twitter.com/narsimp
இந்த சமூக ஆர்வலர்கள் முக்காவாசிப்பேர்ட்ட கேட்கப்படவேண்டிய கேள்வி... சமூகத்தோட எதுல ஆர்வமா இருக்கீங்கன்றதுதான்.
twitter.com/Iyankarthikeyan
பெண் சிறுமி மரணங்களை ரொம்பச் சுலபமாக, காதல் விவகாரம் என்று கிளம்பிவிடும் பழக்கம் அருவருப்பு!
twitter.com/Shanthhi
ஒரு ராசிபலன்ல கிட்டத்தட்ட இப்படிச் சொல்றாங்க: அபாயகரமான இடங்களுக்குச் சென்று செல்ஃபி எடுக்காமலிருப்பது நல்லது...
அடுத்து crypto, nft பத்தியெல்லாம் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.
twitter.com/arattaigirl
புரிதலில் நெருக்கமானவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும்... மன்னிப்பு கேட்கும் முன்பே மன்னித்திருப்பர்!
twitter.com/TheRaavanaa
நல்லா சம்பாதிங்க... ஆனா சம்பாதிக்கிறவனையோ சம்பாதிச்சவனையோ பார்த்துப் பொறாமைப்படாதீங்க. அவன் அந்த இடத்த புடிக்க பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் அவன் நெஞ்சோட தேங்கி நிற்கும்!

twitter.com/Suyanalavaathi
போட்டோகிராபர்க்குக்கூட கேமரா மேல இவ்ளோ பாசம் இருக்காது. ஆனா நம்ம மோடி ஜிக்கு கேமரா மேல இருக்கிற பாசம் சொல்லில் அடங்காது!
facebook.com/Tamil SubramaniamTnpsc குரூப் 4 GS questions:
சரி, Aவ போடலாமா?
போன கேள்விக்குதான A போட்டோம். அப்ப Bய போட்ருவோமா?
அடுத்த Ques-க்கும் Bதான ஆன்ஸரு. அப்ப Cய போடுவோமா?
அது பாத்தா Ans மாதிரியே தெரிலயே. சரி Dய போடுவோமா?
Suddenly mind: வீட்டுக்குப் போனதும் கறிக்குழம்பு வேற சாப்டணுமே! சரி, D வேணா. Aவே போடுவோம்.
இந்த Invigilator வட சாப்டுறானே, ஒரு வாய் கேப்போமா? சரி, C ஓகே. போட்ருவோம்.
twitter.com/NeoDravidian
மன்னிக்கத் தயாரா இருக்கவங்ககிட்டே மன்னிப்பு கேளுங்க. மன்னிக்கிற வாய்ப்ப குடுங்க. அது உறவை வலுப்படுத்தும். தவறுவது மனித இயல்பு. அதை கௌரவக் குறைச்சலா நினச்சி, நான் பண்ணுனது தப்பே இல்லன்னு முடிச்சா it will cost the relationship. புரிதலில் எவ்ளோ நெருக்கம் இருந்தாலும்.

twitter.com/itz_idhayavan
சிஸ்டம் சீரழிந்துவிட்டது என்று சிந்திப்பவர்கள், பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அழைக்கிறேன்: தமிழருவி மணியன்
# போர் வரட்டும் பாஸ், நீங்க போர்வையைப் போர்த்திட்டுத் தூங்குங்க பாஸ்!
twitter.com/sasitwittz
பேங்க் லோன் இன்ட்ரஸ்ட்டை RBI அதிகப்படுத்தும்போது உடனே அமல்படுத்தும், இன்ட்ரஸ்ட்டை RBI கம்மி பண்ணும்போது நாம நேராப் போய் சொல்லி எழுதிக் கொடுத்தாதான் மாறும். இது எப்படி இருக்குன்னா, கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போன பொண்டாட்டியை நாமதான் கை கால்ல விழுந்து போய் கூட்டிட்டு வரணும்.
twitter.com/drkvm
எடப்பாடியார் வசமானது அ.தி.மு.க அலுவலகம்...
