Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

இட்லி அரிசியா, பிரியாணி அரிசியான்னு சரியா கேக்கல சார், திரும்பி போன் பண்ணுனா சண்டைக்கு வருவா...

வலைபாயுதே

இட்லி அரிசியா, பிரியாணி அரிசியான்னு சரியா கேக்கல சார், திரும்பி போன் பண்ணுனா சண்டைக்கு வருவா...

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/thecommonman__

Doping charges-னால ரஷ்யா எந்த சர்வதேசப் போட்டிலயும் 2022 வரை கலந்துக்கக் கூடாதுன்னு தடை இருக்கறதால ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிங்கற பேர்ல ரஷ்யக் கொடி, தேசிய கீதம் பயன்படுத்தாம கலந்துக்கறாங் களாம். இது என்ன பித்தலாட்டமா இருக்கு. தடை பண்ணுனா CSK மாதிரி நேர்மையா விளையாடாம இருங்கடா.

twitter.com/the_psychlist

முன்னாடி படங்கள்ல ஒரு தங்கச்சி கேரக்டர் வரும். சோகமாவே இருக்கும், எல்லாப் படத்துலயும் செத்துப்போயிரும். அந்த ஆம்பள வெர்ஷனுக்குக் கலையரசன் கரெக்ட்டா செட்டாவாப்டி...

twitter.com/drkvm

கொரோனாவால் மக்களுக்கு ஏற்படும் வலியைத் தானும் அனுபவிப்பதாலயே மோடி தாடி வளர்க்கிறார் - அண்ணாமலை

# இப்படி நீங்களே கலாய்ச்சிங்கன்னா நாங்க எதற்கு?

varusarathkumar : சூர்யவம்சம் சீக்வலா..?
varusarathkumar : சூர்யவம்சம் சீக்வலா..?

twitter.com/luckykrishna

சார்பட்டா பரம்பரை, இடியாப்ப நாயக்கர் பரம்பரைன்னு எல்லாப் பரம்பரை பாக்ஸருமே கூட நம்மை மாதிரி பொண்டாட்டிக்கு பயந்தவனாதான் வாழ்ந்திருக்கான் என்பதை ‘சார்பட்டா பரம்பரை’ அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருக்கிறது.

twitter.com/FareethS

ஹலோ பிரதமர் ஆபீசா? என் பொண்டாட்டி அரிசி வாங்கிட்டு வரச் சொன்னா. இட்லி அரிசியா, பிரியாணி அரிசியான்னு சரியா கேக்கல சார், திரும்பி போன் பண்ணுனா சண்டைக்கு வருவா... நீங்கதான் சரியா கேட்ருப்பீங்களே, ‘என்ன அரிசி’ன்னு சொன்னா நல்லா இருக்கும்...

twitter.com/mymindvoice

பிடித்தங்களின் களத்தில்தான் நிகழ்கின்றன உங்களின் அத்தனை சரி தவறு யுத்தங்களும்.

twitter.com/mosakkara

அதாவது உளவு பாக்குறது இயல்பான, அரசு நடவடிக்கைதானாம். அது தப்பே இல்லையாம். இது முழுக்க முழுக்க தேசநலனுக்காம். ஓகே, ஜெய்ஹிந்த்!

ஆனா நம் மக்களை உளவுபார்க்க, அந்நிய நாட்டு உளவு சாப்ட்வேர் பயன்படுத்துவது, நம்ம நாட்டு ரகசியக் காப்பு பிரமானத்தை மீறியதாகாதா? அதுக்கும் ஜெய்ஹிந்த் தானா?

facebook.com/sowmya.ragavan

ஆயுசுல பாதி முடிஞ்சுருச்சு. இன்னும் வீட்டுக்கு யார்னா வந்தா என்ன ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்துருக்காங்கன்னு அவங்க கைய பாக்கற பழக்கம் போகல!

