Published:Updated:

வலைபாயுதே

வரலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வரலட்சுமி

கடையில் கோழியை அறுக்கும்போது பார்த்துப் பரிதாபப்படறான்... கொழம்புச் சட்டியில் பார்த்து எச்சிலும் விடறான்... என்னா மனுஷனுங்கய்யா..!

வலைபாயுதே

கடையில் கோழியை அறுக்கும்போது பார்த்துப் பரிதாபப்படறான்... கொழம்புச் சட்டியில் பார்த்து எச்சிலும் விடறான்... என்னா மனுஷனுங்கய்யா..!

Published:Updated:
வரலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வரலட்சுமி

twitter.com/urs_venbaa

ட்யூஷன் பீஸும், டாக்டர் பீஸும் எப்பவும் சலிச்சுக்கிட்டேதான் கொடுக்கிறாங்க.

twitter.com/balasubramni1

“தமிழ் ராக்கர்ஸ் பாத்தாச்சுண்ணே...’’

“எதுலடா பாத்த?”

“தமிழ் ராக்கர்ஸ்லதாண்ணே!”

twitter.com/niranjan2428

இலவசம் கொடுப்பதால்தான் தமிழ்நாடு கெட்டுப்போய் உள்ளது, மாநிலம் வளராமல் இருக்கிறது: இது இலவச நலத்திட்டங்களுக்கு எதிரான கருத்து கூறுபவர்களின் வாதம். இது உண்மையெனில் இலவசம் கொடுக்காத So called மாநிலங்கள் ஆகா ஓகோ என்று வளர்ந்திருக்க வேண்டும்தானே?”

Junior NTR: அரசியல் அல்ல!
Junior NTR: அரசியல் அல்ல!

twitter.com/idumbaikarthi

அண்மையில் கணவரை இழந்த நடிகையைக் குறிப்பிட்டு, ‘அவரைக் காதலித்தீர்களா?’ என ஒரு அரசியல் தலைவரிடம் கேட்பது எவ்வளவு மோசமான அணுகுமுறை? நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டு எதிரே அமர்ந்துவிட்டாரென்பதற்காக, கேமராவை ஆன் செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்பது எவ்வளவு அற்பத்தனமான TRP வெறி?

twitter.com/JamesStanly

ஆப்பிள் வாட்ச் கட்டுங்க... ஹார்ட் அட்டாக்க முன்னமே சொல்லிரும்...

# சார்ஜ் போட்ருக்கப்ப வந்துட்டா..?

twitter.com/Kozhiyaar

வயது ஏற ஏற, தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன!

twitter.com/angry_birdu

சந்திரசேகர்னு ஒரு நடிகர். எல்லாப் படத்துலயும் யாரையாவது காப்பாத்த குறுக்க பாய்ஞ்சு குண்டடிபட்டு சாகுறதுதான் அவரோட ரோல். நாம் தமிழர் கட்சி என்பது பா.ஜ.க-வின் சந்திரசேகர்.

twitter.com/rmuthukumar

நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டவன் அல்ல!

இப்படிக்கு,

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.எல்.ஏ., எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர்.

twitter.com/Iyankarthikeyan

பச்சக் குழந்தை, குடும்பம் எல்லாத்தையும் கொன்று கர்ப்பிணிய பாலியல் வன்புணர்வு செஞ்ச கூட்டத்தை மலர் போட்டு வரவேற்கும் கூட்டம், தேசியக்கொடி கட்டாதவன்தான் தேசத் துரோகின்னு கத்தும்!

twitter.com/Suyanalavaathi

முன்னாடி எல்லாம் ஹோட்டல்ல சாப்பிடப் போனா, dish வந்ததும் சாப்பிட்டு, சூடா இல்ல, உப்பு கம்மியா இருக்கு, காரம் அதிகம்னு பேசிப்பாங்க. இப்பெல்லாம் dish வந்ததும், போட்டோ எடுத்துட்டு, வெளிச்சம் பத்தல, shadow விழுந்திருக்கு, clarity இல்லன்னு பேசிக்கிறாங்க!

