twitter.com/shivaas_twitz
முன்னெல்லாம் சுதந்திர தினம்னா ஸ்கூல் பசங்க தலைவருங்க மாதிரி வேஷம் போட்டு நடிப்பாங்க. தலைவரே வேஷம் போட்டு நடிக்கிறதெல்லாம் கடந்த ஏழு வருஷமாதான்!
twitter.com/iamkarki
(திண்டிவனத்துல) பிறந்ததுல இருந்து எல்லாக் கொண்டாட்ட நாள்களுக்கான ஷாப்பிங்கும் பாண்டியில்தான். விலை கம்மின்னு பெட்ரோல் போடுறதுக்காகவே வண்டில போயிட்டு வந்தவங்கல்லாம் அங்க உண்டு. முதல்முறையா, இப்ப பாண்டியை விட திண்டிவனத்துல பெட்ரோல் விலை கம்மி.
twitter.com/iam_lolitta
புலம்புறதுக்கு நிறைய இருந்தும், புலம்பி மட்டும் என்ன ஆகப்போகுதுன்னு நினைக்கிற மனநிலைக்குப் பேர்தான் ஜென் நிலை.

twitter.com/arunpandiyanmj
ஒரு ஜெர்மனிக்காரன் நாஜிப் படுகொலைகள் பத்தின குற்ற உணர்வுல இருப்பான். ஒரு பிரிட்டிஷ் ஆளு காலனியாதிக்கம் தப்புன்னு ஒத்துப்பான். ஆனா இந்தியாலதான் சாதி வன்கொடுமை வரலாற்றைப் பத்திப் பேசுனா, “அதெல்லாம் பிரிட்டிஷ்காரனுக கொண்டு வந்ததுடா”ன்னு வித்தியாசமா உருட்டுறானுக.
twitter.com/russetlane
அவமானத்தைவிடக் காயப்படுத்தற விஷயம் அலட்சியம். அவமானமாவது, ஜெயிச்சிட்டா உறுத்தாது. ஆனா நாம அன்பைக் கொட்ற மனிதர்களே அலட்சியப்படுத்தும்போது, ‘அவ்வளவு முக்கியமில்லாதவனா நான்’ அப்படின்ற கேள்வி மனசை அறுக்கும். ஆறவே ஆறாது.
twitter.com/Nightmirror_im
காசு கொடுத்தேன், படிக்க வச்சேன், வேலை கொடுத்தேன்... இவையெல்லாம் மனிதர்களைத் தக்க வைக்க உதவாது என்பதைப் புரிந்துகொள்ளவும்.
twitter.com/ItsRamesh_T
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டேடியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 கோடியில் ஸ்டேடியம் என்பது எந்த அளவில் தரமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு ஸ்டேடியம் கட்டுவதைவிட, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் ஒரு ஸ்டேடியம் கட்டினாலே போதும். நிதியும் அதிகம் ஒதுக்கலாம். ஸ்டேடியமும் தரமாக இருக்கும். ஸ்டேடியம் கட்டுவதற்காக, 234 தொகுதிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வீதம் 702 கோடி ஒதுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதையே 38 மாவட்டங்களில் ஒவ்வொரு தலைநகரிலும் கட்டினால், ஒரு மைதானத்துக்கு 18 கோடி ரூபாய் வரை ஒதுக்கலாம். கிட்டத்தட்ட, சின்தெடிக் டிராக், இன்டோர் ஸ்டேடியம் என ஒரு தரமான ஸ்டேடியத்தை உருவாக்கலாம்.
twitter.com/tamilravi
தமிழ்நாடு தனி நாடா இருந்திருந்தால், உலகில் அதிகம் பேறுகால விடுப்பு தரும் இரண்டாவது நாடாக இருந்திருக்கும்.
twitter.com/nelsonvijay08
அருள்மணக்கும் ஆதீன மண்டபத்தில் திருச்சிற்றம்பலத்தான் முன் அமர்ந்து ‘இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ எனும் நாகூர் அனீபாவின் பாடலை இனி எந்த ஆதீனம் பாடுவார்?
twitter.com/thoatta
‘வெறும் டிவிய மட்டும் வச்சிருக்காங்க, ரிமோட் வைக்காம அவமானப்படுத்திட்டாங்க’ என்ற கடும் கோபத்தில் வெளிநடப்பு செய்ததாக செல்லூரார் ஆவேசம்... #E-Budget
twitter.com/mrithulaM
திருப்பி அடிக்க முடியாத இடத்தில அடிவாங்கிப் பாருங்க, அப்ப உங்களுக்கு இருக்கிற மனநிலைதான் பிள்ளைங்களுக்கும் இருக்கும். அதுவும் அடிச்சது நமக்கு ஆதரவானவங்கன்னு நெனச்சவங்களா இருந்தா வலி இன்னும் அதிகம்.
twitter.com/skpkaruna
எல்.ஐ.சி இனி மக்கள் சொத்து அல்ல. கொடுமை என்னன்னா, இந்த 51% பங்கை தனியார்கள் வாங்குவதற்கான கடனையும் அரசு வங்கிகளே தரும். எந்தப் பணம்? யெஸ்... எல்.ஐ.சி போட்டு வைத்திருக்கும் அதே பணம். வெல்லப் பிள்ளையாரிடம் இருந்து வெல்லத்தைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே படையல் வைப்பது இதுதான்.