twitter.com/JamesStanly/

விடிஞ்சா போதும்... வீட்ட குடு, வேலைய குடு, கார குடுன்னு வருவான். 4 மாசமா ஆளக் காணும்... இருக்கானோ, கொரோனால போய்ட்டானோ - கடவுள்

twitter.com/sa_jay_ravi

தேசிய அளவிலான சீரோ சர்வே கணக்கெடுப்பு தரும் தகவல்கள்: நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கு (2/3) மக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி இருக்கிறது. இன்னும் 40 கோடி மக்கள் பாதிக்கக் கூடியவர் களாக உள்ளனர். 50% குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.

twitter.com/teakkadai1

முதல்ல நல்லெண்ணெய் நல்லது, பின்னர் ‘செக்கில் ஆட்டிய’, அப்புறம் ‘மரச் செக்கில் ஆட்டிய’, இப்போ ‘வாகை மரச்செக்கில் ஆட்டிய’வில் வந்து நின்றிருக்கிறது. அடுத்து என்ன? இயற்கை உரம் போட்டு வளர்த்த வாகை மரமா?

facebook.com/sowmya.ragavan?

பெண்களோட சைக்கோத்தனம்லாம் யூகிக்கவே முடியாத லெவல்ல இருக்கும். தனக்கு சம்பந்தமே இல்லாதவங்க வாழ்க்கைல கூட கும்மியடிச்சிட்டு ஒண்ணுமே தெரியாதது போல கமுக்கமா இருக்கக்கூடியவங்க. ஆண்கள் நல்லவங்கன்னு சொல்லல, அவங்க கோபம், வெறுப்பு ஓரளவு வெளிப்படையா தெரிஞ்சிரும். இவன் இப்படித்தான்னு புரிஞ்சு அட்லீஸ்ட் அதுக்கேத்தாப்ல நடந்துக்கவோ, ஒத்து வராட்டி பிரியவோகூட வாய்ப்பு இருக்கும்.

பெண்கள் அப்படியில்லை. மாமியார், மனைவி, மகள், அம்மான்னு ஒவ்வொரு ரோல்லயும், அதுக்கேத்தாப்ல சிந்திச்சு தனக்கு சாதகமான சூழலை அமைச்சுக்க என்ன வேணா பண்ணத் துணிவாங்க. குடும்ப வன்முறைகளிலும், குடும்ப அரசியலிலும் முக்கியமான ரோல் பெண்களோடது. விதிவிலக்குகள் உண்டு. பெரும்பான்மை இப்படித்தான். அதுக்குக் காரணங்கள் இத்தனை கால அடக்குமுறையில் இருந்து தப்பிக்க சர்வைவ் பண்ண தன்னைத்தானே தகவமைச்சுகிட்ட உளவியலாக்கூட இருக்கலாம். ஆனா இந்த நுட்பமான சைக்கோத்தனங்களால் பெரிதும் பாதிக்கப்படறதும் குடும்பத்தில் உள்ள சக பெண்கள்தான்.

facebook.com/paranirajansathyamoorthi/

சார்பட்டா பரம்பரை பார்த்தேன். நல்ல படம். நிற்க.. ஃபேஸ்புக் ஃபுல்லா ஏகப்பட்ட ரைட்டப்கள். கபிலன் பொண்டாட்டி கொண்டாடப்பட வேண்டியவள், இல்லல்ல வெற்றி/வேம்புலி பொண்டாட்டிதான் சிறந்தவள்னு. அதனால ஒரு சின்ன வாக்கெடுப்பு. சார்பட்டா பரம்பரையில் கொண்டாடப்படவேண்டியது யார் பொண்டாட்டி?

1. கபிலன் பொண்டாட்டி

2. வெற்றி பொண்டாட்டி

3. முனிரத்னம் பொண்டாட்டி

4. கெவின் பொண்டாட்டி..

