சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே!

வலைபாயுதே!
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே!

ராஜராஜ சோழன் நிம்மதி அடைந்திருப்பார்... நயன்தாரா அந்த இடத்தை நிரப்பிவிட்டார்!

twitter.com/Russetlane

எது சௌகரியமானதோ, எது பொதுப்புத்தியுடன் ஒன்றுகிறதோ, எது தற்பிடித்தங்களை உயர்த்திப் பிடிக்கிறதோ, அதற்கு அறமென்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள்.

twitter.com/Greesedabba2

சென்னை-மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

# ஆங்காங்கே வழியில் உலாவும் பசு மற்றும் எருமை மாடுகள் தயவுசெய்து வழிவிட்டு ரயிலின் உயிரோடு விளையாடாமல் ஒதுங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன...

twitter.com/amuduarattai

மாடி மாடியாக ஏறி இறங்கி, துணிகளையெல்லாம் புரட்டிப் போட்டு வாங்கும் பெண்களுக்கு இல்லாத களைப்பு, ஜவுளிக்கடையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து சும்மா மொபைலை நோண்டும் ஆண்களுக்கு எப்படித்தான் வருமோ!

twitter.com/Suyanalavaathi

இன்னைக்கு தேதிக்கு தீபாவளிக்குப் புது டிரஸ் எடுக்குறது, வெடி வாங்குறதவிட முக்கியமானது, சொந்த ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணுறது!

PrithviRaj: தமிழுக்கு எப்போ ப்ரோ..?
PrithviRaj: தமிழுக்கு எப்போ ப்ரோ..?

www.facebook.com/iam.suriyaraj/

மோடி சிறுவனாக இருந்தபோது குளிக்கப் போன இடத்தில் ஒரு முதலைக்குட்டியைப் பிடித்து வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்தாரே, அதைப் பார்த்து அரண்டுபோன அவர் அம்மா, ‘இது தவறுடா மகனே’ எனச் சொன்னதும் மீண்டும் குளத்தில் கொண்டு போய் விட்டாரே, அந்த முதலைதான் அனந்தபுரம் கோயில் குளத்தில் நைவேத்திய சோறு மட்டுமே சாப்பிட்ட தெய்விக முதலை. ஜெய்ஹிந்த். ஜெய் ஸ்ரீராம். ஜெய் முதலை!

twitter.com/saravankavi

கடன் கேட்காத நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தரும் நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் தவம் செய்தவர்கள்!

twitter.com/HAJAMYDEENNKS

பந்தியில் இடம்பிடிக்க ஓடும்போது உடைபடுகிறது மனிதனின் போலி நாகரிகம்!

twitter.com/Vasanth920

அனுபவம் நடுத்தெருவுக்கு வரும்போதே பக்குவம் பிறக்கிறது.

twitter.com/Thaadikkaran

R15 வண்டில வேகமா வளைச்சு வளைச்சு ரோட்டுல படுத்து எந்திருச்சுப் போறான்... நான் வண்டியை ஓரமா நிப்பாட்டி பிபி மாத்திரை போட்டுட்டு நிக்குறேன்... டேய், வாழ விடுங்கடா!

twitter.com/iVenpu

மனோஜ் நைட் ஷியாமளனோட ‘Village’ படத்துல ஒரு ஊரே நூறு வருஷம் பின்னால வாழ்ந்துட்டு இருப்பாங்க, வெளியுலகுல நடக்குற எதுவும் தெரியாம. இந்த சிதம்பரம் சாமியார்கள் குரூப்பும் அப்படித்தான்னு தெரியுது.

Aditi Shankar: ஆரஞ்சு நிறமே..!
Aditi Shankar: ஆரஞ்சு நிறமே..!

twitter.com/dhans4all

டோல் ரோட்டில் பயணம் செய்ய கண்டிப்பாக பாஸ்டேக் உபயோகிக்க வேண்டும் எனச் சொல்லிட்டாங்க. இன்னிக்கு எனக்கு ஒரு‌ மெசேஜ் வந்துச்சு, ‘உங்க பாஸ்டேக் அக்கவுன்ட் பேலன்ஸ் மிக கம்மியா இருக்கு, ரீசார்ஜ் செய்யுங்க’ என! என்னடா நாமதான் காரையே வெளிய எடுக்கலையே, அது கொமாரபாளையத்தில் இருக்கே என யோசித்து அக்கவுன்டை செக் பண்ணினா 12-ம் தேதி என் கார் ஸ்ரீபெரும்புதூர்‌ டோலைத் தாண்டியதாகவும் அதுக்காக 14-ம் தேதி ரூ.50 பிடித்தம் செய்ததாகவும், பின்னர்‌ 15-ம் தேதி அதே ட்ரிப்புக்கு என்னிடம் இருந்து ரூ.220 எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் காட்டியது.‌ என்னடா நாமதான் எங்கயும் போகலையே என‌ யோசிச்சு கம்ப்ளைண்ட் செஞ்சா, ‘25 நாள் கழிச்சு பதில் சொல்றேன்’ என்கிறார்கள்.