# காலமாற்றம்

Anupama : கர்லி கேர்ள்!
Anupama : கர்லி கேர்ள்!

twitter.com/RKrakrish

வாழ்க்கைய வாழ்றதுக்கும், ஓட்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...

twitter.com/sasitwittz

5 மணி நேரம் எடுத்த படத்தை எடிட் பண்ணி அத பாதியா ரிலீஸ் பண்ணுனா ‘மூவி.’ அதை அப்படியே ரிலீஸ் பண்ணுனா ‘வெப்சீரிஸ்.’

twitter.com/whitecloud_pri

உண்மை நேசம் எல்லையற்ற கவலையை மட்டும்தான் தரும்.

twitter.com/saravankavi

கடையில் கோழியை அறுக்கும்போது பார்த்துப் பரிதாபப்படறான்... கொழம்புச் சட்டியில் பார்த்து எச்சிலும் விடறான்... என்னா மனுஷனுங்கய்யா..!

twitter.com/sasitwittz

அன்பின் ஆழம் தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு மூழ்கிப்போவதைவிட சமயம் கிடைத்தால் தப்பித்துக்கொள்ள முயல வேண்டும். அதுவே சாலச் சிறந்தது!

twitter.com/Kozhiyaar

கூட்டுத் திருட்டில் சிக்கிவிட்டால், அப்பாவிடம் அப்ரூவராக மாறிவிடுவதில் தங்கையே கில்லாடி!

twitter.com/Thaadikkaran

நம்மகிட்ட கவலைகளைச் சொல்ல வர்றவங்ககிட்ட போல்டா பேசுவோம். அவங்களும் நம்மகிட்ட பேசிட்டு ஆறுதலா போவாங்க. ஆனா பாருங்க, நம்மோட கவலை லாரில பின்னாடி நிக்கும்.

twitter.com/punithanadv

இலவசங்களுக்கு எதிராகப் பொங்கும் நீதிபதிகள், தாங்கள் அனுபவிக்கும் இலவசங்கள் குறித்தோ, கட்சிகளின் தேர்தல் நிதி என்ற பெயரில் முதலீடு செய்யும் முதலாளிகள் குறித்தோ பேசமாட்டார்கள்!

twitter.com/Suyanalavaathi

கெத்தா சிக்ஸ் பேக் வைக்கணும்ங்கிறதுல ஆரம்பிச்சு, எப்படியாவது தொப்பைய குறைக்கணும்ங்கிறதுல வந்து முடிகிறது ஆண்களின் பேராசை!

twitter.com/mohanramko

‘என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன்’ என்று சொல்பவருக்குப் பெயர் இன்ஜினீயர்.

Mohanlal: Mohanlal
Mohanlal: Mohanlal

facebook.com/revathy.ravikanth?

‘‘நீதான படம் மொக்கைன்னு சொன்னது... அப்பறம் திருப்பி வந்துருக்க..?”

‘‘பாப்கார்ன் வாங்கலாம்னு வந்தேன்ங்க...’’

facebook.com/sowmya.ragavan?

சுடுதண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு. அதை உணரணும்னா நமக்குச் சளி பிடிச்சிருக்கணும்!

facebook.com/mani.pmp.5

வாய்ப்பு கிடைச்சவன் தியேட்டர்ல படம் பார்க்கிறான். வாய்ப்பு கிடைக்காதவன் தியேட்டர் பிரின்ட்ல படம் பார்க்கிறான்.

facebook.com/Vinayaga Murugan‘‘என்னதான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா செத்துப்போயிட்டாருங்க பாருங்க.’’

‘‘சார் என்ன செய்றீங்க?’’

‘‘ரிஸ்க், டென்ஷன் அதிகம் இல்லாத வேலைதாங்க நிம்மதி. ஹெல்த் முக்கியமில்லையா? அதான் எங்க அப்பாவுக்கு உதவியா இருக்கேன்.’’

‘‘உங்க அப்பா என்ன செய்றார்?’’

‘‘வீட்ல சும்மாதாங்க இருக்கார்.’’

facebook.com/RedManoRed

எந்தத் தவறு செய்யும்போது உங்களுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லையோ, அந்தத் தவற்றை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

twitter.com/Anvar_officia

கடவுளுக்கு அடுத்தபடியாக தூணிலும் துரும்பிலும் இருப்பது ஜி.எஸ்.டிதான் போல!

