Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வரிசையா சென்னை மேம்பாலத்துல கார் தீப்பிடிக்குதுன்னா, ‘இதுல ஏதோ தெய்வக்குத்தம் இருக்கு, ஒரு யாகம் பண்ணினாத்தான் சரி வரும்’னு யாரும் கிளம்பலையா?

வலைபாயுதே...

வரிசையா சென்னை மேம்பாலத்துல கார் தீப்பிடிக்குதுன்னா, ‘இதுல ஏதோ தெய்வக்குத்தம் இருக்கு, ஒரு யாகம் பண்ணினாத்தான் சரி வரும்’னு யாரும் கிளம்பலையா?

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/mekalapugazh

பெற்றோரை நினைக்கும்போது, ‘இன்னும் கொஞ்சம் நல்லா கவனிச்சுப் பார்த்திருக்கலாம்' என்ற குற்ற உணர்வை அனைவராலும் எளிதில் பகிர்ந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு, ‘இறந்துபோன மனைவியிடம் இன்னும் கொஞ்சம் சரியாக நடந்து கொண்டிருக்கலாம்' என வெளியில் சொல்லமுடியாத புழுக்கம் பல ஆண்களுக்கு உண்டு.

twitter.com/saravankavi

‘‘தோல்வியே வெற்றிக்கு முதல்படி...''

‘‘அப்படின்னு யாரு சொன்னாங்க..?''

‘‘பா.ஜ.க-வுல தலைவர், அமைச்சர், ஆளுநரானவங்க பேசிக்கிட்டாங்க...''

Mark Ruffalo: பிளாக் அண்ட் ஒயிட் ஹல்க்!
Mark Ruffalo: பிளாக் அண்ட் ஒயிட் ஹல்க்!

twitter.com/Vasanth920

‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷனே, ‘ஜி.எஸ்.டி-யை மட்டும் கட்டு. விலைவாசிக்குறைவை எதிர்பார்க்காதே' என்பதாகும்.

twitter.com/itz_idhayavan

முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உள்ளிட்ட 7 பேர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்: ஓ.பி.எஸ் அறிக்கை.

அடுத்ததாக தி.மு.க-வில் ஸ்டாலினையும் காங்கிரஸில் அழகிரியையும் நீக்கி உத்தரவிடுகிறேன்?!

twitter.com/Greesedabba2

இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேமித்துள்ள பணம் அனைத்தையும் கறுப்புப் பணமாகக் கருதக்கூடாது - நிர்மலா சீதாராமன்

# வேணும்னா, SBI-யை விட்டு அவங்க பணத்துக்கு வட்டி தரச் சொல்லலாமா..?

twitter.com/Thaadikkaran

வரிசையா சென்னை மேம்பாலத்துல கார் தீப்பிடிக்குதுன்னா, ‘இதுல ஏதோ தெய்வக்குத்தம் இருக்கு, ஒரு யாகம் பண்ணினாத்தான் சரி வரும்’னு யாரும் கிளம்பலையா?

facebook.com/NaveenKumarN85?

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் மட்டும் 3 பெண்கள் செய்திகளில் வந்துவிட்டார்கள். இதற்குக் காரணம் திருமணம் என்பது சேர்ந்திருப்பது, வாழ்வைப் பகிர்வது, துணையைக் கைப்பற்றுவது என்றெல்லாம் ஏதேதோ நினைக்கிறார்கள். அதனால்தான் என் துணை நானே என்று சோலோ மோடில் இப்படிச் செய்கிறார்கள். ஆண்கள் இப்படியெல்லாம் செய்துகொள்வதில்லை. திருமணம் என்பதன் அடிப்படைப் பயன் என்ன என்பதில் ஆண்கள் மிகத் தெளிவாய் இருக்கிறார்கள்.

Nazriya: நாங்க மொத்தம் நாலு பேரு!
Nazriya: நாங்க மொத்தம் நாலு பேரு!

twitter.com/drloguortho1

ஆபரேஷன் தியேட்டர். பெரியவரின் ரத்த ஓட்டமற்ற கால் விரல்களை அகற்றிக்கொண்டிருக்கிறேன்.

‘‘ஐயா, பீடி, சிகரெட் பழக்கம் இருக்கா?’’

‘‘இல்லங்க. சுருட்டு மட்டும். ம்ம்... ரொம்ப வருத்தமா இருக்கு சார்...’’

‘‘ஏங்க?’’

‘‘நீங்க பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கறீங்க..இப்ப என்னால தர முடியலையே...’’

எதே..!

twitter.com/itzcrazykichu

‘‘நான் PM-க்கு ரொம்ப நெருக்கமானவன்...’’

‘‘யார் சார் நீங்க?’’

‘‘கேமரா மேன்.’’

twitter.com/Kozhiyaar

குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதற்கு, நாம் அஞ்சாறு வாய் அதிகம் சாப்பிட வேண்டியிருக்கிறது!

twitter.com/pachaiperumal23

நம் துயரங்களைப் பகிரும்போது, மனதுக்குள் ரசித்து மகிழாத ஒரே ஒரு நட்பை சம்பாதித்துவிட்டால் போதும்.

twitter.com/Ilavenil999

‘‘எங்க வீட்டுப் பொண்ணு வேற சாதிப் பையன கல்யாணம் செஞ்சுட்டா, அப்புறம் நாங்க கத்துக் கொடுத்த பழக்கவழக்கங்கள் என்ன ஆகுறது?”

‘‘சரி, அப்படி என்ன கத்துக்கொடுத்த?”

‘‘மாடு வளர்த்தல், சாணி அள்ளுதல், வீட்டுல இருக்கும் பெரிய மாடுகளுக்குச் சோறு ஆக்கிப் போடுதல்.’’

Aishwaryaa Rajinikanth: அப்பாவோடு அவுட்டிங்!
Aishwaryaa Rajinikanth: அப்பாவோடு அவுட்டிங்!

facebook.com/ramanujam.govindan

“தண்ணிவிடாம, நல்ல ஸ்ட்ராங்கா, டிகாக்‌ஷன் தூக்கலா காலேகால் ஸ்பூன் மட்டும் சீனி போட்டு ஒரு காபி - வட்டைக்கப்புல குடுங்க!”

காதலியை வர்ணிப்பதுபோல் வர்ணித்துச் சொன்னார் டீக்கடையில் ஒருவர். அவருக்குக் கிடைத்தது, வடிவேலுவுக்குக் கிடைத்த உணர்ச்சியற்ற ஊத்தப்பம்தான்!

twitter.com/TheRaavanaa

‘மிகத்தனிமையாய் இருந்தது. அதனால்தான் அழைத்தேன்’ என ஒவ்வொரு மன அழுத்தத்திலும் பேசித் தீர்த்திட உரிமையாய் ஒரு உறவு இருப்பது வரமே. இருப்பினும் அழைப்பின் நடுவிலும் வந்தமர்ந்துகொள்ளும் இந்தத் தனிமையைத்தான் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

twitter.com/VignaSuresh

நேற்று ஈவென்ட் மேனேஜ்மென்ட் வைத்து நடத்திய கல்யாண நிகழ்வில்...

டிஜே: உங்களுக்குப் பிடிச்ச நடிகை யாரு?

ஒவ்வொரு ஆணும் சமந்தா, நயன் என்று சொல்லிக்கொண்டே போக, ஒரு அங்கிள் மட்டும், ‘எனக்குப் பிடிச்ச ஒரே பெண் காயத்ரி’ என்றார்.

கணவர்: என்ன இவன் ரசனை இப்படி இருக்கு?

மீ: ஹலோ, அது அவர் வைஃபு!

twitter.com/ItsJokker

ஜீ: இலவசமே இந்திய அரசியலின் முக்கியக் கோளாறு.

கார்ப்பரேட்டுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்றப்ப தெரியல, அரசுத் துறைகள பூராம் தனியார்க்கு வித்தப்ப தெரியல, BCCI மாதிரி கார்ப்பரேட்டுக்கு வரிச்சலுகை குடுக்கறப்ப தெரியல, ஏழைக்கு எல்லாமே கிடைக்கணும்ங்கிற இலவசத் திட்டத்தில மட்டும் தெரியுதோ?

twitter.com/Anvar_officia

என்னைய மாதிரி் என் பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு கஷ்டத்தைக் காட்டாமல் அப்பாக்கள் வளர்க்கும் பிள்ளைகள்தான் அதிக கஷ்டப்படுறாங்க!

facebook.com/gokul.prasad.7370

பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலை மலையாளத்தில் கேட்டேன், கன்னடத்தில், தெலுங்கில், இந்தியில் கேட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதென்ன ‘ஊ அண்டாவா’ பாட்டா, ஐந்து மொழிகளில் கிறங்குவதற்கு?

twitter.com/Radhi3_radhika

உங்கள் பிள்ளைகள் கல்வியில் ரொம்பப் பின்தங்கி இருந்தா மட்டும் கொஞ்சம் கவனிங்க. அவங்க படிப்பில் ஆவரேஜா இருந்தா பரவாயில்ல. அப்படியே விட்டுருங்க. ரொம்ப stress பண்ணாதீங்க. இந்தப் பிள்ளைகளுக்குத்தான் மற்ற விஷயங்கள் கற்றுக்கொள்ள அதிக நேரம் இருக்கும். Toppers எப்பவும் புத்தகப்பூச்சிகள்!

twitter.com/Kozhiyaar

ஏம்பா, பசங்களுக்கு History சொல்லிக் கொடுக்கணும்னா இந்தியாவோடு நிறுத்திக்கோங்க. France-லாம் யாரு சொல்லிக் கொடுக்கச் சொன்னா? Map தேடி வாங்குறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?!