twitter.com/niranjan2428
மன்னிப்பு கோரிய பிரதமர்!
தன் நாட்டில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தவறியதால் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார், கிரீஸ் நாட்டுப் பிரதமர் கிரியக்கோஷ் மெக்சோடக்கீஸ்.
twitter.com/thoatta
நைட்டுக்கு ரவா இட்லின்னு சொன்னாங்களே... அதுக்குள்ளே ரெய்ட முடிச்சுட்டீங்களே சார்?
facebook.com/revathy.ravikanth
‘‘இங்க வந்து பாருடா, உறை ஊத்தின தயிர் கெட்டியா வந்திருக்கு!’’
‘‘இத எப்பிடிம்மா செஞ்ச!’’
‘‘காய்ச்சுன பால்ல ஒரு ஸ்பூன் தயிர் சேத்தா அடுத்த நாள் இப்பிடி ஆகிடும்.’’
‘‘அந்த ஒரு ஸ்பூன் தயிர் எப்பிடி செஞ்ச?!’’
‘‘அது, கடைல நேத்து வாங்கின தயிர் இருந்துச்சுல்ல. அதுலேந்து எடுத்தேன்.’’
‘‘அந்தக் கடைல வாங்கின தயிர் எப்பிடி செஞ்சாங்க?!’’
‘‘படிக்குற டைம்ல கிச்சன்ல என்ன வேலை? போய்ப் படி, இல்ல வெளாடு! போ!!’’
facebook.com/karundhel rajeshதமிழக பட்ஜெட் நல்லாவே தொடங்கியிருக்கு. அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு என்பது நல்ல விஷயம். வரிகளை அதிகமாக்காமல், அதே சமயம் அ.தி.மு.க ஆட்சியின் கஜானா வழித்தெடுப்பை எப்படிச் சரி செய்கிறார்கள் என்று கவனிப்போம்.
பி.கு: நான் கட்டாயம் ஒரு காட்சி அரங்கேறும் என்று நினைச்சேன். பக்காவா அப்படியே நடந்துச்சு. தி.மு.க எம்.எல்.ஏக்கள் வரிசையில் வந்து, அமர்ந்திருக்கும் உதயநிதியை வணங்ங்ங்ங்கி கும்பிடு போட்டுச்சென்ற அந்தக் கண்கொள்ளாக் காட்சி... அட அட, என்ன பவ்யம்... ஒரு ‘சாதாரண’ ஜூனியர் எம்.எல்.ஏ-வுக்கு எதற்கு இத்தனை பில்டப்?
facebook.com/sowmya.ragavan
வாக் போறப்ப கேட்க மெலடி பாட்டுகளை செலக்ட் பண்ணக் கூடாது. ‘மலரே மௌனமாஆஆஆஆஆ’னு கேட்டுட்டு நடந்தா... நாமளே ஸ்லோ மோஷன்ல நடக்கத் தொடங்கிடறோம். ‘அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு’ன்னு அதிர விட்டா வாக்கிங்கே ஜாக்கிங் ஆயிருது.
twitter.com/teakkadai1
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீம் இனி இருக்குமா? ரஷீத் கானை இங்கிலாந்து குடியுரிமை கொடுத்து எடுத்துக் கொள்வார்களா? இல்லை, மும்பை இந்தியன்ஸ் அதற்கு மூவ் செய்வார்களா?
twitter.com/balasubramni1
இனி தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறுவது கட்டாயம்: தமிழ்நாடு அரசு
# அப்படியே இயக்குநர் ஹரி சார் படத்துல மரத்தை கார் வச்சு இடிக்காமல் இருக்கவும் ஒரு சட்டம் போடுங்க சார்.
twitter.com/ramesh_twetz
கொடுத்த பேனாவை ஞாபகமா திரும்ப வாங்கறதுதான் ஞாபக சக்தியோட உச்சம்!
twitter.com/amuduarattai
உலக வெப்பமயமாதலுக்கு 90’s கிட்ஸ் வெளியிடும் பெருமூச்சும் ஒரு காரணம்!
twitter.com/saravankavi
“பெட்ரோல் விலை குறைப்புக்குக் காரணமான மோடிக்குப் பாராட்டுகள்.’’
“ஏன்யா, இங்க குறைச்சதுக்கு அவர பாராட்டுற?”
“எங்காளு ஏத்துனதாலதான ஸ்டாலினால குறைக்க முடிஞ்சுது... அதான்!”
twitter.com/balasubramni1
‘‘வெள்ளை அறிக்கை பத்தி 90s கிட்ஸ் என்ன சொல்றாங்க ரமேஷ்?’’
‘‘நல்லவேளை, கல்யாணம் முடிச்சு குடும்பஸ்தன் ஆகியிருந்தால் அரசு நம்ம தலையிலும் லட்சக்கணக்கில் கடன் வச்சுருப்பாங்கன்னு நெனச்சு சந்தோஷமா இருக்காங்க கோபி!’’