பிரீமியம் ஸ்டோரி

kumarfaculty

கிருமிநாசினியை உடலில் செலுத்தி கொரோனாவைக் கொல்ல முடியாதா? - ட்ரம்ப். செல்லூர் ராஜு அதிர்ச்சி.

manipmp

ஒரு மரணம் என்பது துக்கம். ஆயிரம் மரணங்கள் என்பது கணக்கு.அவ்வளவே.”

khushsundar
khushsundar

shivaas_twitz

வீட்டம்மா சொல்லாமலேயே காலையில 11 மணிக்கெல்லாம் வெங்காயத்தை எடுத்து உரிக்கத் தொடங்கிடுறேன். ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள் செய்யும்போது அதுவே பழக்கமாக மாறிவிடும் என்பது உண்மைதான்போல.#lockdown

bestguypsu1

எல்லாக்கடையிலும் கூட்டம்

என்முன்னால் ஒரு குரூப் குடும்பத்தோடு வந்திருந்தது. கலந்து பேசி,பேசி முக்கால் கடையை காலி செய்துவிட்டார்கள். சோப் மட்டும் டஜன்கணக்கில். மொத்த Snacks காபித்தூள் பாக்கெட்டையும் வாங்கினார்கள். அநேகமாக பூமியை காலி செய்துவிட்டு வேறுகிரகம் போயிருப்பார்கள்.

Kozhiyaar

மாவட்டங்களைப் பிரித்ததில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா, மாவட்ட வாரியான கொரோனா கேஸ்கள் குறைவா இருக்கு!

prithvi
prithvi

sultan_Twitz

கொரோனா ஒழிப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி - பிரதமர் மோடி # கடைசி வரைக்கும் நன்றி மட்டும் தானா ஜீ?!

Thaadikkaran

லாக் டௌன் முடிஞ்சு ஆபீஸ் போனதும், நம்ம சிஸ்டம் பாஸ்வேர்டு நமக்கு நியாபகம் இருந்தாவே ஆச்சர்யம்தான்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

RahimGazzali

PULL, PUSH என்று எழுதியிருக்கும் கதவைவிட, எதுவுமே எழுதாத கதவுகளையே குழப்பமில்லாமல் திறக்க முடிகிறது.

Chris Gayle
Chris Gayle

arattaigirl

வருமானமே இல்லாம ஒரு மாசத்தையும் ஓட்டிடுவோம்னு நினைச்சே பார்க்க முடிஞ்சதில்லை இதுவரை. அதையும் நிகழ்த்திக்காட்டுது வாழ்க்கை.

thoatta

இன்னைல இருந்து கொரானாவ கொன்னுட்டோம். நாளைல இருந்து யார் கேட்டாலும் மர்மக்காய்ச்சல்னு ஒரே மாதிரி சொல்லணும், யாரும் மாத்திச் சொல்லிடக்கூடாது.

Tamanna
Tamanna

vandavaalam_

வொர்க் ஃப்ரம் ஹோம் தொடருமேயானால், சைலன்ட் மிக்ஸி சீக்கிரமே கண்டுபிடிக்கப்படும்.

rajan radhamanalan facebook

வீதில கிடக்கற வியாதிகள கூட்டமா கூடி அள்ளிட்டு போயி வீட்ல வெச்சு ஒரு வாரம் அடைகாக்கும் அம்மா வைரஸ் திட்டத்தின் மகத்தான வெற்றியை சற்று வீதியில் தலையை நீட்டிப்பாருங்கள். இந்த அட்டகாசமான திட்டத்தை நாடு முழுவதும் விரிவு படுத்த வேண்டும். டிரம்ப் மேற்கொண்டு ஆசிட் குடிக்கச் சொல்லாமல் இருந்தால் போதும்; நம்முடைய ஜி தான் அமைதிக்கும் அறிவியலுக்குமென இரட்டை நோபல் பரிசுகளை அள்ளி வருவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு