Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கடிதம் எழுதிய வகையில் செலவு 435 கோடியாம்!

வலைபாயுதே

மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கடிதம் எழுதிய வகையில் செலவு 435 கோடியாம்!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/JamesStanly

இதே ரேட்டுல பெட்ரோலை வித்தம்னா அடுத்த ஒலிம்பிக்ல சைக்கிளிங்ல நமக்கு ஒரு பதக்கம் உறுதி...

twitter.com/erode_kathir

கூழாங்கற்களைக் கூர்மைப்படுத்த நினைக்காதீர்கள். மழுங்கியிருப்பது அதன் உரிமை. அதுவே அதற்கு அழகு!

twitter.com/Jokerphoenix14

மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கடிதம் எழுதிய வகையில் செலவு 435 கோடியாம்!

Bhavani Devi: இன்ஸ்பிரேஷன்!
Bhavani Devi: இன்ஸ்பிரேஷன்!

twitter.com/sundartsp

ரிட்டயர் ஆன கிரிக்கெட் பிளேயர்கள் கமென்ட்ரி வந்து அட்வைஸ் பண்ற மாதிரி, கார்ப்பரேட்ல ரிட்டயர் ஆயிட்டா வாட்ஸப் குரூப்பிலே சேர்த்துவிட்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடறாங்க...

twitter.com/DrSenthil_MDRD

டெல்லி பயணக் குறிப்பு:

‘‘மோடியிடம் பேசியதை அமித் ஷாவிடம் சொன்னோம்.’’

‘‘சரி, மோடியிடம் என்ன பேசினீர்கள்?’’

‘‘அமித் ஷாவிடம் சொன்னதைத்தான் மோடியிடம் பேசினோம்.’’

‘‘ஓகே ஓகே... சூப்பர்.’’

twitter.com/FareethS

லட்ச லட்சமா பணம் கொடுத்து வீடு கட்டினாலும், கவர்மென்ட் இடத்துல நாலு அடிய வளச்சுப் போட்டாதான் ஒரு நிம்மதி இருக்கும்போல!

twitter.com/amuduarattai

நாம் வேலை செய்வது மனைவி, மேனேஜர் தவிர உலகில் உள்ள அனைவரின் கண்களுக்கும் தெரியும்.

twitter.com/GunasekaranMu

எத்தனை எத்தனை தடங்கல்கள், பாராமுகம், இழுத்தடிப்புகள்... மக்கள் மன்றத்தில் போராடி, நீதிமன்றங்களில் வாதாடி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலான பிறகு ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கிறது. தமிழ்நாட்டின் போராட்டத்தால் இந்தியா முழுதும் உள்ள OBC மக்கள் உரிமையைப் பெறப்போகிறார்கள். மகிழ்ச்சி.

twitter.com/RajaAnvar_Offic

பிள்ளைகளுக்கு ஆன்லைன் க்ளாஸ் நடக்குது, அதனால்தான் போன் பண்ண முடியலை, பேச முடியலை!

# நவீனப் பொய்கள்

Gianmarco tamberi : உயரம் தொடு!
Gianmarco tamberi : உயரம் தொடு!

twitter.com/LAKSHMANAN_KL

27 சதவிகித இட ஒதுக்கீடு அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி - ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.

அடுத்து... ரெண்டு பேருக்கும் தலா 13.5 சதவிகிதம் வெற்றின்னு சொல்லுவாங்க போல?!

twitter.com/RajaAnvar_Offic

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினவங்களே விறகு பொறுக்கி உழைச்சி கஷ்டப்பட்டு சொந்த முயற்சிலதான் முன்னேறினோம்னு சொல்றாங்க... இவனுங்க இன்னமும் பி.டி பீரியடை கணக்கு வாத்தியாருங்க கடன் வாங்குனதாலதான் விளையாடவே விடலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கானுங்க!

twitter.com/parveenyunus

சண்டே அன்னைக்கு மனைவியிடம் கணவன் திட்டு வாங்கிக் கொண்டிருந்தால், அவன் எலும்பு நிறைய உள்ள மட்டனை வாங்கி வந்துவிட்டான் என அர்த்தம்.

twitter.com/kusumbuonly

ரோட்டுக்கடைகளில் நாம போயி சாப்பிட்டுவிட்டு என்னென்ன சாப்பிட்டோம் என்று நாம் சொல்வதுதான் கணக்கு. ஹோட்டல்களில் பில் எடுத்துட்டு வர தாமதம் ஆகி என்ன சாப்பிட்டோம் என்று நாம் போய் சொன்னாலும் சர்வர்கிட்ட கேட்டு கன்ஃபார்ம் செஞ்சிட்டுதான் பில் போடுவாங்க. சக மனுஷன்மேல் எளியவர்களின் நம்பிக்கை.

twitter.com/SolitaryReaper_

எந்த மேரேஜ்னாலும் பண்ணுங்க... மியூச்சுவல் ரெஸ்பெக்ட்டும் மினிமம் லாயல்ட்டியும் இல்லாட்டி நெடு நாள் வண்டி ஓடாது.

twitter.com/Rarnan_

தமிழ்நாட்டவிட குஜராத்ல மக்கள்தொகையும் கம்மி, அறிவிக்கப்பட்ட கொரோனாத் தொற்றும் இறப்புகளும் கம்மி. ஆனா ஏன் அங்க அதிக டோஸ் தடுப்பூசி போகுதுன்னு பதிலே இல்ல.

twitter.com/kumarfaculty

போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்ற மூட நம்பிக்கையை ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுத்து உண்மையாக்கிவிடாதீர்கள்!

twitter.com/thecommonman__

இந்த பாக்ஸிங்ல பிரச்னை... எப்படி பாயின்ட் போடறாங்கன்னு தெரியாது. முடியற வரை பாயின்டும் சொல்ல மாட்டானுக... நாம மேரிகோம் நல்லா விளையாடறாங்கன்னு நினைச்சிக்கிட்டு இருக்கப்ப எதிராளி ஜெயிச்சதா அறிவிப்பானுக.

twitter.com/RajaAnvar_Offic

நள்ளிரவிலோ அதிகாலையிலோ வரும் தொலைபேசி அழைப்புகள், எந்த த்ரில்லர் படமும் தராத பதற்றத்தைத் தந்துவிடுகின்றன!

twitter.com/Vkarthik_puthur

அதிமுகவில் தனிக் குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்.

#ஆமாமா... அதுக்கு நீங்களே சாட்சி.

twitter.com/krishmaggi

சில்லறையைத் தரும்வரை நம் கண்கள் சி.சி.டி.வி கேமரா போல கண்டக்டரை நோக்கியே இருக்கும்.

twitter.com/manipmp/

சக மனிதரிடம் தவறாக நடந்துவிட்டு, கடவுளிடம் சரியாக நடந்துகொள்வது பலனற்றது.

twitter.com/greeseDabba2

ஆட்சிக் கவிழ்ப்பின்போது எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டி ருக்கலாம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தேகம்.

# என் போனையே ஒட்டுக் கேட்டுதான் ராஜினாமா பண்ண வச்சாங்க, பேசாம போவியா: எடியூரப்பா

twitter.com/RavindranRasu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது - செய்தி

# செங்கல் விலை அதிகமாயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்... ஆனா, ஒரு செங்கல் ரூபாய் 12.35 கோடிக்கு விலை போகும்னு தெரியலை!

twitter.com/LAKSHMANAN_KL

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இரு அவைகளையும் நடத்தவிடாமல் முடக்கி வருகின்றன - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

# வேண்டாம்னுதான் முடக்கி வர்றாங்க ஜீ..!

facebook.com/sowmya.ragavan

மீ to மை மனசு கான்வோ:

‘‘இப்பல்லாம் உப்புமாவுக்குக் கோதுமை ரவைதான் யூஸ் பண்றது பாத்துக்க. ஹெல்த்தி லைஃப்ஸ்டைலுக்கு மாறுறோம்ல...’’

‘‘அப்ப வீட்ல இருக்கற வெள்ளை ரவைய என்ன பண்ணுவ?’’

‘‘அதையெல்லாம் பால், சர்க்கரைன்னு சேத்து ஃபுட்டிங் செஞ்சி தின்றணும்!’’

twitter.com/amuduarattai

ஜியோ கம்பெனி கவர்மென்ட் கம்பெனியான்னு பையன் கேட்டான். கவர்மென்ட்தான் ஜியோவோட ஒரு கம்பெனின்னு நான் விளக்கம் சொன்னேன்.

twitter.com/RahimGazzali

முன்னாடில்லாம் ஏதாவது ஒரு புதுப்படம் பார்த்தோம்னு சொன்னால் “எந்த தியேட்டர்ல?” என்று கேட்பார்கள். இப்போது “எந்த ஓ.டி.டி.?” என்று கேட்கிறார்கள்.

twitter.com/Lakshmivva1

சொந்தச் சிறைக்குக் காவலுமில்லை, சாவியுமில்லை.

twitter.com/Nandhinimagesh

‘Got my periods before my event in Tokyo. But I couldn’t let that stop me’-மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுதல், அந்நாட்களுக்கென ‘பரிசுத்த’ வழக்கங்களையும் கொண்ட சமூகத்தில், போகிற போக்கில் மாதவிடாயை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், மணிப்பூரின் மீராபாய் சானு.twitter.com/mrithulaM

கல்யாணமாயிட்டா வரக்கூடாது, வயசு அதிகம்னா சிரிச்சுப் பேசக் கூடாது, மூஞ்சியைக் காட்டாமப் பேசக் கூடாது.. ரியல் லைஃப்விடக் கொடூரக் கட்டுப்பாடு போடுவாங்க போல ட்விட்டர்ல.

twitter.com/RajaAnvar_Offic

பிள்ளைகளுக்கு ஆன்லைன் க்ளாஸ் நடக்குது அதனால் தான் போன் பண்ண முடியலை, பேச முடியலை!

# நவீன பொய்கள்

Rayssa leal : கனவு மெய்ப்படும்!
Rayssa leal : கனவு மெய்ப்படும்!

twitter.com/LAKSHMANAN_KL27 சதவீத இட ஒதுக்கீடு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி!- ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ். அடுத்து... ரெண்டு பேருக்கும் தலா 13.5 சதவீதம் வெற்றினு சொல்லுவாங்க போல..?!

www.facebook.com/revathy.ravikanth?

“ப்ரசென்ட் மேம்!“

“டேய், நீ சொல்றத மிஸ் கவனிக்கல போலயே சத்தமா சொல்லு!”

“ப்ரசென்ட் மே...ம்!”

“வீட்ல என்னா சவுண்ட் விட்ற..சத்தமா சொல்லுடா!”

“ப்ப்ப்ப்ரசென்ன்ட்ட் மேம்ம்ம்ம்ம்!”

“என்னத்த வாய்ஸ்ஸோ...மத்த பசங்கள பாரு கத்துறானுக என்னடா நீயீ!”

“அந்தம்மா வேற வரிசையா அட்டென்டன்ஸ் எடுக்கலாம்ல! கரெக்டா மாத்தி மாத்தி கூப்டுது! என்ன சைலன்ட்டா இருக்காங்க எல்லாம்..ஐயய்யோ டேய்...ஆடியோ ம்யூட் பண்ணலியா நீ!”

twitter.com/krishmaggi

பெரும்பாலும்..‘ஹவுஸ்ஓனர்கள்’தான் நாம் சொந்தவீடு வாங்கும் எண்ணத்திற்கு வித்திடுகிறார்கள்.

facebook.com/kundhaani/

நேத்து மீ : சகலன்னா என்ன? இவர் : உன் தம்பி எனக்கு சகல மீ : அவன் மச்சான் இல்லையா ?இ : ஆஹ், அப்ப உங்க அக்கா ஹஸ்பண்ட் எனக்கு சகல போல… என்ற புருசனுக்கு தெரிஞ்சது தோ.. ரெண்டே உறவு முறை தான்.. ஒன்னு அங்கிள், இன்னொன்னு ஆண்டி.

facebook.com/revathy.ravikanth/

//ஃப்ராய்டு, நீட்ஷே, தாஸ்தாவஸ்கி எல்லாம் படிச்சு நீ வேணா பெரிய மனித உளவியல் பத்தின எக்ஸ்பர்ட்டா இருக்கலாம். ஆனா அதுக்காகல்லாம் பொம்பளைங்க மனச புரிஞ்சிக்க முடியாது...//புரிஞ்சுடுச்சுன்னா அப்புறம் எங்களுக்கென்ன மரியாதை?!

facebook.com/rajanism?_

மேலும் அசாம் மிசோரம் மாநில முதல்வர்களிடையிலான மெய்ன் போர்டு மேட்சுக்கு முன்னதாக முறையே EPS, OPS உடன் ஸ்பேரிங் விடவிருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோசங் கெட்ட NDA குத்துச்சண்டை.