Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

செல்போன் விளம்பரங்கள்ல ‘ஆன்லைன் க்ளாஸுக்கு ஏத்த போனு’ன்னு இன்னும் வரலையே. என்ன காரணம்? யார் செய்த தாமதம்..?

வலைபாயுதே

செல்போன் விளம்பரங்கள்ல ‘ஆன்லைன் க்ளாஸுக்கு ஏத்த போனு’ன்னு இன்னும் வரலையே. என்ன காரணம்? யார் செய்த தாமதம்..?

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/agal2020

ஆடி அமாவாசைக்கு நம்ம ஊர்ல முன்னோர்களை நினைச்சி சாமி கும்பிடுவாங்கதான? இங்க சைனீஸ் அதே டைம்ல அவங்க முன்னோர்களுக்கு ரோடு ஓரத்தில பன்னு, அது இதுன்னு படைச்சி பேப்பர்லாம் எரிச்சி சாமி கும்பிடறாங்க. எப்படி ஒரே நேரத்தில ரெண்டு நாட்டுலயும் ஒரே மாதிரி யோசிக்கிறாங்க? போதி தர்மர் வேலையா இருக்குமோ!

twitter.com/__Rowdyyy

பள்ளிகளில் ஆசிரியர்கள்: இதெல்லாம் நீங்க காலேஜ் போனா படிப்பீங்க...

கல்லூரிகளில் ஆசிரியர்கள்: இதெல்லாம் நீங்க ஸ்கூல்லயே படிச்சிருப்பீங்க...

# என்ன, ஜோக் காட்டறீங்களா!

Mahesh Babu: வயசே ஏறாது!
Mahesh Babu: வயசே ஏறாது!

twitter.com/kusumbuonly

ஒவ்வொரு நாட்டுலேயும் வெற்றிபெற்ற வீரர்களை அந்தந்தத் தலைவர்கள் பாராட்டுவது வழக்கமானதுதான். ஆனா, நம்ம ஊர்ல மட்டும்தான் அப்படிப் பாராட்டும் தலைவரைப் பாராட்டி விழா எடுத்துக்கிட்டு இருக்காங்க.

twitter.com/tnrags

நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு அவரும் அவருடைய பயிற்சியாளரும்தான் காரணம். மற்றவர்களுக்குக் கைதட்டும் உரிமை மட்டுமே இருக்கிறது.

twitter.com/iVedhaLam

மாசத்தோட கடைசி நாள் சனி, ஞாயிறுல வந்தா வெள்ளிக்கிழமையே சம்பளம் போடுற மாதிரி, ஞாயிறுல அமாவாசை வந்தா அதை சனிக்கிழமைக்கு ஷிஃப்ட் பண்ற டெக்னாலஜி வரணும்.

twitter.com/shivaas_twitz

இந்த உலகத்துல வேஸ்ட்னு எதுவுமே கிடையாது. வேஸ்ட்னு தூக்கிப் போடுற டயர்கள்தான் பஞ்சர் கடைக்கு அடையாளம்!

twitter.com/thoatta

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை சிறந்த ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னான்னு மாத்துனதை ஏத்துக்கலாம். அப்படியே நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் சிறந்த கிரிக்கெட் வீரரான கபில்தேவ் பேர்ல கபில்தேவ் ஸ்டேடியம்னு மாத்தலாமே?

twitter.com/___Maran

கோபம் பின்வாசல் வழி வெளியேறி விடுகிறது. இறைத்த வார்த்தைகள் நடுவீட்டில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகின்றன...

twitter.com/Deepak_TMN

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் க்ஷெர்லி பின்டோ என்ற பேச்சுத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண் எம்.பி சைகை மொழி மூலம் தன் கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். அவரின் சைகை மொழியை இஸ்ரேலிய மொழியில் (ஒலி வடிவில்) மாற்றம் செய்து மற்றவர்கள் புரிந்துகொண்டனர்.

twitter.com/Nandhuism

கனவுல ஓடுனாலும் முழிக்கிறப்ப மூச்சு வாங்குது, இதயம் படபடன்னு துடிக்கிது. வெயிட்டும் அப்படியே குறைஞ்சிட்டா தேவல...

facebook.com/primyarayee

கடைசியாய் எழுந்து செல்கின்றவர், தனியாய் விட்டுச்சென்றவர் ஆகின்றார்...

twitter.com/mohanramko

‘‘யாரோ ஒலிம்பிக் ப்ளேயர்ஸ் கூட பேசிக்கிட்டு இருக்கறாங்க...’’

