Published:Updated:

வலைபாயுதே...

Sakshi Malik: தேசத்திற்காக....
பிரீமியம் ஸ்டோரி
Sakshi Malik: தேசத்திற்காக....

உணவுப்பொருள்களின் விலையை எழுதாத ஓட்டல்களில் மனநிறைவாகவும் வயிறு நிறையவும் சாப்பிடவே முடிவதில்லை..!

வலைபாயுதே...

உணவுப்பொருள்களின் விலையை எழுதாத ஓட்டல்களில் மனநிறைவாகவும் வயிறு நிறையவும் சாப்பிடவே முடிவதில்லை..!

Published:Updated:
Sakshi Malik: தேசத்திற்காக....
பிரீமியம் ஸ்டோரி
Sakshi Malik: தேசத்திற்காக....

facebook.com/erodekathir

‘சோழர் காலத்தில் டிரம்ஸ் இருந்ததா'ன்னு நண்பர் வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். ‘சோழர் காலத்தில் கேமரா இருந்துச்சா'ன்னு கேட்டு வச்சிருக்கேன். இதில் ப்யூட்டி என்னன்னா, ரெண்டுமே லாஜிக் இல்லாத கேள்விகள்னு ரெண்டு பேருக்குமே தெரியும்!

twitter.com/palkarbetko

மனுஷங்க இரண்டு வகை. ஒன்னு, சுயநலவாதிகள். இன்னொன்னு, தான் சுயநலவாதி இல்லைன்னு நினைச்சிருக்கிறவங்க.

twitter.com/Anvar_officia

ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுறவங்களைவிட, கூகுள் மேப் பார்த்து வண்டி ஓட்டுறவங்கதான் பாதை மாறிப் போயிருக்காங்க!

Karthi: இது வானம் போலே வாழும் பாசம்!
Karthi: இது வானம் போலே வாழும் பாசம்!

twitter.com/saravankavi

உணவுப்பொருள்களின் விலையை எழுதாத ஓட்டல்களில் மனநிறைவாகவும் வயிறு நிறையவும் சாப்பிடவே முடிவதில்லை..!

twitter.com/Kozhiyaar

திடீர்னு ஒருத்தரோட சட்டை பேன்ட்டை எடுத்துப் போட்டுக்கச் சொன்னா எப்படி உங்களுக்குப் பொருந்திப்போகாதோ, அதே மாதிரிதான் மற்றவரின் நிலை அறியாமல் அவரைப் பற்றிச் சொல்லும் உங்களின் கருத்தும்!

twitter.com/ImAvudaiappan

பாதிக்குப் பாதி ஜோதிடர்கள் ஒரே ‘டெம்ப்ளேட்’தான் பயன்படுத்துகிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் அவர்கள் சாமர்த்தியம் மறைந்திருக்கிறது!

twitter.com/FareethS

மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை - ரஜினி

# ‘மீண்டும்'னா... இதுக்கு முன்னாடி நீங்க அரசியல்ல இருந்தீங்களா?

twitter.com/manipmp

பூரண சுதந்திரம் என்பது, தற்பெருமை பேசுவோரிடமிருந்து தப்பித்து ஓடுவதே!

facebook.com/ramanujam.govindan

வாழ்க்கையில் இரண்டே இரண்டு காலகட்டங்கள்தான் சோதனையானவை... 1. பிறந்ததிலிருந்து நாற்பது வயது வரை, 2. நாற்பது வயதிலிருந்து இறப்பு வரை!

twitter.com/amuduarattai

எந்த வங்கியாவது கடன் கொடுப்பதற்காக, நம் குடும்ப உறுப்பினர்களுக்கு விரோதமான எந்தச் செயலையும் நாம் செய்ய மாட்டோம். ஆனால் உலக வங்கி கடன் கொடுக்கும் என்றால், மக்கள் விரோதத் திட்டத்தைச் செய்ய எந்த அரசும் தயங்காது.

Sakshi Malik: தேசத்திற்காக....
Sakshi Malik: தேசத்திற்காக....

twitter.com/Suyanalavaathi

அட்வைஸ் கொடுக்குறது கடன் வாங்குற மாதிரி, நல்லா இருக்கும். அட்வைஸ் கேக்குறது வட்டி கட்டுறது மாதிரி, கஷ்டமா இருக்கும்!

twitter.com/manipmp

தட்டிக் கொடுக்க ஆயிரம் வழிகள், தட்டிக் கழிக்க ஆயிரம் காரணங்கள்..!

twitter.com/Kannan_Twitz

தொலைந்துபோன நானும், நீ கண்டெடுத்த நானும் ஒன்றல்ல!

twitter.com/TheRaavanaa

இங்கே புலம்பி எந்தத் துயரும் தீர்வதில்லை, எந்தக் காயமும் ஆறுவதில்லை, எந்த மனமும் கனிவதில்லை என்பதெல்லாம் எனக்கும் தெரியாதா என்ன? ‘பின் ஏன் இந்தப் புலம்பல்களைக் கட்டிக்கொண்டு அழுகிறாய்' என்றால் இதை விட்டால் எனக்கு வேறு சமாதானங்கள் இல்லை, இதை விட்டால் எனக்கு வேறு போக்கிடமும் இல்லை.

twitter.com/Thaadikkaran

2024 தேர்தலிலும் நீங்கதான் ஜெயிக்கணும்... பிரதமர் மோடிக்கு ராக்கிக் கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி!

# கொரியர்ல அனுப்பச் சொல்லுங்க... அப்போதான் மிஸ் ரூட் ஆகி பாகிஸ்தானுக்கே போயிரும்..!

twitter.com/Iyankarthikeyan

படிக்க வா என்று சொல்லும் ஊரில், ‘சிலை உடைக்க வா' என்று அழைக்கும் கூட்டம்... வடிவேலுவிடம் கிட்னி திருட சண்டைக்கு வா என அழைக்கும் பயலுக்குச் சமம்... உஷாரா இருங்கப்பே!

twitter.com/ItsJokker

என்னது, 10 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி பண்ணுனதும், வங்கிக்கடன் 31 பைசா பாக்கிக்காக NOC கொடுக்காதது நடந்ததும் ஒரே நாட்டிலயா?

twitter.com/RKRadhakrishn

சீனா ஏன் தைவானை முடக்கும் வகையில் எந்த App-பையும் தடை செய்யவில்லை? எனக்கு ஒரே குழப்பம். புரிந்துகொள்ள முடியவில்லை.

Ananya Pandey: செம்பூக்கள்!
Ananya Pandey: செம்பூக்கள்!

twitter.com/Jameela_JLMPK

5ஜி தொழில்நுட்பத்தைத் தனியாருக்குக் கல்லமிட்டாய்க் காசுக்கு வித்துட்டு, பொதுத்துறை BSNL-லை நடுத்தெருவில் நிறுத்தி, ட்விட்டர்ல மூவர்ணக் கொடியை டிபில வச்சிக்கறதுக்குப் பெயர்தான் தேசபக்தி.

twitter.com/Thaadikkaran

‘‘கல்யாணம் பண்ணுங்க சார்... லைப் நல்லா இருக்கும்!’’

‘‘யார் லைப்?''

‘‘கல்யாணம் நடத்தி வைக்குற ஐயர் லைப்.''

facebook.com/nchokkan

‘‘என் கணவர் ரொம்பக் கோவக்காரர்’' என்றார் அலுவலக நண்பர் ஒருவர். ‘‘சின்ன வயசுல அவங்கப்பா அவருக்குக் கார் ஓட்டக் கத்துக்கொடுத்திருக்கார். ஆனா, இவர் சரியாக் கத்துக்கலை. அதனால, அவங்கப்பா கன்னாபின்னான்னு திட்டிட்டார். இவருக்கு ரொம்ப அவமானமாகிடுச்சு. இனி எப்பவும் கார் ஓட்டமாட்டேன்னு தீர்மானிச்சுட்டார்.'’

‘‘அட, அப்புறம்?'’

‘‘அப்புறம் என்ன? கார் ஓட்டறதுதான் கஷ்டம், ஓட்டாம இருக்கறது ஈஸிதானே. எங்களுக்குக் கல்யாணம் ஆனப்புறம் அவருக்கும் சேர்த்து நான்தான் கார் ஓட்டினேன். உள்ளூர்ல ஷாப்பிங் போனாலும் சரி, வெளியூருக்குப் போனாலும் சரி, மணிக்கணக்கா நான்தான் டிரைவர். ஒரே போர்.'’

‘‘அடடா!'’

‘‘ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, இப்ப அவர் சூப்பரா கார் ஓட்டறார்.'’

‘‘அட, அது எப்படி?’'

‘‘நான் கர்ப்பமா இருந்தபோது ஒருநாள், ‘திடீர்னு நடு ராத்திரியில எனக்குப் பிரசவ வலி எடுத்தா யார் என்னை ஆஸ்பத்திரிக்குக் கார்ல கூட்டிக்கிட்டுப் போவாங்க’ன்னு மெதுவாக் கேட்டேன். அவ்ளோதான், அடுத்த பதினஞ்சு நாள்ல என்கிட்ட சமர்த்தா கார் ஓட்டக் கத்துக்கிட்டார்.’'

ஒரு தீவிர உணர்வில் குத்திய முள்ளை அதற்கு இணையான இன்னொரு தீவிர உணர்வால்தான் எடுக்கவேண்டும்போல!