படத்தில் வேறு ஏதாவது பொண்டாட்டிகள் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் குறிப்பிடவும்.... இன்னிக்கு இதுக்கொரு பைசல் பண்ணிப்புடுவம். (மயக்கம் என்ன - யாமினி, சூரரைப் போற்று பொம்மி, மைனா - போலீஸ்காரன் பொண்டாட்டிகளும் பொதுக்களத்தில் இருக்கிறார்கள். முதல்ல சார்பட்டா பரம்பரை பொண்டாட்டி பஞ்சாயத்தை முடிச்சிட்டு அதுக்குப் போவோம்...)

yours_anjali: கிளையாகிறேன் நான்...
yours_anjali: கிளையாகிறேன் நான்...

twitter.com/ItsJokker

எப்படியும் ‘மீண்டும்’ வந்துவிடுவார்கள் என்பது உறுதியான பின்தான், அவர்களைத் தேற்றுவதற்கான காரணங்களும், சொல்வதற்கான விளக்கங்களும் அவசியமற்றுப் போய்விடுகின்றன.

twitter.com/pachchakkili

சினிமாலயே ரெண்டு பூ தொட்டுக்குற மாதிரி காட்டிட்டு அதுக்கப்புறம் குழந்தை பிறந்த மாதிரி காட்டுறாங்க... நாடகத்தில் அதையும் தாண்டிக் காட்சி வேணும்னு எதிர்பாத்தா எப்படி?

twitter.com/macchu_offcl

ரங்கன் வாத்தியார்லாம் மாமியார் மாதிரி... சரியான நேரத்துல வந்து எல்லாத்துக்கும் க்ரெடிட் எடுத்துட்டுப் போயிருவாப்ல - இப்பிடிக்கு ரியல் வாத்தியார் பீடி ராயப்பன் ரசிகர்கள்.

twitter.com/ak47_twitz

நம்மை வெறுப்பதற்கு எதுவுமே செய்யத் தேவையில்லை... நாம் நாமாகவே இருந்தாலே போதும். விரும்புவதற்குத்தான் கொஞ்சம் மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன!

twitter.com/paruthi_moottai

இப்பொழுதெல்லாம் புத்தர்கள் போதி மரத்தை நாடுவதும் இல்லை. போதியும் புத்தர்களுக்காகக் காத்திருப்பதும் இல்லை. ஆங்காங்கே சந்திக்கும் இடத்தில் சற்றே இளைப்பாறிக் கொள்கிறார்கள்...

twitter.com/selvachidambara

ஒருவரிடம் உதவி பெறும்போது அதைத் திருப்பித்தரக்கூடத் தேவையில்லை. ஆனால் மறக்கக்கூடாது. அதுவே அந்த உதவிக்கான கைம்மாறு என்பதைக் குறிக்கும் ஆழமான வார்த்தையே ‘நன்றிக்கடன்!’

tamannaahspeaks: சோறு... சோறு..!
tamannaahspeaks: சோறு... சோறு..!

twitter.com/devpromoth

ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய வீரரோடு விளையாட மறுத்து அல்ஜீரிய வீரர் ஃபெதி நூரின் வெளியேறியிருக்கிறார். ‘நாங்கள் ஒலிம்பிக்ஸை அடைய நிறைய உழைத்தோம்... ஆனால் அது எல்லாவற்றையும்விட பாலஸ்தீன ஆதரவு மிகப்பெரியது...’ என்றிருக்கிறார் ஃபெதி நூரின்.

twitter.com/sheik_Nehru_

தண்ணி அடிச்சவன் பேச்சைக்கூடக் கேட்டுடலாம், ஆனால் தற்பெருமை பேசுறவன் பேச்சைக் கேட்கவே முடியாது. ஏன்னா, அவனுக்காச்சும் கொஞ்ச நேரத்தில் போதை தெளியும், நிறுத்திடுவான். இவனுக்குக் கடைசி வரை தெளியவே தெளியாது.