Varalaxmi: பச்சை நிறமே!
Varalaxmi: பச்சை நிறமே!

twitter.com/kusumbuonly

பணம் இருக்கிறவன் படிக்கட்டும் என்று விடாமல், பணம் இல்லாதவன் குழந்தை என்ன செய்யும் என்று யோசித்து, பள்ளிக்கூடம் வந்தால் சாப்பாடு போடுவோம் என்றார்கள். அந்த இலவச சாப்பாடுக்காகப் பலர் தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினார்கள். ஒற்றை லைட் வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்று இருந்தது, ரைசிங் ஐகான் விருது வாங்கிய சீமானுக்குத் தெரியுமா? அதன்மூலம் எத்தனை மாணவர்கள் படித்து வேலைக்குச் சென்றனர் தெரியுமா? இலவச பஸ் பாஸ் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதால் எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு எளிதில் கல்வி கிடைத்தது என்றாவது தெரியுமா? இப்பொழுது மகளிருக்காகக் கொடுக்கப்பட்ட இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைக்கூட ‘யார் கேட்டா, நீங்க கொடுக்குறீங்க’ என்று கேட்கிறீர்கள். இந்தத் திட்டத்தினால் பல ஊர்களில் இருந்து பேருந்து ஏறி பல பெண்கள் வேலை தேடி அருகில் இருக்கும் டவுனுக்கு தினம் செல்கிறார்கள். அப்படி வேலை தேடி வரும் பெண்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில், தினம் 50 ரூபாய் செலவு செய்து வேலை தேடி வர முடியாது. இப்ப இலவசம் என்பதால் வருகிறோம் என்றார்கள். இதன் பலன் இன்னும் சில வருடங்கள் கழித்துத் தெரியும்.

உங்களுக்குத் தேவைப்படாத ஒன்று யாருக்கும் தேவைப்படாது என்று நினைத்துவிடாதீர்கள். இலவசங்களால் பயன் அடைந்தோர்களிடம் அதுபற்றிப் பேசிப் பாருங்கள். கடைசியாக ஒன்று. எல்லாம் இருக்கிறவன் பார்வையில் இலவசம் எல்லாம் அனாவசியம். ஆனால் எதுவும் இல்லாதவனுக்கு அது அவனுக்கான உரிமை, அது அவனுக்கு அவசியம். இலவசங்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

twitter.com/shivaas_twitz

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்குன்னு சொல்றாங்க. மிச்சம் 999 வழிகள் என்னன்னுதான் தெரியல.

twitter.com/Lakshmivva1

ஆட்கள் கரையேறுகிறார்கள்ஆட்கள் மூழ்குகிறார்கள்கரைகளைப் பற்றி என்ன இப்போது?பயணித்தலே படகு!

twitter.com/chockshandle

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நபரையும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறாரா இல்லையா என்று விமர்சனக் கண்ணாடி கொண்டு காண வேண்டியதில்லை.

twitter.com/LAKSHMANAN_KL

தி.மு.க தோன்றிய நாளிலிருந்து அதை வீழ்த்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்: திருமாவளவன்.

# ஆமா வாத்தியாரே... ‘மக்கள் நலக்கூட்டணி’ கூட அமைச்சாங்களே?!

twitter.com/manipmp

அக்கறையின் அன்லிமிட்டெட் வெர்ஷன்தான் தொந்தரவு.

twitter.com/Anvar_officia

ஆணோ, பொண்ணோ... ‘ஸ்லிம்மா இருக்க’ன்னு சொன்னா சந்தோஷப்படுறாங்க, அதுவே ‘இளைச்சிட்ட’ன்னு சொன்னா கோபப்படுறாங்க!

twitter.com/oorkkavalaan

எல்லா முதல் காதலும் ‘வடக்குப்பட்டி ராமசாமிக்கு’ கவுண்டமணி கொடுத்த பணம் மாதிரிதான், திரும்ப வரவே வராது..!

twitter.com/Greesedabba2

பி.எஸ்ஸி, பி.காம்னு படிச்சுருக்காங்க... ஈமெயில் ஐடி சொன்னா, smallஆ, capsஆன்னு கேட்கறாங்க.