Published:Updated:

வலைபாயுதே

சாரா அலிகான், கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
சாரா அலிகான், கார்த்தி

30-35 வயசிருக்கற அக்கா டூவீலர கால்ல ஏத்திட்டு ‘ஸாரி அங்கிள்’னுட்டுப் போறாங்க. வண்டிய ஏத்தினதுகூட வலிக்கல.

வலைபாயுதே

30-35 வயசிருக்கற அக்கா டூவீலர கால்ல ஏத்திட்டு ‘ஸாரி அங்கிள்’னுட்டுப் போறாங்க. வண்டிய ஏத்தினதுகூட வலிக்கல.

Published:Updated:
சாரா அலிகான், கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
சாரா அலிகான், கார்த்தி

twitter.com/karthickmr

சென்னையில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள அப்பார்ட்மென்ட்டுக்கு ஒரு வருடத்திற்கான சொத்துவரி 700 ரூபாய். அதாவது மாதம் 60 ரூபாய்தான் வரி. அது இப்போழுது மாதம் 100 ரூபாய் ஆகலாம். இதற்குப் போராட வேண்டும் என்று சொல்லும் அ.தி.மு.க தினம்தினம் ஏறும் பெட்ரோல் விலை, கேஸ் விலை பற்றி வாய் திறப்பதில்லை.

twitter.com/HariprabuGuru

வயித்தெரிச்சல்ல ஓடுற மாதிரி வண்டி ஒண்ணைக் கண்டுபுடிச்சா நல்லாருக்கும். பெட்ரோல் பங்க்ல போய் ரெண்டு நிமிஷம் நின்னா, ரெண்டு நாளைக்கு வண்டி ஓடும்.

twitter.com/saravankavi

பா.ஜ.க-வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸ்: நாங்களுமா?

Karthi: வந்தியத்தேவனின் குதிரை!
Karthi: வந்தியத்தேவனின் குதிரை!

twitter.com/shivaas_twitz

தோனியை கேப்டன் பதவிய ஏத்துக்க வைக்க டீம்ல இருக்குற மத்தவங்க எல்லாம் சேர்ந்து போடுற பிளான் இது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

twitter.com/manipmp

ஆர்க்யூமென்ட் வாதத்திற்கு நல்லது, அட்ஜஸ்மென்ட் வாழ்க்கைக்கு நல்லது.

twitter.com/saravankavi

சுங்கச்சாவடிக் கட்டணம், சிலிண்டர் விலை, மருந்து மாத்திரைகள் விலை, தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.

மத்திய அரசு: பயமா இருக்கா. இனிமே பயங்கரமா இருக்கும்...

twitter.com/mekalapugazh

எல்லோரும் மது குடிப்பது மட்டுமே கெட்ட பழக்கமென மனதுக்குள் பழகியிருக்கின்றனர். ஆனால் சிறிதும் உடற்பயிற்சி செய்யாமல் பெருந்தீனி எடுத்துக்கொள்வது மிகக் கெட்டபழக்கமெனப் பலரும் உணர்வதேயில்லை.

twitter.com/iParisal

30-35 வயசிருக்கற அக்கா டூவீலர கால்ல ஏத்திட்டு ‘ஸாரி அங்கிள்’னுட்டுப் போறாங்க. வண்டிய ஏத்தினதுகூட வலிக்கல.

twitter.com/ThirutuKumaran

ஜடேஜா டு தோனி: ஏண்டா இந்த வருசம் இந்த டீம வச்சு ஒண்ணும் விக்க முடியாதுன்னு தெரிஞ்சு எவ்ளோ நேக்கா கேப்டன்ஸிய என் தலை மேல கட்டுன...

twitter.com/Vasanth920

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் - நிர்மலா சீதாராமன்

எட்டு வருஷம் ஆச்சேடா!

இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அவங்களதாண்ணே சொல்லுவாங்க.

twitter.com/rajanism

தோனி ஃபேனும்பானுக... அட 10 ரூவாய்க்கு டீம் எடுத்தியே டிரீம்11ல அவனை எடுத்தியான்னு கேளுங்க, கம்னு போய்டுவானுக.

twitter.com/Anvar_officia

காதலிக்கும்போது பொருள்களின் மதிப்பையும், திருமணம் ஆனபிறகு பொருள்களின் விலையையும் பார்ப்பவர்களே ஆண்கள்!

twitter.com/ramesh_twetz

பணம் இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு சம்பாரிச்சிக்கலாம்னு சொல்லுவாங்க, நம்பாதீங்க. குறிப்பா சொந்தக்காரங்கள..!

twitter.com/Suyanalavaathi

தெரிந்த ஒருத்தர் நம்பர், நம்ம contact list-ல இல்லாமப்போக, அவுங்ககிட்ட இருந்து call வரும் போது, “யாருங்க பேசுறது”ன்னு கேட்டு, அவுங்கதான்னு தெரிய வரும்போது, “இப்பதான் புதுப் போன் மாத்துனேன், contact எல்லாம் போயிருச்சு’’ன்னு சொல்ற பொய், அனிச்சையானது!