twitter.com/saysatheesh

எவரோடும் இறக்கி வைக்க முடியாத் துயரங்களைத் தூக்கிச் சுமந்துகொண்டே இருப்பதைவிடவும் பெரிய தண்டனை வேறு என்ன இருந்துவிடப்போகிறது?facebook.com/Sen Balan

வருமான வரி தாக்கல் செய்யும்போது எங்கயாவது ஒரு பைசா கழிவு கிடைத்தாலும் அதைக்கூட விடாமல் கிளெய்ம் செய்வார்கள். கேட்டால் ‘சட்டபூர்வமாக அரசாங்கம் அனுமதித்ததைப் பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்பார்கள். ஆனால், அரசு அனுமதித்த இட ஒதுக்கீட்டை மட்டும் தொடர்ந்து தவறாகச் சித்திரித்துப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள்.

அப்பார்ட்மென்ட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் பார்க்கிங் இருக்கும். ‘என்கிட்ட ரெண்டு கார் இருக்கு, உன்கிட்டதான் காரே இல்லையே’ என அடுத்த வீட்டு பார்க்கிங்கில் நிறுத்த முடியாது. நினைவில் கொள்ளுங்கள், இதையே கல்வி, வேலைவாய்ப்பில் செய்தால் அதுதான் இட ஒதுக்கீடு. மற்றபடி இவர்கள் பரப்புவதுபோல சலுகை இல்லை.

twitter.com/gips_twitz

‘‘ஃபாஸ்ட் ஃபுட் கடைல வைக்கிற மாதிரி காளான் கிரேவிய வீட்டுல வைக்க ரெசிபி சொல்லவும் மக்களே...’’

‘‘ரொம்ப சிம்பிள், இந்த ரெசிபிக்கு காளான் தேவையில்ல!”

twitter.com/amuduarattai

சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை - எடப்பாடி பழனிசாமி

# அப்போ கூவத்தூர் பிளானெல்லாம் உங்களோடதுதானா?!

twitter.com/manipmp

அருகில் சில பெண்கள் போனில் பேசுவதைப் பார்க்கும்போது, ‘நமக்கே கேட்க மாட்டீங்கிதே... அந்தப் பையனுக்கு எப்படிக் கேட்கும்?’

twitter.com/kumarfaculty

பெரியவனாகி என்ன ஆகப் போகிறாய் என்று சிறியவர்களிடம் கேட்டால், அவர்களுக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ அதற்கெல்லாம் ஓனர் ஆகிவிடுவேன் என்று சொல்லுவார்கள்!”

mmkeeravani: பாகுபலியின் பாகுபலி
mmkeeravani: பாகுபலியின் பாகுபலி

twitter.com/parveenyunus

‘சுருங்க’ச் சொல்லி விளங்க வைக்கிறது முதுமை.

twitter.com/saravankavi

பெண்கள் மட்டும் எப்படி எப்பவுமே சந்தோஷமா இருக்காங்கன்னு இப்பதான் தெரிஞ்சுது... பெண்களுக்கு தாடி இல்லை!

twitter.com/manipmp

சீறும் பாம்பை நம்பு, அஞ்சு நிமிஷத்தில் வருவேன்னு சொல்லும் ஆண்களை நம்பாதே!

twitter.com/HariprabuGuru

‘‘இன்னும் ரெண்டு மாசம். செப்டம்பர் பாதில பெட்ரோல் பிரச்னை முடிவுக்கு வந்துடும்.’’

‘‘விலை குறைஞ்சுடுமா?”

‘‘இல்லை. மீடியா பரபரப்பா பேசுறதுக்கு ஐபிஎல் டாபிக் வந்துடும்...’’

twitter.com/amuduarattai

விசேஷ வீட்டுப் பந்தியில் இலையில் சாப்பாடு போட்டவுடனே ‘ரசம் ஊத்தவா’, ‘மோர் ஊத்தவா’ என்று கேட்டால், அங்கே கேட்டரிங் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது என்பதை அறிக.