# renovation காண்ட்ராக்ட் எனக்குதானே சம்பந்தி?!
twitter.com/Vinithan_Offl
வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது நம்மில் பலர் வீட்டில் இருப்பதில்லை.
twitter.com/shivaas_twitz
அமெரிக்காவுலயே பொறந்து வளர்ந்தவன் கம்முன்னு இருக்கான். கண்ணமங்கலத்துல இருந்து கிளம்பிப் போயிட்டு 90 டிகிரி வெயிலுக்கு ‘ஓ காட்’னு ஃபீல் பண்ணுதுங்க!
twitter.com/Vasanth920
‘‘நீ எத்தனை பிரதமரைப் பார்த்திருப்பே... யாராவது அரிசி, உப்பு, தயிர் இதுக்கெல்லாம் ஜி.எஸ்.டி போட்டாங்களா?”
‘‘இல்ல!”
‘‘ஆனா நான் போடுவேன்!”

twitter.com/DrNagajothi11
‘சமஸ்கிருதம்’ன்னுகூட சமஸ்கிருதத்துல எழுதத் தெரியாதவங்கதான் சமஸ்கிருதத்திற்கு ஆதரவா பேசிக்கிட்டுத் திரியிறாங்க... தொயரத்த!
twitter.com/akaasi
நாட்டின் பொருளாதாரத்தில் சாலையோரக் கடைகளின் பங்கு முக்கியமானது - ஒன்றிய அமைச்சர்.
# அடுத்த கிஸ்தி (GiSThi) இவங்கட்டதான் வசூல் பண்ணப்போறாங்க!
twitter.com/Anandh_Offl
இரண்டு மாசம் முன்ன...
ஏங்க, கிரைண்டர்ல மாவு ஓடுது... பாத்துக்குங்க!
இன்று...
போன வாரம் மாதிரியே இன்னக்கும் மாவு அரைச்சு வெச்சிடுங்க.
# ஒர்க் ஃப்ரம் ஹோம் எவ்ளோ அழகானது!
twitter.com/Kozhiyaar
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்வரைதான் நம்மிடம் எல்லாவற்றையும் சொல்வார்கள். அதற்குப் பிறகு நமக்கு எது தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ, அதை மட்டுமே சொல்கிறார்கள்!
twitter.com/ikrthik
உன்னைக் காதலிக்கிறேன் என்பதற்காக ‘நான்’ எனும் அகங்காரத்தைச் சீண்டாதே... அது எனக்கே கட்டுப்பட்டதல்ல.
twitter.com/skpkaruna
ஒரு இன்டர்நேஷனல் ஓவர்சீஸ் கிரிக்கெட் மேட்ச்... எந்த சேனலிலும் இல்லாமல் தூர்தர்ஷனில் மட்டும் இருப்பதைக் காணவே புதுமையா இருக்கு! ஃபீல்டு அவுட் ஆன பழைய ரவுடி திடீர்னு லுங்கியை ஏத்திக் கட்டுறாப்லே ஒரு சீன்.
twitter.com/teakkadai1
சைக்கிள் ரிப்பேர் கடை வச்சிருக்கிறவர்க்கு, புது ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வச்சிருக்கிறவர விட பழைய ரிப்பேரான சைக்கிள் வச்சிருக்கிறவர்தான் முக்கிய கஸ்டமர்.
twitter.com/Coimbatoraan
முடி வெட்டச் சொன்னா தற்கொலை, படிக்கச் சொன்னா தற்கொலை, டீச்சர் மெரட்டுனா தற்கொலை, வண்டி வாங்கித் தரலைன்னா தற்கொலை... ஒரு தலைமுறையே இப்டி பாழாப்போயிருக்கு. ஆனா பேசறதெல்லாம் கேட்டா... யப்பப்பா!
twitter.com/sasitwittz
‘‘டேய், கலவரத்தில் ஏசியைத் தூக்கிட்டுப் போனவன்தானே... மறுபடியும் இங்க ஏன் வந்த?’’