twitter.com/amuduarattai

நாம் ஹோட்டலில் உண்ணும் உணவுக்கு அரசுக்கு அளிக்கும் டிப்ஸுக்குப் பெயர்தான் ஜி.எஸ்.டி.

twitter.com/ItsJokker

இங்கு நியாயம் என்பதெல்லாம், நீ இருக்கும் இடத்தையும், அதன் பெரும்பான்மையையும் பொறுத்தே! மற்றபடி அதற்கும் நீதிக்கும் ஒருபோதும் சம்பந்தம் இருப்பதில்லை.

twitter.com/amuduarattai

விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும், இந்த நெத்திக்காசு மட்டும் இன்னும் ஒரு ரூபாய் தான்.

twitter.com/Greesedabba2

ஹோட்டலுக்கு சாப்பிடப் போனா, சாப்பாடு வர்ற வரை வெயிட் பண்றது நம்மதான், ஆனா சாப்பாடு கொண்டு வர்றவரை ‘வெயிட்டர்’னு சொல்றோம். இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கவே முடியல.

facebook.com/AuthorPara

ஒரு சந்தேகம்... தமிழ்நாட்டில் கொரோனா போய்விட்டதா? கட்டாய மாஸ்க் சட்டம் இப்போது கிடையாதா? ₹500 சாலை வழிப்பறிகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா? முதல்வரும் பிரதமரும் மாஸ்க் இல்லாமல் அவ்வளவு நெருங்கிப் பேசிய காட்சியைப் பார்த்ததும் தோன்றியது.

Dinesh Karthik: சில்லுனு ஒரு காபி!
Dinesh Karthik: சில்லுனு ஒரு காபி!

facebook.com/RedManoRed?

விடுமுறை நாள்களில் 1 மணி நேரம் தாமதமாக எழுவது வழக்கம். இன்று அதைக் கெடுப்பதுபோல் காலையிலேயே யாரோ கதவைத் தட்டினார்கள். பெல் அடித்தால் மகன் ஆதவன் எழுந்துவிடுவான் என்று தெரிந்த, அடிக்கடி வருகிறவர்கள்தான் கதவைத் தட்டுவார்கள். தெரிந்த யாரோதான் வந்திருக்கிறார்கள் என்றாலும் தூக்கம் கலைந்த கடுப்பில் கதவைத் திறந்தால் 5-ம் வகுப்புக்குச் செல்லவிருக்கும் ஒரு பாப்பா நின்றுகொண்டிருந்தாள். ‘‘அங்கிள்... லைப்ரரில புக் படிக்கலாமா?’’ என்று ஒருவித தயக்கத்துடனும் இறுக்கத்துடனும் கேட்டாள். நூலகத்துக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒருவர் படிக்க வருவது இதுவே முதல்முறை. ‘தாராளமாகப் படிக்கலாம்’ என்று அழைத்து ‘என்னாச்சு? தண்ணி குடிக்கிறியா?’ என்று கேட்டதற்கு “எதுவும் வேணாம் அங்கிள். காலைலயே அப்பாவும் அம்மாவும் சண்ட போட ஆரம்பிச்சிட்டாங்க. அதான் இங்க வந்துட்டேன்” என்கிறாள். எந்தப் பிரச்னை வந்தாலும் அதற்கான தீர்வை புத்தகங்கள் வைத்திருக்கின்றன என்று அவள் நம்பத் தொடங்கிவிட்டாள். இனி கவலையில்லை!

twitter.com/itz_idhayavan

இலங்கைக்குள் நுழையாமல் சீன உளவுக் கப்பலை இந்தியா தடுக்க வேண்டும்: ராமதாஸ்

# இந்திய எல்லைக்குள் புகுந்து கிரகப்பிரவேசம் பண்ணினதையே தடுக்க முடியலை. இதுல இலங்கையில?!

twitter.com/Anvar_officia

சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம்! -செய்தி.

# யாராவது ‘பன்னீர்’ சோடா வாங்கிட்டு வாங்கன்னு சொன்னதும் மயக்கம் தெளிஞ்சிருக்குமே.

twitter.com/Kozhiyaar

செருப்பு வைப்பதைத் தவிர கண்டவற்றை வைக்கும் பொருளுக்குப் பெயர்தான் ‘செருப்பு ஸ்டாண்ட்!’

twitter.com/HAJAMYDEENNKS

நான் எந்தப் பக்கமும் இல்லை - சசிகலா.

# உங்க பக்கமும் யாரும் இல்லை போல!

twitter.com/ATC_SPACES

WELDING-க்கும், WEDDING-க்கும் சிறு வித்தியாசம்தான்...

WELDING - முதல்ல பொறி பறக்கும், பிறகு இணையும். WEDDING - முதல்ல இணையும், பிறகு பொறி பறக்கும்.