தொடர்கள்
சினிமா
Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிட்டு தப்பிச்சுப் போனவங்களை அந்தப் பாலத்து வழியா அழைச்சிட்டு வர வாய்ப்பிருக்கா ஜீ

twitter.com/urs_venbaa:

நினைவுகளால் நிரப்பிக்கொள்கிறோம் வெறுமையை!

twitter.com/Kozhiyaar

மழை வருவதில் பிரச்னை இல்லை, கூடவே இந்தக் கொசுவையும் கூட்டி வந்து விடுகிறதே!

twitter.com/VinodhRavi4

கமல்: நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா?

அசல்: இல்ல சார், பாதிதான் நிறைவேறிச்சு. இன்னும் இருந்திருந்தா நிறைவேத்தியிருப்பேன்.

# தட் உண்மைய பேசுறவன் பெரிய மனுஷன்!

 Trishakrishnan: இத்தாலியில் இளவரசி
Trishakrishnan: இத்தாலியில் இளவரசி

twitter.com/Vasanth920

‘‘ஆனது ஆச்சு, ‘பந்த்' நடத்திருவோம் பாஸ்...''

‘‘ஏன்டா உனக்கு இவ்வளவு ஆசை?''

‘‘எல்லாம் அவளை மறக்கத்தான்...''

twitter.com/Greesedabba2

என் போன் கீழ விழுந்து டிஸ்பிளே உடைஞ்சுருச்சு. இந்த மாதிரி நிறைய வாட்டி நடந்திருக்கு. ஆனா, இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!

twitter.com/poonasimedhavi

இந்த வேர்ல்டு கப் டி20 சீரிஸ்ல ‘மேன் ஆஃப் தி சீரிஸ்' யாராக இருக்கும்?

வேற யாரு? ‘மழை'தான்.

twitter.com/LAKSHMANAN_KL

பொய்ச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது: பிரதமர் மோடி.

# கட்சிகளோட தேர்தல் அறிக்கைகளைத்தான் சொல்றாரு போல?!

twitter.com/Anvar_officia

வீட்டில் மனைவிக்கு உப்புமா ஆயுதமாக இருக்கும்போது, கணவனுக்கு ஹோட்டல்கள் கேடயமாக இருக்கின்றன!

twitter.com/amuduarattai

மொபைல்மீது ஒரு கண்ணும், டி.வி மீது மற்றொரு கண்ணும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் குழந்தைகளே, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியும் என்பதற்கு சாட்சி.

facebook.com/sowmya.ragavan

தொப்பை அழகாய் இருப்பது குழந்தைகளுக்கும் குருவிகளுக்கும்தான்.

twitter.com/LAKSHMANAN_KL

இங்கிலாந்தையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாழும் பாலம்' ரிஷி சுனக்: பிரதமர் மோடி.

# இந்திய வங்கிகளில் கடன் வாங்கிட்டு தப்பிச்சுப் போனவங்களை அந்தப் பாலத்து வழியா அழைச்சிட்டு வர வாய்ப்பிருக்கா ஜீ..?!

twitter.com/manipmp

விரல்களின் இடுக்குகளிடையே குழந்தைகள் காணும் உலகம் அழகானது... ஆச்சர்யமானது.

twitter.com/amuduarattai

என்ஐஏ விசாரணைக்குப் பரிந்துரைக்க அரசு காலதாமதம் செய்தது தவறு: ஆளுநர்

ஆர்.என்.ரவி.

#எதிலும் காலதாமதம் நீங்க மட்டும்தான் செய்யணுமா?!

twitter.com/Railganesan

இட்லி / பொங்கலுக்கு நம்மைக் கேட்காமலேயே வடை வைக்குற ஹோட்டல் சர்வர் மாதிரிதான்... வாழ்க்கை நமக்குக் கொடுக்கிற பிரச்னைகளும்!

 Aksharaa.haasan: போற்றிப்பாடடி பொண்ணே..!
Aksharaa.haasan: போற்றிப்பாடடி பொண்ணே..!

twitter.com/Kannan_Twitz

நினைவுகள் ஆயுளுக்கும் உயிர் தின்னும்!

facebook.com/ramanujam.govindan

‘‘என்னங்க இது, கடைல சாமான் வாங்கிட்டு காசுக்கு பதிலா சாமி படத்தைக் கொடுக்கறீங்க?''

‘‘ஹலோ, இது புது 500 ரூபாங்க. பிள்ளையார் காலுக்குக் கீழே மூஞ்சூறு பக்கம் 500ன்னு போட்டிருக்கு பாருங்க!''

twitter.com/sasitwittz

துணிகளை மடிச்சு வைக்கிற மாதிரி கவலைகளையும் மடிச்சு வச்சிட்டா மனசுல நிறைய இடம் இருக்கும்..!

facebook.com/venkatesh.arumugam1

பொதுவா இங்கிலாந்து கிரிக்கெட் டீமில் 11 பேருமே இங்கிலீஷ் பிளேயர்களாக இருப்பது மிக மிக அபூர்வம். மினிமம் 1 சவுத் ஆப்பிரிக்கன், 1 வெஸ்ட் இண்டீஸ், 1 பாகிஸ்தானி, 1 இந்தியர், 1 ஆஸ்திரேலியன், 1 அயர்லாந்து இப்படி பாதி டீம் வெளிநாட்டவர்களின் பங்கு இருக்கும். சில சமயம் கேப்டன்களே இங்கிலாந்துக்காரர்களாக இருக்க மாட்டார்கள். நாசர் ஹுசைன், இயான் மோர்கன், ஏன் தற்போதைய பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) வரை இது தொடர்கிறது.

அலன் லாம்ப், ஸ்மால், க்ரீம் ஹிக், மார்க் ராம் பிரகாஷ், மொயின் அலி, அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் ராய் இப்படி பல நட்சத்திர பிளேயர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்! அவர்கள் நல்ல திறமையானவர்களையும் அவர்களால் கிடைக்கும் வெற்றிகளையும் மட்டுமே பார்க்கிறார்கள். எந்தத் துறையிலும் இன்னொருவரின் நாட்டை, அவர்களின் இனத்தை, ஒருவரது பிறப்பை மட்டும் வைத்துக்கொண்டு வெற்று அரசியல் செய்வதில்லை!

twitter.com/Kannan_Twitz

என்னோடிருக்கும் எதுவும் உன்னை நினைவுபடுத்தாமல் இல்லை. போலவே, உன்னை நினைவுபடுத்தாத எதையும் நான் உடன் வைத்திருப்பதில்லை!

twitter.com/murugan_itz

எல்லாமும் போக எஞ்சியிருப்பது தனிமை மட்டும்தான்.

Iamharishkalyan: பியார் பிரேமா காதல்..!
Iamharishkalyan: பியார் பிரேமா காதல்..!

twitter.com/asdbharathi

மீண்டும் கிடைக்கும் வாய்ப்பே இல்லை எனும்போதுதான் ஒரு பொருளின் மதிப்பு உயர்கிறது.

twitter.com/HAJAMYDEENNKS

வீட்டுல தயாரிக்கப்படும் தீபாவளி பலகாரங்களுக்கு எக்ஸ்பயரி தேதி இல்லை! Verified

twitter.com/Kirachand4

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: செய்தி

# ஒத்த செங்கலுக்கும் ஆபத்து வந்துருச்சே...

facebook.com/இந்திரா ராஜமாணிக்கம்

மழையில் குடையுடன் பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், அருகில் நனைந்துகொண்டிருக்கும் அந்நியர்களுக்கும் சேர்த்து மெல்ல நகர்த்திப் பிடிக்கிறார்கள். ‘‘இதுல பணம் எடுத்துத் தர்றீங்களாண்ணே?” என்று ATM-ற்குள் உதவி கேட்கிற கைலி ஆசாமிக்கு ‘‘ம்ம், குடுங்க” என்றபடி யாரோ கார்டை வாங்குகிறார்கள்.

‘‘ஒரு அஞ்சு நிமிசம் உக்காருங்கக்கா... கட்டித் தர்றேன்” என்று கெஞ்சலாய் பூக்காரப் பெண் கேட்கும்போது, அடுத்த கடைக்குப் போக மனமில்லாது ‘‘சரி, வெய்ட் பண்றேன்” என்றபடி பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்கிறாள் காட்டன் புடவைக்காரி. சாலையைக் கடக்கும்போது எதற்காகவோ அழுகின்ற மனைவியைத் தேற்றிக் கொண்டிருந்த கணவனின் பதற்றம் கண்டு, ‘‘என்னாச்சு, தண்ணி வேணுங்களா?” என்றபடி ஷோல்டர் பேகின் ஜிப்பைத் திறக்கிறார் நீலச்சட்டை நபர்.

‘‘பரவாயில்ல, பொறுமையா ஓட்டிக்கிட்டு வந்தீங்க. நானும் நிறைய இடத்துல கவனிச்சேன்” என்று பாராட்டியபடியே இருபது ரூபாயை எடுத்துக்கொடுத்த முதியவருக்கு சிரித்தபடி “தேங்க்ஸ் சார்” என்கிறார் ஷேர் ஆட்டோ ட்ரைவர். ‘‘ரெண்டு ரூபா இருக்கா” என்கிற கண்டக்டரின் ஸ்ட்ரிக்ட் தன்மைக்கு அஞ்சி அவசரமாய் தேடிக்கொண்டிருந்த ஜீன்ஸ்பேன்ட்காரருக்கு “இந்தாங்க” என்று கொடுத்துதவுகிறார் முறுக்கு மீசைக்காரர்.

‘‘சைடு ஸ்டாண்ட் எடுத்துவிடுங்க” என்றும் ‘‘துப்பட்டா சிக்கப்போகுது பாருங்க” என்றும் யாரோ வண்டியில் போய்க்கொண்டிருக்கிற யாரோவிடம் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறார்கள்.

ஹோட்டலின் டேபிளைத் துடைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘‘நீங்க சாப்டீங்களாக்கா?” என்று கேட்கின்றான், தோசைக்குக் காத்திருந்தவன். ரசித்த பாடலின் லிங்க்கை வாட்ஸப்பில் அனுப்பிவிடுகிறவனுக்கு ஹார்ட்டீன் அனுப்பிவிட்டுச் சிரிக்கிறாள் சுடிதார் பெண்ணொருத்தி.

திருமண மண்டபத்தில் முன்இருக்கையில் அமர்ந்திருக்கிற பெயர் தெரியா குழந்தையுடன் முகத்தைக் கோணலாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார் தாடிக்கார இளைஞர். ரகசியமாய் கண்களைத் துடைத்தபடி பக்கத்தில் அழுகிறவர்களுக்கு, ‘‘எல்லாம் சரியாகிடும்’’ என்று யாரோ ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகம் இன்னும் இன்னும் மினுங்கிக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

Manjima Mohan: காதல் களி முகத்தினில்
Manjima Mohan: காதல் களி முகத்தினில்
Jackson James

twitter.com/amuduarattai

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.27,000. - அரவிந்த் கெஜ்ரிவால்.

#இதைப் பார்க்கும்போது, மோடி தாரேன்னு சொன்ன 15 லட்சம்தான் நினைவுக்கு வருது.

twitter.com/mohanramko

இந்தப் பாலம் விழுந்ததுக்குக் காரணமே, அதைக் கட்டிய பிரிட்டிஷ்காரங்கன்னு சொல்லிட்டுப் போகலாம். ஐடியா இல்லாத பசங்க...

twitter.com/LAKSHMANAN_KL

இந்தியை அப்போதும் எதிர்த்தோம், இப்போதும் எதிர்க்கிறோம், எப்போதும் எதிர்ப்போம்: துரை வைகோ

#வாரிசு அரசியலை உங்க அப்பா எதிர்த்த மாதிரியா வாத்தியாரே?!

twitter.com/Anvar_officia

‘எடுத்தோம் கவுத்தோம்' எனப் பார்க்கிற வேலை இந்த ‘தண்ணி கேன்' போடுற வேலை மட்டும்தான்!

twitter.com/RavikumarMGR

சோற்றை ‘ரைஸ்'ங்குற மாதிரி கஞ்சத்தனத்தை மினிமலிசம்ங்குறாங்க போல!

twitter.com/pandi_prakash_

அவ்வளவு சுலபமாக வந்துவிடாது, வெற்றியும் அதைக் கொண்டாடும் சுற்றமும்.