Published:Updated:

வலைபாயுதே...

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

சண்டேக்களில் ஆகும் செலவுகளைக் குறைப்பதில் புரட்டாசி மாதத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு...

வலைபாயுதே...

சண்டேக்களில் ஆகும் செலவுகளைக் குறைப்பதில் புரட்டாசி மாதத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு...

Published:Updated:
தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

twitter.com/Thaadikkaran

ஆரம்பத்துல கெமிஸ்ட்ரி கத்துக் கொடுத்துட்டு, இறுதில பிளாசப்பி பேச வச்சிருது காதல் :)

twitter.com/amuduarattai

அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குப் போக வேண்டிய நேரம் வரும்போது கண்டிப்பாகச் செல்வேன் - சசிகலா

# பெங்களூர் ஜெயிலில் இருக்கும்போது ஷாப்பிங் போன உங்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா சின்னம்மா?!

twitter.com/ss_twtz

பரிசுத்த மௌனமென்பது பேசாதிருத்தல் மட்டுமல்ல, எதனையும் கவனிக்காமல் இருப்பதும்கூட!

twitter.com/Anvar_officia

டி.வி சத்தத்தைக் கூட்டினால் நம்ம வீட்டில் சண்டை என அர்த்தம், டி.வி சத்தத்தைக் குறைத்தால் பக்கத்து வீட்டில் சண்டை என அர்த்தம்!

Ramya Krishnan: பார்வையே சாசனம்!
Ramya Krishnan: பார்வையே சாசனம்!

twitter.com/Kozhiyaar

ஆடி மாசத்தில் ஆடைகளுக்குத் தள்ளுபடி தருவது போல, புரட்டாசி மாசத்தில் கறிக்குத் தள்ளுபடின்னு சொன்னா வியாபாரம் பிச்சிக்கிட்டுப் போகும்!

# ஐடியா இல்லாத பசங்க!

twitter.com/sasitwittz

சென்னையில ஒரு ரூட்ல ரொம்ப நேரமா பஸ் வரலன்னா, ரெண்டு, மூணு பஸ் ஒண்ணு பின்னாடி ஒண்ணா வருதுன்னு அர்த்தம்!

twitter.com/HilaalAlamTamil

மனிதன் உருவாக்கிய நிறுவனங்களிலேயே ஆற்றல் வாய்ந்தது மதம். ஏதேனும் தடங்கல் நேர்ந்தால், அதனைக் காக்க எந்த எல்லைக்கும் செல்லும். மதத்தைக் கல்வி வீழ்த்தும் என எதிர்பார்த்தோம்; ஆனால் அது அதனை வைத்தே வளர்ந்தது. மதத்தை அறிவியல் வெல்லும் என நினைத்தோம்; ஆனால் அது போலி அறிவியலால் வளர்கிறது.

twitter.com/imcomrade

பாட்ஷா, நாயகன், தலைவா, ஜனா, அஞ்சான், வெ.த.கா, KGF... அது ஏன் டான் ஆகணும்னா மும்பைக்குத்தான் போகணுமா? இந்த டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத்லாம் போகமாட்டீங்களா?!

twitter.com/AmalJos95950131

இன்னா சார், சுவிட்சர்லாந்து போய் கறுப்புப் பணத்தைக் கொண்டாருவீங்கன்னு பாத்தா, ஆப்பிரிக்கா போய் சிறுத்தை கொண்டாறீங்க?

twitter.com/Iyankarthikeyan

கடைக்கு நீயெல்லாம் வரக்கூடாது எனச் சொன்னவன் கடைக்கு சீல்... அந்தக் கடைக்கு நீயே போக முடியாது ப்ரோ!

twitter.com/niranjan2428

கடந்த 100 ஆண்டுகளாக தமிழகத் தலைவர்கள் ஒரே திட்டத்திற்குச் செய்த செய்கை! ‘படிக்கப் போய்ட்டா சோத்துக்கு என்ன பண்ணுவ’ என அவர்கள் சொன்னார்கள். ‘நீ படிக்க வா, நான் சோறு போடுறேன்’ என இவர்கள் சொன்னார்கள். இந்த ஒற்றைப் பிடி சோறுதான் தக்காணப் பீடபூமிப் பெரும்பகுதியின் பூகோளத்தை மாற்றியது.

Mrunal Thakur: டூத்பேஸ்ட் விளம்பர சிரிப்பு!
Mrunal Thakur: டூத்பேஸ்ட் விளம்பர சிரிப்பு!

facebook.com/saravanakarthikeyanc

தமிழக பா.ஜ.க-வின் மூன்று முக்கியத் தலைவர்கள்: அண்ணாமலை, எல்.முருகன், கார்த்தி சிதம்பரம். ஹெச்.ராஜாவே அதற்கு அப்புறம்தான் வருவார்.

twitter.com/karkyjohnson

ஒரு ஃப்ரிட்ஜ் திறக்கும்போது லைட் எரிவதும், மூடும்போது லைட் அணைவதுமான ரகசியம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாமல் அவர்கள் அந்த ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்து மூடியே இந்த உலகம் நகரட்டும். பகலில் ஃப்ரிட்ஜ் லைட் எரிவது பற்றின கவலையை பெரியவர்கள் மட்டும் சுமந்துகொள்ளட்டும்...