‘ஏங்க, நான் செய்யாத தப்புங்க. எதுக்குங்க 25 நாள் காத்திருக்கணும்’ என்றால், ‘அது அப்படித்தான்’ என்கிறார்கள். ‘சரி, ஏன்‌ எனக்குக் குறுஞ்செய்தி வரலை’ என்றால், ‘13-ம் தேதி சிஸ்டம்ல காட்டினாலும் நேத்துதான் அமௌன்ட் எடுத்தோம்’ என்கிறார்கள். ஆனாலும்‌ ‘நான்‌ கேட்ட‌ கேள்விக்கு இது பதில் இல்லையே‌’ என்றால் வேறு ‌பதில் இல்லை. 9 நிமிட காத்திருப்புக்குப் பின்‌ மட்டுமே என்னால் அவர்களிடம் பேச முடிந்தது. அதுவும் ‘ஒன்னும் செய்ய‌முடியாது’ என்ற பதிலே கிடைத்தது.

நீங்க பாஸ்டேக் உபயோகப்படுத்தினா அப்பப்ப பார்த்துக்குங்க. பாஸ்டேகால் வந்த பயன், உங்க காசு எப்ப எப்படிப் போகுதுன்னு தெரியாது. பயணத்தில் ஆகும் செலவில் 30 சதவிகிதம் டோலுக்கே செலவாகுது, அதிலும் இப்படித் திருட்டுத்தனமாக எடுத்தால் என்ன செய்வது?

twitter.com/HRajaBJP

நான் 1964-65 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பார்த்தவன். ஆனால் இப்போது தி.மு.க நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் மக்கள் ஆதரவோ பங்களிப்போ இல்லாத வெறும் Road side தமாஷாவாக உள்ளதைப் பார்க்க முடிகிறது.

Keerthy Suresh: ஸ்டைலிஷ் பெண்..!
Keerthy Suresh: ஸ்டைலிஷ் பெண்..!

twitter.com/saravankavi

‘நாளைக்கே பணம் வந்துடும், தந்துடறேன்’னு சொல்லிக் கடன் கேட்கறவங்ககிட்ட, ‘உன் பணத்தை வச்சு நாளைக்கே சமாளிச்சுக்கோ’ன்னு சொல்லிட்டா இந்த உலகத்தில் பொழைச்சுக்கலாம்..!

twitter.com/Vkarthik_puthur

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க மட்டுமே: ஜே.பி.நட்டா

# பின்ன... எல்லா கட்சி எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்கினா உங்க கட்சி மட்டும்தான எஞ்சியிருக்கும்!

facebook.com/gokul.prasad.7370

காரின் பின்புறத்தில் இரு சக்கர வாகனம் இடித்துவிட்டது. இரண்டு ஓட்டுநர்களும் சாலையில் இறங்கிச் சண்டையிட்டவாறு இருந்தனர். அது குறுகலான ஒற்றை வழிப்பாதை என்பதால் நகர்வதற்கு வழியின்றி மற்ற வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. ஈருருளிக்காரர் மீதே தவறு என்றாலும் இடிக்கப்பட்டது கர்நாடகப் பதிவெண் வண்டி. அதனால் கார்க்காரருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. கார் மீது மோதியவர், ‘கர்நாடகாவில இருந்து வந்துட்டு என் சட்டையைப் பிடிக்கறியா?’ என்றே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். கன்னடத்தவருக்குப் பொறுக்கவில்லை. ‘நான் எவ்ளோ ஸ்லோவா போய்ட்டு இருந்தேன், அதைப் போய் இடிச்சிட்டியே?’ எனக் கேட்டார்.

எந்தப் பதற்றமும் இல்லாமல் நம்மாள் பதில் சொன்னார். ‘ஆடி கார் வச்சிக்கிட்டு நீ இவ்வளவு மெதுவா போவேன்னு நான் எதிர்பார்க்கல.’ இதுபோன்ற அசரடிக்கும் பதில்களை ஒரு தமிழரால்தான் யோசிக்க முடியும்.

facebook.com/sasidharani.dharani/

வண்டில போறப்ப சிரிச்சுப் பேசிட்டுப் போகும் தம்பதியர்கள் ஆச்சரிய மூட்டுகிறார்கள்.

facebook.com/Sowmya Ragavan

படிந்திருக்கும் தூசு கண்டதும் துடைத்தால் அம்மா. அதில் படம் வரைந்து விளையாடினால் சிறுமி. விளையாடியபின் துடைத்து வைத்தால் குமரி.

twitter.com/slbala

ஹல்லோ, ஆளுநர் சாரா? எப்ப சார் உங்க வேலைய பாப்பீங்க? 21 மசோதால கையெழுத்து போடல... ஆனா மாசம் மாசம் மக்கள் வரிப்பணத்துல சம்பளம் மட்டும் வாங்குறீங்க!

twitter.com/niranjan2428

சிவசேனா சின்னத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே சார்பில் மேல்முறையீடு. ஏக்நாத் ஷிண்டே கேவியட் மனுத் தாக்கல்.

# இதெல்லாம் இதுக்கு முன்னாடி எங்கயோ நடந்த மாதிரி இருக்கே? எங்கேன்னுதான் ஞாபகம் வரமாட்டுது!

twitter.com/imanojprabakar

ராஜராஜ சோழன் நிம்மதி அடைந்திருப்பார்... நயன்தாரா அந்த இடத்தை நிரப்பிவிட்டார்!