங்காம கத்தியால அவனைக் குத்திக் கொல்றதுன்னா என்ன தெரியுமா? ‘பிரேமம்’ படத்தை, நாக சைதன்யா, ஸ்ருதியை மலர் டீச்சரா வச்சி தெலுங்குல ரீமேக் பண்ணுனதை, தமிழில் டப் பண்ணி ‘காதல்’ங்கற பேர்ல கே டிவில போடுறதுதான்...

twitter.com/PeterAlphonse7

நான்கு நாள்களுக்கு முன்பு...

கொரோனா நோயாளியை இந்தூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வர விமான ஆம்புலன்ஸ் கட்டணம் ₹9 லட்சம், உடன் வரும் டாக்டருக்கு ₹35,000

இன்று...

விமான ஆம்புலன்ஸ் ₹24 லட்சம், டாக்டருக்கு ₹3 லட்சம். இதற்கும் மூன்று நாள்கள் காத்திருப்பு.

எங்கே போய் நிற்கும் கொரோனாக் கொள்ளை?

twitter.com/krishnaskyblue

பிஜேபி ஜெயிக்கிற மாநிலத்துக்குத்தான் தடுப்பூசின்னா தமிழ்நாடு, கேரளா பக்கம் இவங்க வாங்கப் போற ஓட்டுக்கு தடுப்பூசி வச்சிருக்கிற கவரைக்கூட தரமாட்டாங்க போலயே!

twitter.com/GreeseDabba2

‘‘தேவைக்கு அதிகமாவே வாங்கியாச்சு மாமா..’’

‘‘ஆக்சிஜன் சிலிண்டரா மாப்ள?’’

‘‘சிலிண்டரா..? ஆட்சியைப் புடிக்கத் தேவையான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை மாமா...’’

facebook.com/revathy.ravikanth

நம் வீட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் ஓர் இடுகாடு உண்டு. இத்தனை வருட வைசாக் வாசத்தில் அது அமைதியாகவே பூட்டப்பட்டி ருந்ததைத்தான் நான் அப்பக்கம் செல்லும்போது கண்டிருக்கிறேன். சமீபமாக ஆம்புலன்ஸில் இருந்து நாளொன்றுக்கு நாற்பது முதல் ஐம்பது உடல்களைத் தகனம் செய்கிறார்களாம்.

Rashmika: குட்டிக்குறும்பும் கள்ளச்சிரிப்பும்!
Rashmika: குட்டிக்குறும்பும் கள்ளச்சிரிப்பும்!

facebook.com/ilango.krishnan.1

போற போக்கைப் பார்த்தா இந்த வருஷமும் பள்ளிக்கூடம் இருக்காது போல... ம்ஹும்! நானெல்லாம் படிக்கிறப்போ இப்படி கொரொனா கிரோனா வந்துச்சா? தீபாவளிகூட ஞாயித்துக் கிழமையா வந்துச்சு கெரகம்!

twitter.com/saravankavi

சோத்துக்கு வழியில்லாமல் செத்தா அது முதல் லாக்டௌன். காத்துக்கு வழியில்லாமல் செத்தா அது ரெண்டாவது லாக்டௌன்.

twitter.com/RahimGazzali

பொதுமக்கள் அனைவரும் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் நுரையீரல் விரிவடையும். நல்ல பலன் கிடைக்கும் - மோடி

மொத்தத்தில் இவர்களின் இயலாமையை மறைக்க என்னவெல்லாம் சொல்றாரு பாருங்க.

twitter.com/ramesh_twetz

கறி வாங்கற அளவுக்குக் காசு இல்லாத ஒருத்தன்தான் கருவாடு கண்டுபிடிச்சிருப்பான்!

twitter.com/Suyanalavaathi

நாளைக்கு ​ஞாயிற்றுக்கிழமை லாக்டௌன்னு இன்னைக்கே மட்டன், சிக்கன் எல்லாம் வாங்கி வைக்கிற நம்ம... இன்னைக்கு நாம மாஸ்க் போட்டாதான், நாளைக்கு கொரோனா அழியும்ங்கிறத ஏன் புரிஞ்சிக்க மாட்றோம்..?

twitter.com/HAJAMYDEENNKS

இந்தியா ஆபத்தில் இருக்கிறது என்பதை இந்தியாவை ஆள்பவர் களைத் தவிர உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்தே இருக்கின்றன!

twitter.com/saravankavi

ஆக்ஸிஜன் பற்றாக்குறை. மூடப்படும் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவு!

மதுரை எய்ம்ஸ்: அப்பாடா, நமக்கு இந்தப் பிரச்னை இல்லை...

twitter.com/narsimp

வடக்கு அழிகிறது; தெற்கு அழுகிறது.

twitter.com/thoatta

இந்த covaxin கோழி, ஸ்டேட் கவர்மென்டுக்காக உரிச்சது, அதனால விலை 600 ரூவா. இந்த covaxin கோழி, பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸுக்காக உரிச்சது, அதனால விலை 1,200/- ரூவா. அதே கோழி உள்ள ஒண்ணு இருக்கு, சென்ட்ரல் கவர்மென்டுக்கு உரிச்சது, வெறும் 150/- ரூபாதான்...

Amy Jackson: ஏஞ்சல் ஏமி!
Amy Jackson: ஏஞ்சல் ஏமி!

twitter.com/skpkaruna

இதுவே காங்கிரஸ் அரசாக இருந்து, இதேபோன்றதொரு பேரிடரில் ஐ.பி.எல் நடந்திருந்தால், பா.ஜ.க கரகாட்டம் ஆடியிருக்காதா? கிரிக்கெட் பேட்டுக்கு மாஸ்க் போட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர் படம் வரைஞ்சு பிரதமருக்கு கொரியர்லே அனுப்பியி ருப்பாங்க!

twitter.com/IamNoorul_Ameen

‘‘ஊரடங்குன்னா என்ன அண்ணா?”

‘‘வெளிநாட்ல இருந்து வரவங்கள உள்ள விட்டுட்டு... வெங்காயம் வாங்கப் போனவங்கள வெளுத்து அனுப்புறதும்மா...’’

twitter.com/manipmp

புத்தகம் வாங்கும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் படிக்கும் வழக்கம்தான் குறைந்துவிட்டது என்பதுபோலத்தான்... மரம் நடும் வழக்கம் அதிகரித்து, அதை வளர்க்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

twitter.com/RagavanG

கமல் நடிப்பு + அரசியல் அன்பர்கள் அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். ‘இயன்றவரை’ இனிய தமிழில் பேசவும் எழுதவும் சொல்லுங்கள். இன்றைய நிலையில் பாசுர பாஷ்ய நடை உங்களுக்கே அலுப்பாக இல்லையா? இதுதான் தனித்துவம் என்றால் தமிழ்த்துவத்தை சற்றே மனதில் கொள்க.

twitter.com/skpkaruna

தவிர்க்கவே இயலாமல் ஒரு திருமணத்துக்குச் சென்றேன். மணமக்களை வாழ்த்தும்போது, ஒரே செகண்ட்! ‘மாஸ்க் கழட்டுங்க சார்’ என்றார் போட்டோகிராபர். Refused Bluntly. கல்யாண போட்டோகிராபர்களைப் பிடிச்சு உள்ளே போட்டால் கொரோனா கட்டுக்குள் வந்துரும்னு மோடிஜியிடம் சொல்லப்போறேன்.

twitter.com/kusumbuonly

இன்னும் எத்தனை வருஷம்தான் ஸ்கூல் எக்ஸாம் எழுதுற மாதிரி கனவு வரும்னு தெரியல. ஒருவேளை ஃபெயில் ஆனதனால எக்ஸாம் பத்தி மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சிட்டுபோல.

twitter.com/DrTRM

எவ்வளவு மரம் வச்சாலும் சுற்றுப்புற ஆக்சிஜன் 21%க்கு மேல அதிகரிக்க முடியாதுன்னு எப்படிப் புரியவைக்க :(

twitter.com/nadodi_Er

சிறுவனை அந்த ரயில்வே ஊழியர் காப்பாற்றியதாக நான் உணரவில்லை. பார்வைத்திறனற்ற தாயின் குற்றவுணர்விலிருந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார் மயூர் ஷெல்ஹே!

twitter.com/mannankkatti

இன்னைக்கு காஸ் சிலிண்டர் விலை 860/- அதோட மானியம் 16/- இதுக்கு பேங்க் அக்கவுன்ட் ஒண்ணு ஆரம்பிச்சு அதோட ஆதார் கார்டு இணைச்சு அதுக்குத் தனியா அக்கவுன்ட்ல 500 ரூபா போட்டு வச்சு இந்தப் பணத்தை எடுக்க ஒரு நாள் பேங்குக்குப் போயி...

facebook.com/மரு பிரபு மனோகரன் பல போராட்டங்களுக்குப் பிறகு இரவு 2.00 மணியளவில் 35% spo2 (saturation) உள்ள பாட்டிக்கு ஒரு படுக்கையும், ஆக்சிஜனும் அளித்துவிட்டு, ‘இப்போ எப்படி இருக்கு பாட்டி’ன்னு கேக்குறன். ‘நீ சாப்டியா கண்ணு’ன்னு கேக்குது. உயிர் போய்விடும் என்று தெரிந்தும் நாங்கள் பட்ட துயரத்தை வேடிக்கை பார்த்த கிழவி, காலை 6.00 மணிக்கு ஜம்முனு உக்கார்ந்திருக்கு.

அந்தக் கிழவிதான் கடவுள்!

twitter.com/altappu

‘எனக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை. அதனால் கொரோனா எங்கேயுமே இல்லை’ - இன்றைய தலைமுறையின் ஜாதி, இட ஒதுக்கீடு குறித்த புரிதலை மொழிபெயர்த்தால் இந்த லட்சணத்தில்தான் இருக்கும்.

STR: மாநாடு மீட்டிங்!
STR: மாநாடு மீட்டிங்!

twitter.com/vjragav76

மாப்ள, பெட்டி வச்சிருக்கிற ரூமுக்கு ஆண்டனாவோட சின்ன சின்ன ரோபோலாம் போவுது மாப்ள.

அது கரப்பான்பூச்சி முருகேசா.

twitter.com/MrElani

ஆர்சிபி யூனிபார்ம்ல இருந்தா, தாகிர் மாம்ஸ் தலைக்கும் தாடிக்கும் தமிழ் சினிமால வர்ற ரோம் நகர அரண்மனை வாயிற்கதவு காவலாளி மாதிரி இருப்பாப்ல...

twitter.com/Suyanalavaathi

போலீஸுக்கு பயந்து மாஸ்க் போடுற பழக்கத்த மாத்தி, கொரோனாவுக்கு பயந்து மாஸ்க் போட ஆரம்பிச்சாலே கொரோனாவ அழிச்சிரலாம்!

twitter.com/GreeseDabba2

இனி வரும் காலங்களில் இப்படியும் ஓர் உரையாடல் நிகழலாம்...

‘‘எந்தத் தடுப்பூசி போட்ட?’’

‘‘கோவாக்சின் போட்டேன்.’’

‘‘அந்தாள் கிட்ட என்ன சொன்ன?’’

‘‘கோவிஷீல்டு போட்டேன்னு சொன்னேன்.’’

‘‘இதுல எதுடா உண்மை?’’

‘‘ரெண்டுமே உண்மைதான்னே!”

‘‘என்னடா சொல்ற?’’

‘‘கோவாக்சின்ல ஒரு குத்து, கோவிஷீல்டுல ஒரு குத்து...’’