‘‘நீங்க பேசறதை நீங்களே ஒட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கீங்க தலைவரே!”

Sivakarthikeyan: நம்ம வீட்டுப் பிள்ளைகள்!
Sivakarthikeyan: நம்ம வீட்டுப் பிள்ளைகள்!

facebook.com/sugitha.sugi

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் வாழ்க்கை மாறிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், அவர்கள் சார்ந்த கிராமங்களின் வாழ்க்கையையும் மாற்ற இருக்கிறார்கள். ஆம், வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா, ஹரியானாவில் உள்ள நஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர். 15,000 பேர் கொண்ட அந்த கிராமத்தில் காலை 2 மணி நேரம், மாலை 6 மணி நேரம் என தினமும் 8 மணி நேரம்தான் மின்சாரம் இருக்குமாம். ரவி தஹியாவின் ஒலிம்பிக் போட்டி மதிய நேரத்தில் நடைபெற்றதால், அந்த கிராம மக்கள் சிறப்பு அனுமதி பெற்று மின்சாரம் மதிய நேரத்தில் பெற்றிருக்கிறார்கள். ரவி தஹியா வெற்றிபெற்றதும் அவரின் தந்தை சொன்னது, ‘இனி எங்கள் கிராமத்திற்கு மருத்துவமனை வந்துவிடும், தடையில்லா மின்சாரம் கிடைக்கும், குடிக்கத் தண்ணீர் கிடைக்கும், சாலைகள் போடப்படும் என்று நம்புகிறேன்.’ அவர் கூறியிருப்பது இந்தியாவின் ஆன்மாவைத் தட்டி எழுப்புகிறது.

twitter.com/balasubramni1

திரைப்பாட்டில் சைக்கிளை ஃபேமஸ் ஆக்கியவர்கள்?

ரஜினியும் குஷ்புவும்

அரசியலில் சைக்கிளை ஃபேமஸ் ஆக்கியவர்கள்?

மூப்பனாரும் ரஜினியும்

மீம்ஸ் டெம்ப்ளேட்டில் சைக்கிளை ஃபேமஸ் ஆக்கியவர்கள்?

ஆர்யாவும் பசுபதியும்

twitter.com/RajaAnvar_Offic

அன்று பிள்ளையிடம் அம்மா:

அரை மணி நேரம்தான் மொபைல் தருவேன். கேம் விளையாடிட்டு ஹோம் ஒர்க்கைப் பண்ணிடணும், சரியா?

இன்று அம்மாவிடம் பிள்ளை:

பத்து நிமிஷம்தான் மொபைல் தருவேன். அதுக்குள்ளே போன் பேசிட்டுக் கொடுத்துடணும், சரியா?

# ஆன்லைன் வகுப்புப் பரிதாபங்கள்!

twitter.com/Thaadikkaran

‘‘இன்னைக்கு சண்டே மாதிரியே இல்ல...’’

‘‘ஏன், கறி எடுக்கலையா..?!’’

‘‘KGF படம் போடலண்ணே!”

twitter.com/Vkarthik_puthur

வெற்றிகரமாக நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆளும் தி.மு.க-வை அதிர வைத்துள்ளது. - அண்ணாமலை

ஆக... நீங்க உண்ணாவிரதப் போராட்டத்தைக் கர்நாடக பா.ஜ.க-வை எதிர்த்து நடத்தலை?

Messi பிரிவுகளின் பரிசு - கண்ணீர்!
Messi பிரிவுகளின் பரிசு - கண்ணீர்!

twitter.com/mekalapugazh

எவ்வளவு மக்கள்தொகை என்பது முடிவு செய்வதல்ல ஒலிம்பிக்கின் பதக்கங்களை. எவ்வளவு பணம் விளையாட்டுத்துறைக்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே முடிவு செய்கிறது. அந்த வகையில் இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கங்கள் அதிகம்தானோ..!

twitter.com/itz_idhayavan

சொந்த ஊரில் வண்டியில் செல்லும்போது எதிரில் வருவோரெல்லாம் வணக்கம் வைத்து நகரும்போது நமக்குள்ளும் ஒரு நாட்டமை சரத்குமார் பிறக்கிறார்!

twitter.com/ramesh_twetz

பக்குவம் என்பது யாதெனில் தெரிந்த மொழியை அம்மொழி தெரிந்தவரிடம் மட்டுமே பேசுவது!

twitter.com/manipmp

பக்கத்தில் ஒருவர் சைனா போனில் பேசுகிறார். அப்படியே எனக்குக் கேட்குது. இதெல்லாம் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வராதில்ல?

twitter.com/Kozhiyaar

கையில் காசில்லாத வடிவேலுவைப் பழிவாங்க டவுன் பஸ்ஸில் ஏற்றிவிடும் பார்த்திபன் போலவே, நம்மைத் திருமண பஸ்ஸில் ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் உறவினர்கள்!

twitter.com/Telex_pandian

ஜீ, அந்த 15 லட்சத்துல 2,63,976 கழிச்சிட்டு மிச்சம் 12,36,024 எப்ப தருவீங்க..?

twitter.com/arattaigirl/எந்தத் துயரத்திற்கும் ஆறுதல் சொல்லவோ, அழவோ தெரியாதவர்கள்தான், மௌனமாக அடுத்து ஆக வேண்டியதை நகர்த்துகிறார்கள்.

twitter.com/RavikumarMGR

சாதி, மதம் பார்த்து, காசு வாங்கி, தெரிந்த வேட்பாளர் என்று வாக்களிப்பவர்கள் இந்த வெள்ளை அறிக்கை பற்றியெல்லாம் கவலையே பட மாட்டார்கள். இவர்கள் மாறும்வரை வேறெதுவும் மாறப் போவதில்லை!

twitter.com/manipmp

சீக்கிரம் தீர்ந்துபோகும் ஆண்ட்ராய்ட் போன் சார்ஜ் போலத்தான்... ஞாயிற்றுக்கிழமையும்!

Vedhika: நதிகளிலே நீராடும் வேதிகா..!
Vedhika: நதிகளிலே நீராடும் வேதிகா..!

twitter.com/Suyanalavaathi

சாம்பார் பாக்கெட்ட பிரிக்க முடியாத மாதிரி டைட்டா கட்டுறது, பார்சல் கட்டுறவர் திறமை. அதே சாம்பார் பாக்கெட்ட சிந்தாமப் பிரிக்கிறது நம்ம திறமை!

twitter.com/mohanramko

போற போக்கைப் பார்த்தா, 30, 30 நொடியா பிரிச்சி ஒரு சினிமாவையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வச்சிடுவாங்க போல... முடியல!

twitter.com/LAKSHMANAN_KL

கேரள மாநிலத்தவர் நுழைவதைத் தடுப்பதற்காக எல்லையில் குழி தோண்டிய கர்நாடகா - செய்தி

# குழி தோண்டுறது, தடுப்பணை கட்டுறதுன்னு எப்பவுமே செம பிசிதான் போல?!

twitter.com/amuduarattai

நீதிமன்றத் தீர்ப்புகள், சினிமாவில் வில்லன்களுக்கு எதிராகவும், நிஜத்தில் ஹீரோக்களுக்கு எதிராகவும் இருப்பது நகைமுரண்.

twitter.com/JamesStanly

‘‘என்னய்யா எடுத்ததுமே குடும்பத்துக்கு 2.63 லட்சம் கடன்னு சொல்றீங்க..?”

‘‘லாரி பின்னாடி நிக்கிது தம்பி...’’

twitter.com/HariprabuGuru

மழலையைச் சிரிக்க வைக்க முயன்று வெற்றி காணும்பொழுது உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் கிடைக்கிறது.

twitter.com/kozhiyaar

‘அங்க ஹெல்மெட்டுக்குப் பிடிக்கிறாங்க’ போன்ற உதவிகளின் வரிசையில் புது வரவு, ‘அங்க மாஸ்க்குக்குப் பிடிக்கிறாங்க பாஸ்!’

twitter.com/Thaadikkaran

‘நல்லா இருக்கீங்களா’ன்னு கேட்டவங்க எல்லாம் ‘ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க’ன்னு கேட்குற அளவுக்கு ஆக்கி விட்டிருச்சு கொரானோ..!

twitter.com/HariprabuGuru

செல்போன் விளம்பரங்கள்ல ‘ஆன்லைன் க்ளாஸுக்கு ஏத்த போனு’ன்னு இன்னும் வரலையே. என்ன காரணம்? யார் செய்த தாமதம்..?

twitter.com/saravankavi

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை - ஒன்றிய அரசு

# அப்படின்னா அ.தி.மு.க-வையாவது ரெண்டா பிரிக்கலாம்ல...