Rishabh Pant: ஜெயிச்சுட்டோம் மாறா!
Rishabh Pant: ஜெயிச்சுட்டோம் மாறா!

twitter.com/Greesedabba2

என் வாழ்க்கையை திரும்ப 21 வயசுல இருந்து தொடங்கி, ஏற்கெனவே பண்ணுன தப்பு எதையும் பண்ணாம புதுசா வேற தப்பு பண்ணி வாழ்க்கையை வேற மாதிரி கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிக்கணும்னு நிறைய ஆசை இருக்கு!

twitter.com/pandi_prakash_

அன்பு எல்லா நேரமும் அன்பைப் பெறாது; அவ்வப்போது அகவலியை மொத்தக் குத்தகைக்குப் பெற்றுவிடும்.

twitter.com/Maddoc_

கடவுள் கிட்டத்தட்ட பாராசிட்டமால் மாதிரி... மனுஷனுக்கு அந்த நேரத்துக்குக்குத் தேவையான அளவுக்கு எடுத்துட்டா நல்லது. தேவையைத் தாண்டி எடுத்துட்டா தேவையில்லாத பிரச்னைகள்தான் வரும்.

twitter.com/iam_nithankrish

வ.உ.சி-யின் கனவை மோடி நிறைவேற்றுகிறார் - எல்.முருகன்

# சுதேசிக் கப்பல் வாங்கி விட்டவன்டா நானு! நான் எப்ப அரசு சொத்துகளை வித்தேன்?

twitter.com/mekalapugazh

‘ஒரு நாடு... ஒரு மொழி'யின் நீட்சிதான் Pan India படமும். கதையை Pan Indiaவாக மட்டுமல்ல Pan World ஆகக்கூட சிந்திக்கலாம். ஏனெனில் மனித உணர்வுகளில் மாறுபாடு கிடையாது. ஆனால் வாழ்விடம், மொழி, உடை, உணவு போன்றவற்றில் PAN India என்பது மாநில மொழி/பண்பாட்டினைச் சிதைக்கும் முயற்சியே.

twitter.com/subramaniandeva

இணையத்துல பேசறவனுங்க வீட்டுல படிப்பறிவு குறைந்த பெண்கள், வயசானவங்க எல்லாம் இருக்க மாட்டாங்களா? வண்டியோட முன்ன பின்ன பெயின்ட் அடிப்பது ஒரு அடையாளத்துக்கு... அதைப் பாத்து சுலபமா இலவசப் பேருந்தில் ஏற உதவும். எது பண்ணுனாலும் நொட்ட சொல்றாங்க!

twitter.com/saravankavi

ஹோட்டல்ல வேலை செய்றவங்க எல்லாம் அதே ஹோட்டல்லதான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கறதும், லைப்ரரிக்குள்ள இருந்து வர்றவங்கல்லாம் படிச்சிட்டு வர்றாங்கன்னு நினைச்சுக்கறதும் மூடநம்பிக்கைகள்!

twitter.com/Vasanth920

மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை - ரஜினிகாந்த்.

# தமிழருவி சார், கேட்டுச்சா? கடைய சாத்துங்க.

facebook.com/saravanakarthikeyanc

அதுல ஒரு ரஜினி ரசிகர் சொல்றார்: ‘‘தலைவர் அரசியலுக்கு வர மாட்டேன், ஆனா ஆளுநரிடம் அரசியல் பேசினேன் அப்படின்னு சொல்றார். அப்ப மின்சார மசோதா கூடாதுன்னு மத்திய அரசை ஹார்ஷ்ஷா எச்சரிக்கத்தானே போய் சந்திச்சிருப்பார்!’’

facebook.com/vinayaga.murugan.7

ஆஸ்திரேலியாவுக்குள் நுழையமுயன்ற இலங்கை அகதிகளை அந்த நாட்டு ராணுவம் கைது செய்து மீண்டும் இலங்கைக்கு அழைத்துச்சென்று இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்க, அவர்களை இலங்கை அரசு கைது செய்ததாகச் செய்திகளில் படித்தேன். வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியா இப்படிச் செய்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறையின்படி, ஒருத்தர் அவரது சொந்தநாட்டில் உள்நாட்டுப் போர், வன்முறை, வாழவே வழியில்லாமல் வரும்பட்சத்தில் அவரை அகதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உள்ளது. இப்போது தமிழ்நாட்டுக்குள் வரும் அகதிகளைக் கைது செய்து புழல் சிறையில் அடைக்கிறார்கள். போர் அகதிகளாக வந்தபோது அவர்களை முகாமில் தங்க வைத்தார்கள். போர் நின்றபிறகு இப்போது வரும் அகதிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அந்த அளவுகூட ஆஸ்திரேலியா நடந்துகொள்ளாமல் அண்மைக்காலமாக கடுமையாக நடந்துகொள்கிறது. உயிருக்கு ஆபத்தான முறையில் எல்லாத்தையும் விற்று படகு ஏஜன்ட்களுக்கு ஐந்து லட்சம் வரை கொடுத்து சிறுசிறு படகுகளில் ஏறி வெறும் பிஸ்கட், நீரை மட்டும் குடித்து, பதினைந்து நாள்கள் கொந்தளிக்கும் ஆபத்தான கடலில் பயணம் செய்து கிட்டத்தட்ட செத்துப்போய் ஆஸ்திரேலிய கடல் எல்லையில் நுழைகிறார்கள். அவர்களை மீண்டும் பிடித்துவந்து இப்படி இலங்கையில் விடுவதைவிட கடலில் பிடித்துத் தள்ளிவிட்டிருக்கலாம்.