Sara Ali Khan: கருப்பு வெள்ளை வாழ்க்கை!
Sara Ali Khan: கருப்பு வெள்ளை வாழ்க்கை!

twitter.com/Thaadikkaran

ஐ போன் மாடல் மாதிரி கொரோனாவுக்கு பேரு வச்சிட்டு இருக்காங்க, அடுத்து வர இருக்குற வைரஸ் பேரு கோவிட் XE-யாம்.

twitter.com/arattaigirl

சிலர் வீடெல்லாம் எப்பவுமே நீட்டா இருக்கு. எப்பப் பாரு க்ளீன் பண்ணிட்டே இருந்தா சமைக்கறது, துவைக்கறதுன்னு மத்த வேலைல்லாம் எப்பதான் பாப்பாங்க.

twitter.com/UMA_1510

ஒரு நூறு கோடி ரூபா சொத்து கிடைச்சிட்டா நானும் “இவ்ளோ தான் சார் லைஃப்’’னு ஒரு ரோட்டுக்கட பிரியாணி சாப்பிடுறப்ப சொல்லிடுவேன்...

ப்ச்ச்ச்

twitter.com/mpgiri

வரிவிதிப்ப எங்ககிட்ட கொடுங்க, நாங்க எப்படிச் செய்றோம்னு பாருங்கன்னு ஒருத்தர் சொன்னாரு... சொத்து வரில தெரிஞ்சிடுச்சு!

twitter.com/Nandhuism

நைட்டி போடுறத கேவலம்னும், நைட் பேன்ட், டிஷர்ட் போடுறத கௌரவம்னும் நினைச்சிட்டுருக்குதுக சிலர்...

twitter.com/naaraju

இலவசப் பேருந்து வசதியைப் பயன்படுத்துற பெண்கள் மேல மேற்படி பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இருக்குற வன்மத்தை வச்சு ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் மின்சாரம் தயாரிக்கலாம்.

twitter.com/JamesStanly

மோடிஜீ: 80 பைசா செல்லாத காசு... இத பெட்ரோலுக்குக் கூட்டி யாருக்கு லாபம் சொல்லு... எதிர்க்கட்சிங்க உன்னை ஏமாத்துறாங்க.

twitter.com/AnAmbedkarite

வி.பி.துரைசாமி கையைத் தட்டிவிட்ட காந்திக்கும், சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய இராஜகண்ணப்பனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒருவர் சமூகநீதிக் கட்சியைச் சார்ந்தவர், மற்றொருவர் சனாதனக் கட்சியைச் சார்ந்தவர். ஆனால் தலித்துகளை அணுகும்போது மட்டும் இரண்டுமே சனாதனக் கட்சிகள்.

Manju warrier: நடிப்பும் நடனமும்!
Manju warrier: நடிப்பும் நடனமும்!

twitter.com/HariprabuGuru

போன மாச பெட்ரோல் விலையையும், இந்த மாச பெட்ரோல் விலையையும் கம்பேர் பண்றதால விலை ஏறுன மாதிரி தெரியுது.

அதை ஏன் அப்படிப் பாக்குற. அடுத்த மாச விலையையும், இந்த மாச விலையையும் கம்பேர் பண்ணு. கம்மியா தெரியும். பாசிட்டிவா பாரு...

facebook.com/Revathy Ravikanth

7G ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா நினைவுக்கு வராப்ல செல்வராகவன் டயலாக் டெலிவரிய பாத்தா...

ஏ... அனித்தா... ஏ... வீரராகவன்.

twitter.com/manipmp

``வீக் எண்ட் பயமா இருக்கா?

மன்த் எண்ட் நினைச்சுப் பாரு, இன்னும் பயங்கரமா இருக்கும்.”

twitter.com/mekalapugazh

அந்தக்காலத்திலேயே இராமாயணத்தைத் தமிழில் ரீமேக்கிய கம்பர், ராமராஜ் யத்துக்குத் தமிழகத்தில் இடமில்லையென உணர்ந்து பட்டாபிஷேகத்தோடு end card போட்டுவிட்டதை உணராமல் இங்கே மீண்டும் ராமராஜ்ய கடை விரிப்பவர் பரிதாபத் துக்குரியவரே.

twitter.com/Suyanalavaathi

என்னங்க வெயில் காலத்துல சிக்கன் சாப்பிடக் கூடாதாம்... சூடு பிடிக்குமாம்.

இன்னைக்கு சிக்கன் வைக்கலன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதான... எதுக்கு சுத்தி வளைக்குற?

facebook.com/PriyadarshiniRL

“இன்னும் குழந்தை பெத்துக்கலையா?” என்பது திருமணமானவர்கள்கிட்ட கேட்கும் கேவலமான ஒரு கேள்வி.