‘‘அது ஒன்னும் இல்ல சார்... ஸ்டெபிலைசர், ரிமோட் இல்லாம கஷ்டமா இருக்கு..!’’
twitter.com/tamil_typist
உடம்போடு ஒட்டிக்கொண்டு பிளே ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று கதறி அழும் குழந்தையை உரித்தெடுத்து டீச்சரிடம் ஒப்படைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வெளியே போவதற்கு அசாத்திய மனோதிடம் வேண்டும். வெளியில் வந்த அந்தப் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரொம்ப வருத்தப்பட்டார். ஒருநாள் இவன் அழுகை பொறுக்க மாட்டாமல் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக, Work From Home-ல் இருக்கும் மகனும் மருமகளும் போட்ட திட்டில், அந்தக் குழந்தையைப் போல் இவர் அழ நேரிட்டதாம்!
twitter.com/amuduarattai
‘வீட்டுமுறை சமையல்’ என்ற அறிவிப்புப் பலகை உள்ள ஹோட்டல்களில், திருமணமான ஆண்களின் கூட்டம் குறைவாகவே இருக்கும்.
twitter.com/h_umarfarook
பொருளாதார நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகல்
# அங்கே எல்லாம் முன்னாள் ஆட்சியாளர்கள்மீது பழிசொல்லித் தப்பித்துக்கொள்ள மாட்டாங்களோ!
twitter.com/manipmp
அருகில் சில பெண்கள் போனில் பேசுவதைப் பார்க்கும்போது...
# நமக்கே கேட்க மாட்டிங்குதே, அந்தப் பையனுக்கு எப்படிக் கேட்கும்?
twitter.com/mohanramko
‘‘பணம் மட்டுமே நிம்மதியைத் தராது.’’
‘‘வேறென்ன தரும்?’’
‘‘அடுத்து வர்ற என் படங்கள் ஓடினா நிம்மதி தரும்!”
twitter.com/balebalu
பணத்திற்கு என்று தன்னளவில் மதிப்பில்லை: எலான் மஸ்க்
என்ன திடீர்னு ‘நிம்மதி இல்லை, மதிப்பு இல்லை’ன்னு எல்லாப் பணக்காரங்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க!
facebook.com/ilango.krishnan.
நாலோ அஞ்சோ படிக்கும்போது ஊருக்குப் போயிருந்தப்போ எங்க சித்தப்பாவோட ஹார்டுவேர் கடையில ‘சாட்டை வார்’ (மாட்டுச் சவுக்கு) ஒண்ணு குஞ்சம் எல்லாம் வச்சு அவ்ளோ அழகா இருந்துச்சு. பார்த்ததுமே பிடிச்சுப்போச்சு. அது எனக்கு வேணும்னு ஒரே அடம். சித்தப்பா சரின்னு கொடுத்துவிட்டார். ஆசையா அதைக் கொண்டாந்தேன்.
அப்போ இருந்து ஏதும் சேட்டை செய்தா அந்த சாட்டை வார்லதான் அப்பா டிக்கி டிக்கியா வெளுப்பாரு. அப்பா சாட்டை வாரு எடுத்தா நான் ஒரே ஓட்டம்... அடுத்த கணம் பொன்னி நகர் மைதானத்துல இருப்பேன். ஓடறானேன்னு விட மாட்டாரு. மைதானத்த சுத்திச் சுத்தி அடிப்பாரு. சித்தப்பா இறக்கும் வரை நான் அந்தச் சாட்டைவாரை அடம்பிடிச்சு வாங்கிட்டுப் போன கதையைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாரு.
# இதையெல்லாம் சொன்னா இந்தத் தலைமுறை நம்புமான்னுகூட தெர்ல...
twitter.com/mrithulaM
உலக பணக்காரர்களில் 4வது இடத்துல இருக்கிறவர் இருக்கிற நாடும், உலகளவில் பசிக்கான குறியீட்டில் 101வது இடத்துல இருக்கிற நாடும் ஒன்னுதானா?

twitter.com/imthattaan
யாருக்காக, எதற்காக மெனக்கெடுகிறீர்கள் என்பதில் இருக்கிறது உண்மையும் நிராகரிப்பும்!
twitter.com/Suyanalavaathi
வாழ்க்கைல விலைவாசி மாதிரி முன்னேற ஆசைப்படணும்டா... பொருளாதாரம் மாதிரி பின்னேற ஆசைப்படக் கூடாது.
twitter.com/Vasanth920
கணவன் வாயை அடக்க மனைவிகள் யூஸ் பண்ணும் ஒரு மாய மந்திரம், ‘உங்களுக்கு சொன்னா புரியாதுங்க’ என்பதே!