twitter.com/Kozhiyaar

வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல, நாம செய்கிற தப்புக்கு மனைவியிடம் திட்டு வாங்குவதைவிட, நம் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்குத் திட்டு வாங்குவதே அதிகம்!

twitter.com/Aakashkannan96

யானையைப் புதைக்கத் தோண்டிய குழிக்குள் பறவையின் இறகொன்று விழுகிறது..!

twitter.com/LAKSHMANAN_KL

‘பொங்கல்’ என்றாலே திராவிட மாடல்தான் ஞாபகம் வரும்! - இ.பி.எஸ்

# ‘இட்லி’ என்றாலே அப்போலோ ஞாபகம் வர்ற மாதிரியா..?!

twitter.com/THARZIKA

புரிந்துகொள்ளாத இடத்தில் அன்பை நிரூபித்துக் கதறி அழுவதைவிட, விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பதே நிம்மதி.

twitter.com/Sabarish_twittz

சண்டேக்களில் ஆகும் செலவுகளைக் குறைப்பதில் புரட்டாசி மாதத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு...

twitter.com/sultan_Twitz

Me: வெந்து தணிந்தது காடு பாக்கணும்... பொன்னியின் செல்வன் - 1 பாக்கணும்...

Life: மொத திரும்பி என்னப் பார்றா..?!

twitter.com/IlovemyNOAH2019

வங்கி கஸ்டமர்: எனக்குக் கடன் வேணும்!

வங்கி மேலாளர்: என்ன மாதிரியான கடன்?

வங்கி கஸ்டமர்: ஏதோ வாராக்கடனாமே... அதானி, அம்பானிக்குக் கொடுப்பீங்களாமே... அந்தக் கடன்தான் வேண்டும்!

Dhanush: எப்படி நம்ம கெட்டப்?
Dhanush: எப்படி நம்ம கெட்டப்?

facebook.com/ஃபௌசியா

படத்தை எடுக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து சிம்புகிட்ட ‘நல்லா தூங்கி எந்திரிச்சு வாப்பா, அப்பதான் நான் சொல்லறது உனக்குப் புரியும்’ன்னு சொல்லிச் சொல்லி, பழக்கதோஷத்துல அதையே ஜி.வி.எம் சொல்லிட்டாரோ என்னவோ… அதுக்குன்னு சொல்லி வச்சா மாதிரி ஏன்யா எல்லாரும், ‘ஏன், இல்லாட்டி தியேட்டர்ல தூங்கிடுவோமா? ஹா ஹா ஹா’ன்னு ஒரே ஜோக்க திருப்பித் திருப்பி எழுதி வச்சிருக்கீங்க!

twitter.com/Suyanalavaathi

ஆடித் தள்ளுபடியோட நவீன வெர்ஷன்தான், இந்த ‘பிக் பில்லியன் டே!’

twitter.com/amuduarattai

நரிக்குறவர்களைப் பழங்குடியினராக அறிவிக்க பா.ம.க-வின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி -அன்புமணி ராமதாஸ்

# அப்போ, இதுவும் பா.ம.க-விற்குக் கிடைத்த வெற்றிதானா?!

twitter.com/PG911_twitz

தி.மு.க அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது - ஹெச்.ராஜா

# மறுபடியும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாதகம் பார்த்திருப்பார் போல!

twitter.com/Kozhiyaar

உண்மையில் மொபைல் போனைத்தான் நாம் தெளிய வைத்துத் தெளிய வைத்து அடித்துக்கொண்டிருக்கிறோம்!

facebook.com/NaveenKumarN85?

ஆள், பேச்சு எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சிம்பு நியாயப்படி இலக்கியவாதி ஆகியிருக்க வேண்டும். ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

facebook.com/Sowmya Ragavan

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாராவது நம்மைத் தொடர்பு கொண்டு அன்பா விசாரிச்சாவே... அவங்க ஏதாவது MLM ஸ்கீம்ல ஜாயின் பண்ணிருக்காங்க, இல்லன்னா LIC ஏஜெண்ட் ஆகிருக்காங்க.

facebook.com/Vinayaga Murugan

‘‘ஐம்பது வயசுக்குள்ள எப்படியாச்சும் வாழ்க்கையில ஐம்பது கோடி சம்பாதிச்சுடணும்.’’

‘‘அப்புறம்?’’

‘‘வசதியா பால்கனியில் ஊஞ்சலில் உட்கார்ந்துகிட்டு ‘காசு, பணம் மட்டும் வாழ்க்கை இல்லீங்களே’ன்னு பேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு மத்தவங்களை வெறுப்பேத்தணும்!”

twitter.com/manipmp

உதவி கேட்பவர்களைவிட, ஒரு சின்ன helpனு ஆரம்பிப்பவர்களே பீதியைக் கிளப்புகின்றனர்.