Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வீட்டில் அழுக்குத் துணிகள் குறைவாகவும் அழுக்குப் பாத்திரங்கள் அதிகமாகவும் சேர்கின்றன.

வலைபாயுதே

வீட்டில் அழுக்குத் துணிகள் குறைவாகவும் அழுக்குப் பாத்திரங்கள் அதிகமாகவும் சேர்கின்றன.

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

மோடி இரவு 8 மணிக்கு உரையாற்றினார்.

எடப்பாடி இரவு 7 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் காலை 11 மணிக்கு உரையாற்றுகிற காலம் வரும்போது, தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகப் பொருள் கொள்க!

corona update
corona update

facebook.com/Suresh Kannan

இருபத்தொரு நாள்களுக்குப் பிறகு ஒருவேளை நடக்கக்கூடிய நகைச்சுவைகளுள் ஒன்று.

“யார் சார் நீங்க... எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு?”

“டேய்... நான் நீ வேலை செய்யற கம்பெனி முதலாளிடா...”

facebook.com/Karunakaran Karthikeyan

உண்மையான அச்சுறுத்தல் குழந்தைகளின் ஸ்கூல் பீஸ்தான். லாக்டவுன் முடிஞ்ச மறுநாளே, வந்து கட்டுடான்னு சொல்லுவான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

https://twitter.com/dhivyasridivi

National Register of Citizens மட்டும்தான் நிதி தரணுமா, இல்ல, யாரு சும்மா குடுத்தாலும் வாங்கிக்குவீங்களா மோடி ஜி. சின்ன டவுட்டு?

வலைபாயுதே

https://twitter.com/KLAKSHM14184257

கொரோனாவை எதிர்க்க நம் மக்கள் வேப்பிலை எல்லாம் கட்டுவதைப் பார்க்கும்போது, ‘சீனம்மை’ எனப் பெயரிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..!

https://twitter.com/kumarfaculty

மொபைலில் ஃபேஸ் அன்லாக்கை எல்லாம் இப்பவே எடுத்துடுங்க. சலூனும் இல்லை பியூட்டி பார்லரும் இல்லை. #கொரோனா_வீடடங்கு

https://twitter.com/star_nakshatra

வீட்டில் அழுக்குத் துணிகள் குறைவாகவும் அழுக்குப் பாத்திரங்கள் அதிகமாகவும் சேர்கின்றன.

https://twitter.com/Thaadikkaran

ஒலிம்பிக் பதக்கப்பட்டியல் மாதிரி ஆயிருச்சு கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல், வழக்கம்போல் இந்தியா எந்த இடத்துல இருக்குன்னு பார்த்துட்டு இருக்கோம்..!

https://twitter.com/Prakatalks

~ பங்காளி ஒரு டவுட்?!

கேளுடா ~ ~ கொரோனா பத்தியா?!

இல்ல, தாயம் விளையாட்டுல தாயம் போடாம அஞ்சு விழுந்தா அது செல்லாதுல்லடா?

வலைபாயுதே

https://twitter.com/HAJAMYDEENNKS

21 நாள்கள் வீட்டுல இருக்குறது பழகிடும்... 22வது நாள் வேலைக்குப் போவதைத்தான் திரும்பவும் பழக்கணும்!

https://twitter.com/shivaas_twitz

கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதை வச்சி உப்புமா செஞ்சு வச்சிருக்கியா, இந்த மளிகை சாமானை வாங்கப் போகும்போது எத்தனை போலீஸ்கிட்ட அடி வாங்கியிருப்பேன் தெரியுமா?! #covidlockdown

https://twitter.com/vickytalkz

யாரத் தேடுறிங்க?

வீட்டில் இருந்தே மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்னு போஸ்டர் ஒட்டுனவனை!

Omar Abdullah
Omar Abdullah

https://twitter.com/Akku_Twitz

ஞாயித்துக்கிழம மட்டும்தாண்டா நான் வேகமா போவேன்னு சொன்னேன், உங்களுக்கு போர் அடிக்கும்போதெலாம் வேகமா போவேன்னு சொல்லல #நேரம்

https://twitter.com/gips_twitz

அதிக நாடுகளுக்கு சென்ற மோடியின் சாதனையை முடியடித்தது கொரோனா வைரஸ்.

https://www.facebook.com/ammuthalib

இங்கே இருப்பது ரெண்டே வகைதான். பணமும் அதிகாரமுமிருப்பவன் (at least அதிகாரத்தோடு தொடர்பிலிருப்பவன்) மற்றும் இவை எதுவுமே இல்லாதவன். இந்த இரு வகையினரும் காணும் இந்தியா முற்றிலும் வெவ்வேறானது. நாம் நினைத்துப்பார்க்கவியலாதது. தரிசனத்திலிருந்து வேலைவாய்ப்பு வரை இதைக் காணலாம்.

khushsundar
khushsundar

இல்லாதவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதையும், அவர்களுக்கான சட்டதிட்டங்களையும் வகுப்பவர்கள் ‘இருப்பவர்களே.’ ஆகையினால் எப்பாடு பட்டேனும் இல்லாதவர்களிலிருந்து இருப்போருக்கு நகர்ந்துவிடுங்கள். தங்களைத்தவிர ஏனையோரைக் கழிவாக மட்டுமே பார்க்கும் பார்வையே இங்கு நிதர்சனம்.

200 கிலோமீட்டர் நடந்தவன் அநாதையாகச் செத்து விழுந்த மறுநாள், ‘யாரோ’ ஒருவர் கேட்டதாகச் சொல்லி, ஜிக்களால் சுயவிளம்பர வீடியோக்கள் பகிரப்படும் நாடிது. இங்கு பசியில் சாவதற்குப்பதில் கொரோனாவால் சாவது மேல். அரசே பிணத்தைத் தனிமைப்படுத்தித் தகனம் செய்துவிடுவதால், அந்தச் செலவேனும் மிஞ்சும்.

Malavika Mohanan
Malavika Mohanan

https://twitter.com/@shivaas_twitz

ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?

இல்ல ஜானு, ரெண்டு தெரு தள்ளி போலீஸ் புடிச்சிட்டாங்க... தோப்புக்கரணம் போட்டுக்கிட்டிருக்கேன் #lockdown96

bindhu madhavi
bindhu madhavi

https://twitter.com/thoatta

Lockdownல தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். 1) மில்க் லெமன் டீ போடுறேன்னு கொதிக்கிற பால்ல லெமன பிழிஞ்சா பால் கெட்டுடும். 2) அஞ்சாறு பாத்திரங்களை விளக்கியவுடன் கழுவிடணும், மொத்தமா வாஷ் பண்ணினா பிசுபிசுக்கும்.

virat.kohli
virat.kohli

https://twitter.com/askSen

50 கிமீ வேகத்துல ஓடற வண்டிக்கு இடையில் இடம் விடுங்கடான்னு சொன்னாலே கேட்கமாட்டானுங்க.. இதுல நிக்கும்போது இடைவெளி விட்டு நிக்கச் சொன்னா எப்படிய்யா? அவன் மெல்லமா தான் வருவான். ஆனா அது பாக்க நாம உயிரோட இருக்க மாட்டோம் போலியே. #SocialDistancing