“இன்னும் ரெண்டாவது குழந்தை பெத்துக்கலையா?” என்பது குழந்தை பெத்தவங்க கிட்ட கேட்குற படுகேவலமான கேள்வி!

பி.கு: கேள்வி மட்டுமில்லாம... கேள்வியைக் குறிவைப்பது போல எந்த வாக்கியம் சொன்னாலும்... அந்த மனிதர்களைப் பார்த்துக் கடும் எரிச்சலும் கோபமும்தான் வரும். போங்கய்யா... போய் உங்க வாழ்க்கைய பாருங்க!

முக்கியமா நேர்ல பேசுறப்பவும் சமூக வலைதளங்கள்ல பேசுறப்பவும் உங்க மூக்க உங்க முகத்துலயே வச்சிருந்தா எல்லாம் சுபம்! தேவையில்லாம அடுத்தவன் வாழ்க்கைலயே மூக்க நுழைச்சா ஒரு நாள் அந்த மூக்கு வெட்டி எறியப்படும்!

Rajisha Vijayan: உழைப்பின் வண்ணம்!
Rajisha Vijayan: உழைப்பின் வண்ணம்!

twitter.com/gurunaatha

டியர் கவர்மென்ட், ஒரேயடியா 200 ரூபாய்க்கு ஏத்திட்டு 60 காசு, 50 காசுன்னு குறைச்சுப் பாருங்க... மக்கள் உங்களப் புகழ ஆரம்பிச்சுருவாங்க.

twitter.com/saravankavi

இந்த உலகம் எப்படிப்பட்டதுன்னா, வாழ்க்கையில நிறைய ஏமாந்துட்டேன்னு ஆண் சொன்னா ‘எவ்வளவு கஷ்டமோ’ என்றும், பெண் சொன்னா ‘எவ்வளவு பேரோ’ என்றும்தான் நினைக்கும்.

twitter.com/Itsme_Gobinath

உளுந்தூர்பேட்டை தனியார் பேருந்து பைபாஸ் நிலையத்துல இன்னும் தண்ணி ஒரு பாட்டில் 30 ரூபாய்க்கு விக்கிறாங்க. கேட்டா வயித்துப் பொழப்புன்னு சொல்றாங்க. சத்தமா கேட்டா, இஷ்டம் இருந்தா வாங்கு இல்ல வழிய விடுன்னு சொல்றாங்க. கூட நிக்குற பேரறிவு பொதுஜனம் பகுசா வேடிக்க பாத்துட்டு அந்தப் பக்கம் வந்து எதுக்கு வம்புன்னு ஆறுதல் சொல்றாங்க. நான் என்ன செவ்வாய் கிரகத்துல இருக்குறவனுக்கா பேசுறேன். ஊரோரத்துல 90 வயசு ஆயா பொழப்புக்கு வீட்டுவாசல்ல கீத்துக் கொட்டா போட்டு வியாபாரம் பண்ணுது, 20 ரூபாய்க்கு தண்ணி குடுக்குது. அந்தப் பக்கமா வெயிலுக்கு அண்டுற பசுமாட்டுக்கு கடைல விக்க வச்சுருக்க வாழப் பழத்துல மூணப் பிச்சுக் குடுக்குது. இந்த இத்துப்போன பிராடு பசங்க இருக்குற ஊருல நம்மளும் இப்படி ஒரு கடை போட்டாதான் பொழைக்கமுடியுமோன்னு கூட கேள்வி வருது. ஆனா சோத்துல உப்பு கொஞ்சம் சேத்துத் தொலைச்சுட்டேனே. அருகில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்ல தெரியாமதான் நடத்திற முடியுமா, எவ்ளோ கட்டிங் போகும்னு யோசிக்க முடியாத அளவு நான் பொறந்த தமிழ்நாடு கல்வி அறிவில்லாத ஊரில்ல. அந்த அலட்சிய/ கறைபடிஞ்ச அதிகாரியும், படிச்சுட்டு ஒக்காந்துருக்க நம்மள்ல ஒருத்தன்தான்னு பாயின்ட் புடிக்கிற அளவு அறிவு குடுத்த முன்னோர்கள் இங்க பல. எல்லாரும் கஷ்டப்பட்டுதான் காசு சம்பாதிக்கிறோம். ஒவ்வொரு ரூபாயும் எளிதில் வர்றதில்லை. கறுப்புப்பணம் ஏதோ பென்ஸ் கார்ல போறவன்டதான் இருக்கணும்னு பிம்பம் இருக்கு. யாருதான் இதையெல்லாம் கேக்குறது. பல நல்ல திருப்பங்கள் செய்துட்டு இருக்குற இந்த அரசாங்கம் இதுக்கு ஒரு கடும் நடவடிக்கை எடுக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism